Pages
politics, critics of medias, and update of hot news
இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
31.5.11
அடிமை..
அனைத்து தொழிலாளிகளையும், உழைப்பை மூலதனமாக போடும் ஒரு மனிதனாக பார்க்காமல், அடிமையாக தான் ஒவ்வொரு முதலாளிகளும் பார்த்து கொண்டு இருக்கின்றனர்... இந்த சங்கதி இல்லை மறை காய் மறையாக இருந்து வந்தாலும், பணம் கொழிக்கும் ipl என்னும் விளையாட்டு வியாபாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது... இங்கு இரண்டு முதலாளிகள், bcci மற்றும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு முதலாளி...
இந்த அடிமை தத்துவம், kkr எனப்படும் ஷா ருக் கான் முதலாளியாக உள்ள ஒரு அணியில் வெளிப்பட்டுள்ளது... ஒவ்வொரு ipl போட்டிகளிலும் இந்த அணி எதோ ஒரு சர்ச்சையில் சிக்கி கொண்டே தான் இருக்கின்றது...
இந்த முறை ஒரு வீரரின் காயத்தையும் பொருட் படுத்தாமல் அவரிடம் இருந்து உண்மையை மறைத்து, அவரை பலி கடாவாக்கி அவரை அடிமையை விட மோசமாக நடத்தி இருக்கிறார்கள்...
மேலும் இந்த பிரச்சினை பெரிதாகும, அல்லது குழி தோண்டி புதைக்கப் படுமா என்பது போக போக தெரியும்...
எப்படியோ, தர்மம் ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் தான் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறான் மனிதன்..
அது கனவு தான் என்று தெரியும் போதும் விழித்துக் கொள்வான அல்லது நிரந்தரமாக தூங்கி விடுவானா என்பது தான் என் கவலை...
http://www.timesnow.tv/Gautam-Gambhir-continues-to-blame-KKR/articleshow/4374327.cms
[the picture contains a slave market in atlanta georgia in 1864] http://www.sonofthesouth.net/slavery/slave-trader.htm
Labels:
விளையாட்டு அரசியல்
30.5.11
௧...௨...௩....
௧,௨,௩ [1,2,3] ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் சூடாக அரங்கேறிய பொழுது, எத்தனையோ விதமான கருத்துக்கள் வெளி வந்தது... அவற்றில் பல வளர்ந்த நாடுகள், வளர்கின்ற நாடு, வல்லரசாக கனவு காண்போம், பொருளாதார ரீதியான வளர்ச்சி, என்று பலவிதமான கருத்துக்களை அந்த ஒப்பந்தத்தை ஆதரித்து வெளியிடப் பட்டது...
ஜப்பான் என்ற ஒரு நாடு பூகம்பத்தால் ஆட்டிவைக்கப் பட்டவுடன், இதே நாக்கு முன்னுக்கு பின் முரணாக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது...
ஜெர்மனியின் சுற்றுச் சூழல் அமைச்சர் அனைத்து அணு உலைகளையும் நிறுத்துவது என்று பேசி வருகிறார்..
நம் நாட்டு போபால் விபத்துடன் இணைத்தும் பேசி வருகிறார்கள், வைச்சா குடுமி அடிச்சா மொட்டை... நடுவில வேற எதையும் யோசிக்க மாட்டாங்களோ...
சாமி, நம்ம நாட்டுல இருக்கிற ப்ளுடோனியும் பயன் படுத்த எப்படி அணு உலை கட்டுவது என்று ஆராய்ச்சி செய்யுங்கள், மாறாக இன்னும் இத்துப் போன உறநியத்தை கட்டி என் மாரடிக்கிறீர்கள்...
நமது மூளை பிரமாதமானது,
பதவியில் இருக்கும், யாராவது இதை பற்றி யோசிப்பீர்களா?
http://www.ctv.ca/CTVNews/Canada/20110530/coalition-agrees-nuclear-free-germany-by-2022-110530/
27.5.11
சுய விமர்சனம்...
எத்தனையோ நல்ல விஷயங்கள், எத்தனையோ நல்ல கண்டுபிடிப்புகள், இந்த உலகில் நடந்து கொண்டிருக்கிறது... அதை பற்றி எல்லாம் எழுதாமல் வெறும் negative செய்திகளை மட்டுமே ஏன் எழுதுகிறாய் என்று ஒரு கேள்வி எழுந்தது?
கத்தி கண்டுபிடிக்கப் பட்டது என்னவோ நல்ல விஷயத்திற்காக தான், ஆனால் திருட்டுக்கும் கொலைக்கும் (negative) துணை போக வில்லையா?
நல்ல விஷயத்திற்காக அணுகுண்டு கண்டுபிடித்தவர் பின்னாளில் அதை கண்டு பிடித்ததற்காக மிகவும் வருத்தப்பட்டதாக தகவல்...
நீங்கள் positive என்று எதை நினைக்கிறீர்களோ, அதனுள் negative ஒளிந்து கொண்டு தான் இருக்கும்... ஒளிந்திருப்பதை வெளிக் கொணரும் முயற்சி தான் ஆணிவேர்...
கத்தி கண்டுபிடிக்கப் பட்டது என்னவோ நல்ல விஷயத்திற்காக தான், ஆனால் திருட்டுக்கும் கொலைக்கும் (negative) துணை போக வில்லையா?
நல்ல விஷயத்திற்காக அணுகுண்டு கண்டுபிடித்தவர் பின்னாளில் அதை கண்டு பிடித்ததற்காக மிகவும் வருத்தப்பட்டதாக தகவல்...
நீங்கள் positive என்று எதை நினைக்கிறீர்களோ, அதனுள் negative ஒளிந்து கொண்டு தான் இருக்கும்... ஒளிந்திருப்பதை வெளிக் கொணரும் முயற்சி தான் ஆணிவேர்...
25.5.11
உண்டு முடித்தவுடன்,
பெட்ரோல் விலை உயர்வுக்கு நமது அமைச்சர் கூறியிருக்கும் பதில் சூப்பர் ரகம்... இந்த மாதிரி பதில் அளிப்பதற்கு காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தால் மட்டுமே முடியும் போலிருக்கிறது...
பெட்ரோல் விலை ஏறி இருப்பதற்கு அரசு காரணம் இல்லை என்றும், சர்வதேச விலை உயர்ச்சியே காரணம் என்று யாருக்கும் தெரியாத முக்கியமான செய்தியை வெளியிட்டிருக்கிறார்...
இவர் இப்படி கூறிவிட்டதால்,
அடுத்து வருங்காலத்தில் எப்படி எல்லாம் பதில் வரும்...
ஒரு சின்ன கற்பனை...
வெங்காயம் விலை ஏற்றத்திற்கு அரசு காரணம் இல்லை, விவசாயிகள் தான் காரணம்...
பால் விலை ஏற்றத்திற்கு மாடுகள் தான் காரணம்,
நீர் விலை ஏற்றத்திற்கு மழை இல்லாதது தான் காரணம்...
ஆஹா ஆஹா...
http://ibnlive.in.com/news/no-government-role-in-petrol-price-hike-pranab/152515-37.html
24.5.11
முதல் கோணல்..
வரலாற்றில் தனது பெயரை வெற்றிகரமாக பதித்து விட்ட பொழுதும் ஆசை தீராமல் மாணவர்களின் புத்தகங்களிலும் தனது பெயரை பதிய வைக்க வேண்டும் என்ற பேராசை, தற்பொழுது மாணவர்களின் கல்வியை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது...
உங்கள் சண்டையை தேர்தல் களத்திலும், சட்ட சபையிலும் நிறுத்திக் கொள்ளுங்களேன்... ஏன் இப்படி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டும்...
ஆனா ஊன்னா கண்டனம் தெரிவிக்கும் கட்சியே, மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் பொழுது, என்ன செய்தால் ஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைய வைக்க முடியும் என்று குழப்பம் தான் மிஞ்சுகிறது...
புது புத்தகங்கள் அச்சிட்டு வருவதற்கு நாட்கள் ஆகும் என்பதால், மாணவர்களே உங்களுக்கு முன் படித்து முடித்து கிழித்து விட்ட புத்தகங்களை இரவில் வாங்கி படித்து கொள்ளுங்களேன், என்று அரசு அறிவிப்பு வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை...
200 கோடி ரூபாய், புத்தகம் வீணாகி விட்டது.
200 கோடி ரூபாய்க்கு மறுபடியும் புத்தகம் தயாராக உள்ளது...
சந்தோசம் மகிழ்ச்சி...
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.,+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&artid=422007&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=தமிழ்நாடு
26/05/2011 ஒருவருக்கு அன்றாடம் என்ன நடக்கிறது என்பது இரண்டு நாட்கள் கழித்து தான் தெரிகிறதா இல்லை என்றால் கண்டனம் தெரிவிப்பதற்கு அம்மாவின் அனுமதி கிடைக்க நாளாகிவிட்டதா என்று தெரியவில்லை.. பொங்கியிருக்கிறார் தா.. பா..
22.5.11
ஒரே வரி
அனைத்து தனியார் prepaid மொபைல் களிலும் , புல் டாக் டைம் அளிக்கப் படும் பொழுது சேவை வரியான 10.2% ஐ யார் கட்டுகிறார்கள்?
பி கு: கனிமொழி பற்றி எதுவும் எழுதவில்லையா என்று கேட்ட ராமுவுக்கு, 2 மச் g என்ற தலைப்பில் நவம்பர் 2010 இல் இதை பற்றி விரிவாக எழுதியுள்ளேன்..
16.5.11
ஆகாயத்தில் விலை..
பெட்ரோல் விலை ஏற்றம், கொஞ்சம் கொஞ்சமாக லிட்டருக்கு நூறு ரூபாயை தொட்டு விடும் போலிருக்கிறது...
என்ன தான் விலை ஏறினாலும், விலை ஏற்றத்திற்கு முதல் நாளே பத்து லிட்டர் பெட்ரோல் போட்டு ஐம்பது ரூபாயை சேமித்து விட்டேன் என்று கூப்பாடு போடுகிறான் நம் தமிழன்...
நமது பெட்ரோல் ஐந்து ரூபாய் ஏறி விட்டது..
flight petrol 1.70 பைசா லிட்டருக்கு குறைந்து விட்டது...
ஏற்கனவே கூறியது போல் வானத்தில் பறப்பவர்கள் ஏழைகளே...
ஏனென்றால் விண்ணை முட்டும் விலை ஏற்றத்தை அவர்களால் எப்படி தொட முடியும்...
http://www.iocl.com/Products/AviationTurbineFuel.aspx
14.5.11
தெரியாத விடை...
தேர்தல் முடிவுகள், தெரிந்து விட்டது.. தெரியாத விடை எத்தனையோ..
ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தோல்விக்கு காரணம் தேடுவதும், ஆனால் வெற்றிக்கு மக்கள் விரோத ஆட்சியே காரணம் என்று தம்பட்டம் அடிப்பதும் ஆரம்பித்து விட்டது...
இதில் உண்மை உள்ளது என்றாலும், தோல்விக்கும் மக்கள் விரோத ஆட்சி தான் காரணம் என்று மனசாட்சியுடன் பதில் உரைத்திருந்தால், அவர்களின் ஆட்சி லட்சணம் தெரிந்திருக்கும்...
பொய்கள், பொய்கள், பொய்கள், பொய்கள் அன்றி வேறு ஒன்றும் இல்லை..
11.5.11
ஆகாயத்தில் பறப்போம்...
1997 லிருந்து இன்று வரை பொருளாதார அறிவுரை கமிட்டியில் இருப்பதால், இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் என்ற கனவு போலும்...
தூக்கத்தில் இருந்து அவரை யாராவது எழுப்பினால் நன்றாக இருக்கும்...
காஸ் சிலின்டர் பயன்படுத்துவது பெரும்பாலும் பணக்காரர்களே என்று திருவாய் மலர்ந்து அறுளி உள்ளார்...
ஆனால் இவர் மறந்து விட்டது என்னவோ ஒன்றே ஒன்று தான், விமானத்தில் பறப்பவர்களை பற்றி, இல்லை என்றால் ஆகாயத்தில் பறப்பவர்கள் அனைவரையும் இவர் ஏழையாக கருதுகிறாரோ என்னவோ, அதுவும் நமக்கு தெரியவில்லை..
விமானத்திற்கான பெட்ரோல் விலை ஏற்றத்தை பற்றி மட்டும் என் எந்த கர்மம் புடிச்சவனும் பேச மாட்டேன்கிறார்கள் என்பது தான் என் புத்தியை உதைத்து கொண்டே இருக்கிறது...
http://www.moneycontrol.com/news/business/sporadic-price-hikepetrol-likely-kirit-parekh_541854.html
ஒரு கிலோ லிட்டர் ஜெட் பெட்ரோல் விலை சென்னையில் 65201 ரூபாய். அதாவது ஒரு லிட்டருக்கு 65.201 ரூபாய் மட்டுமே...
போனால் போகட்டும் ஆகாயத்தில் பறப்பவர்கள் ஏழைகள் தானே...
http://www.iocl.com/Products/AviationTurbineFuel.aspx
10.5.11
மனிதனின் மதிப்பு...
சளிக்கு இது வரை மருந்து எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை...
அதற்கு ஒரே காரணம் சளி பிடிக்கும் ஒரே மிருகம் மனிதன் மட்டும் தான்... நேரடியாக மனிதன் மேல் சோதனை செய்து பார்க்க அனுமதி இல்லாததால் அந்த முயற்சி ஒரு கனவாகவே தள்ளி போய் கொண்டிருக்கிறது...
அந்த கனவு நனவாக வேண்டும் என்றால் மருந்து தயாரிப்பாளர்கள் இந்தியா வர வேண்டும் இங்கு எண்ணற்ற மனித உயிர்கள் காசுக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் படித்து பார்க்காமல் கை எழுத்து போட்டோ அல்லது கை நாட்டு வைத்தோ உயிரை துறப்பதற்கு தயாராக உள்ளது...
hpv வேக்சின் எல்லாம் மனிதர்கள் மீது சோதித்து பார்க்கும் பொழுது சாதாரண சளிக்கு சோதித்து பார்க்க கூடாதா...
2007 இல் தொடங்கப் பட்ட கொடுமை இன்று தான் வெளிச்சத்திற்கு வருகிறது...
யார் பெத்த புள்ளையோ நல்லா இருப்பா...
http://www.tribuneindia.com/2011/20110510/main7.htm
முயல் ஆமை..
முயலாமை கதை பிறந்து வெகு காலம் ஆகியும், அதில் இருந்து பல புதிய கேள்விகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றது...
ஒரு வேளை முயல் தூங்காமல் ஓடி இருந்து, வெற்றி கோட்டை தொட்டிருந்தால் அது வென்றதாக இருந்திருக்குமா? அல்லது மனம் தளராமல் வெற்றி கோட்டை நோக்கி சோர்வடையாமல் வந்த ஆமை வென்றதாக ஆகி இருக்குமா?
என் நண்பன் செந்தில் நாதன் விடியன்காடு என்னும் ஊரில் உள்ள பள்ளி கூடத்தில் படித்தவன்.. மூன்றே மூன்று ஆசிரியர்கள் தான் அந்த பள்ளிக்கு அவன் படிக்கும் காலத்தில்.. அவன் வாங்கிய மதிப்பெண் 997 பன்னிரெண்டாம் வகுப்பில்...
கணிதம் 188
இயற்பியல் 196
வேதியல் 197
ஆக எல்லா வசதிகளும் கிடைத்து, அதிகமாய் மதிப்பெண் வாங்கியதாலே அவர்கள் வென்றதாக ஆகி விடுமா?
தேவை இல்லாத இந்த தேர்வு முறை, ஒரு ஓட்ட பந்தய போட்டியாக தான் நம் வாழ்க்கையை மாற்றி விடுகிறது...
வாழ்ந்து பார்க்க விடுவதில்லை...
ஓட்டத்தை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்து உலகத்தை ரசிப்போம்,
நடந்து பார்ப்போம்..
வாழ்ந்து பார்ப்போம்..
7.5.11
செய்திகள் வாசிப்பது...
முக்கியமான செய்திகள்...
ஒசாமா மரணம்,
கனிமொழி கைதாவாரா?
டோர்ஜி காண்டு..
சாய் பாபா
ரஜினி உடல்நிலை
ipl போட்டிகள்..
பாகிஸ்தான் மிரட்டல்...
விமானிகள் வேலை நிறுத்தம்...
தேர்வு முடிவுகள்..
தேர்தல் முடிவுகள்...
முக்கியமில்லாத செய்திகள்...
பெட்ரோல் டீஸல் விலை ஏற்றம்,
இணையத்தில் எழுத்து சுதந்திரம் பறி போகுதல்,
1.4 மில்லியன் irctc அஜென்ட் லைசென்ஸ் பறிமுதல்..
மாதா மாதம் மின்சார அளவை...
மணல் கொள்ளை...
கனிம வள கொள்ளை..
மனித வள கொள்ளை...
[சம்பளத்தை நிர்ணயம் செய்வதில்]
என்டோசுல்பான்
அலை பேசி கொள்ளை...
[அனைத்து அலை பேசிகளிலும் பத்து ரூபாய்க்கு டாப் அப் செய்பவர்களுக்கு ஆறு ரூபாய் தான் பேசும் நேரம் கிடைக்கிறது.. ஒரு ரூபாய் வரி, மூன்று ருபாய் கொள்ளை]
எமன்
லிபியா
சிரியா
இன்னும் கண்ணுக்கு தெரியாமல் பல...
5.5.11
மயக்கமா கலக்கமா?
தொலைகாட்சியில் மது மற்றும் புகை விளம்பரங்கள் வரக் கூடாது...
ஆனால் அந்த மது தொடர்பான பெயரில் இருக்கும் வேறு ஏதாவது பொருளுக்கு விளம்பரம் செய்யலாம்..
kingfisher airlines
royal challengers bangalore
soda
cd
mineral water
என்று சந்தையில் இல்லாத பொருளுக்கு எல்லாம் விளம்பரம் வரும்..
அதை கேட்க தைரியம் கிடையாது...
அரசாங்கமே மது கடைகளை திறக்கும், குடிக்க வரும் குடிமகன்களுக்கு பாதுகாப்பு வழங்கும்...
அதை கேட்க தைரியம் கிடையாது...
மத்திய அரசிலும் நாங்கள் அங்கம் வகிப்போம்,
மாநில அரசிலும் கூட்டணியில் இருப்போம்,
ஆனால் அங்கு எல்லாம் நாங்கள் வாய் திறக்க மாட்டோம்...
என்ன கொடுமை சார் இது...
http://thatstamil.oneindia.in/news/2011/05/04/liquor-advt-protest-against-dhoni-aid0090.ஹ்த்ம்ல்
மேலே உள்ள லிங்கில் உள்ள செய்தியை படித்து விட்டு சச்சினை மனம் பாராட்டிக் கொண்டு இருந்த பொழுது என்ன படத்தை போடலாம் என்று இணையத்தில் தேடிய பொழுது தென் பட்ட முதல் படத்திலேயே அப்பாவுக்கு செய்த சத்தியத்தை உடைத்த சச்சின் முன்னாள் நிற்கிறார்...
என்ன கொடுமை சார் இது...
4.5.11
பத்திரிக்கயாம் சுதந்திரமாம்...
பத்திரிகை சுதந்திரம் பற்றி யார் பேசுவது என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது...
ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தங்களை பற்றிய ரகசியங்கள் வெளியே வராமல் தடுக்கும் பொழுது பத்திரிகை சுதந்திரம் காற்றில் பறக்க விடப் படுகிறது..
பிராட்லி மன்னிங் [bradley manning] பற்றி அமெரிக்க ஜனாதிபதி என்ன சொல்ல போகிறார்...
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...
http://economictimes.indiatimes.com/news/politics/nation/dozens-of-countries-curbing-the-press-freedom-obama/articleshow/8157710.cms
3.5.11
அடங்க மறுக்கும் கேள்விகள்...
ஒசாமாவை கடலில் அடக்கம் செய்தாகி விட்டது...
ஒசாமாவின் உடலோடு உண்மைகளையும் அடக்கம் செய்தாகி விட்டது..
உண்மைகள் மறைக்க படும் பொழுது, கேள்விகள் அடங்க மறுக்கிறது...
புதிதாய் பல கேள்விகள் பிறக்கின்றது...
http://www.dnaindia.com/speakup/message-board_do-you-think-the-us-really-killed-osama-bin-laden-did-killing-an-unarmed-laden-amount-to-a-violation-of-human-rights_1540048
1.5.11
அப்பாற்பட்டவரா?
நீதிக்கு முன் அனைவரும் சமம் என்று பேசுவது எல்லாம் வெறும் கண் துடைப்பு தான் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்...
வாத பிரதிவாதங்களை வைத்து தீர்ப்பு எழுத வேண்டிய நீதிபதி, தன் மீதே நம்பிக்கை இல்லாமல் கடவுளின் செயகப்படி தீர்ப்பு எழுதினேன் என்று கூறியுள்ளார்...
சாய் பாபா மீது என் விசாரணை எதுவும் வைக்கவில்லை என்ற கேள்விக்கு கடவுள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர் என்று கூறியுள்ளார்...
ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்பவர்களே உங்கள் கருத்துப்படி வைத்துக் கொண்டாலும் அவரை கடவுள் என்று நம்புபவர்கள் மிக குறைந்த அளவில் தானே இருப்பார்கள்...
சாய் பாபாவின் டிரஸ்டில் அங்கம் வகிக்கும் நபருக்கு அந்த டிரஸ்டின் சொத்து மதிப்பு தெரியவில்லையாம்...
எப்படியோ..
அந்த பேட்டியின் கடைசி பக்கங்கள் தான் என்னை பல முறை சிந்திக்க வைத்துள்ளது...
படித்து விட்டு நீங்களும் சிந்தியுங்கள்...
http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/all-that-matters/Sai-Baba-my-god-dictated-my-every-single-judgment/articleshow/8130906.cms
Subscribe to:
Posts (Atom)