politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.3.11

சீனியா? விஷமா?


NOVA NORDISK
மேலே குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனமானது நம் நாட்டு மக்களின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மிக எளிதில் பணம் சம்பாதிக்க முடிவு கட்டியுள்ளது தெள்ள தெளிவாகிறது...
இவர்கள் கொட்டி கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு பல மருத்துவர்கள் நீரிழிவு இரண்டாம் வகை நோய் உள்ளவர்களை நிரிழிவு ஒன்றாம் வகை நோய் உள்ளவர்களாய் மாற்றி கொண்டிருக்கிறார்கள்..
இன்சுலின் எனப்படும் மருந்தை மட்டுமே விர்ப்பதால் இவர்கள் இந்த வகை வியாபார தந்திரத்திற்கு தள்ள பட்டுள்ளனர்...
நீரிழிவு ஒன்றாம் வகை குறைபாடு உள்ளவர்களால், அவர்கள் உடலிலேயே இன்சுலின் சுரக்கும் சக்தியை இழந்தவர்கள் ஆவார்கள்...
நீரில்ழிவு இரண்டாம் வகை குறைபாடு உள்ளவர்கள், உடலில் இன்சுலின் சுரந்தாலும் அதை ஏற்று கொள்ளும் நிலை அவர்கள் உடல் இருப்பதில்லை,
ஆனால்
மேலே குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனமானது இரண்டாம் வகை குறைபாடு உள்ளவர்களுக்கு வெளியில் இருந்து இன்சுலின் மருந்தை செலுத்தி இயற்கையிலேயே அவர்கள் உடலில் சுரக்கும் இன்சுலின் இயக்கத்தை கட்டுபடுத்தி விடுகிறார்கள்..
அதனால் இரண்டாம் வகை குறைபாடு உள்ளவர்கள், பிற்காலத்தில் ஒன்றாம் வகை குறைபாடு உள்ளவர்களை மாறி விடுகிறார்கள்..
இந்த வகையான விற்பனைக்கு தெரிந்தோ தெரியாமலோ உடன் படும் மருத்துவர்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான் பணத்தை இந்த நிறுவனம் செலவு செய்கிறது..
இதை உணர்ந்து கொண்ட மருத்துவர்களை இந்த நிறுவனம் உதாசீனப் படுத்துகிறது...
நமது மருந்து துறையின் கொள்கைகள் மாறும் வரை மாற்றம் வரப் போவதில்லை...
அதற்குள் நாமாவது நமது அறிவை வளப்படுத்திக் கொண்டு தப்பித்துக் கொள்வோம்..
http://www.moneycontrol.com/news/health/30m-people-to-sufferdiabetes20-yrs-novo-nordisk_532705.html

28.3.11

குழப்பத்தில் தமிழ் நாடா? நானா?


தி மு க வும் அ இ அ தி மு க வும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்துள்ள லேப்டாப் இலவச அறிவிப்பால் தலை சுற்றி போயுள்ளேன்...
நேற்று தற்செயலாக செய்திகளை பார்த்த பொழுது, தமிழ் நாட்டின் ஒரு வருட வருமானம், மத்திய அரசாங்கம் தந்ததையும் சேர்த்து 79413 கோடி ருபாய் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது தமிழக அரசு...
ஜெயலலிதா அம்மையார் அறிவித்துள்ளது போல் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் குடுப்பது என்றால் தோராயமாக ஒரு லேப்டாப் 5000 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கிட்ட தட்ட 1,00,000 கோடி ருபாய் செலவாகிறது,,,
சரி,
இதை நான் நான்கு ஆண்டுகள் காலத்தில் செய்வதாக எடுத்துக் கொண்டாலும் இந்த திட்டம் 2011 ஆம் ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தானா என்று சந்தேகம் தலை தூக்குகிறது...
இல்லை எல்லோருக்கும் தான் என்றால் லேப்டாப் புக்கு மட்டும் தான் இந்த அரசாங்கம் செலவு செய்ய போகிறதா என்ற எண்ணம் எழுகிறது..
ஆக அரசாள்பவர்களிடம் உறுதியான எந்த முன்னேற்றத்திற்கு உதவும் திட்டமும் இல்லை என்பது புலனாகிறது...
இதை எல்லாம் கேள்வி கேட்காமல் தி.மு.க ஜெயிக்குமா அ.தி.மு.க ஜெயிக்குமா என்று நம் நாட்டு மன்னர்கள் உள்ளே வெளியே விளையாடி கொண்டிருக்கிறார்கள்,,
இதை புரிந்து கொண்டவர்கள் இதற்க்கு மேல் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நிற்கிறார்கள்...
மன்னர்களே, குழப்பம் வேண்டாம் 49 ஓ எதற்கு இருக்கிறது?
உங்கள் வோட்டு 49 ஓ விற்கே...

27.3.11

அவர் போட்டிருக்கும் சட்டை என்னது இல்லை?


சிறு வயதில் படித்த கதை இது, அநேகமாக அனைவரும் படித்திருப்பார்கள்... இல்லை என்றால் படையப்பா படத்திலாவது பார்த்திருப்பார்கள்... அது போல் நம்மை சுரண்டி கொழுக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இப்படி கூறி கொண்டிருப்பது வடிவேலுவின் வேலைக்கு ஆப்பு வைப்பதாக உள்ளது என்பது மட்டும் தெரிகிறது... இனிமேல் நகைச்சுவை தொலைக் காட்சிகளில் பாராளுமன்றத்தில் நடக்கும் கூத்தையும் சேர்த்து கொடுக்கலாம்... நல்லா விளம்பரம் கிடைக்கும்... நாங்க அப்படி பேசலை, இப்படி பேசலை என்று கூறுகிறார்களே தவிர, நாங்கள் பேசவே இல்லை என்று மட்டும் கூறவில்லை...
நம் நாட்டு ரகசியங்களை மற்ற நாட்டு அதிகாரிகளுக்கு இவர்கள் ஏன் கூறினார்கள் என்று யாரும் கூறவில்லை, யாரும் இவர்களை கேட்டதாகவும் தெரியவில்லை...
இதற்க்கு எல்லாம் முத்தாய்ப்பாக கீழ்கண்ட இணைப்பில் உள்ள செய்தி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
isro வுக்கும் தெரியாமல், antrix (contract போடும் agent) கும் தெரியாமல் இஸ்ரோ நிறுவனத்தால் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பதே அந்த செய்தி...

http://www.indianexpress.com/news/none-of-our-officials-decided-spectrum-lease-to-devas-isro/767963/

24.3.11

முதலை கண்ணீர்


சிறு வயதாக இருக்கும் பொழுதே முதலை கண்ணீர் பற்றிய கதைகளை படித்து விட்டதால் கீழ் கண்ட இணைப்பில் உள்ள செய்தியை படிக்கும் பொழுது சிரிக்காமல் இருக்க முடியவில்லை..
நமது கையில் இருந்து நூறு ருபாய் கொள்ளை அடித்து நமக்கே பத்து ரூபாயை திருப்பி தரும் திட்டத்தால் கிராம மக்கள் வேலைக்கு போக சோம்பல் படுகிறார்கள் என்று புலம்பி இருக்கிறார்கள் பல்வேறு நிபுணர்கள்...
இத்தனை நாளாய் செய்த வேலைக்கு கூலியை கொடுக்காமல், வேலையே நிரந்தர படுத்தாமல் கூலி ஆட்களாகவே இவர்களை கருவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்ட அனைத்து பணக்காரர்களையும் இவர்கள் ஏனோ குஷி படுத்த விரும்பி உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது...
இவர்கள் சொல்வது போல் தமிழகம் இருந்தால் எந்த வேலையுமே நடக்காது, எங்கோ யாரோ செய்த பிழையால் நடந்த விஷயத்தில் தலையையும் வாலையும் விட்டு விட்டு முண்டத்தை பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டிருக்கிறார்கள்...
இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவர்கள் பொய்யுரை உரைக்க முடியும், என்றாவது ஒரு நாள் இவர்கள், எழுச்சி பெறப் போகும் புரட்சிக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும்...


http://businesstoday.intoday.in/bt/story/assembly-polls-dmk-government-unrestrained-populism/1/13896.html

23.3.11

உல்டா கோப்பை


cricket என்று அழைக்கப்படும் மட்டை பந்து விளையாட்டை ரசிப்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது, ipl என்னும் பணம் செய்யும் எந்திரத்தை bcci கண்டுபிடித்த பிறகு போட்டிகளின் முடிவை ஏற்பாட்டாளர்கள் முன்னதாகவே முடிவு செய்து விடுகிறார்களோ என்று ஒரு சந்தேகம் என் நெஞ்சத்தை உறுத்தியதை அடுத்து இந்த போட்டிகளை ரசிப்பதை நிறுத்தி கொண்டேன்.
என் சந்தேகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பல நிகழ்வுகள் இந்த உலக கோப்பையில் நடந்தேறி உள்ளது, இந்த போட்டிகளை கண்ட அனைவருக்கும் தெரியும்... கிலேடியேடோர் படத்தில் நடப்பது போல மக்களின் மறக்கும் தன்மையை ஊர்ஜிதப் படுத்த ஆட்சியாளர்களே நடந்து கொள்கிறார்களோ என்று சந்தேகமும் எழுந்துள்ளது...
போட்டி ஆரம்பிக்கும் முன் bcci அணியின் காப்டனிடம் விலை உயர்வை பற்றி கேட்டதற்கு அவர் அளித்த பொறுப்பான பதில், "விலை ஏற்றம் என்றால் என்ன?"
ஆக விலை ஏற்றம் பற்றி தெரியாதவர்கள் இந்த நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் போட்டிகளில் வென்று யாருடைய மானத்தை காப்பாற்ற போகிறார்கள்?
இந்திய நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று மார் தட்டி கொள்ளாமல் இனிமேலாவது இவர்கள் அனைவரும் நாங்கள் இந்தியாவுக்காக விளையாடவில்லை, இந்திய மக்களுக்காக விளையாடவில்லை மாறாக தங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே விளையாடுகிறோம் என்று உண்மையை ஒத்துக் கொள்ள போவதில்லை... ஏன் என்றால் அந்த உண்மை வெளி வந்த பிறகு அவர்களுக்கு பிழைப்பு இருக்க போவதில்லை, ஆகையால் திருடன் உண்மையை ஒத்துக் கொள்வான் என்று நம்பிக் கொண்டிருக்காமல் நாமாகவே திருடனை இனங்கண்டு பத்திரமாக இருப்போம்...

இந்திய அணி உல்டா கோப்பையை வென்றதும் இது போல் தான் என்பது போல் நம் இலங்கை அதிபர் தன் வாயால் ஒத்துக் கொண்டுள்ளது நம் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்துகிறது...

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A&artid=401564&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

22.3.11

வாழ்க ஊடகம்


ஹிந்து நாளிதழ் தனது ஜனநாயக கடமையை மிகவும் சரியாக செய்து கொண்டு வருகிறது... தனது இதழ்களில் wikileaks இன் பக்கங்களை மிகவும் சரியாக படம் பிடித்து காட்டி தனது தைரியத்தை தந்திருக்கிறது... விடுதலை புலிகளுக்கு எதிராக செயல்பட்டதாக வந்த புகார்களை புறந்தள்ளி, காங்கிரஸ் அரசின் முகத்திரையி கிழித்திருக்கிறது... இரட்டை நாக்கு உள்ள பாரதிய ஜனதாவையும் விட்டு வைக்கவில்லை என்பதும் உண்மை... இவ்வளவு நடந்த பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் இது மொத்தமும் பொய் என்றும் சொல்லாமல், உண்மை என்பதையும் ஒத்துக் கொள்ளாமல் பொம்மலாட்டம் ஆடி வருவது, மிகவும் நகைச்சுவையாக உள்ளது...
நம்பிக்கை இழந்து ஒரு மூலையில் முடங்கி கிடந்த என் மூளையை சுறுசுறுப்பாக்கி நடமாட வைத்துள்ளது...
ஊடறுக்கும் ஊடகங்கள் வாழ்க என்று மார் தட்டி கூறிக் கொள்கிறேன்...