politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

பகத் சிங்

பகத் சிங்கின் பார்வைகள் 

சுயநலமிக்கவன் தான் கடவுளை நம்புவான் என்பது பகத் சிங்கின் கோட்பாடு...
தான் செய்யும் நல்லதை, அங்கீகரித்து சொர்க்கத்தில் இடம் கொடுப்பான் என்பது கடவுளை நம்பும் நல்லவனின் நம்பிக்கை...
தான் செய்யும் கெடுதிகளை மன்னித்து சொர்க்கத்தில் இடம் கொடுப்பான் என்பது கடவுளை நம்பும் கெட்டவனின் நம்பிக்கை...
நான் நாத்திகன் ஏன் என்னும் ஜீவா தோழர், மொழி பெயர்த்த புத்தகத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் இவை...

கடவுள் இல்லை என்று மறுக்க பலர் துணிவதில்லை...
அவர்களுக்கு கடவுள் இல்லை என்று மறுத்து பேசும் அளவுக்கு தத்துவ விசாரணை இல்லை...
கடவுள் இல்லை என்று மறுத்து பேசுபவனை ஒன்று மத துரோகி என்றும் அல்லது திமிர் பிடித்தவன் என்று முத்திரை குத்துவதை ஆஸ்திகவாதிகள் பல்லாண்டுகளாய் கடை பிடித்து வருகிறார்கள்...
கடவுள் இருக்கிறானென்றால் அவரை காப்பாற்ற இவர்கள் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்பது தான் தெரியவில்லை...

கடவுள் இல்லை என்று சொல்பவர்களின் தத்துவங்களில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை...
ஆனால் கடவுள் உள்ளார் என்று கூறுபவர்களின் தத்துவங்களில் முரண் தொடை தட்டி நிற்கிறது...
இந்து
இஸ்லாம்
கிறிஸ்து
யூதர்
ஜைனம்
புத்தம்
சீக்கியம்
என்று ஒவ்வொரு மதமாக பிரிந்து இருப்பது ஒரு புறம் என்றால்
ஒவ்வொரு மதங்களுக்குள்ளும் பல்வேறு பிரிவனறாய் பிரிந்திருப்பது இன்னொரு புறம்...
ஆக கடவுள் உள்ளார் என்பதில் இருக்கும் பல்வேறு பலவீனமான கருத்துக்கள் பல்வேறு தத்துவங்களாய் பிரிந்து நிற்கிறது...
சொல்பவர்கள் பெரியவர்கள் என்பதால், எந்த விசாரணையும் இல்லாமல் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மூடத்தனம்...
இப்படி மூடத்தனம் என்று கூறுவது அகங்காரம் என்றால் அகங்காரக் காரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் தவறேதும் இல்லை...

நாத்திகன் கேட்கும் பதில் கிடைக்காத கேள்விகள்:

"தீயதை எதிர்க்கும் மனமிருந்தும், திறன் இல்லை என்றால் அவர் முழு முதல் இறைவன் இல்லை,
தீயதை எதிர்க்கும் திறன் இருந்தும் மனம் இல்லை என்றால் அவர் தூய்மையானவர் இல்லை,
தீயதை எதிர்க்கும் திறனும், மனமும் இருந்தால் தீயது ஏன் வருகிறது? 
 திறனும் இல்லை மனமும் இல்லை என்றால் அவரை ஏன் கடவுள் என்று கூப்பிட வேண்டும்?
- கிரேக்க தத்துவ ஞானி எபிகிருஸ்"

பூர்வ ஜென்ம பலனின் காரணமாகவே கஷ்டப் படுகிறீர்கள் என்று கூறினால்,
என்ன தவறு செய்தோம் என்று தெரியாமலே தண்டனை மட்டும் அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்?

அனைத்தும் கடவுள் தான் செய்கிறார் என்பதால், ஒரு மனிதன் செய்த தவறுக்கு கடவுள் தானே பொறுப்பாக வேண்டும்?

அதை விட்டு விட்டு ஒன்றுமே செய்யாத மனிதனை தவறு செய்தாய் என்று குற்றம் சாட்டுவது கடவுள் தர்மமா?

மனித உடல் என்பது பல்லாயிரக் கணக்கான உயிர்களின் தொகுப்பே அன்றி தனிப்பட்ட உயிர் அல்ல..
எந்த உயிரின் தவறுக்கு எந்த உயிர் பொறுப்பு

இது முடிவு அல்ல, ஆரம்பம்...  
உங்கள் கருத்துக்கள் தான் இந்த பக்கத்தை வளர்க்க போகிறது...

jeevansure@gmail.com