[இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு சந்தேகம் மற்றும் கருத்து இருந்தால் தொடர்பு கொள்ளவும் - jeevansure@gmail.com]
மருத்துவம் பொதுவாக ஒரு நோயை தீர்ப்பது குறித்த அறிவாகும். பல்வேறு வகையான வைத்தியங்கள் இவ்வுலகில் நிலவி வருகிறது. அவற்றில் அனைத்தும் பல சர்ச்சைக்கு உரியவை.
மிகப் பெரும்பாலானோர் உபயோகப் படுத்தும் மருத்துவம்..
Allopathy - ஆங்கில மருத்துவம்
Homeopathy - ஜேர்மன் மருத்துவம்
Unani - அரபி மருத்துவம்
Ayurveda, Sidhdha - இந்திய மருத்துவம்
Acupuncture - சீன மருத்துவம்
அனைத்து நோய்களுக்கும் இந்த மருத்துவ முறை தான் சிறந்தது என்று அறுதியிட்டு கூறி விட முடியாது.. ஆனால் பெரும்பாலான நோய்களுக்கு அல்லோபதியால் விரைவில் தீர்வு இருப்பதால் பெரும்பாலும் இந்த முறையே பின்பற்ற படுகிறது..
அல்லோபதி:
ஒரு குறிப்பிட்ட மருந்து எந்த எடை உள்ள மனிதருக்கு எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்ற அளவு கோளில் செயல்படுவதால் 99% தீர்வு கிடைக்கிறது.
ஆனால் பொதுவாக சில வைத்திய முறை தவறாக பின்பற்ற படுகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
தலைவலி மற்றும் வாந்தி என்பது ஒரு வியாதியின் அறிகுறியே ஆகும்... ஆனால் இங்கு பெரும்பாலும் இவற்றை மறக்கடிக்க மருந்து எடுத்துக் கொள்ளப் படுகிறதே தவிர இந்த வாந்தியும் தலைவலியும் வருவதற்கு காரணமான வியாதியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பது குறைவே ஆகும்... இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க நாம் மருத்துவம் படித்திருக்க வேண்டும்... ஆகையால் தலைவலி அல்லது வாந்தி வந்தால் சிறந்த மருத்துவரை சந்திப்பது நல்லது...
வாந்தி வரும் நோயாளிகளுக்கு மருந்தை மாத்திரையாய் கொடுத்தால் உபயோகமில்லை என்ற காரணத்தாலும், சில மருந்துகள் மாத்திரை வடிவத்தில் தர முடியாது என்ற காரணத்தினாலும் ஊசி மருந்து பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அனைத்து வியாதிகளுக்கும் ஊசி போட்டு கொண்டால் மட்டுமே குணமாகும் என்ற எண்ணம் படிக்காதவர்கள் மத்தியில் மட்டும் அல்ல படித்தவர்கள் மத்தியிலும் உள்ளது... மிக சிறந்த மருத்துவர்கள் மட்டுமே அனைத்து நோயாளிகளுக்கும் ஊசி போடுவதில்லை... முக்கியமாக ஜுரம் வந்த குழந்தைகளுக்கு ஊசி போடுவது உடல் சூட்டை உடனே குறைக்க உதவுவதால் சில சமயங்களில் பின்விளைவுகள் வருவதற்கு வழி வகுக்கும் [ஆதாரம் தேவைபடுகிறது]. அடிக்கடி ஊசி போட்டு கொள்வதால் நரம்பு மண்டலம் பாதிக்கப் படும் அபாயமும் உள்ளது..[1]
ஜுரம் என்பது என்ன?
நம் உடலில் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் நுழையும் பொழுது அதை ஒழித்துக் கட்ட நம் உடலின் எதிர்ப்பு சக்தியானது நம் உடல் வெப்பத்தை அதிகரித்து அந்த கிருமிகளை கொள்ள பார்க்கிறது.. ஒரு வகையில் நம் உடலை பாதுகாக்க எடுக்கப் பட்ட நடவடிக்கை என்று பார்த்தாலும் வெப்பம் அதிகரிப்பதால் நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து உடல் நிலைக்கு ஆபத்தையும் விளைவிக்கிறது.. ஆகையால் ஜுரம் போன்ற நேரங்களில் வெறும் paracetamol மாத்திரைகளை மட்டும் உட்கொள்ளுவதை தவிர்த்து கிருமிகளை கொல்லும் antibiotic மருந்துகளை உடன் எடுத்து கொண்டால் நம் உடலுக்கு நல்லது.. எந்த கிருமிக்கு எந்த antibiotic எடுப்பது என்பது முறையாக மருத்துவம் படித்தவர்களுக்கே தெரியும் என்பதால் சரியான மருத்துவரை அணுகுவது நல்லது...
எதிர்ப்பு சக்தி என்று கூறியதும் எனக்கு நினைவில் வருவது அண்டிசெப்டிக் சோப்புகள்.. Dettol lifebuoy pears-germ shield என்று அண்டிசெப்டிக் சோப்புகள் மக்களின் பயத்தை மூலதனமாய் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.. உண்மையில் இது உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறுவது செவிடன் காதில் ஊதும் சங்கு போல் ஆகி விடுகிறது.. வெளியில் இருந்து எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் நமது மூளையானது எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வதை நாளடைவில் நிறுத்திக் கொள்கிறது... ஆகையால் இது போன்ற antiseptic சோப்புகளை பயன் படுத்தாமல் விடும் பொழுது விளைவு கடுமையானதாக மாறி விடுகிறது..[2]
இதே போன்ற அடிப்படையில் சிக்கி தவிப்பவர்கள் நீரிழிவு நோயாளிகள். நீரிழிவு நோயை இருவகையாக பிரிக்கலாம்...
IDDM - இன்சுலின் சார்புள்ளவர்கள்
NIDDM - இன்சுலின் சார்பற்றவர்கள்
முதல் வகையினருக்கு இளம் வயதிலேயே கணையம் செயல் இழந்து விடுவதால் அவர்கள் இன்சுலின் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
இரண்டாம் வகையினருக்கு இன்சுலின் சுரக்கும் அனால் அதிகமான சர்க்கரை இரத்தங்களில் தேங்கி இருப்பதால் அது வேலை செய்ய சிரமப்படும். வேலை சரியாக நடக்காததால் மேலும் இன்சுலின் தயாரிக்க நம் மூளை கட்டளை இடும். இன்சுலின் அளவு ரத்தத்தில் அதிகரிப்பதால் இன்சுலின் ஏற்பிகள் வேலை செய்ய மறுத்து விடுகிறது. இப்படி இது ஒரு தொடர்வினயாகி IGT நோயாளிகளாக மருத்துவரிடம் வரும் பொழுது, அதை தகுந்த மருந்து குடுத்து குணப்படுத்த முடியும். மாறாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்க மூளை கொடுக்கும் கட்டளை போதாது என்று மருந்துகள் மூலமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கனயத்தை அடித்து துவைத்து ரணகளப்படுத்தி விடுகிறார்கள். களைத்து போக தொடங்கும் கணயத்திற்கு
ஓய்வு கொடுப்பதாக எண்ணி வெளியில் இருந்து ஊசி மூலம் இன்சுலின் குடுத்து நிரந்தரமாக ஓய்வு கொடுத்து விடுகிறார்கள். இதை பற்றி முடிவு எடுக்க வேண்டியது மருத்துவர்களே என்பதால் மருத்துவர்கள் மனசாட்சியுடன் செயல் பட்டாலே நீரிழிவு நோயை இன்சுலின் போடாமலே கட்டுபடுத்த முடியும்...[3]
இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு pioglitazone என்ற மருந்து வகைகளும் கொடுக்கப் படுகிறது. இந்த மருந்து சிலருக்கு ஒவ்வாமை காரணமாக இரத்த கொதிப்பை அதிகமாக்கும் தன்மை கொண்டது.. அப்படி அதிகமாகும் சமயத்தில் இரத்த கொதிப்பை குறைக்கும் மருந்தை கொடுக்காமல் இந்த வகை மருந்து வகையறாக்களை கைவிடுவது நல்லது..
இப்படி தேவை இல்லாமல் மருந்து எடுத்துக் கொண்டு சிரமப்படும் இன்னொரு நோய் மனிதன் என்னும் மிருகத்திற்கு மட்டுமே வரும் சளி. சளிக்கு காரணம் வைரஸ். வைரஸ் என்பது ஒரு உயிரில்லா உயிரினம் என்பதால் அதை கொல்வது சிரமம். வைரஸ்களை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே சாத்தியம்.
அப்படிப்பட்ட வைரஸ்களில் ஒன்று தான் சளி. இதனால் தான் சளிக்கு வைத்தியமாக விளையாட்டாய் சொல்வது...
மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரம்
மருந்த எடுக்க வில்லை என்றால் ஏழு நாட்கள்.
ஆக இந்த சளிக்கு தான் நாம் 4 அல்லது 5 மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறோம். சில சமயம் மூக்கில் ஒழுகும் சளிக்கு cetrizine அல்லது cpm மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு.. இது ஒழுகும் தன்மை கொண்ட சளியை காய வைப்பதற்கு உதவும்.. ஆனால் நன்கு படித்தவர்கள் கூட விளையாட்டு பிள்ளைகளாய் மாறி மருந்து கடைகளில் வந்து இதை மட்டும் வாங்கி சாப்பிட்டு குணமடைவதாக நம்பி வருகின்றனர்..
இதே போல ஆறு மாத குழந்தைக்கு இதே போன்ற வைத்தியம் குடுக்கப் போக அந்த குழந்தைக்கு சளி நுரையீரலிலும் இருந்ததால் சளி கெட்டித்து போய் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த மருத்துவர்.சம்பத் குமார் கூறுவார்.
வைரஸ் என்பது உயிரில்லா உயிரினம் என்று நான் கூறியுள்ளது பலருக்கு குழப்பத்தை உண்டு பண்ணலாம்.. ஆம் இவ்வுலகில் உயிருள்ள பொருள் உயிரில்லாத பொருள் என்று வகைப்படுத்தப் பட்ட அனைத்துமே carbon hydrogen oxigen nitrogen என்ற நான்கு முக்கிய கூறுகள் கொண்டதாகவே இருக்கிறது. உயிரில்லாத உப்பு தான் ஒரு மனிதனின் உயிர் நாடியாக உள்ளது என்று என் நண்பன் ராமு விளையாட்டாய் கூறுவான். ஆகவே இது நாள் வரை நாம் படித்த பாடங்கள் வைரஸ் சால் அடி வாங்குகிறது.. இதற்கு தீர்வு அனைத்து பொருட்களையும் செயல்படும் செயல்படாத பொருள் என்று இனம் பிரிக்க வேண்டும்.
செயல்படாத நிலையில் இருக்கும் வைரஸ் நம் உடலில் நுழைந்த உடன் நம் உடல் செல்களை தன்னை போலவே மாற்றி இனப்பெருக்கம் செய்து செயல்பட வைக்கிறது. அதனால் தான் வைரஸ் என்பது உயிரில்லா உயிரினம் என்று கூற வேண்டியதாகியது..
பல தவறான கருத்துக்கள் கொண்ட மருத்துவ உலகில் மல்டி வைட்டமின் மருந்துகள் உண்பதால் எந்த பக்க விளைவும் இல்லை என்று ஒரு கருத்து உண்டு.. இப்படி அதிகமாக வைட்டமின் மாத்திரைகள் உண்பவர்களுக்கு உயிருக்கே உலை வைக்கும் நோய்கள் வரும் என்ற உண்மை இருளில் உள்ளது..[4,5]