Pages

2.10.11

ஆறப் போட்டால் அடங்கி விடுமா?

அறிவிக்கப் படாத மின்வெட்டுகள் ஆரம்பமாகி உள்ளன... 
சரியான திட்டமிடல் இல்லாத அரசு, ஆகையால் முன்னோக்கு பார்வை இருந்தால் மட்டுமே எந்த அரசு இயந்திரமும் சரியாகும் என்பதால், மின்வெட்டு என்பது இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரியாக போவதில்லை...

இதை காரணம் காட்டி கூடங்குளம் அணு உலை மீண்டும் இயக்க திட்டமிடுவதும்... இயக்குவதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற முயற்சி செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன...

அதன்படி தினமலர் நாளிதழில் வந்த கட்டுரை பல்லாயிரம் கேள்விகளை மக்கள் மீது திணித்து தனக்கு தேவையான பதிலை பெற்றுக் கொண்டது ஆச்சரியமானதே...

கேள்வி 1

விபத்துகள் நிகழ்கிறது என்பதால் வாகனங்களில் யாரும் பயணம் செய்யவே இல்லையா?

இந்த விபத்துகள் அனைத்தும் நிகழ்வது தனி மனித கவனக் குறைவால் தான்.. அணு உலைகள் போன்ற விஷயங்களில் இயற்கையின் தாக்குதலால் விபத்து நிகழ்ந்து விட்டால் கையை பிசைந்து கொண்டு இறந்தவர்களின் உடலை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யப் போகிறீர்கள்... என்ன நடக்கிறது என்று தெரியாமலே ஜனிக்கும் பல்லாயிரம் கணக்கான குழந்தைகளுக்கு உங்கள் பதில் என்ன? எங்கள் சுயநலத்திற்காக உங்களை காவு கொடுத்தோம் என்பதா?

கேள்வி 2 

அலைபேசி பேசுவதால் உடல் உறுப்புகளுக்கு கதிர்வீச்சு அபாயம் இருப்பதால் அலைபேசி உபயோகிப்பதை விட்டு விட்டோமா?

அதற்க்கு தான் ஹெட் போன் உபயோகித்து பேச வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்... நீங்கள் சொல்வது போல் பார்த்தால் கதிர்வீச்சு பயங்கரமாய் இருக்கும் போலிருக்கே... இதை யாரும் இது வரை சொல்லவில்லை... நீங்கள் தான் முதல் ஆள்...

கேள்வி 3

யுரேனியும் இருப்பு வைக்கப் பட்டுள்ளதால், அதுவே இப்பொழுது ஆபத்து தான் என்று கூறியுள்ளீர்கள்... அதை தாங்க நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்... அதை விட அதிக ஆபத்தா அதனுடைய கழிவுகள் இருக்குமாமே..

இன்னும் எவ்வளவோ கேள்விகள் நீங்க கேட்டிருக்கீங்க, ஆனா அதுக்கு பதிலும் உங்களுக்கே தெரியும் என்பதால், நான் ஒரே ஒரு கேள்வி கேக்கிறேன்...

நம் தமிழகத்தில் மண்டையை பிளக்கும் வெயில் அடிக்கிறது...

பிறகு என் சூரிய ஒளியை வைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை எந்த அரசும் ஈடுபட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்?