politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

27.11.10

ஏழ்மை...

உலகில் பஞ்சமும் பட்டினியும் இல்லாத பணக்கார நாடு என்று ஏங்கி தவிக்கும் நம் நாட்டு மக்களின் கண்ணை திறக்க அமெரிக்காவின் மறுபக்கம்.. இந்த படம்...

23.11.10

மறுபக்கம்...

ஊழலின் மறுபக்கம் என்ன என்றால் அது முதலாளித்துவத்தின் கோரப் பிடியில் சிக்கி இருப்பதே.. இப்போதைக்கு கீழ் காணும் லிங்கை படித்துக் கொள்ளவும்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. http://economictimes.indiatimes.com/news/politics/nation/CVC-head-Thomas-on-shaky-ground-after-SC-rap/articleshow/6973436.cms

21.11.10

அறிவு தனி நபர் சொத்தா...?


உலகத்தில் பணம் செய்ய பல வழிகள் உள்ளது... அவற்றில் மிகவும் சுலபமான வழிகளை முதலாளித்துவம் எடுத்துக் கொண்டு சுரண்டி கொழுக்கிறது...
http://www.pcworld.in/news/microsoft-indians-against-piracy-will-pay-genuine-software-41212010 மேலே குறிக்கப்பட்டுள்ள லின்கானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய விற்பனை உத்தி குறித்தானது..
உபுண்டு லினக்ஸ் சின் வளர்ச்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிப்பதால், அந்த நிறுவனம் சுலப தவணை திட்டத்தில் தனது மென்பொருளை விற்பனைக்கு கொண்டு வருகிறது...
அதற்க்கு முன்னோடியாக மக்களின் மனதில் வாங்கும் எண்ணம் வர வைப்பதற்கு சர்வே எடுக்கிறேன் என்ற பெயரில் தனக்கு தேவையான என்னத்தை வெளியிட்டு மக்களின் மனதை குழப்பிக் கொண்டிருக்கிறது...
உபுண்டு லினக்ஸ் மிக பெரிய அளவில் முன்னேறாததற்கு காரணமே, அதை பற்றிய சரியான புரிதல் மக்களிடம் இல்லாதது தான்... இதை தெளிவாக்க வேண்டிய அரசாங்கமோ வாங்கிய காசுக்காக கை கட்டி வாய் பொத்தி நிற்கிறது...
திரு பில் கேட்ஸ் அவர்கள், இந்திய மக்களுக்காக பணம் வாரி வழங்கிய போது எனக்கு ஏற்பட்ட சந்தேகம் மேற்கூறிய செய்தியால் ஊர்ஜிதமாகிறது..
ஒரு முதலாளி பணத்தை வாரி இறைக்கிறான் என்றால் அது அவன் கண்ணோட்டத்தில் மூலதனமே...
அத்தகைய மூலதனம் குறைந்த பட்சம் 20% சதவிகித லாபத்தை தந்தால் மட்டுமே அவன் மனம் ஆறுதல் அடையும்...
இல்லையேல் அவனுக்கு தூக்கம் வருவதில்லை...
ஆக பில் கேட்ஸ் விதைத்தது மொத்தம் மூலதனமே... தான தர்மம் அல்ல என்பது தெள்ள தெளிவாக புலனாகிறது...

19.11.10

தலை (வர்) லாமா...


2010 ஆம் ஆண்டு மிகவும் வன்முறை மிகுந்து இருந்தது எனவும், வரும் ஆண்டு 2011 பேச்சு வார்த்தை மிக்க ஆண்டாக அமைய வேண்டும் என்று அவருடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்...
இத்தனை நாளை திபெத்தில் இல்லாமல் வெளி உலகில் சுற்றி வரும் போதே வெளி உலகம் பற்றி தெரியவில்லை என்றால் இவர் திபெத்திற்கு சென்றால் இன்னும் எதுவுமே தெரியாத வெகுளியாகவே இருப்பார் என்று தெரிகிறது...
நக்சலிசம் மாவோயிசம் ஆகிய பழமையான கோட்பாடுகளை தூக்கி தூர எரிய வேண்டும் என்று முதலாளித்துவத்திற்கு ஓ போடுகிறார்...
அப்படி பார்த்தால் மேலே சொன்ன இரண்டு தத்துவங்களை விடவும் அரத பழசான மத கோட்ப்படுகளை தான் முதலில் தூக்கி எரிய வேண்டும்...
அது இருக்கட்டும் இந்த உலகில் உள்ள மக்கள் உன்ன உணவில்லாமல், தங்க இடமில்லாமல் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அது வன்முறை என்றால், முதலில் மனு கொடுக்கும் போதே அதை கிழித்து போட்டு விட்டு இவர்களின் பிரச்சினைகளை எதையும் தீர்க்காமல் விட்டதை வன்முறை என்று கூற முடியாதா...
ஆக பணம் இருப்பவர்களுக்கு மட்டும் ஜால்ரா அடிக்கும் பழக்கத்தை திபெத்தின் மன்னர் என்ற முறையில் முடி போனாலும் மறக்க வில்லை போலும்....

18.11.10

ச்வித்சர்லாண்டை வளமாக்குவோம்...இந்த பணம் இருக்கே பணம் அது சுயநலத்தை வளக்க தானப்பா உதவி செய்யுது... அப்புறம் இந்த பணத்தை வச்சிக்கிட்டு சுயநலமா ஏதாவது செய்தா... தப்பு பண்ணிட்டான் தப்பு பண்ணிட்டான்னு கூப்பாடு போடுறது எந்த விதத்தில நியாயம்னு நீங்களே சொல்லுங்கப்பா..
2002 லிருந்து 2006 வரை சுவிஸ் வங்கிகள்ல நம்ம பணக்காரர்கள் போட்டு வச்சிருக்கிற பணம் வருஷத்துக்கு 16 பில்லியன் டாலர் வருகுதுன்னு புதுசா தேவ் கார்னு ஒருத்தர் கண்டுபிடிச்சிருக்கிராராம்... இவ்வளவு துல்லியமா எப்படி கண்டுபிடிச்சார்னு நிறைய பேரு அவர் சட்டை காலரை பிடிக்கிறாங்களாம்... இதுக்கு எல்லாம் காரணம் அரசியல்வாதிங்க தான், அப்படி இருக்கும் போது எப்படி பணக்காரர்களை சொல்லலாம்னு வூடு கட்டிராங்கலாம்... எப்படியோ எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு இவங்களே ஒத்துகிட்டா சரி தான்...
நாங்க என்ன சொல்றோம்னா... எய்தவன் இருக்க அம்பை நோகனும்னு கேட்கிறோம்...
இதை எல்லாம் விட்டு தள்ளுங்க.. எப்பவோ நான் படிச்சது, ஒவ்வொரு வருஷமும் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்காக என்று வாரா கடன் தள்ளுபடி செய்வது மட்டும் 2.5 கோடி ரூபாய் என்று கேள்வி... இதை ஏங்க யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க?
இதை எல்லாம் கேட்கிறவனை கிளம்பிட்டாண்டா கேள்வியின் நாயகன்னு சொல்லி கிண்டல் பண்ணி பதிலை அடக்கம் பண்ணிடறாங்க...
எனக்கு பதில் வேணாம்பா... இந்த மாதிரி எல்லோரும் கேள்வி கேட்டா மட்டும் போதும்...

15.11.10

2 மச் G

[படத்தில் உள்ளது லஞ்சம் வாங்குபவர்களின் எண்ணிக்கையே, மற்றபடி எவ்வளவு என்று கணக்கு பார்த்தால் அது அப்படியே தலைகீழாக இருக்கும் என்பதே உண்மை...]

நேற்று இரவு நீயா நானா நிகழ்ச்சி நன்றாக சென்றது... ஊழல் இருந்தால் நம் நாடு வல்லரசாக முடியுமா? என்னடா சோதனை இது என்று இன்று காலை செய்தி தாளை திறந்தாள் ராஜாவின் ராஜினாமா கண்ணை பறிக்கிறது...
விஜய் டிவியில் பேசியவர்கள் அனைவரும் தாங்கள் என்னவோ உத்தமர் போலவும், லஞ்சமே மற்றவரிடம் மட்டுமே பெருகி போய் இருப்பதாகவும் பினாத்திக் கொண்டார்கள்.. போதாக் குறைக்கு வல்லரசாக வேண்டுமாம்..
வல்லரசு ஆக ஒரு நாடு ஆக வேண்டும் என்றால் அது மற்ற நாட்டை சுரண்டி தின்று கொழுக்க வேண்டும்...
காலனி ஆதிக்க பிரிட்டன் போலவும், உலகமயமாக்கல் கால அமேரிக்கா போலவும் பல நாட்டை சுரண்டினால் மட்டுமே வல்லரசாக முடியும்... ஆக நீ ஊழலை அந்த நாட்டில் விதைக்க வேண்டும்.. நமது நாட்டில் ஊழலை விதைப்பது இது போன்ற ஏகாதிபத்திய நாடுகளே...
அய்யா உத்தமர்களே, நீங்கள் யாருமே நிலம் வாங்கியது இல்லையா, வண்டி வாங்கியது இல்லையா, நிலம் வாங்கும் போது பத்திரப் பதிவு குறைவாக போட்டு தான் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். அது லஞ்சம் இல்லையா?
வண்டி வாங்கும் போது, வண்டி ஆர் சி புத்தகத்திற்கு மூன்றாம் மனிதர் மூலமாக லஞ்சம் குடுக்கவில்லையா?
திருப்பதி கோயிலில் ஸ்பெஷல் தரிசனம் என்ற பெயரில் பெருமாளுக்கே லஞ்சம் குடுக்கவில்லையா?
பிச்சை எடுக்கும் மக்கள் எங்கே புரட்சி செய்து விடப் போகிறார்கள் என்று ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ லஞ்சமாக குடுப்பதில்லையா?
ஊழல் செய்யும் பிரதிநிதியை தேர்ந்து எடுத்து சட்ட மன்றத்திர்க்கோ, நாடாளுமன்றத்திர்க்கோ அனுப்பவில்லையா?
நான் வோட்டு போடவில்லை என்று ஜபர்த்தார் காட்டும் மக்களே, நீங்கள் போடாத வோட்டினால் அவன் தேர்தலில் ஜெயிக்கவில்லையா?
அடுத்த தேர்தலில் 49 ஒ வை தேர்ந்தெடுத்து தேர்தலில் வெற்றி பெரும் வாக்காளரை விட அதிக வோட்டு எண்ணிக்கையில் 49 ஒ வை ஜெயிக்க வையுங்கள், காரணம் கேட்க்கும் இடத்தில் ஊழலை எதிர்க்க என்று எழுதி வையுங்கள்...
நம் நாடு வல்லரசாக வேண்டாம்... நம் நாட்டு அனைத்து மக்களும் பசி பட்டினி இல்லாமல் வாழ வையுங்கள்...
கனவு காணும் உரிமை எனக்கு உள்ளது... நனவாக்கும் பெருமை நம் அனைவர் கையிலும் உள்ளது...

14.11.10

உயிர் எங்கு உள்ளது?


இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக இருக்கலாம்.. ஆனால் இந்த கேள்விக்கு விடை தேடுவது என்பது கடினமான ஒன்றாகவே உள்ளது...

நமது புராணங்களும் ஆன்மீகமும் உயிர் என்பது நம் உடலில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருப்பது போலவும் அந்த உயிரானது இறந்த உடன் அடுத்த உடலில் புகுந்து கொண்டு அடுத்த ஜென்மம் எடுப்பது போலவும், ஒரு கற்பனை கதையா புகுத்தி உள்ளனர்.

ஒரு விவாதத்தின் போது என்னிடம் ஒருவர் உங்கள் உடலில் உயிர் எங்கு உள்ளது என்று கேட்டார்... என் முழு உடலிலும் பல உயிர்கள் உள்ளது என்றேன், நீங்கள் எந்த உயிரை கேட்கிறீர்கள் என்று கேட்டேன்? அதற்கு அவர் எதனால் இத்தனை உயிர்களும் இயங்குகிறது என்று திருப்பி கேட்டார்...
என் உடல் இயங்குவதற்கு அனைத்து உறுப்புகளும் அனைத்து அணுக்களின் உயிரும் அவசியமே.. தனி ஒரு அணு இதை சாதிப்பதில்லை என்று கூறினேன்...

வாதம் பன்றவரிடம் பேசலாம் விதண்டாவாதம் செய்பவரிடம் பேச முடியாது என்று கூறி நழுவினார்... நானும் அதையே சொல்கிறேன் என்று அந்த விவாதத்திற்கு தொடரும் குறி போட்டு வைத்தேன்...

நான் கேட்பது என்ன என்றால்
ஒரு காரோ பஸ்சோ இல்லை எந்த வாகனம் ஓடுவதற்கும் எது அவசியம்?
என்ஜினா
டயரா
ட்யுபா
இல்லை அதற்கு உள்ளிருக்கும் காற்றா
பெட்ரோலா
டிரைவரா
ச்டீரிங்கா

ஆக
ஒரு வாகனம் இயங்குவதற்கு எப்படி அதில் பூட்டபட்டிருக்கும் அனைத்து பொருள்களும் அவசியமோ அது போலவே நம் உடல் இயங்குவதற்கு அனைத்து உயிர்களும் அவசியம்
இதயமா
மூளையா
நுரையீரலா
ஈரலா
கனயமா என்று கேள்வி கேட்காமல் உண்மையை ஒத்துக் கொள்வோமே..

ஏங்க, நம் உடம்பு இயங்குரதுக்கு ஒரு உயிர் தான் அவசியம்னா, இந்த செடி கொடிக்கு எல்லாம் உயிர் எங்கங்க இருக்குது? கொஞ்சம் சொல்லுங்களேன் வாதிகளே.. விதண்டாவாதி கேக்கிறேன்?