politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.6.11

கண்ணுக்கு தெரியாத ஆப்பு...

ஊழலை எதிர்த்து சட்டம் கொண்டு வர வேண்டும் ஒரு சிலர் போராடி வருகிறார்கள்....
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
சட்டத் துறையும் அரசின் கை வசமே இருக்கும் போது இதை சட்டம் போட்டு எல்லாம் தடுக்க முடியாது என்பது விவரம் புரிந்தவர்களுக்கு தெரியும்...

ஆதர்ஷ் வீட்டு திட்டத்தில் பல முக்கியமான ஆவணங்கள் காணாமல் போனது வெளிச்சத்துக்கு வந்தாலும், ஒரு மாநிலத்தை ஆளும் அரசே அப்பட்டமாக, ஆமாங்க எல்லா ஆவணங்களையும் அழித்து விட்டோம் என்று கூறுவது ஆணவம் அன்றி வேறு எதுவும் இல்லை...
ஆணவமாக கூறிய அரசு குஜராத்தை மட்டும் ஆண்டு கொண்டிருக்கிறது, கட்சியோ இந்தியாவை ஆளப் போகிறோம் என்று கனவு காண்கிறது...

குஜராத்தில் நடப்பதை குஜராத் மக்கள் மட்டும் பார்க்கவில்லை, மாறாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்,

குஜராத் அரசை பற்றி யாராவது மட்டமாக பேசினால் அந்த மாநில மக்கள் குஜராத்தி ஒற்றுமையை கடை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தம்பி, குஜராத் என்னும் சிறிய வட்டத்தை விட்டு வெளிய வாங்க, உலகம் என்ற பெரிய வட்டத்துக்கு இப்ப போக வேண்டாம், இந்தியன் என்னும் இன்னும் ஒரு வட்டம் இருக்கு என்பதை மறந்து விடாதீர்கள்...

முஸ்லிம், இந்து, சீக்கியன், தமிழன், கன்னடன் என்று இன்னும் எத்தனை காலம் தான் பிரிந்து இருந்து அடிமையாக வாழ போகிறோமோ என்று தெரியவில்லை, ஆனால் இந்த நிலை மாற யாராவது வருவார்கள் என்று கனவு காணாமல், ஒவ்வொருவரும் முயற்சி எடுப்போம்...

ஒவ்வொருவரும் எனக்கு என்ன என்று இருந்தால், ஆப்பு கண்ணுக்கு தெரியும் பொழுது காலம் கடந்து போயிருக்கும்...

http://www.bbc.co.uk/news/world-south-asia-13970748

29.6.11

செய் அல்லது செத்து மடி...


இந்த வாசகத்தை காந்தி சொன்னதாகவும் சொல்வார்கள், . அதை பற்றிய விவாதம் இது அல்ல..

சுதந்திரம் வாங்கியதிலிருந்து இன்று வரை ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு நான் ஏழைகளை காப்பாற்றவே ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறி வருகிறார்கள்...
ஏழைகள் பணக்காரர்கள் ஆகி விட்டால் அவர்களை காப்பாற்ற காங்கிரஸ் அரசால் முடியாது என்பதால், ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி இவர்கள் அவர்களை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள்...

இன்று நமது பிரதமர் நான் செயலற்றவன் அல்ல என்றும், எங்கள் அரசு செய்த செயலுக்கு கட்சியில் இருந்து எந்த தடையும் வரவில்லை என்றும் கூறி இருக்கிறார்...

http://www.dnaindia.com/india/report_i-am-not-helpless-says-manmohan-singh_1560498

நீங்கள் செயலற்றவர் இல்லை செயல்படவும் இல்லை..

கட்சியின் கொள்கைக்கு முரணாக அரசு செயல் பட்டால் தானே கட்சியிடம் இருந்து தடை வரும், நீங்கள் தான் செயல் படவே இல்லையே, அப்புறம் எப்படி தடை வரும்...

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது,
உங்கள் ஆட்சியின் சாதனைகள் என்று முதல் வருட இறுதியில் சொன்னது,
பணவீக்கத்தை [விலை வாசி உயர்வு] கட்டு படுத்தியது
gdp சதவிகிதத்தை தக்க வைத்தது...

சரி வேறு ஏதாவது சாதனைகள் செய்திருக்கிறார்களா பார்ப்போம், என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலை தளத்தில் நுழைந்து பார்த்தால்,
Click Here download Achievements of UPA Govt என்று ஒரு வாசகம்...
சரி என்று இணைப்பை சொடுக்கினால்...
not found... என்று ஆங்கிலத்தில் என்னை பார்த்து கூறுகிறது...

சரி நாளைக்காவது கண்டுபிடித்து விட்டார்களா என்று பார்ப்போம்...

http://www.tncc.org.in/index.php?option=com_content&view=article&id=70&Itemid=57&lang=en

உள்கட்சி பூசலோ...

விளையாட்டு செய்திகள்...


செய்தி: எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தது தவறு - ப. சி.

ஆணிவேர்: உங்களை நாடாளுமன்ற உருப்பினராக்கியதே தவறு என்று தான் பேசிக் கொள்கிறார்கள்..

http://www.thinakkural.com/news/all-news/india/6717-worring.html

செய்தி: இதர மாநிலங்களிலும், இலங்கை மீது பொருளாதார தடை தீர்மானம் போட வேண்டும்...

ஆணிவேர்: மத்திய அரசாங்கம் பொருளாதார தடை விதித்தாலே போதுமே, அண்ணன் இன்னும் ரப்பர் மிட்டாய் சாப்பிட்ட பழக்கத்தை விடல போலிருக்கு...

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1106/19/1110619002_1.htm

செய்தி: ஆறு மாதத்திற்கு மேல் கப்பல் சேவை தொடர்ந்தால் தூக்கில் தொங்குவேன் - சீமான்..

ஆணிவேர்: பார்த்துக்கங்க தோழர் உங்க மேல இருக்கிற வெறுப்பில, ஒரு நாள் அதிகமா ஓட்டி உயிரை வாங்கிட போறாங்க...

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32284


செய்தி: முந்தய தி.மு.க அரசு நிர்வாகத்தை முறையாக நடத்த வில்லை...

ஆணிவேர்: நீங்க மந்திரிகள பந்தாடரத பார்த்தா அடுத்த முறை வர அரசும் இதே வாக்கியத்தை சொல்வாங்கன்னு நினைக்கிறேன்...

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-19/india/29676822_1_dmk-big-challenge-disarray

செய்தி: கருப்பு பணத்தில் பாதி காங்கிரஸ் வாதிகளுக்கு சொந்தம்..

ஆணிவேர்: மீதி பாரதீய ஜனதா கட்சியினருக்கு சொந்தம்...

http://www.dnaindia.com/india/report_half-the-black-money-abroad-belongs-to-congress-leaders-maneka-gandhi_1557005

செய்தி: தமிழக ஆட்சி மாற்றத்திற்கு விஜயின் மௌனம் தான் காரணம்.. -சீமான்

ஆணிவேர்: இது நக்கீரன் குசும்பா இல்லை சீமான் குசும்பான்னு தான் தெரியல...

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56164

செய்தி: சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது... - மத்திய நிதி அமைச்சர்.

ஆணிவேர்: முதல்ல விலை வாசி உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு சொன்னீங்க, இப்ப இப்படி.. அடுத்த தேர்தல்ல மக்கள் சொல்ல போறாங்க, காங்கிரஸ் வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாதுன்னு...

http://timesofindia.indiatimes.com/india/Pranab-rules-out-rollback-of-hike-in-prices-of-LPG-diesel/articleshow/9035769.cms

செய்தி: அஞ்சுக்கும் பத்துக்கும் ஏன் கை எந்த வேண்டும்? - மரு. ராமதாஸ்..

ஆணிவேர்: இல்லனா கைய சுட்டுக்க வேண்டி வரும், அதனால தான்...


http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&artid=438829&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest


படிச்சுட்டு ரத்தக் கொதிப்பு உங்களுக்கும் வந்தால் ஆணிவேர் பொறுப்பல்ல...

27.6.11

கால் பந்தாட்டம்...


மட்டை பந்தை மட்டுமே ரசிக்கிறார்கள் இந்தியர்கள் என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு, உண்மையில் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் அனைவரும் கால் பந்தாட்டத்தை மிகவும் ரசிப்பார்கள்...
இவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை என்று தமிழகத்தில் அம்மையார் நிருபித்துள்ளார், கடந்த 45 நாட்களாக பல்வேறு துறை அதிகாரிகளை பந்தாடி விட்டு, திரும்பி பார்த்தால் எந்த துறையும் மிச்சம் இல்லையாம், சரி என்று அமைச்சர்கள் பக்கம் திரும்பி இருக்கிறார்...
இனி ஒரே கொண்டாட்டம் தான் போங்கள்...

விளையாட்டில் வேண்டுமானால் ஆள் மாற்றி ஆள் மாற்றி ஆடலாம், ஆனால் நாட்டை ஆள்வதில் ஒவ்வொரு துறையையும் மந்திரிகள் புரிந்து கொள்ளவாவது கொஞ்சம் நேரம் கொடுக்க கூடாதா?
ஒவ்வொரு துறை மந்திரிகளும் நாமாவது இந்த துறையிலேயே நிலைப்போமா இல்லை மாற்றப்படுவோமா என்ற குழப்பம் இல்லாமல் ஆட்சி செய்தால் நீங்கள் முன்னாள் ஆட்சி செய்த அரசை பற்றி கூறிய குறைகள் [நிர்வாகம் செய்யத் தெரியாமல் சீர்கேட்டில் அரசு உள்ளது] உங்கள் ஆட்சிக்கு வராது....

இந்த நிலையில் ஒரு புதிய அரசை விமர்சிக்க மூன்று மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்றும், ஆறு மாதம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் கொள்கை வேறு....

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=438002&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

26.6.11

பொருளாதார நிபுணர்கள்...


நம் நாட்டில் நாம் கூறுபவர்களின் நிபுணத்துவத்தை வைத்து, அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தில் உள்ளோம்....
அவர்கள் கூறுவது பொய்யா இல்லையா என்று கூட ஆராய்வது இல்லை...
நம் நாட்டை தற்பொழுது ஆட்சி செய்பவர் ஒரு மிகப் பெரிய பொருளாதார நிபுணர்...
ஆகையால் அவர் பொருளாதாரம் குறித்து என்ன கூறினாலும் கண் மூடி கேட்டுக் கொள்கிறோம்...
இன்று இந்து நாளிதழில் வெளியாகி உள்ள அரசு விளம்பரம், உண்மையை குழிதோண்டி புதைப்பதாக உள்ளது...

1. அரசு: நமது நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 16 % தான்...

ஆணிவேர்: நம் நாட்டு ஒரு நாள் உற்பத்தி 8,80,000 பேரல்கள்
இறக்குமதி 21,00,000 பேரல்கள்.
கூட்டி கழித்து பார்த்தால் 30% உள்நாட்டு உற்பத்தி என்று வரும்

ஆதாரம்: http://www.eia.gov/countries/country-data.cfm?fips=IN

2. ஒரு பேரல் [158 லிட்டர்] கச்சா எண்ணெய் விலை, நேற்று 97 டாலர்
அதாவது 4365 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 27.35 ரூபாய்..
அதில் 500 ml பெட்ரோல் மட்டுமே எடுக்கப் படுவதால் அதன் விலை 14 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் பெட்ரோல் 28 ரூபாய்...
அதனுடன் சுத்திகரிப்பு செலவு, போக்குவரத்து செலவையும் இணைத்தால் இப்பொழுது எண்ணெய் நிறுவனங்கள் வாங்குவதை விட குறைவாக வாங்குவதில்லை...

ஆதாரம்:
http://www.eia.doe.gov/neic/infosheets/crudeproduction.htm

http://knopok.net/prices-chart/oil

3. அரசு: டீஸல் கு அரசு தரும் மானியம் ஒரு லிட்டருக்கு 6.13 ரூபாய்...
ஆணிவேர்: ஒரு லிட்டருக்கு நீங்க வசூலிக்கும் வரி எவ்வளவு நைனா?
நீ அரிசி எடுத்துகிட்டு வா, நான் உமி எடுத்துகிட்டு வரேன், ரெண்டு பெரும் ஊதி ஊதி தின்போம்...

4. அரசு: மற்ற அண்டை நாடுகளை விடவும் நம் நாட்டில் விலை கம்மி...
ஆணிவேர்: நான் பத்தாவது வகுப்பில் வாங்கிய மதிப்பெண், என் அண்டை வீட்டு ஒன்னாம் வகுப்பு படிக்கும் மாணவன் வாங்கிய மதிப்பெண்ணை விட அதிகம்... அக்காம்பா...

5. அரசு: டீஸல் விலையை மூன்று ரூபாய் ஏற்றிய பிறகும் 66,000 கோடி ருபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு..
ஆணிவேர்: இந்த ஆண்டு 2.5 லட்சம் கோடி வசூலிக்கப் படாத வரிகளை வசூலிச்சிட்டீங்களா?

ஆமாங்க, நீங்க குடுத்திருக்கிற விளம்பரத்துக்கு ஆன செலவு என்ன?

25.6.11

பூனைக்கு மணி...


பெட்ரோல் விலை வாசி உயர்வை பற்றி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா? என்று கேட்டேன்...
அவர் சர்வ சாதாரணமாய் சொன்னார், பாகிஸ்தான் முஸ்லிம் நாடு அதனால் அவங்களுக்கு பெட்ரோல் விலை கம்மிய கிடைக்குது அப்படின்னார்...
இதுக்கு மேல அவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல...
பெட்ரோல் விலை வாசி உயர்விலேயும் மத வெறுப்பை தூண்ட முடியும்னு தெரிஞ்சிகிட்டேன்..
பெட்ரோல் விலையில் நாம் எவ்வளவு வரி கட்டுகிரோம்னு எத்தனை ஊடகங்கள் எழுதுகின்றன என்று தெரியவில்லை...
ஆனால் பல இனைய தள பதிவர்கள், எழுதி இருக்கிறார்கள்...

மத்திய அரசுக்கு அறிவு இல்லேன்னா, எனக்கு என்ன என்று நம் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்...
நீ விலை எத்தனது தப்பு என்று சொல்லும் அம்மையார், இவர்கள் விதிக்கும் 30% வரியை குறைத்துக் கொள்ள மறுக்கிறார்... இதுல மத்திய அரசுக்கு செல்லும் வரி 50% என்பது தனி கதை...

"Andhra Pradesh levies the highest sales tax of 33 per cent on petrol in the country, followed by Tamil Nadu, where it is 30 per cent. Kerala, which levies 29.01 per cent VAT on petrol, has the highest sales tax rate for diesel at 24.69 per cent."

மேலும் படிக்க: http://www.simpletaxindia.org/2011/05/petrol-up-r5-litre.html

சிறு வயதில் படித்த ஒட்டக கதை தான் ஞாபகம் வருகிறது,
ஒவ்வொரு மயில் தொகையாய் ஒட்டக முதுகில் ஏற்றிக் கொண்டே வந்ததால்,
ஒரு கட்டத்தில் ஒட்டகம் முதுகு ஒடிந்து இறந்தது என்று முடியும்...

மனிதன் முதுகு ஒடிந்து இறக்க மாட்டான், பொங்கி எழுந்து விடுவான்...

http://www.thehindu.com/news/national/article2132634.ece

23.6.11

வெயில் கொஞ்சம் ஜாஸ்தியோ?


இன்று டெல்லியில் வெயில் [36 degree C] ஒன்றும் அதிகமில்லை தான், இருந்தாலும் நமது மத்திய நிதி அமைச்சர் கொஞ்சம் குழம்பி தான் பேசியிருக்கிறார்...
உணவு விலை வாசி அதிகமானதை ஏற்றுக் கொள்ள முடியாதாம்...
இப்படி விலை வாசி ஏறிக் கொண்டே போவதை தாங்கி கொள்ள முடியாதாம்...
கேட்கப் போகும் கேள்வியை முன்பே தெரிந்து கொண்டு இவரே அந்த கேள்வியை கேட்டு விட்டதால் கேள்வி கேட்க போன ஊடக நிருபர்கள் இவரை விட அதிகமாய் குழம்பி போய் விட்டார்கள்...
ஒரு வேலை உள்கட்சி பூசல் என்பது இது தானோ...
விலை வாசி உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை மக்களாகிய நாங்கள் சொல்லுகிறோம், அதே கேள்வியை நீங்கள் கேட்டு பதில் சொல்லாமல் தப்பித்து விடாதீர்கள்...
எனக்கு கேக்க மட்டும் தான் தெரியும் என்னும் தருமி வசனம் தான் ஞாபகம் வருகிறது...

http://economictimes.indiatimes.com/news/economy/indicators/high-inflationary-regime-not-acceptable-pranab-mukherjee/articleshow/8962242.cms

22.6.11

இலவச இணைப்பு..


நம்ம நாட்டு தேர்தல் ஆணையத்துக்கு மக்களின் நம்பிக்கையை வாங்குவதற்கு தலை கீழா நின்னு தண்ணி குடிச்சு பாக்கிறாங்க...
புதுசா ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்காங்களாம்
நீங்க இயந்திரத்தில வோட்டு போட்டு முடிச்சவுடனே நீங்க வோட்டு போட்ட சின்னம் அச்சடிக்கப் பட்டு ஒரு பேப்பர் வருமாம்.. அது நீங்க வோட்டு போட்ட சின்னம் தானான்னு பாத்து உறுதி செஞ்சுட்டு அதை பக்கத்தில இருக்கிற பெட்டியில போட்டுடினுமாம்...
வோட்டு என்னும் போது இயந்திரத்தில உள்ள எண்ணிக்கையும் அச்சடிக்கப் பட்ட பேப்பர் ல இருக்கிற எண்ணிக்கையும் ஒண்ணா இருக்கான்னு சரி பார்த்து உறுதி செய்வாங்களாம்.. அதுக்கு அப்புறம் முடிவை அறிவிப்பாங்களாம்.

வோட்டு என்னும் நேரத்தை மிச்சம் செய்ய தான் இயந்திரம் கண்டுபிடிச்சாங்க, இப்ப இவங்க சொல்றத பார்த்தா வேறு எதோ காரணம் இருக்கும் போலிருக்கு...
தலையை சுத்தி மூக்க தொடருது ஒன்னும் அரசாங்க அதிகாரிகளுக்கு ஒன்னும் புதிசில்லை தான்.. ஆனா கேட்கிற நமக்கு தான் தலை சுத்தி மூக்கை பாக்கிற மாதிரி இருக்கு...

இவ்வளவு பண்ண நீங்க அப்படியே இலவச இணைப்பா அந்த 49 ஓ பிரிவையும் அந்த இயந்திரத்திலேயே இணைச்சிட்டீங்கன்னா நல்லா இருக்கும்...

ஆமா ஒரு வேளை எல்லா வேட்பாளர்களை விடவும் 49 ஓ க்கு அதிக வாக்குகள் விழுந்தா எண்ண பண்ணுவாங்க?

http://ibnlive.in.com/news/new-and-improved-voting-system-evms-ec/161538-3.html

21.6.11

புரிந்தும் புரியாமலும்..


நம்ம மேற்கு வங்க முதலமைச்சர் புரிந்து கொண்டு தான் பேசுறாங்களா, இல்லைனா நம்ம ஊடகங்களுக்கு வங்காள மொழி புரியாமல் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை...
பிரதம மந்திரி ஒருவரை மட்டும் சேர்ப்பதால் ஊழலை ஒழித்து விட முடியாது என்னும் அர்த்தத்தில் பேசியதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது...
பிரதம மந்திரி ஒருவரை மட்டும் சேர்க்காமல் விட்டால் ஊழலை ஒழிக்க முடியாது என்று தான் லோக் பால் மசோதா [அண்ணா] குழுவினர் பேசியுள்ளனர்...
சிங்கூர் கிராமத்தில் மக்களிடம் இருந்து பறிக்கப் பட்ட 400 ஏக்கர் நிலத்தை சொன்ன படியே திரும்ப வாங்கி விட்டீர்கள், அதே மாதிரி டாடா நிறுவனத்திற்கும் இடது சாரி அரசாங்கத்திற்கும் நடுவில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முதல் வேலையாக வெளியே விடுவேன்னு சொன்னீங்க... அதை பத்தி சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்...

http://www.thehindu.com/news/national/article2123510.ece

20.6.11

வழிகளை மூடும் சமரசங்கள்...


என் நண்பர் சிவக்குமார் அவர்கள் என் பதிவுகளை படித்து விட்டு, எங்க நீங்க இந்த நெடுஞ்சாலையில் இருக்கும் உணவகங்களை பத்தி எழுதுங்களேன், அப்படின்னு கேட்டுகிட்டார்.
என்னடா இது என்று நிறைய யோசித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான்...
அனைவரும் அந்நியனை தேடி கொண்டிருக்கிறார்கள் என்பதே...
ஏர்டெல் நிறுவனம் மோசடி செய்து விட்டது..
திரை அரங்குகளில் குளிர்பானங்கள் கொள்ளை விலை.
இப்படி சின்ன சின்ன மோசடிகள் சிறு சிறு வணிக நிறுவனங்களில் மலிந்து கிடக்கும்...
இந்த தவறுகளின் ஆணிவேர் எது என்று பார்த்தால் வேகமாக வளர முயற்சி, குறுக்கு வழியில் முன்னேறுதல் என்று பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்த காரணங்களை ஊக்குவிப்பவை பிசினஸ் ல எதுவும் தப்பில்ல என்னும் வேத மந்திரம் தான்...
அந்நியன் படத்தில் நாயகன் இம்மாதிரி தவறுகள் செய்பவர்களை கொல்வார்...
எவனோ ஒருவன் படத்தில் நாயகன் அடித்து நொறுக்குவார்...
உண்மையான வழி எங்கு இருக்கிறது என்றால் புறக்கணிப்பில் உள்ளது...
இம்மாதிரி தவறு செய்பவர்களை அனைவரும் ஒன்று கூடி புறக்கணித்தாலே போதும் இம்மாதிரி சின்ன சின்ன தவறுகள் நடக்கவே நடக்காது...
மலையை ஒரே நாளில் அப்புறப் படுத்த முடியாது, ஒவ்வொரு கல்லாய் பெயர்த்து எடுத்தால் போதும்
பிச்சை காசு ஒரு ருபாய் என்று விட்டு கொடுப்பதால் தான் இவர்கள் தவறு செய்கிறார்கள்...
நீங்கள் ஏமாற்றப் படுகிறீர்கள் என்று தெரிந்தும் நீங்கள் ஏமாந்தால் யார் வந்து அந்த தவறை சரி செய்ய போகிறார்கள்...
வழி நம் அனைவர் கையிலும் உள்ளது...
அதை சமரசம் செய்து கொண்டு மூடி விட வேண்டாம்...

19.6.11

நெருப்பில்லாமல் புகையாது...


12 கோடி ரூபாய் பணம், 100 கிலோ தங்கம், 300 கிலோ வெள்ளி, இன்னும் பல மர்மங்கள் என்று பாபாவின் அறையை திறந்தவுடன் வெளியே வந்து விழுந்தது... டிரஸ்ட் தொடர்பான பணம் என்பது வரவு வைக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி இந்த பணம் முழுவதும் வரவில் வைக்கப் பட்டுளதா என்று யாரும் கேட்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை...
ஆனால் இந்த பணம் முழுவதும் கணக்கில் வரவில்லை என்பது, இன்று அனந்தபூர் மாவட்டத்தில் சிக்கிய 35 லட்சம் காட்டிக் கொடுத்திருக்கிறது...
கணக்கில் வராமல் வைக்கப் பட்டதால் தான் இவ்வளவு தொகை வெளியே சென்றிருக்கிறது...
கணக்கில் வரவைக்கப் பட்ட பணமாக இருந்திருந்தால் இதை எடுக்கும் தைரியம் அசாதாரமானவர்களையே சாரும்.
இப்பொழுது அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன என்றால் எவ்வளவு பணம் வெளியே எடுத்து செல்லப் பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பதில்லை...
மாறாக ஏன் இவ்வளவு பணம் கணக்கில் வராமல் இருக்கிறது?
யார் யாரிடம் இருந்து இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்றும்?
இது எல்லாம் கருப்பு பணமா என்றும் ஆராய வேண்டும்...
நடக்குமா..
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தெரிந்து வைத்திருப்பவர்கள் டிரஸ்ட் இல் அங்கம் வகிக்கும் பொழுது இது நடக்குமா என்பது சந்தேகமே...
மாறாக மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் போதும்...
மாற்றம் தானாய் வரும்...

http://www.ndtv.com/article/cities/cash-worth-rs-35-lakh-seized-from-sathya-sai-trust-s-vehicle-113350

18.6.11

இட்லி செய்வது எப்படி?


அரிசி உளுந்து இரண்டையும் ஊற வைத்து மாவாக அரைத்து, மாவை தட்டில் ஊத்தி அந்த இட்லி பானையை நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து அதை சூரிய ஒளியில் வேக வைக்க வேண்டும். அதை தவிர இட்லி செய்வதற்கு வேறு எந்த மாயமும் மந்திரமும் இல்லை என்று சொன்னால், நாம் சொன்னவர்களை கண்டிப்பாக கீழ்பாக்கத்திலோ, பாகாயத்திலோ, பிடிக்காதவர்கள் என்றால் ஏர்வாடியில் சேர்த்து விடுவோம்...
ஆனால் சொல்வது ரிசர்வ் வங்கி என்பதாலும், சொல்லப்படுவது இட்லி சமாச்சாரம் இல்லை என்பதாலும் கேட்டு கொண்டு சும்மா இருக்கிறோம்...
பெட்ரோல் விலையை குறைத்தாலே நம் விலைவாசி உயர்ச்சி அதல பாதாளத்தில் விழுந்து விடும்.. அதை விட்டு விட்டு விலை வாசி உயர்வை [பண வீக்கத்தை] குறைக்க எந்தவிதமான மந்திர கோலும் இல்லை என்று சொல்லி கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்....
பெட்ரோல் விலை உயர்வை கட்டுபடுத்த முடியாது என்று சொல்லி மறுபடியும் கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்...
என்னங்க நான் சொல்றது...

http://www.rediff.com/business/slide-show/slide-show-1-infla-theres-no-magic-wand-to-bring-down-inflation-rbi/20110617.htm

17.6.11

முழு பூசணிக்காய்..

[நன்றி- போட்டோ ஆதாரம் தி ஹிந்து நாளிதழ்]


ராம்தேவ்
அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் என்று இந்திய முழுவதுக்கும் தெரிந்திருக்கிறது.. ஆனால் டெல்லி காவல் துறைக்கு தெரியவில்லை...
ஒரு லட்சம் பேருக்கு மேல் கூட போகிறார்கள் என்று ராம்தேவ் பல ஊடகங்களில் சவால் விட்டார்... இந்தியாவுக்கு தெரிந்த இந்த ரகசியம் டெல்லி காவல் துறைக்கு தெரியவே தெரியாதாம்...
சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் இப்படி கூடியிருப்பது, காலையில் இருந்து தெரியாமல் இரவு தான் தெரிந்ததாம், ஆகையால் கலைந்து செல்லுமாறு ஒரு மணிக்கு காவல் துறை ராம்தேவுக்கு கோரிக்கை வைத்ததாம்.. ஆனால் அதை மறுத்து விட்டாராம்...
வேறு வழியில்லாமல் யாரையும் அடிக்காமல் அன்பாக பேசி தான் கலைந்து செல்ல வைத்தார்களாம்...
கூட்டத்தில் இருந்த சிலர் தாக்குதலில் இறங்கியதால் வேறு வழியில்லாமல் எட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க வேண்டியதாக போய்விட்டதாம்... அதுவும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்ததாம்...

அப்படி என்றால்,
ராம்தேவின் சீடர்களை காவல்துறையினர் அடித்தது புகைப்படமாக பல நாளிதழ்களில் வெளியானது யார் செய்த வேலை?
டெல்லி மருத்துவமனையில் ராஜ் பாலா என்ற அம்மையார் முதுகில் பட்ட அடியாள் மூச்சு பேச்சில்லாமல் 17 நாட்களாக இருக்கிறாரே அது யார் செய்த சதி...?

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-15/delhi/29661152_1_critical-condition-ventilator-support-baba-ramdev

அப்படி என்றால், டெல்லி காவல்துறைக்கு எதிராக எதோ சதி ஒன்று நடத்தப் படுகிறது... அதை கண்டுபிடிக்க ராணுவத்தை வரவைங்கப்பா...

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5216039

பொறுப்பாளி...


நம் நாட்டில் அனைத்து இயக்கங்களிலும், யார் தவறு செய்தாலும் அதற்கு தலைவர் அல்லது செயலாளர், இவர்களுக்கு யாருக்கு அதிகாரம் அதிகமோ அவர்கள் தான் பொறுப்பு..

அதே போல் தான் விளையாட்டிலும், அணித்தலைவர் அல்லது அணிப்பயிர்ச்சியாளர் தான் பொறுப்பு...

அது என்னவோ நாட்டை ஆள்பவர்களுக்கு இந்த விதி பொருந்த கூடாதாம்...
அனைத்து ஊழல்களுக்கும், நாட்டை ஆளும் பிரதமர் தான் பொறுப்பாக முடியும். ஆனா அவரோ எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்க முடியும்...

திக் விஜய் சிங்க் அவர்கள் அண்ணாவை கேட்டிருக்கும் கேள்விக்கு பதில்...
உங்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் தான் புத்திசாலி மற்றவர்கள் அனைவரும் முட்டாளா?
யார் சொன்னது, அண்ணா வின் குழுவில் இருப்பவர்களை விட அவர்கள் அதி புத்திசாலியாய் இருக்கிறார்கள். கழுவும் மீனில் நழுவும் மீனாய், நழுவிக் கொண்டே போவதால் அவர்களை அடக்க மிரட்டுகிறார்கள்.

பிரதமரை லோக் பால் வளையத்திற்குள் கொண்டு வரலாமா வேண்டாமா என்று நாடே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, நாட்டை ஆட்சி செய்யும் காங்கிரஸ் இதை பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை என்பது இவர்கள் ஆட்சி செய்யும் லட்சணத்தை விளக்குகிறது.

இன்னும் யாருடைய கட்டளைக்காக காத்திருக்கிறார்களோ?

http://www.indianexpress.com/news/are-your-five-wise-and-the-rest-fools-cong-asks-anna/805044/

16.6.11

அக்கரைக்கு இக்கரை பச்சை...


இந்த பழமொழி எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் நீர்த்து போகாது...
அது என்னவோ எங்கு பொருத்தினாலும் பொருந்திக் கொள்கிறது...
நம்ம பக்கத்து வீட்டு பிரச்சினை எல்லாம் பல பேருக்கு ஞாபகமே இருக்காது. ஆனால் உலக நியாயம் பேசிக் கொண்டிருப்பவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பது கொஞ்சம் வெக்கப்பட வேண்டி தான் இருக்கிறது...
இலங்கையில் முள்வேலிகளில் அடைபட்டிருக்கும் தமிழனின் நிலையை பார்க்க பல குழுக்கள் சென்றன, அப்படி சென்ற இந்து நாளிதழ் குழுவும், முற்போக்கு எழுத்தாளர்கள் குழுவும், சொன்னது கீற்று இனைய தளத்தில் பலத்த விவாதங்களை பல முறை எழுப்பி இருந்தது...
தமிழின துரோகி என்றும்
பார்ப்பனிய குசும்பு என்றும் அவர்களை சாடியிருந்தனர்...
அப்படி எண்ண சொன்னார்கள் அவர்கள்...
தமிழகத்தில் அகதிகளாய் வாழும் தமிழர்களை விடவும் முள்வேலிகளில் அடைபட்டிருக்கும் தமிழர்கள் இழிவான நிலையில் இல்லை என்று சொல்லியிருந்தார்கள்,
இங்கு இருக்கும் தமிழர்களின் நிலை குறித்து கேள்வி எழும் பொழுதெல்லாம் ஆ ஊ என்று ஊளையிடும் ஊடகங்கள் சில நாட்களில் மௌனம் சாதிப்பது வாடிக்கையாகிவிட்டது...
இலங்கை தமிழர்களை காப்பேன், தமிழகத்தை ஒளி மயமாக்குவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்து ஒரு மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் குழப்பங்களும் கூச்சல்களும் தான் அதிகமாகி இருக்கிறது...

இத்தனை நாளாய் சீமான் எங்கு போயிருந்தார்?

சும்மா வாய் சவடால் விடாமல் தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்...
மலையை சுமக்க முயற்சி செய்வதை விட்டு விட்டு சிறு சிறு பாறைகளாய் அந்த மலையை பெயர்த்து எடுப்போம்...
அறிக்கை விட்டு விளம்பரம் தேடாமல் ஏதாவது செய்யுங்கள் அதுவே விளம்பரமாகி விடும்...

இன்னும் வைகோவும் நெடுமாறனும் வாய் திறக்கவில்லை, அவர்களுக்கு இது பற்றி இன்னும் தெரியவில்லையோ என்னவோ.. யாராவது அவங்களிடமும் சொல்லுங்களேன்...

எதோ நம்மளால் முடிஞ்சது...

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1106/16/1110616031_1.htm

ஓ போடு...


அரசு பள்ளியில் தனது மகளை சேர்த்து அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் முன்னோடியாக உள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் திரு.அனந்த குமார் அவர்களுக்கு ஓ போடுவோம்...

கீழே உள்ள இனைய தளத்தை பார்க்க அந்த இணையத்தில் கொடுக்கப் பட்டுள்ள font ஐ உங்கள் கணினியில் இணைக்க வேண்டியிருக்கும்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=653531&disdate=6/16/2011

15.6.11

மனசாட்சியை அடகு வைப்போம்..


இன்று இந்திய சமுதாயத்தில் பணம் ஆட்சி செய்வதால், அவரவர்களும் மனசாட்சியை கழற்றி போட்டு விட்டு பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்...

என்றோ ஒரு முறை, என் நண்பன் என்றோ ஒரு நாள் அனுப்பிய குறுஞ்செய்தியை... கீழே குறிப்பிட்டுள்ளேன்

( ~_~ )

( ~_~)

( ~_~ )

( ~_~ )

ஏரியா புல்லா அவன தான் தேடிகிட்டு இருக்கேன்...B.Pharm படி தம்பி செம ஸ்கோப் நு சொன்னான்..

மருந்து ஆய்வாளர் பதவிக்கு, 2008 ஆம் ஆண்டு தேர்வு செய்தனர். தமிழகத்திற்கு மட்டும் 24 பதவிகளுக்கு மட்டும் ஆள் எடுத்தனர், அதற்கு மட்டும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதியிருப்பார்கள்... இது ஒரு சாம்பிள் மட்டுமே... நாடு முழுவதும் இது போல் பல்லாயிரக் கணக்கான காலி இடங்கள் உள்ளன, ஆனால் ஆள் மட்டும் எடுப்பதில்லை... மருந்துகளை சோதனை செய்ய முறையான ஆட்களும், சாதனங்களும் குறைவு என்பதால் போலி மருந்து வியாபாரம் பிரமாதமாக இயங்கி கொண்டிருக்கிறது...

மருந்து துறையில் பிரம்மாண்டமான மாற்றம் உருவாகும் வரை இந்த துறையில் குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்... அது வரை, எந்த மருந்து கடையில் வாங்கினால் நல்ல மருந்து கிடைக்கும் குழம்பி திரிவது தான் மக்களின் வாழ்கையாய் இருக்கும்...

http://timesofindia.indiatimes.com/city/delhi/Spurious-medicines-worth-Rs-42L-seized/articleshow/8856228.cms




ஓட்ட பந்தயத்தில் இருந்து விலகி...


இத்தனை ஆண்டு காலமாய் நம் கல்வி அமைப்பு, மாணவர்களை வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில் ஓட வைத்து கொண்டிருந்தது..
அம்மாவின் நல்ல ஆட்சி முறை(?) இந்த ஓட்ட பந்தயத்தில் இருந்து விலகி மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணை நிற்கிறது...
நம் ஆசிரியர்களின் திறமை தான் வரப் போகும் மூன்று வாரங்களுக்கு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படப் போகிறது..
ஆசிரியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறார்களா அல்லது என்ன பாடம் எடுப்பது என்று குழம்பி நிற்கிறார்களா என்பது வெளிச்சத்துக்கு வரும்...
ஒவ்வொரு மாணவனும் தன் ஆசிரியரின் திறமையை இந்த மூன்று வாரங்களுக்குள் எடை போட்டு விடுவான்.. ஆகையால் உங்கள் திறமைகள் அனைத்தும் பயன்படுத்தி உங்கள் மாணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகுங்கள்...

[குறைகளை மட்டுமே எழுதுகிறீர்கள் என்று கூறியவர்கள் இந்த கட்டுரைக்கு ஏன்டா இதில் உள்ள குறைபாட்டை எழுதவில்லை என்று கடிந்து கொள்வார்கள்... நான் செய்ய வேண்டிய வேலையே ndtv யே செய்து விட்டதால் வேறு மாதிரி எழுத வேண்டியதா போயிடுச்சு]

http://www.ndtv.com/article/india/the-jayalalithaa-effect-students-left-without-books-112336

14.6.11

மனித பரிமாணத்தின் தவறு..


குரங்கு மனிதனாக பரிமாண வளர்ச்சி அடைந்த பொழுது ஒரு சிறு தவறு நேர்ந்து விட்டது, அந்த தவறு சிந்திக்கும் ஆற்றல்...
இன்று மாலை வெளியான செய்திகளில் ஊடகங்கள் உச்சநீதிமன்றத்தின் சமச்சீர் கல்வி குறித்தான தீர்ப்பை வெளியிட்டிருந்தது...
நாளை பள்ளிக்கூடம் திறக்கப் போகிறதே, என்னடா தீர்ப்பு வரும் என்று காத்திருந்தால் இன்னும் பல விதத்தில் நம்மை சிந்திக்க விட்டு மண்டையில் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டு இருக்கும் முடியையும் பிடுங்கி எடுத்து விடுவார்கள் போலிருக்கிறது...

இந்த வருடம் ஒன்றாம் வகுப்புக்கும் மற்றும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி தொடர வேண்டுமாம்... மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்வது என்று குழு ஒன்றை அமைத்து ஆராய வேண்டுமாம்...

நம்ம கேள்வி என்னன்னா? ஏற்கனவே போன வருடம் ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்கள், இந்த வருடம் இரண்டாம் வகுப்புக்கும் ஏழாம் வகுப்புக்கும் படிக்க செல்லும் பொழுது சமச்சீர் அல்லாத கல்வியை படிப்பார்களா? அல்லது மீண்டும் ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலேயே உக்கார்ந்து கொள்வார்களா?

நம் கேள்விக்கு எந்த ஊடகமும் இது வரை பதில் தரவில்லை, பதில் பெறவும் முயற்சிக்கவில்லை என்பதும் புரிகிறது...

என்ன நடக்குதுன்னு நாளை பாக்கலாம்...

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=431701&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=


http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=38562&id1=12

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1106/14/1110614030_1.htm

ஜனநாயகம்...


Politics is the gentle art of getting votes from the poor and campaign funds from the rich, by promising to protect each from the other. [ஏழைகளிடம் வோட்டும், பணக்கார்களிடம் இருந்து பணமும் பெற்று, ஒருவரிடம் இருந்து மற்றவரை காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுக்கும் கலையே அரசியல்]

இந்த வாசகத்தை யார் கூறியது என்று தெரியவில்லை, ஆனால் இதை தான் லெனின் தனது அரசு என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்...

காங்கிரஸ் அரசுக்கு சமாளிப்பதற்கு என்று தனி விருது தரலாம் என்று நினைக்கிறேன்.. அவர்களை விட யாராலும் இவ்வளவு அருமையாக சமாளிக்க முடியாது... தப்பி செல்ல எந்த வழியும் இல்லாத நிலையிலும், இருக்கும் இடமும் பலவிதமான புதிய புதிய ஊழல்கள் நெருக்கப் படும் பொழுதும்... அவர்களுக்கு நிகர் அவர்களே தான்...

அண்ணா, குஜராத் அரசை புகழ்ந்து பேசிய பொழுது அவர் மதவாதி என்று தெரியாதவர், குஜராத் அரசின் ஆட்சியை குறை கூறிய பிறகு தான் அவர் மதவாதி என்று தெரிகிறதாம்...

மக்களால் தேர்ந்தெடுக்க படாத ஒருவர் இப்படி அரசை கண்டிப்பது தவறு என்பது இத்தனை நாட்களாய் தெரியவில்லையாம்...

வேட்பாளராய் நிற்காதவர், நிற்க தகுதி இல்லாதவர் ஜனநாயகத்துக்கு ஆபத்தாம்...

முடியலப்பா...

http://news.in.msn.com/national/indiafightsbackagainstcorruption/indiafightback_article.aspx?cp-documentid=5202503

வேணும்னா ஒன்னு பண்ணலாமா, லாக் பால் சட்டம் வரைவுக் குழுவில் வோட்டு போடும் மக்களுக்கு உரிமை இருக்கா இல்லையான்னு ஒரு தேர்தல் நடத்தலாமா... ?

13.6.11

திக்கு தெரியாத காட்டில்...


கடந்த முப்பது தினங்களாக பல கேள்விகள் திக்கு தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருக்கிறது, அதற்கு உண்டான பதில்களை தேடி...

1. லோக் பால் சட்டம் குறித்த விவாதம் நன்றாக சென்று கொண்டிருந்த பொழுது, பூஜையில் கரடி போல இந்த பாபா எதுக்கு வந்தார்?

2. போர் என்றாலே மக்கள் இறக்க தான் செய்வார்கள் என்று திருவாய் மலர்ந்த செல்வி அம்மாவுக்கு இப்படி ஒரு தீர்மானம் போட ஐடியா கொடுத்த ஐடியா மணி யார்?

3. எதன் அடிப்படையில் டாடா அம்பானி போன்றோர் தவறு செய்யவில்லை என்று முடிவுக்கு வந்தனர்? முதலாளி என்ற முறையில் அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் கலைஞர் தொலைக்காட்சியின் கனிமொழி எதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்?

4. சமச்சீர் கல்வி திட்டம் உடனடியாக செயல்படுத்த பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு மேல்முறை ஈடு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடுவதின் காரணம் என்ன?

5. யார் யாரிடமோ தொலைபேசியில் உரையாடும் நலமாக உள்ள ரஜினி ஏன் ஒரு ஊடகங்களுக்கும் நேரடியாக பேசவில்லை? வேண்டாம், ரசிகர்களிடமாவது பேசியிருக்கலாமே?

6. இலங்கையின் மேல் பொருளாதார தடை கோரும் தமிழக அரசு தூத்துக்குடி கொலோம்போ சொகுசு கப்பல் போக்குவரத்தை எப்படி பார்க்கிறது?

7. இந்த ஆண்டு 2.5 லட்சம் கோடி வசூலிக்கப்படாத வரியை விட்டு வைத்திருக்கும் பொழுது ஏன் பெட்ரோல் மீது விதிக்கப் படும் மனிதாபிமானமற்ற வரிவிதிப்பை தளர்த்தி கொள்ள மறுக்கிறது அரசு...?

8. தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்த அரசு, இன்னும் அதை இணையத்தில் வெளியிடாதது ஏன்?

9. உளவுத்துறை முதல் அனைத்து துப்பறியும் இலாகாக்களையும் கைவசம் வைத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு அண்ணா ஹசறேவுக்கும் பாபா ராம்தேவுக்கும் கூடா நட்பு உள்ளது என்று ஏன் முதலிலேயே தெரியவில்லை?

10. cag வெளியிட்டுள்ள பெட்ரோலிய நிறுவனங்களில் அரசு செய்த ஊழலை பற்றி உச்ச நீதிமன்றம் எப்பொழுது சாட்டையை சொடுக்கும்?

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-08/guwahati/29639027_1_royalty-oil-fields-oil-companies

12.6.11

என்ன கொடுமை சார் இது?


நாம் இங்கு கிட்ட தட்ட 70 ரூபாய் கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு வண்டி ஓட்டும் பொழுது...
உள்ளூர் விமானங்கள் ஒரு லிட்டருக்கு 61 ரூபாய் கொடுக்கின்றனர்...
சரி வெளிநாட்டு விமானங்களுக்கு பெட்ரோல் விலை அதிகமாய் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்தால்,
அவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 44 ரூபாய் கொடுக்கின்றனர்...

நம்ம அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால் பெட்ரோல் நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறதாம்...
ஏன் நஷ்டம் வராது?

http://www.iocl.com/Products/AviationTurbineFuel.aspx

விமான பெட்ரோலின் விலையை தெரிந்து கொள்ள மேலே உள்ள இணைப்பில் உள்ள பக்கத்தில், கொடுக்கப் பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்..

பயங்கர நஷ்டத்தில் இயங்குவதால் டீஸல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்...

http://www.hindustantimes.com/Worried-Reddy-meets-FM-on-bleeding-oil-PSUs/Article1-707997.aspx

சூதாட்டம்...


பங்கு வணிகம்னா என்னனு எங்கிட்ட கேட்டீங்கன்னா சூதாட்டம்னு சொல்லிட்டு நிறுத்திடுவேன்... அதை பத்தி விளக்கமா தெரியலையே, ஒரு நாள் அதை பத்தி தெரிஞ்சிக்கலாம்னு எங்கெங்கயோ சுத்தி பாத்து தலை தான் சுத்தி போச்சு.. சரி, இது நம்ம மண்டைக்கு புரிய கூடாத விஷயம் போலிருக்குன்னு விட்டுட்டேன்...
இருந்தாலும் என் ஆராய்ச்சி வீணா போக கூடாதுன்னு, ரெண்டு இணையதள முகவரிகளை கீழே அளித்துள்ளேன்...

http://www.seasonalmagazine.com/2011/05/great-indian-ipo-rip-off.html

http://lastbull.com/what-is-follow-on-public-offer-fpo/

11.6.11

உள்கட்சி விவகாரம்...


உள்கட்சி ஜனநாயகம் பெரிதும் மதிக்கப் படும் கட்சி எது என்றால் அது காங்கிரஸ் மட்டுமே..
என்னங்க சிரிக்கிறீங்க?
உங்க பின்னாடி பத்து பேர் இருந்தா நீங்க கூட தனி ஆவர்த்தனம் நடத்தலாம்... அது தான் காங்கிரஸ்...
வாசன் குரூப், தங்கபாலு குரூப், சிதம்பரம் குரூப், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குரூப், எஸ்.வி.சேகர் குரூப் நு பல குரூப் இருக்கு... அது போல தான் மத்தியிலும்...
நேத்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையில் தி.மு.க வை பற்றி எழுதியது எந்த குரூப் நு தெரியல...
ஆனா அது ஜெயந்தி நடராஜனும் திவாரியும் இருக்கிற குரூப் இல்லன்னு இன்று ஒன இந்திய தமிழ் என்னும் இதழ் புட்டு வைக்கிறது...
என்ன இவர்கள் இந்த உள்கட்சி விவகாரம் தெரியாதவர்கள் போல் இருக்கிறது..
இல்லனா இவர்கள் இதை டபுள் டாக் என்று வர்ணிப்பார்களா?
என்னங்க நான் சொல்றது?

http://thatstamil.oneindia.in/news/2011/06/11/alliance-with-dmk-will-continue-same-spirit-congress-aid0090.html

எங்கு உள்ளது?


ஊழலை எதிர்த்து போராட்டங்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது...
வலைப்பக்கங்கள் முழுவதும், நாளிதழ்களிழும், எங்கு திரும்பினாலும் ஊடகங்களில் பார்வையில் இந்த போராட்டங்களே நிறைந்து உள்ளது... ஊழலின் ஆணிவேரான பெரிய பணமுதலைகளிடமும், அவர்களின் அடிமையான அரசியல்வாதிகளிடமும் இதற்கான விடையை தேடுவது வீண் வேலை...
நம் நாட்டில் ஏற்கனவே ஐந்தாவது தூண் என்னும் ஒரு அமைப்பு ஊழலை எதிர்த்து ஒரு புரட்சியே செய்து கொண்டிருக்கிறது...
ஊழல் வேண்டாமா?
நம் நாடு சுத்தம் ஆக வேண்டுமா?
அண்ணா வுக்கு ஆதரவு கொடுங்கள்...
நம் நாடு நலம் பெற
பாபாவுக்கு ஆதரவு கொடுங்கள் என்று தினம் ஒரு குறுஞ்செய்தி வந்து கொண்டு இருக்கிறது...
உண்மையாகவே உங்களுக்கு லஞ்சத்தை ஒழிக்க ஆதரவு தர வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு கடினமான வேலை தான்...
எந்த காரியத்துக்கும் தெரிந்தோ தெரியாமலோ லஞ்சம் கொடுக்காதீர்கள்...
அதை விட்டு விட்டு missed call கொடுத்தேன், பாபாவுக்கு ஜே, அண்ணாவுக்கு ஒ போடு என்று செம்மறி ஆட்டு மந்தையாக திரியாதீர்கள்...

http://zerocurrency.org/

10.6.11

பெருசு....


எவ்வளவு பெருசு என்று கேட்டால், கையை அகல விரித்து பெருசு என்று அடி வயிற்றில் இருந்து சொன்னாலும் ஏனோ மனம் நிம்மதி அடைய மாட்டேன் என்கிறது. ஏன் என்றால் இது கற்பனையையும் மிஞ்சி விடும் பெருசு...
2g ஊழல் தான் பெருசு என்று கூறியவர்கள், இதை பற்றி மூச்சு விட மாட்டேன் என்கிறார்கள்...
நம் நாட்டில் இது வரை வசூலிக்கப் படாமல் நிலுவையில் உள்ள வரி தொகை 2,50,000,00,00,000 ரூபாய்[2.5 லட்சம் கோடி] . இதை கட்டாதவர்கள் யார் என்றால் நம் நாட்டு அரசியல் வாதிகள் அல்ல, பெரும் தொழிலதிபர்கள்...
சம்பளம் வாங்குபவர்கள் வரியை அவர்களே பிடித்து கொள்வதால், நம் நாடு தள்ளாடியாவது நடந்து கொண்டிருக்கிறது...
இந்த தொகையை வசூலிக்க ஏற்கனவே நியமிக்கப் பட்ட குழு என்ன ஆனது என்பதற்கு, புதிதாக நியமிக்கப் பட்ட குழு தான் பதில் என்று பதில் வருகிறது.
ஆக இவர்கள் செய்யும் ஊழல் பெரும் அளவில் கண்ணிற்கு தெரியாமல் ஒளிந்து கொள்கிறது.
பாஸ்போர்ட் மோசடியில் சிக்கி உள்ள ஹசன் அலி கட்ட வேண்டிய வரி தொகை அவரின் சொத்து மதிப்பையும் தாண்டி செல்கிறது என்பது இன்னும் ஒரு தலை சுற்றும் விஷயம்...
அரசியல்வாதிகளுக்கு எதிராய் சாட்டையை சுழற்றும் நீதி மன்றங்கள், இந்த விஷயத்தில் கண்ணை கருப்பு துணி போட்டு மூடி கொள்கிறது...
அரசியல் வாதிகளின் ஊழலின் ஆணிவேர் எங்கு உள்ளது கைப்புன்னாய் தெரியும் பொழுது கண்ணாடியை தேடிக் கொண்டிருப்பானேன்...

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-09/india/29637753_1_tax-defaulters-tax-arrears-direct-taxes

அது சரி... எது தவறு...


எது சரி என்பது எப்பொழுதுமே குழப்பமான விஷயமே...
நம்ம அறிவுமதி சாரை பேச சொன்னா நல்லா குழப்பி நமக்கு தெளிவா புரிய வச்சிடுவார்...
சமச்சீர் புத்தகங்கள் தி.மு.க அரசின் பிரச்சார களமாகி இருக்கிறது, என்பது தமிழகத்தில், அண்ணா தி. மு. க அரசின் விளக்கமாகியிருக்கிறது...
வரலாறு திரிக்கப் பட்டுள்ளதாக கேரளா முன்னாள் இடது சாரி அரசாங்கத்தின் மேல் கிறிஸ்து தேவாலயங்களின் குற்ற சாட்டாகியிருக்கிறது...
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கை வைத்துள்ளனர்..
ஒவ்வொரு கொள்கையும் இரண்டே இரண்டு பிரிவுகளில் அடங்கி விடுகிறது...
ஒன்று முதலாளித்துவம்
இரண்டாவது பொதுவுடைமை...
தி.மு.க வும் அண்ணா தி.மு.க வும் கூட இனைய வாய்ப்புண்டு (ஏனென்றால் இருவர் கொள்கையும் ஒன்றே) ஆனால் முதலாளித்துவமும் பொதுவுடமையும் என்றும் இணையப் போவதில்லை.. ஆனால் ஒன்று உண்மை மறுக்க முடியாதது...
கிறிஸ்து மதம் crusaders என்ற பெயரில் எண்ணற்ற கொலைகளை செய்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே..

[தெரியாதவர்களுக்கு] http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இப்படி அனைத்து மதங்களும் தங்களை வளர்த்துக் கொள்ள எண்ணற்ற அநியாயங்களை வரலாற்று பக்கங்களில் இரத்தத்தால் எழுதி வைத்துள்ளதை மறைக்க முடியுமே தவிர மறுக்க முடியாது... தமிழன் இந்து மதம் என்ற ஒரே காரணத்தினாலேயே புத்த மதம் இலங்கையில் இனப்படுகொலையில் வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள்...

மதங்களை ஒழித்து விட்டு மனிதத்தை தூக்கி பிடிக்கும் பொழுது, இந்த அட்டை பூச்சிகள் காணாமல் போய் விடுவார்கள் என்பது உறுதி..

http://www.ndtv.com/video/player/news/kerala-church-accuses-left-of-distorting-history/201358

9.6.11

09 06 2011


இன்று
மைசூரில் யானையின் அட்டகாசம்...
நீர் யானையின் பிரசவம்...
சோனம் கபூருக்கு பிறந்த நாள்..
ஹுசைன் ஓவியரின் மரணம்
மாருதி நிறுவனத்தில் வேலை நிறுத்தத்தால் 270 கோடி நஷ்டம்...
hcil மற்றும் mtnl நிறுவனங்களில் மத்திய புலனாய்வு துறை விசாரணை..
திகார் ஜெயிலில் உள்ள தன் நிறுவன மேலாளரை சந்தித்தார் அணில் அம்பானி...
கூடா நட்பு எது என்று புலனாகுமா?
மேற்கு இந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி..
ஒலிம்பிக் வீரர்களை தயார் செய்து அழைத்து செல்ல 258 கோடி ஒதுக்கீடு..
என்று எண்ணற்ற செய்திகள் இருந்தாலும் ,
இன்று அனைவர் கவனத்தையும் கவர்ந்தது என்னவோ அம்மாவின் பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் தான்...
தோழர் சௌந்தரராஜன் ஈனஸ்வர குரலில் பொருளாதார தடையால் தமிழன் படப் போகும் வேதனையை பதிவு செய்தாலும் எங்கே துரோகி என்று முத்திரை குத்தப் படுவோமோ என்று அனைவரும் ஒரு மனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது என்ன நலன் பயக்கும் என்னும் சிந்தனை தான் என் மனதில் இன்று காலையில் இருந்து ஓடி கொண்டிருக்கிறது...
நல்லது நடந்தால் சரி தான்...
இழப்பதற்கு இனிமேல் என்ன இருக்கிறது என்ற எண்ணமே நம் சகோதர தமிழனிடம் மேலோங்கி இருக்கும் என்பது தான் உண்மை...

http://www.hindustantimes.com/NSA-calls-on-Jayalalithaa/Article1-707632.aspx

8.6.11

சாயம் வெளுக்கும் வானவில்


இருவேறு கால கட்டங்களில் வெளியிடப் பட்ட செய்திகள் என்ன சொல்ல வருகிறது என்று தெரியவில்லை.

ஏப்ரல் 15 2011 இல்
டெக்கான் குரோனிகல் இதழில் வெளியான செய்தி, அன்ன ஹஜாறேவுக்கு 68,688 ரூபாய் பணம் வங்கியில் இருப்பதாக வெளியிட்டுள்ளது...

http://www.deccanchronicle.com/channels/nation/north/activist-members-lokpal-panel-declare-assets-507

இன்று ndtv இனைய தளத்தில் வெளியான செய்தி அவருக்கு வங்கியில் பணமே இல்லை என்று கூறியுள்ளது..

http://www.ndtv.com/article/india/hazares-possessions-a-plate-a-bed-111022

வானவில் சாயம் போகிறதா, அல்லது திட்டமிட்ட சதியா என்பது இப்போதைக்கு முடிவுக்கு வர முடியவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...

பச்சை மஞ்ச நீலம்


கருப்பு பணம் என்று கூறுவது times of india என்னும் பத்திரிக்கைக்கு பிடிக்க வில்லை போல் இருக்கிறது,
அதனால் புது விளக்கங்கள் தர முயற்சிக்கிறது...
மஞ்சள் பணம்
நீல பணம் என்று வகை பிரித்தாளும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
கருப்பு பணம் என்பது அரசை ஏமாற்றி கணக்கில் வராமல் பதுக்கி வைக்கப் பட்ட பணமே ஆகும்...
அரசை ஏமாற்ற ஆயிரம் காரணம் கூறினாலும் ஏமாற்றுவதற்கு நியாயம் கற்பிக்க முடியாது...
மேலும் கருப்பு பணம் இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று புது கரடியை வெளியே விட்டுள்ளார்கள்...
இந்த கரடி பங்கு சந்தை வீழ்ச்சிக்கு வேண்டுமானால் துணை நிற்குமே தவிர, மக்களின் பசி பட்டினியை தீர்ப்பதில் எந்த குறையும் வைக்காது என்பது என் கருத்து...
என்ன தான் கருப்பு வண்ணத்துடன் மற்ற வண்ணத்தை கலந்தாலும் அது கருப்பாக தான் இருக்க போகிறது...

http://timesofindia.indiatimes.com/india/-TIMES-VIEW-Should-not-Paint-all-slush-money-with-one-brush/articleshow/8771497.cms

7.6.11

சறுக்கல்...


கடமையிலிருந்து சறுக்க கூடாது என்பது மனிதன் வகுத்த நீதிபோதனை...
ஒரு மதவாதியின் கடமை என்பது அரசை மக்களின் கோபத்திலிருந்து காப்பாற்றுவது மட்டுமே என்பது நம்ம ராம்தேவ் பாபாவுக்கு மறந்து விட்டது..
அவர் அரசை காப்பாற்றுவதை விட்டு விட்டு அரசுக்கு எதிராய் திரும்பும் பொழுது அரசு தன் பொது எதிரியாய் அவரை கருதுவது தான் ஜனநாயகம் என்று பொருள் படுகிறது...
ஒருவன் தவறு செய்கிறான் என்று எத்தனையோ முறை எத்தனையோ பேர் கூக்குரல் எழுப்பியும் மௌனம் சாதித்து விட்டு, தாங்கள் எதிர்பார்த்தது நடக்க வேண்டும் என்று சிவப்பு கம்பளம் வரவேற்ப்பு கொடுத்து அழைத்து வந்து, முதுகில் குத்து வாங்கும் பொழுது அரசுக்கு மதம் பிடிக்காமல், மதம் பிடித்து விடுகிறது... [மதம், இரண்டு அர்த்தமாக வருவதால் இந்த குழப்பம்...]
நீங்கள் தவறு செய்பவர்களை கண்டுபிடியுங்கள், அதே சமயத்தில் இத்தனை நாளை அவரை கண்டு கொள்ளாமல், மெத்தனமாக தவறு இழைக்க வைத்ததும் பெரிய ஊழல் தான் என்பதையும் ஒப்பு கொள்ளுங்கள்...

ஊழலை கண்டு கொள்ளாமல் விடுவதும் ஊழல் தானே? கரெக்டா?

http://profit.ndtv.com/news/show/enforcement-directorate-to-probe-ramdev-funds-158913

செஸ்


வாழ்க்கை என்பது சதுரங்க ஆட்டம் போன்றது, என்ன ஒரே ஒரு வித்தியாசம் இந்த ஆட்டம் இருவர் மட்டுமே ஆடுவது அல்ல, உலகமே ஒன்றாய் ஆடுகிறது...
UNICEF என்னும் மையம் மே மாதம் கடைசி நாளில் தடுப்பூசிகளை என்ன விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று பட்டியல் வெளியிடப் போவதாக சொல்லியவுடன், மருந்து நிறுவனங்களுக்கிடையே பெரும் சர்ச்சை எழுந்தது, பொருளாதார அறிவுப் படி மற்றவனை சுரண்டி கொழுப்பது தான் வளர்ச்சி என்பதால், ஒவ்வொரு மருந்து நிறுவனங்களின் வளர்ச்சியும் ஊஞ்சல் ஆட தொடங்கியது..

http://globalhealth.kff.org/Daily-Reports/2011/May/31/Gh-053111-UNICEF-Vaccine-Prices.aspx

இன்று வெளியான செய்திப் படி சில புத்திசாலி நிறுவனங்கள், பெயரை கெடுத்துக் கொள்ளாமல் தாங்களாகவே விலையை குறைப்பது போல் நாடகம் நடத்துகின்றனர், இதனால் இவர்கள் என்னவோ உத்தமர் போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்கி கொள்கின்றனர்...


http://www.guardian.co.uk/society/2011/jun/06/vaccine-price-cuts-aid-அகேன்சீஸ்

உத்தமர் போல் வேஷம் போட்டு , மேலும் சுரண்டி கொழுப்பது தான் இவர்கள் திட்டம்.... 19 பைசா அடக்க விலை உள்ள CETRIZINE என்னும் மருந்தை ரூ 3.50 க்கு விற்கும் புண்ணியவான்கள் தான் இவர்கள்...
இதை எல்லாம் சொன்னால் நம் ரசாயன மற்றும் உரத்தொழிற்சாலை அமைச்சருக்கு தெரிய போகிறதா என்ன?

6.6.11

வளர்ச்சியை தேடி...


கட்சியை வளர்க்க, பறக்கிறார், ஓடுகிறார், நடக்கிறார் இன்னும் என்ன என்னவோ செய்கிறார்... ஆனால் அவர் எதிர்பார்க்கும் முடிவை தான் அவரால் காண முடியவில்லை...
அவர் ரொம்ப கஷ்டப் படவேண்டியதே இல்லை..
குறைந்த பட்சம் அவர் தாத்தாவின் பொருளாதார கொள்கையை கடை பிடித்தாலே போதும்..
அதை விட்டு விட்டு மாநில அரசியலில் கவனம் செலுத்துவதில் அக்கறை கொள்கிறார்..
உத்தர பிரதேஷிலும், தமிழ் நாட்டிலும் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, இவர்கள் ஆளும் மத்திய அரசை வைத்து கொண்டே ஏதாவது உருப்படியான காரியம் செய்தாலே, உத்தர பிரதேசத்திலும் தமிழ் நாடும் காங்கிரஸ் கையில் அடக்க மாகும்...
வான வேடிக்கை காட்டி குஷி படுத்துவதை விட்டு விட்டு பசித்த வயிறுக்கு சோறு போடுங்கள், விவசாயத்தின் வளர்ச்சிக்கு பாடு படுங்கள்...
அதை விட்டு விட்டு முக்கியமான பிரச்சினைகள் முளைக்கும் போது எல்லாம் கண்ணா மூச்சி ஆடுவது சின்ன புள்ளை தனமா இருக்கு... சொல்லி புட்டேன்..

5.6.11

பல்டி அடிங்க...


[வெறும்] இந்திய கம்யூனிஸ்ட் கட்சி? [cpi]

மேலே உள்ள வரி எழுதுவதற்கே எனக்கு அத்தனை குழப்பம், மக்கள் சரியாக புரிந்து கொள்வார்களா, அல்லது குழப்பிக் கொள்வார்களா என்று... [பெரிய பெரிய நாளிதழ்கள் கூட பல சமயங்களில் குழம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது]
இங்கே எண்ண குழப்பம்னா அதில் உள்ள ஒரு தலைவரே குழம்பிட்டரோன்னு தோணுது, [ஏற்கனவே இவங்க காங்கிரசை ஆதரிச்சதால தான் மார்க்சிஸ்ட் நு அடை மொழியோட ஒரு கட்சி பிறந்துச்சு]
இப்ப என்ன நடக்கும்னு தெரியல?

காங்கிரசை ஆதரிக்கிற தவறை மட்டும் இந்த கட்சி நிறுத்திக் கொள்ளாது போலிருக்கு, அது அவங்களோட கொள்கை, அதனால் இந்த விவகாரத்தை இதோட நிறுத்திக்கிட்டு நம்ம சந்தேகத்துக்கு வருவோம்...

எங்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்...

அது என்னங்க அது அரசியல் வாதி மட்டும் தான் உரிமைக்காக போராடனுமா?
சாதாரண மக்கள் போராட கூடாதா..?
சாமியார்கள் போராட கூடாதா...?
நல்ல விஷயத்துக்காக யார் போராடினாலும் அங்க நாம இருக்கணும்னு சொல்ற உங்க கட்சி கொள்கை என்ன ஆச்சு?
அப்படின்னா அந்த சாமியார் போராடுறது நல்ல விஷயத்துக்காக இல்லையா?
அந்த சாமியார் நல்லவர் இல்லை அப்படின்னு சொல்லியிருந்தா கூட எத்துக் கிட்டு இருப்பேன், அது என்னாங்க அது, முதல்ல நீ யோகா வாத்தியாரா இல்லை அரசியல் வாதியான்னு சொல்லு அப்படின்னு ஒரு கேள்வி?

உங்க கட்சியை பொறுத்த வரைக்கும் அனைத்து மக்களுக்குமே அரசியல்னா என்னன்னு தெரிஞ்சிருக்கணும், ஓட்டு போடும் ஒவ்வொரு மக்களுமே அரசியல் வாதி தான்னு ஒரு கொள்கை இருக்கே அது என்னங்க ஆச்சு?
அரசியல் வாதின்னாவே ஊழல் வாதின்னு ஒரு அர்த்தம் இந்த நாட்டில உண்டாயிடுச்சு தோழரே, அதில எல்லோரும் ஒத்துக்கிற ஒரே விஷயம் கம்யுனிஸ்டுகள் மட்டும் தான் நேர்மையானவங்கன்னு ஒரு கருத்து..
அந்த நம்பிக்கையும் குழி தோண்டி புதைச்சிட்டீங்கன்ன நீங்க ஆவலா எதிர் பார்த்துகிட்டிருக்கிற புரட்சி கண்டிப்பாய் நடந்திடும்...

http://timesofindia.indiatimes.com/india/CPI-comes-down-heavily-on-government-on-Ramdev-agitation/articleshow/8733802.cms

இடது பக்கம் செல்லவும்...


மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் அனைவரும் இடது பக்கம் செல்ல வேண்டும் என்று மார்க்சும் எங்கல்சும் வரை அறுத்தனர்...
அதனால் தான் அமெரிக்காவில் ரோட்டில் கூட வலது பக்கம் செல்கின்றனர்..
இடது சாரிகளின் வீழ்ச்சிக்கு எண்ண கரணம் என்று ஆராய்ச்சி செய்ய போகிறார்களாம் கல்கத்தாவில்...
இதெல்லாம் காரணம் என்று யூகம் வேறு...
௧. மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது, கரத் செய்த மிக பெரிய தவறாம்...
௨. மக்களிடம் தொடர்பு வைத்ததுக் கொள்ளாதது என்று முடிவு செய்யலாம் என்றும் முடிவாம்..
௩. கட்சியின் செயல்பாடுகளில் தோய்வு...

எனது விசாரணை..
௧. இடது சாரிகளின் கட்சியில் தனி மனித முடிவு ஏற்றுக் கொள்ளப் படுவது உண்டா? அப்படி உண்டு என்றால் அது இடது சாரி கட்சியா?
௨. இடது சாரி சிந்தனைகளை ஊழியர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் விதைத்து இருக்கிறீர்கள்?
௩. இடது சாரி கட்சியில் இருக்கும் அனைவரும் இடது சாரிகளா?

நம் நாட்டு தேர்தல் என்பதே ஒரு ஜனநாயக முறை அல்ல என்று கூறும் கட்சியினர், தேர்தல் என்பதே ஒரு போலி ஜனநாயகம் என்று கூறும் கட்சியினரே தேர்தல் தோல்விக்கு விடை தேடுவது என்பது, கை புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல் ஆகும்...
அப்படி அவர்கள் உண்மையாகவே விடைகள் தேடுகிறார்கள் என்றால் அவர்கள் கொள்கையிலே அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்...

இவர்களின் பின்னால் நாம் செல்வதை விட, இடது சாரி பாதையை சரியாக கண்டுபிடித்து அனைவரும் பயணிப்போம் என்பதை தவிர சொல்வதற்கு இங்கு வேறு எதுவும் இல்லை...

http://www.telegraphindia.com/1110605/jsp/bengal/story_14073486.jsp

இவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று இவர்களின் pd நாழிதளில் பார்ப்போம்...

ஐடியா ...


மனித உயிருக்கு மதிப்பு என்பது கிடையாது, ஏனென்றால் அது விலை மதிக்க முடியாதது...
இந்த வாக்கியத்தில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வதே பணத்தை இனப் பெருக்கம் செய்பவர்களின் கொள்கையாக இருக்கிறது..
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் அலை பேசி தவழ வேண்டும் என்பது அம்பானியின் கனவு என்று மார் தட்டிக் கொள்வார்கள்... அதை சாதித்து காட்டியதிலும் அந்நிறுவனத்தின் சிறிய பங்கு உள்ளது என்றால் அது மிகை அல்ல...
ஆனால் இந்த அலை பேசி பிரயோகம் ஆரோக்கியமானதா இல்லையா என்று இரு வேறு கருத்துக்கள் உலவி வந்தது...
அலை பேசி பிரயோகம் ஆரோக்கியமானது அல்ல என்று ஒருவர் புறப்பட்டு அதன் காரணத்தையும் முன் வைக்க, உலக சுகாதார மையம் 31 விஞ்ஞானிகளை வைத்து வழ வழ கொழ கொழ என்று ஒரு மாதிரி வரும் வராது என்று அறிக்கை தயார் செய்து... புற்று நோய் உருவாக்கும் காரணிகளின் பட்டியலில் மூன்றாம் பிரிவில் இணைத்து உள்ளனர்...

http://signalnews.com/who-cell-phone-cancer442

இதை எதிர்பார்த்து உக்கார்ந்திருந்த அலை பேசி தயாரிப்பாளர்கள், பொங்கி எழுந்து அவர்கள் முறைக்கு ஒரு ஆராய்ச்சி செய்து, உலக சுகாதார மையமே வராது என்று கூறி விட்டார்கள் என்று பின் பகுதியை பிடித்து தொங்குகின்றனர்..

http://www.hindu.com/2011/06/03/stories/2011060362790900.htm


ஆக இந்த பட்டி மன்றம் இப்போதைக்கு தீர்ப்பு வராது போல் இருக்கிறது...

தமிழன் அலை பேசி உபயோகத்தால் புற்று நோய் வந்து இறப்பானோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக எதோ ஒரு சாலையில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டி இறக்க போகிறான் என்பது உறுதி...

4.6.11

சனி பிணம்...


சனி பிணம் தனியா போகாது என்று ஒரு பழமொழி உண்டு...
காங்கிரஸ் அரசு 2G ஊழலால் நொந்து நூலாகியதால், அதே போல் ஒரு ஊழலை மோடியின் குஜராத் அரசாங்கத்திலும் கண்டுபிடித்து உள்ளனர்...
இங்கு எதிர் கட்சியினரே கண்டுபிடித்து இருப்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா அல்லது நீர்த்து போகுமா என்பது போக போக தெரியும்...
ஒன்று மற்றும் தெரிகிறது... இந்த மாதிரி பெரிய பெரிய ஊழலின் பின்னணியில் இருப்பது பெரிய பெரிய பணக்காரர்கள் தான்...
இப்பொழுதும் சட்ட மன்றம், டாடாவுக்கு டாடா காட்டி விடும், அவர் தவறே செய்யவில்லை என்று...

http://www.dnaindia.com/india/report_congress-alleges-scams-worth-rs1-lakh-crore-by-narendra-modi-govt_1551033

[என்னடா சனி பிணம் என்று குழம்புவர்களுக்கு, என்னை பொறுத்த வரை, ஏழரை சனிஎல்லாம் கிடையாது, வெறும் ஐந்தாண்டு சனி தான்.. இப்ப புரிஞ்சிருக்கும்]

ஒ போடு...

[நடக்க போவதை முன்குட்டியே சொன்ன

சம்பத் சார் க்கு ஒரு ஓ.......................

சம்பத் சார் எழுதிய கட்டுரையை படிக்க...

http://www.dnaindia.com/blogs/post.php?postid=2751

ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லாத லோக் பால் சட்டம் உருவாகுகிறது...

http://ibnlive.in.com/news/team-anna-not-serious-about-lokpal-says-sibal/157179-37-64.html

அதிகார போதை...


அடிச்ச மப்பு தெளியவே கூடாதுன்னா எந்த சரக்கு அடிக்கணும்?
முக்கால் வாசி குடி மகன்களின் கவலை இதுவாக தான் இருக்கும்...

சரக்கு எல்லாம் அடிக்க வேணாம், ஒரு கட்சியிலே சேர்ந்து எப்படியாவது பெரிய பதவிய பிடிச்சு மந்திரி அமைச்சர்னு உக்கார்ந்திட்ட அப்ப ஏறும் பாரு ஒரு போதை அது இறங்கவே இறங்காது...

யார் சொன்னது அப்படீண்றீன்களா?

நம்ம முன்னாள் அமைச்சர் சொன்ன பதிலை கேட்டா யாருக்குமே சந்தேகம் வராது...

அப்படி என்னங்க சொல்லிட்டாரு...?

ராம்தேவிடம் எங்கள் கட்சிக்கு எந்த பயமும் இல்லை, அப்படி பயம் இருந்தால் அவர் இந்நேரம் கம்பி எண்ணி கிட்டு இருப்பார்.. அப்படின்னு சொல்லியிருக்கிறார்...

இங்க என் சந்தேகம் என்னன்னா,
கம்பி என்ற அளவுக்கு அவர் அப்படி எண்ண தப்பு செஞ்சார்?
அப்படி தப்பு செய்யலைனா,
தப்பே செய்யாத ஒருவரை எப்படி உள்ளே வைப்பீங்க?

இப்ப சொல்லுங்க, மப்பு தெளிஞ்சிடுச்சா...
உங்களுக்கும் மப்பு ஏறனும்னா, கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை படிங்க,

http://truthdive.com/2011/06/03/baba-ramdev-is-a-businessman-digvijay-singh.html

3.6.11

தில்லு துரை...


உண்மையை ஒத்துக் கொள்ளவும் ஒரு தைரியம் வேணும்..
நம்ம ஷாருக் போல எல்லா நடிகர்களும் இருந்து விட்டால், நம்ம நாடு என்னிக்கோ ஊழல் இல்லாத நாடா ஆகியிருக்கும்...
ரசிகர்கள் தான் என் உயிர்னு கேட் க்கு வெளியவே நிக்க வச்சுட்டு பால்கனியிலிருந்து கை காட்டும் நடிகர்கள் மத்தியில் இவ்வளவு வெட்ட வெளிச்சமா, நான் ஒரு சுயநலவாதி.. எனக்கு யாரை பத்தியும் கவலை இல்ல, எனக்கு என்னை பத்தி தான் கவலை.. காசு தான் முக்கியம், எவன் எவனை கொள்ளை அடிச்சா எனக்கு என்ன? என்று தைரியமாக சொல்லியிருக்கிறார்...
இவர் இப்படி கூறியிருப்பது எந்த அடிப்படையில்
ஒன்று மக்கள் மேல் இவர் வைத்திருக்கும் நம்பிக்கை...
அல்லது அடிச்ச மப்பு தெளியலையோ என்னவோ...

எல்லோரும் இதே மாதிரி வந்து உண்மையை ஒத்துக்குங்கப்பா, அதுவே நீங்க ஊழலுக்கு எதிரா செயல் படும் செயல் தான்...

ஊழலை ஒழிப்பதற்கு இந்த உதவியாவது செய்யக் கூடாதா..?

http://www.hindustantimes.com/SRK-Won-t-back-Ramdev-his-agitation-politically-motivated/Article1-704896.aspx

2.6.11

அரசியல்வாதிகளுக்கு...


உங்களுக்கு அநேகமாக கடைசி வாய்ப்பு...
சாட்சி: கைப் புண்ணுக்கு கண்ணாடியா?
செய்த தவறு: பெரும் முதலாளிகளுக்கு உதவி புரிந்தது..
கிடைத்த பரிசு: கொஞ்சம் காசும், சிறை வாசமும்...

டாடாவும் அம்பானியும் தவறே செய்யவில்லையாம்...
செய்த தவறு எல்லாம் நீங்கள் தானாம்...

அட நம்ம முதுகிலேயே ஒருத்தன் குத்திட்டான் சும்மா விடலாமா, வாங்கப்ப வாங்க வந்து எல்லா உண்மையும் சொல்லி மன்னிப்பு கேளுங்க...

நீங்க மன்னிப்பு கேட்கலனாலும் மறந்து விடும் மக்கள், மன்னிப்பு மட்டும் கேட்டு விட்டால் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்...

இன்னும் எண்ண யோசனை...
கமான் கைப் புள்ள...

http://www.moneycontrol.com/news/current-affairs/pleas-against-tata-ambani-were-genuine-balwas-counsel_554287.html

அட போங்கப்பா


அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!!!!!!!!!!!!!!!!!!!!

http://expressbuzz.com/nation/minister-steals-a-telephone-exchange-loots-bsnl/280258.ஹ்த்ம்ல்

http://ibnlive.in.com/news/centre-sat-on-cbi-report-against-dayanidhi-maran/156278-60-118.html


http://indiatoday.intoday.in/site/story/maran-has-telephone-exchange-at-chennai-home-with-323-lines-cbi/1/140147.html

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF..?+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!&artid=429231&SectionID=130&MainSectionID=130&SEO=&SectionName=India

1.6.11

தர்மம் சரணம் கச்சாமி...


மதங்கள் அனைத்தும் மதம் பிடித்து திரிந்த பொழுது, மதத்திற்கு மாற்றாக ஒரு சங்கத்தை உருவாக்கினார் கௌதமர்...
மறு பிறவி இல்லை என்று பேசிய கௌதமரின் வழி வந்தவர்கள், புத்த மத தலைவர்கள் மறு பிறவி எடுத்து வருவதாக புருடா விட்டனர்.. [எண்ணங்களுக்கு மறு பிறவி உண்டு என்று கௌதமர் கூறினாரா என்பது கேள்விக்குறியே...]
சங்கத்தில் உள்ளவர்கள் சில உடமைகளை தவிர வேறு எதுவும் வைத்து இருக்க கூடாது என்ற விதி, நாட்டின் தலைமையாக சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆளும் பொழுது தலை வெளியாகி விடுகிறது...
தர்மமும் அன்பும் பொங்கி புரண்டு ஓட வேண்டும் என்ற கௌதமனின் எண்ணத்தில் இரத்த சிதறல்கள், இலங்கையில் புது அர்த்தம் எழுதுகின்றது...
நீயும் நானும் புத்தனே என்ற கௌதமனின் சொற்கள் அர்த்தமற்றதாகி அவர் சமாதியில் அடக்கம் செய்யப் படுகிறது...

தமிழன் புத்த மதத்திற்கு மாறினால், அவன் காப்பாற்றப் படுவானா?

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+:+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF&artid=425310&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest