politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

29.9.11

2G - டூ மச் ஜி

இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரே விஷயம் அலை கற்றை வரிசை ஊழல் [ 2g ஊழல் என்று சொன்னால் நன்றாக புரியும்]. 


காங்கிரஸ் அரசின் அத்தனை தலைகளின் மேலும் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது... 


"நான் இல்லை நீ தான்" 
"ஆட்சிய கவிழ்க்க சதி"
"அரசுக்கு நஷ்டமே இல்லை" 
என்று எத்தனையோ விஷயங்கள் ஓடினாலும் இன்னும் முக்கியமான கேள்விகள் வெளியில் சந்தி சிரிக்க மறுக்கிறது...

இந்த ஊழல் பெருமளவில் பிரபலமடைய காரணமான நிரா ராடியா குறித்தோ அல்லது இந்த ஊழலில் பெருமளவில் சம்பாதித்த பெரும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்தும் இது வரை எந்த ஊடகமும் வாய் திறக்க மறுக்கின்றது...

இதை பற்றி நம் பதிவர் ரெவெரியின் பதிவு பெரும் வெளிச்சத்துக்கு உண்மைகளை கொண்டு வருகிறது...

அந்த பதிவின் இணைப்பு இங்கே...

28.9.11

35 நிமிடங்கள்


தொழிலாளர் நல சட்ட திட்டங்களை காலில் போட்டு மிதிப்பது தான் திராவிட கட்சிகளின் பண்பு என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது தமிழக அரசின் நடவடிக்கை..

ஏற்கனவே டாஸ்மாக் எனப்படும் அரசு மதுபான கடைகளில் தொழிலாளர் நலன்கள் கண்டு கொள்ளப் படுவதேயில்லை... அரசு மதுபான கடைகளை மூடுவதே சால சிறந்தது என்பதால் அங்கு தொழிலாளர் நலன் கேட்டு போராடுவது தகுந்த வழி அல்ல.. 

ஆனால் சமச்சீர் கல்வி குழப்பத்தால் மாணவர்கள் படிப்பு பாழாகி விடும் என்று அனைத்து அரசு பள்ளிகளுக்கும் 35 நிமிடங்கள் கூடுதலாக இயங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர்களின் வேலையில் அரை மணி நேரம் கூடுதலாக்கி இருக்கின்றனர்...

இதற்கு எவ்வித எதிர்ப்பு குரலும் கிளம்பாததால் எனக்கு எழும் சந்தேகங்களில் சில...

ஒரு வேளை ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி அமைதியாக இருக்கலாம்..
அல்லது
பிடிவாதம் பிடித்த அரசிடம் என்ன கேட்பது என்று அடங்கி செல்லலாம்..
அல்லது
எட்டு மணி நேரம் வேலை என்றாலே நாங்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டோம் இப்ப இன்னும் கூடுதலாக்கினால் மட்டும் வேலை செய்து விடுவோமா என்று எண்ணமாக இருக்கலாம்...

ஆணிவேரின் கணிப்பு என்ன என்றால் 

உண்மையாக வேலை செய்பவர்கள் அனைவரும் தங்கள் நலன் கருதாமல் மாணவர்கள் நலன் கருதி அமைதியாக இருக்கிறார்கள்...

வேலை செய்யாமல் இருப்பவர்கள் எவ்வளவு நேரம் வேலை என்றாலும் வேலை செய்யாமல் தான் இருக்க போகிறார்கள்...

27.9.11

கண்ணீர் அஞ்சலி

அரசின் கோர முகம் பார்க்க சகிக்காது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது...

பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தில் நடந்த தடியடியில் கோமாவுக்கு தள்ளப் பட்ட திருமதி ராஜ்பாலா என்ற முதிய பெண்மணி நேற்று காலமானார்...

நடுத்தர வர்க்க மக்கள் இனியாவது பயத்தை விட்டொழித்து அவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட வேண்டும்...

அவரது மரணத்துக்கு கிடைக்கும் நீதி தான் உண்மையான கண்ணீர் அஞ்சலியாக இருக்க முடியும்...

49 'O'


49  ஓ போடு என்று பதிவு போட்டவுடன் முக்கால்வாசி பதிவர்கள் சொன்ன பதில் 49 ஓ விர்க்கு ஆதரவாக இல்லை... 

வேட்பாளர்கள் பரிச்சயமானவர்கள், 
இருப்பதில் நல்லவருக்கு ஓட்டு போடலாமே, 
கட்சிகளை விட ஆட்களுக்கு முக்கியத்துவம் தரும் தேர்தல், 
தைரியமா போட்டு விட முடியுமா? 
எந்த நபர் நல்லவரோ அவருக்கு வாக்களிக்கலாம்..

இவர்களுக்கு பதில்களை பின்னூட்டம் இட்டாலும், ஏன் இதற்கான பதிலை தனியே ஒரு பதிவை போட கூடாது என்ற யோசனையை அமுல்படுத்தி இருக்கிறேன்...

ஒரு தேர்தலை சந்திப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு வாக்காளருக்கு இரண்டு லட்சம் செலவாகும் என்பது என் எண்ணம்? இல்லை அவர் பத்தாயிரம் ரூபாய் தான் செலவு பண்ணுவார் என்று சொன்னால் அதுவும் பணம் தானே என்பது என் பதில்...

அதனால் தான் தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்றுக் கொள்ளும் பொதுவுடைமை கட்சிகள் தனித்து நிற்பதற்கு அவ்வளவு யோசிக்கின்றன... 

இவ்வளவு செலவு செய்த தேர்தலில் வெற்றி பெரும் ஒருவர் அந்த பணத்தை கிணற்றில் போட்ட கல் என்று எடுத்துக் கொள்வாரா அல்லது திரும்ப எடுக்க முயற்சி செய்வாரா? 

திரும்ப எடுக்க முயற்சி செய்யும் நபர் எங்கிருந்து திரும்பி எடுப்பார், நமது வரி பணத்தில் தானே கை வைப்பார்...

அப்படி கிணற்றில் போட்ட கல் என்று எடுத்துக் கொள்ளும் வேட்பாளர் யாராவது இருந்தால் அவர் காலடி தொழுகிறேன்.. அவருக்கே உங்கள் ஓட்டுக்களை போடுங்கள்... 

2006 உள்ளாட்சி தேர்தல் நிலவரத்தை தெரிந்து கொள்ள

24.9.11

49 ' ஓ ' போடு

உள்ளாட்சி தேர்தல்,
எப்ப அறிவிச்சாங்க, எப்படி அறிவிச்சாங்க என்று திரும்பி பார்ப்பதற்குள் எவ்வளவோ நடந்து விட்டது...

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி என்ற நிலைமைக்கு தள்ளப் பட்டது தான் அருமை.. இதில் மதில் மேல் பூனையாக என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருப்பது இரு இந்திய முதலாளித்துவ கட்சிகள்.. [capitalist party of india ]  

தலைமை சிந்திக்காது என்று தெரிந்து கொண்டு தன்மான சிங்கங்கள் தென் தமிழக பொது உடமை வாதிகள் தனித்து போட்டி என்று ஒரு மாவட்ட செயலாளர் பேட்டி கொடுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார்கள்....

சரி; இந்த விஷயம் தீக்கதிர் பத்திரிக்கையில் வந்திருக்கிறதா என்று பார்த்தால், உள்ளாட்சி தேர்தல் குறித்து தனி ஆவர்த்தனமே நடத்தி இருக்கிறார்கள் செய்திகள் என்ற பிரிவில்... இன்று மாநில குழு கூடி விவாதிக்க போகிறார்களாம்... இது மார்க்சிஸ்ட் தகராறு... 

ஆனால் பாண்டியன் குழுவினர் தான், எப்ப கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு.க வில் இணைந்து விடலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது... அப்படி ஒரு மௌனம் சாதிக்கிறார் தா.பா... அட போங்கப்பா...

இதில் இன்னும் கொடுமை என்ன என்றால் அனைத்து கட்சிகள் மீதும் பொது மக்கள் கடுப்பில் இருப்பது தான்...
அ.தி.மு.க செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்ததால் அந்த அணியில் இருந்த பிற கட்சியினர் மீது கோபமும், தி.மு.க வின் கொள்ளைகள் வெளிச்சத்தில் சந்தி சிரிப்பதால் அந்த அணியில் இருந்த கட்சிகள் மீதும் ஆத்திரமும் கொண்டுள்ளனர் பொதுமக்கள்.. [கவனிக்க பொது மக்கள் ]

அனைத்து கட்சிகளும் தனித்தும் மற்றும் பல சுயேட்சைகள் களம் காணும் உள்ளாட்சி தேர்தலில் அத்தனை சின்னங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு 49  வை சேர்த்து வையுங்கப்பா என்று கூறினால் கடுப்பாக போகிறார்கள் தேர்தல் ஆணையாளர்கள்...

ஓட்டு போடும் நாளில் மறுபடியும் நோட்டு புத்தகமா என்று கடுப்பாக தான் போகிறேன் நான்....

இருந்தாலும் ...
மறக்காமல் அனைவரும் 49 ஓ வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..

21.9.11

திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும்...


இது ஒரு மீள்பதிவு 1.4.10

அரசாங்கமும் படத் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு திருட்டு விசிடியை ஒழித்து கட்ட போராடினாலும் பொது மக்கள் திருட்டு விசிடியை வாங்குவதை நிறுத்தா விட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது...
அதே போல போலி மருத்துவர்களால் எண்ணற்ற பிரச்சினைகள் வந்தாலும் பொது மக்களாய் அவர்களிடம் போகாமல் இருக்கும் வரை அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை...
இந்த இரண்டு விஷயங்களையும் மேலோட்டமாய் பார்த்தல் வேறு வேறு விஷயமாய் தெரிந்தாலும் இரண்டுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன என்றால் அது பொது மக்களின் ஆசிர்வாதம் மட்டுமே..
ஆக, பொது மக்கள் இப்படி இருப்பதற்கு என்ன உண்மையான விஷயம்... அது வேறு ஒன்றுமில்லை, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து கொண்டே வருவதும் சிலவற்றை அவர்களால் செலவு செய்யாமல் இருக்க முடியவில்லை என்பதே... 

ஒரு சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நபருக்கு முப்பது முதல் நாற்பது ருபாய் வரை செலவு ஆகிறது, ஒரு குடும்பமே செல்லும் போது அது குறைந்தது நான்கு மடங்கு ஆகிறது, ஆனால் ஒரு திருட்டி சிடியை வாங்கி பார்த்தால் அது முப்பது ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது.... தியேட்டருக்கு போனா பாப் கார்ன் வாங்கி தர வேண்டும் என்னும் செலவும் குறைகிறது,
அதே போல ஒரு மருத்துவரிடம் போனால், குறைந்தது நூறு ரூபாய் வரை செலவு ஆகிறது, போதாதற்கு மருந்து மாத்திரைகள் வேறு...
அரசு மருத்துவமனை என்றால் சிபிஎம் பேரா மற்றும் செப்ட்றான் தவிர வேறு மாத்திரைகள் தருவதில்லை, இதை களைந்து எடுக்க வேண்டிய அரசாங்கம் இலவச காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் ஏற்கனவே சரியாக செயல்படாமல் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா எடுக்கின்றது... இந்த காப்பீட்டு திட்டத்திற்கு செலவு செய்யும் தொகைகளுக்கு பதிலாக, அரசு நம் மருத்துவமனைகளை மேம்படுத்தினாலே போதுமானது,
ஆனால் இதை எல்லாம் செய்யாமல் தவறான கொள்கை முடிவுகளால் திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும் பெரிய தலைவலிகளாய் இருக்கிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு தலைவலிக்கு தைலம் மட்டும் தேய்த்து கொண்டிருக்காமல் ஊழல் என்னும் புற்று நோயை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலே போதுமானது.... 

செய்வார்களா... செய்ய வைப்போமா?

http://thatstamil.oneindia.in/news/2011/09/21/49-quacks-arrested-vellore-tv-malai-tiruvallur-dist-aid0091.ஹ்த்ம்ல்

http://www.maalaisudar.com/newsindex.php?id=36888%20&%20section=19


தற்காலிக வெற்றி


உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு தென் தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்பிக்க பிடிவாதத்தின் மறு பெயரான தமிழக அரசு போராட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கியதை அடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததாக போராட்ட குழுவின் பேச்சு வார்த்தை குழுவினர் கூறியுள்ளனர்.. 

பல்வேறு செய்திகள் தென் தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தை பின்னுக்கு தள்ளினாலும், ஓங்கி ஒலித்த போராட்ட குரலால் அனைத்து செய்திகளும் பின்னுக்கு சென்றுள்ளதை இந்த போராட்டம் நினைவூட்டுகிறது..

உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர்கள் போராட்ட குழுவினரின் முடிவுக்கு இணங்கி இன்றைக்குள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்து கொள்வார்கள் என்று தெரிகிறது... கூடல் பாலாவிடம் பேசிய பொழுது, நல்ல தகவல் வந்திருப்பதாகவும், உண்ணாவிரதம் வாபஸ் ஆகுமா என்ற தகவலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்..

ஏழு கிலோ உடல் எடை குறைந்ததே தவிர வேறு எதுவும் குறையில்லை என்றார்... உடல் எடை குறைந்தது கவலை அளித்தாலும் உள்ளத்தின் எழுச்சி குறையவில்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது... போராடிய அத்தனை உள்ளங்களுக்கும் நான் கூறி கொள்வது இன்குலாப் ஜிந்தாபாத்..


20.9.11

குறுஞ் செய்தி

போராட்ட குரலை எப்படியாவது ஒடுக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு திரிகிறது அரசு... 
ஏற்கனவே புது தகவல் தொழில் நுட்ப சட்டப் படி வலைகளில் திரியும் ஆட்சேபகரமான கருத்துக்களை நீக்க அரசுக்கு முழு அதிகாரம் ஏற்படுத்தி கொண்டு இப்பொழுது, அடுத்து ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் ஊடகமான குறுஞ் செய்தியின் மீது கண் வைத்துள்ளது அரசு..

தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடப் போகும் கட்டுபாட்டில் ஒருவர் நூறு குறுஞ் செய்திகளுக்கு மேல் அனுப்ப கூடாது என்று முடிவெடுக்கப் போகிறதாம்..


ஏன் இந்த கட்டுபாடாம்?

பொருட்களை விற்கும் நிறுவனங்கள் அதிக அளவில் குறுஞ் செய்தி அனுப்புவதில் இருந்து மக்களுக்கு விடுதலை தரவே இந்த திட்டமாம்..

பல்வேறு நிறுவனங்களின் கை வண்ணங்களால் ஏற்கனவே இந்த தேவை இல்லாத விளம்பர குறுஞ் செய்திகளை ஒழித்து கட்ட எடுத்து வந்த நடவடிக்கை எல்லாம் கிடப்பில் கிடக்கும் பொழுது, அவர்களை காரணம் காட்டி போராட்ட குரலை ஒடுக்கும் நடவடிக்கையாகவே ஆணிவேர் இதை பார்க்கிறது.. eg: DND 1909 service...

விளம்பரத்தை குறுஞ் செய்தியாக அனுப்ப நினைக்கும் நிறுவனம் நூறு அல்லது ஆயிரம் சிம் அட்டைகளை வைத்து கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை குறுஞ் செய்திகளாகவும் அனுப்ப முடியும் என்பதை தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சிந்திக்காமலா இந்த திட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள் என்ற சந்தேகமே, நம் முடிவுக்கு ஆணித்தரமாய் முத்திரை குத்துகிறது..

அண்ணா வின் உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக இருக்கட்டும் குறுஞ் செய்திகளின் பங்கு என்ன என்பது அலை பேசி வைத்திருக்கும் அனைவரும் அறிந்ததே...
போராட்ட குரலை ஒடுக்க நினைக்கும் எந்த அரசும் நிலைத்திருந்ததாக வரலாறு இல்லை...

நூறு குறுஞ் செய்திகள் என்ற வரை முறைக்குள் வரும் முன்னர் ஒரு முறையாவது கூடங்குளம் போராட்டம் குறித்து ஆதரவு தெரிவித்து குறுஞ் செய்தி அனுப்பலாமே 


19.9.11

தொட்டு விடும் தூரம் தான்

வலைபதிவர்களின் ஆதரவை பெற்ற கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் அநேகமாக வெற்றி அடைந்து விட்டது என்றே கருதுகிறேன்.. 


போராட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தமிழக அரசு மத்திய அரசுக்கு இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கடிதம் அனுப்புவதோடு மட்டுமல்லாமல் அமைச்சர் குழுவையும் பிரதமரை சந்திக்க அனுப்பவதாகவும் உறுதி கூறியுள்ளது.. 


பல்வேறு தரப்பினரும் போராடிய இந்த போராட்டம் அனைவரின் நெஞ்சுருதியின் காரணமாக அநேகமாக வெற்றி கோட்டை நெருங்கி விட்டது என்றே கருதுகிறேன்... 

அங்கே போராட்டத்தில் நேரடியாக உண்ணாவிரதம் இருந்து வரும் கூடல் பாலாவை அலை பேசியில் [9940771407] அழைத்து பேசிய பொழுது, தற்பொழுது மேதா பட்கரும் போராட்ட மேடையில் ஆதரவு தெரிவித்து கருத்துக்கள் தெரிவித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.. மேலும் போராட்ட பாதையை எப்படி கொண்டு செல்வது என்று போராட்ட குழு இன்று மாலை கூடி முடிவெடுக்கும் என்று அறிவித்தார்... 

இணைந்த கரங்களுடன் போராடினால் நடக்காது என்பது எதுவும் இல்லை என்பதை இந்த செய்தி நமக்கு சுட்டுகிறது... போராட்டத்தில் இணைத்துக் கொண்ட அனைவருக்கும், உள்ளுக்குள் வருத்தப் பட்ட அனைவருக்கும் உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத் 


18.9.11

சேலமும் கூடன்குளமும்

யார் பேச்சையும் கேட்காத, கேட்க விரும்பாத அரசு என்பதை கூடங்குளம் போராட்டமும், சேலம் போராட்டமும் வரலாற்றில் பதிவு செய்து சென்றுள்ளது...

தன் தோழர்கள் மறியல் செய்ததற்காக காவலர்களிடம் அடி வாங்கி மண்டை உடைந்து காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது ஆட்சியாளர்களை கண்டிக்க விரும்பாத பொதுவுடைமை கட்சிகள், நான்கு சீட்டுக்கு நாக்கை தொங்க போட்டு கொண்டு காத்திருந்தது, மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுத்து சென்றது...

உத்தமர்கள், பொய் சொல்ல மாட்டார்கள், ஊழல் செய்ய விரும்ப மாட்டார்கள் என்று எத்தனை பெயர் வேண்டுமானாலும் வாங்குங்கள், ஆனால் தேர்தல் களத்தில் நம்பியவர்களை கை விடும் கட்சி என்று பெயர் வாங்குவதால் மண்ணை தான் கவ்வுவீர்கள்... 

உங்கள் தொண்டர்களும், கொஞ்சம் மக்களும் நிஜமாகவே உங்கள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அது என்று அரசு ஊழியர்களை கூட்டம் கூட்டமாக வீட்டுக்கு அனுப்பிய ஆத்தாவை ஆதரித்த அன்றே சிதைந்து போனது... 
அடித்த காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதாக தயவு செய்து சொல்லாதீர்கள்... ஆட்சியாளர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் காவலர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்..

அதே போல் தான் நடந்து கொண்டிருக்கிறார் கேப்டன் , கூடங்குளம் போராட்டத்தில் நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் உண்ணாவிரதத்தில் உட்கார வையுங்கள், ஏன் நீங்களே கூட உட்காருங்கள், ஆனால் இதை சட்டமன்றத்தில் பேசுவது என்ற அரசியலை நான் செய்ய மாட்டேன் என்று ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் என்பதை ரசிக்க முடியல கேப்டன்..

17.9.11

பெட்ரோல்

நம் நாட்டை ஆண்டு வரும் ஏழை பங்காளர்களுக்கு நாட்டை ஆள  காசு வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் ஒரே காரியம் பெட்ரோலின் மீது விலையை உயர்த்துவது மட்டுமே...  பெட்ரோலின் விலை சர்வதேச சந்தையில் உயருவது என்னவோ உண்மை தான், ஆனால் சில பதில் வராத கேள்விகள் இந்த நாட்டில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது... அவற்றில் சில இதோ...

*நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பெட்ரோலை என்ன விலை கொடுத்து வாங்குகிறார்கள்?

*அரசு எரிவாயு நிறுவனங்கள் விளம்பரத்திற்காக ஏன் செலவு செய்கிறார்கள்?

*கிரிக்கெட் போட்டி நடத்துவதால் இவர்கள் என்ன லாபத்தை எதிர் பார்க்கிறார்கள்?

*நம் அண்டை தேசமான பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை என்ன?

*பாகிஸ்தானில் நாம் வாங்குவதை விட குறைந்த விலைக்கா வாங்குகிறார்கள்?

*அவர்கள் நாட்டு எண்ணெய் நிறுவனங்களக்கு நம்மை விட அதிக நஷ்டம் வருகிறதா?

*கடைசியாய், பெட்ரோலின் மீது இவ்வளவு அதிகமான வரி விதிப்பதற்கு காரணம் அது என்ன சொகுசு பொருளா?

நம் நாட்டு ஒரு நாள் உற்பத்தி 8,80,000 பேரல்கள் இறக்குமதி 21,00,000 பேரல்கள். கூட்டி கழித்து பார்த்தால் 30% உள்நாட்டு உற்பத்தி என்று வரும்

ஒரு பேரல் [158 லிட்டர்] கச்சா எண்ணெய் விலை, 97 டாலர்
அதாவது 4365 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 27.35 ரூபாய்..
அதில் 500 ml பெட்ரோல் மட்டுமே எடுக்கப் படுவதால் அதன் விலை 14 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் பெட்ரோல் 28 ரூபாய்...
அதனுடன் சுத்திகரிப்பு செலவு, போக்குவரத்து செலவையும் இணைத்தால் இப்பொழுது எண்ணெய் நிறுவனங்கள் வாங்குவதை விட குறைவாக வாங்குவதில்லை...

மேலும் பெட்ரோல் விலை வாசி குறித்த கட்டுரைகளை படிக்க..

என்ன கொடுமை சார் இது?


ஆகாயத்தில் விலை..

16.9.11

கூடங்குளம் கீச்சுக்கள்


 தமிழன்பன் 
அண்ணா ஹசாரேவுக்கும் சொம்பு தூக்கிய தமிழக கண்மணிகளும் , பெண்மணிகளும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது வியப்பளிக்கிறது 

 G.K. Thas 
சிங் தாத்தா வுக்கும் சோனியா பாட்டீக்கும் ரெண்டு அணு உலை பக்கத்துல ரூம் போட்டு குடுத்தா இருப்பாங்களா 

 Sriraam 
வருங்காலம் என்று ஒன்று இருந்தால் தானே அதற்கு மின்சாரம் வேண்டும்? சிந்தியுங்கள்  மக்கள் பற்றி!

 Srivas 
இறந்த மனிதனை எரியூட்ட, இருக்கும் மின்சார சுடுகாடுகள் போதாதென, பிறந்த மனிதனையும் எரிக்க புதிதாய், பெரிதாய் , தேவையா நமக்கு! 

 பிரிமசு அந்தோனி 
அமெரிக்க உலை என்றால் எதிர்ப்பதும் ரசியா என்றால் அமைதி காப்பது கம்யுனிஸ்ட்களின் பணிசெவப்புசட்ட போட்டவன் பொய்சொல்ல மாட்டானாம் 

 விஜய் 
சத்தியமூர்த்தி பவனை கூடங்குளத்துக்கு மாற்றினால்கூட வேண்டாம்  ஏன்னா மொத்தமா வரமாட்டாங்களே கோஷ்டிங்க ஒரே நேரத்துல

 Thamizh K Senthil 
15 தமிழ் குடும்பங்கள்னு பிலிம் காட்டும் இளங்கோவன்&co'வே கூடன்குளத்தில் இருப்பது தமிழர்கள் இல்லையா? 

 கனியன் 
அணு உலைகளுக்கு பக்கத்தில் அமைச்சர்களுக்கு அப்பார்ட்மென்ட் கட்ட அனுமதி கொடுக்கிறோம் அப்பாவி மக்களாகிய நாங்கள்! 

 Se.Senthilkumar 
அணு உலை = அத்தனை பேர் உயிருக்கும் உலை 

 Pradeep muniandi 
எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வல்லமை தமிழனுக்கு உண்டுதான், அதற்காக உயிரோடு கொன்றே விடுவதா தமிழனை! 

மேலும் படிக்க 

15.9.11

வலை பதிவுகளில் நீளும் ஆதரவு கரம்..

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி பல்வேறு ஊடகங்களும் பல்வேறு தலைவர்களும் தங்கள் ஆதரவு கரத்தை வழங்கிய வண்ணம் உள்ளனர்... 
கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டத்தில் ஆதரவாக நமது வலை பதிவர் கூடல் பாலாவும் கலந்து கொண்டு சோர்ந்து போயுள்ளார் என்று வைரை சதீஷ் தன நேரடியாக கண்ட பதிவை பகிர்ந்துள்ளார்.. மேலும் இது குறித்து பல்வேறு வலை பூவில் வெளி வந்த ஆதரவு கரங்கள் இங்கே.. 

ரெவெரி இன் வலைப்பூவில் கூடங்குளம் மூட சொல்லி பாட்ஜ் படம் போட்டுள்ளார்..

http://reverienreality.blogspot.com/2011/09/blog-post_15.html


http://pamaran.wordpress.com/2011/09/16/

http://savetnfishermen.com/2011/09/18/

http://chennaipithan.blogspot.com/2011/09/blog-post_18.html

http://kousalya2010.blogspot.com/2011/09/blog-post.html


http://adrasaka.blogspot.com/2011/09/blog-post_4647.html


http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_17.html


http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post_17.html

http://vairaisathish.blogspot.com/2011/09/6.html


http://nanduonorandu.blogspot.com/2011/09/blog-post_18.html

http://maayaulagam-4u.blogspot.com/2011/09/blog-post_17.html


http://tamilvaasi.blogspot.com/2011/09/blog-post_16.html

http://tamilvaasi.blogspot.com/2011/09/blog-post_17.html


http://blog.krishvaidy.in/?p=194 


http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_7078.html


http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html


http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post_15.html


http://nanjilmano.blogspot.com/2011/09/15000.html






விடுபட்ட பதிவர்கள் மன்னிக்கவும்... உங்கள் பதிவுகள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் இட்டு விடவும்..

14.9.11

அரசு -2

பரமக்குடி கலவரம்...

ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க புலி போல் உறுமும் சீமான், நேற்று யோசித்து யோசித்து பூனை போல் மெதுவாக பேசியிருக்கிறார்..
அவரது பேச்சில் இருந்து நாம் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்று தான், காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது மட்டுமே அவர் லட்சியம் என்பதும், தமிழர்களை காப்பது அவர் லட்சியம் அல்ல என்பதும்..

தமிழக முதல்வரை பகைத்துக் கொண்டால் காங்கிரஸ் அரசை தோற்கடிக்க போகிறேன் என்று சவால் விடுவது நடக்காது என்பதால் அடக்கி வாசிப்பதாக தெரிகிறது.. எது எப்படியோ..

அவரது பேச்சில் சில உண்மைகளை தெளிவாக்கி விட்டு சென்றுள்ளார்..

மறியலில் ஈடுபட்டது இருநூறு பேர், அதை அடக்க முடியாமலா மூவாயிரம் காவலர்கள் இருந்தனர்?

கலவரமே நடக்காத மதுரையில் ஏன் துப்பாக்கி சூடு நடந்தது?
இது அவர் கேட்டது..

நாம் கேட்பது..

மறியலில் ஈடுபடுவோரை சாதரணமாக கைது செய்வதை தான் பார்த்திருக்கிறோம்.. இங்கு ஏன் தடியடி நடத்தி கலைத்தார்கள்?

கலவரம் நடக்க காரணமாக இருப்பார்கள் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாய் கைது செய்தவர்கள், இந்த கைதை தொடர்ந்து கலவரம் நடக்காது என்று எதை வைத்து கணித்தார்கள்? 

ஒரு வேளை கலவரம் நடக்க வேண்டும் என்று வேண்டும் என்றே செய்தது போல் இருக்கிறது..

குட்டி சுவர்க்கம் என்ற வலை பூவில் இது பற்றி நேரடி ரிப்போர்ட் குடுத்திருக்கும் ஆமினா அவர்கள் கலவரம் ஓய்ந்து போன பூமியில் கலவரம் வரும் என்று எதிர்பார்த்தே காவலர் இயங்கியிருப்பதாக பதிவு செய்துள்ளார்..

நேற்று உப்பு சப்பில்லாத விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கோரியவர்கள் இன்று மனம் மாறி சம்பந்தப் பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வெளி நடப்பு செய்துள்ளனர்.. 

காவலர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசோ, இது காலம் கடந்த கோரிக்கை என்று தெளிவு படுத்தியிருக்கிறது...

பேருந்துகளிலும், தெருக்களிலும் சாதி தலைவர்களின் பெயரை நீக்கி விட்டால் கலவரம் ஓய்ந்து விடும் என்று என்னும் அரசோ இது போல் குரு பூஜை நடத்துவதையும் ஏன் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு பதிவர் [நெல்லி.மூர்த்தி என்று நினைக்கிறேன்] கவலை படுகிறார்..

ஏழு தமிழர்களின் மரணம் மனிதர்களை மனிதர்களாய் மதிக்காது அரசு என்று மீண்டும் ஒரு முறை ரத்தத்தில் சரித்திரத்தில் பதிவு செய்து சென்றுள்ளது...


http://www.tamilseythi.com/tamilnaadu/458.html

இரு கோடுகள்

இரு கோடுகள் தத்துவத்தை தூக்கி உடைத்த நிகழ்வு அண்ணா ஹஜாரே போராட்டமும், தூக்கு தண்டனை எதிர்ப்பு போராட்டமும் என்பதை பெருமையுடன் இங்கே நினைவு கோருகிறேன்.. நாடு தழுவிய அண்ணா ஹஜாரே போராட்ட சத்தத்தில், தமிழகத்தில் மட்டும் எழுந்த தூக்கு தண்டனை சத்தம் அமுங்கி விடும் என்று பயந்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது தமிழகத்தில் உரக்க எழுந்த ஓசை எனக்கு நினைவு படுத்தியது..

அதே போன்ற சந்தர்ப்பம் இன்று மீண்டும் தமிழகத்தில்..
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட சொல்லி நடக்கும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் முன்பே பரமக்குடி கலவரம் எழுந்து அடங்கியுள்ளது... பரமக்குடி விஷயத்தில் சீமானின் உறுமும் குரலை எதிர்பார்த்து காத்திருந்த நான் இரண்டு நாட்கள் கழித்து நேற்று சீமானின் மியாவ் என்ற குரலை கேட்ட பொழுது தமிழர்களின் காவலர் என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர் என்று தோன்றியது.. ஏற்கனவே இருந்த காவலர்களுக்கு வயதாகி விட்டதால் நடிகர் விஜயும் இயக்குனர் சீமானும் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ள தகுதியானவர்களே என்று தோன்றியது...

தமிழக மின்சார தேவையை பூர்த்தி செய்ய கூடங்குளம் செயல்பாட்டை எதிர்நோக்கி இருக்கும் தமிழக அரசு இந்த கூடங்குளம் போராட்டத்திற்கு கண்மூடி கொள்ளும் என்பது திண்ணம்.. அந்த மூடி இருக்கும் கண்ணை தமிழக முதலமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் விஜயும் சீமானும் திறக்க முயற்சிப்பார்களா  அல்லது தமிழர் காவலர் என்ற பட்டத்தை தக்க வைத்து கொள்வார்களா என்பது இன்று இரவுக்குள் தெரிந்து விடும் என்று நினைக்கிறேன்...

கோகுல் மனதில் என்ற வலை பூவில் கோகுல் எழுதிய கட்டுரைக்கு ஒரு அநாமதேயர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில்கள் நமக்கு தெரிந்த அளவில்..

எந்த மண்ணால் கட்டினாலும், இல்லை உலக தரம் வாய்ந்த சிமெண்டால் கட்டினாலும் ஒரு பூகம்பம் வந்து ஆட்டினால் ஆடாத வகையில் கூடங்குளம் கட்டப் பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு நீங்கள் பதில் தேடுங்கள்..

பிரான்ஸ் நாட்டில் அணு உலையில் விபத்து நிகழவில்லை என்று கூறியிருக்கிறீர்கள், அது அணுக கழிவுகளை பாதுகாக்குமிடம்.. அதற்கே சர்வதேச அணு ஆராய்ச்சி கழகம் மிரண்டு போய் உள்ளதாக தான் உலக செய்திகள் தெரிவிக்கின்றன.. நீங்கள் ஜப்பானில் நடந்ததை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதும், ஜெர்மனியின் அணு மின்சார கொள்கையையும் ஏன் கவனிக்கவில்லை என்பதும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்..

மேலும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க அணு சக்தி தான் சிறந்தது என்று தாங்கள் கூறுவது அணு உலைகளுக்கு ஆபத்து ஏற்படாத பொழுது தான், சுனாமி தாக்கிய பொழுது கல்பாக்க அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியேறியது என்று பல ஆண்டுகள் கழித்து அரசு ஒத்துக் கொண்டுள்ளதை உங்களுக்கு நினைவு கூறுகிறேன்.. மேலும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இருவரும் கொள்கை அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறி கொள்கிறேன்...

இன்றைய சர்வதேச சூழ்நிலையை கணக்கில் கொண்டு இந்த போராட்டம் நடத்தப் 
படுகிறது, இதற்கு நீங்கள் ஆதரவு தரவில்லை என்றாலும் குழப்பத்தை உண்டு பண்ணாமல் இருந்தாலே போதும்.. நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்து தான்.. 

நீங்களும் எங்களுடன் இனைய வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கை வசம் உள்ள ஊடகமான குறுஞ்செய்தி, வலைபூ, facebook , twitterஆகிய தளங்களில் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்... 
போராடும் உள்ளங்களுக்கு ஊக்கமளிப்போம்..