politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.10.11

கேள்வியும் கேள்வியும்

கூடங்குளம் அணு மின் உலையில் மின்சார தயாரிப்பின் ஒத்திகை செய்ய ஆரம்பித்து விட்டதாகவும், இனிமேல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்காமல் இருப்பது ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.

ஒத்திகை செய்ததற்கே பராமரிப்பு வேண்டும் என்று நீங்கள் சொல்வதும், முழு வீச்சில் மின்சாரம் தயாரித்தால் முப்பது ஆண்டுகள் கழித்து வீணாகவே அந்த அணு உலை பராமரிக்க வேண்டுமே என்று பொதுமக்கள் கூறுவதும் ஒன்று தானே...

கூடங்குளம் போராட்ட குழுவினர், திரு.பானர்ஜி அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்... 

என் கேள்வி என்ன என்றால், mock evacuations என்னும் ஒத்திகை வெளியேற்றம் எதுவும் செய்யாமல் இவர்கள் எப்படி மின்சாரம் தயாரிக்கும் ஒத்திகை மட்டும் நடத்தினார்கள் என்பதே...

பத்தோடு பதினொன்றாய் எத்தனையோ கேள்விகள், அனைத்துக்கும் கேள்வியே பதிலாக...

29.10.11

ஷாக்கடிக்குது...

இந்த மாத ஆரம்பத்தில் தமிழ் நாடு  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன் அறிவிப்பு இல்லாத மின் வெட்டை கண்டது...

அனைவரும் கேள்வி எழுப்பிய பொழுது அரசிடம் இருந்து நமக்கு வந்த பதில், ஆந்த்ராவில் தெலுங்கானா போராட்டம் நடந்து கொண்டு இருந்ததால் அங்கிருந்து வர வேண்டிய நிலக்கரி வருகை தடை பட்டு, மின் உற்பத்தி தடை பட்டதாக அறிவிப்பு வெளியாகியது...

கூடங்குளம் போராட்டத்தை குறித்து தவறான சமிங்க்ஜைகளை மக்களுக்கு கொண்டு செல்லவே மின் தடை உருவாக்கப் பட்டுள்ளதோ என்ற சந்தேகம் நேற்று வெளியான ஒரு செய்தியால் எழுந்து நிற்கிறது...

டெக்கான் குரோனிகள் நாளிதழில் வந்த செய்தி, இன்னும் நான்கு நாட்களுக்கான நிலக்கரி தான் இருப்பு இருப்பதாகவும், வழக்கமாய் இருப்பு இருக்கும் முப்பது நாட்களுக்கான நிலக்கரி இல்லை என்றும் கூறி உள்ளனர்...

அப்படி என்றால் இத்தனை நாட்களாய் முப்பது நாளுக்கு தேவையான நிலக்கரியை, கை வசம் வைத்து கொண்டு தான் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதாக கூறி இருக்கின்றனர் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது...
பொய்கள் சொல்வதை விட, பொய்களை சொல்லாமல் இருப்பது பெரிது, ஏனெனில் என்ன என்ன பொய்கள் சொல்லி இருக்கிறோம் என்பதை சாகும் வரை நினைவில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் வருவதை தவிர்க்கலாம் என்று சும்மாவா சொன்னார்கள்....

28.10.11

பகடைக் காயாய்

ஆந்திரா மாநிலத்தில் மக்களை பகடையாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உத்தமர்களின் ஊழல் வெளிச்சத்தில் வருமா என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன்... அநேகமாய், தெலுங்கானா தீயில் கொழுந்து விட்டு எரிந்து விடும் என்று தோன்றுகிறது...

merck  மற்றும் GSK  போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பயங்கர லாப பசிக்கு ஆந்த்ராவின் மலை வாழ் மக்கள் பலியாகிரார்களோ என்று என்ன தோன்றுகிறது... ஏற்கனவே இது குறித்து ஒரு சின்ன பதிவு போட்டிருந்தாலும், இன்று பிருந்தா காரத் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி மீண்டும் அந்த பிரச்சினையில் என் மூக்கை நுழைக்க வைத்துள்ளது...

  • பல்வேறு வகையான பக்க விளைவுகள் உள்ள இந்த தடுப்பூசி குறித்து எந்த வித உண்மைகளையும் தெரிவிக்காமல் படிக்காத பாமர மக்களின் மேல் பிரயோகித்து இன்று பல பேர் இறந்தும், இறந்த விஷயங்களை மூடி மறைத்தும், பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கிறது...
  • மிகவும் விலை உயர்ந்த இந்த தடுப்பூசி மருந்தை தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்ப்பதால் மிகவும் பெரிய இந்திய சந்தையை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து எந்த வித செலவும் இல்லாமல் கொள்ளை லாபம் அடிக்கும் திட்டமே இது...
  • இந்த தடுப்பூசி போடுவதால் மட்டும் இந்த தடுப்பூசி எதற்க்காக போட படுகிறதோ அந்த நோயை தடுக்க முடியும் என்று எந்த விதத்திலும் எங்கும் ஆணித்தரமான செய்திகள் காண கிடைக்கவில்லை...
  • ஏற்கனவே சோதனை செய்யப் பட்டு கிடைத்த தகவல்களை கூட பரிசோதனை செய்து கொண்ட மக்களிடம் சம்பந்தப்பட்ட எவரும் சொல்லாததும், PATH  என்கிற அரசு சாரா பன்னாட்டு நிறுவனம், இதனால் எந்த பக்க விளைவும் இல்லை என்று, பொய் சொல்வதும் நடக்கிறது..
பிரச்சினை என்ன என்றால் விஷயம் வெளி வந்த பின்பு சுகாதார துறை அமைச்சகம் இந்த சோதனைக்கு தடை போட்ட பின்பும், தடை போட பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த பின்பும், இந்த ஆட்சியாளர்களை மதிக்காமல் இந்த சோதனையை முழுவதும் நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, இந்த அரசு சாரா நிறுவனம்.

மேலும் அரசுக்கு சில வழிகாட்டுதல்களையும் அதன் அறிக்கையில் கூறியிருப்பது எவ்வளவு கோடி ஊழல் இந்த தடுப்பூசி விஷயத்தில் நடந்தேறியிருக்கும் என்று கற்பனையில் என்னை மிதக்க விட்டுள்ளது



27.10.11

தமிழக வாக்காள பெருமக்களே

உள்ளாட்சி தேர்தல் குறித்து நான் பதிவு எழுதிய பொழுது, சிலர் கூறிய கருத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூறிய கருத்தும் தவறு என்பது இன்று வெளி வரும் பலப் பரீட்சை செய்திகளில் வெளிவருகிறது...

உள்ளாட்சி தேர்தல் என்பது அங்கங்கே நிற்கும் வேட்பாளர்களை பொறுத்தது என்றும், இதில் கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் தேர்தலுக்கு முன் கூறிய அனைத்து கட்சிகளின் தலைவர்களும், இன்று பலப் பரிட்சையில் ஈடு பட்டுள்ளது, உண்மையை அப்பட்டமாக விளக்குகிறது...

என் வாக்கு வங்கி சரியவில்லை என்றும், எங்கள் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்றும் ஒவ்வொருவரும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தெள்ள தெளிவாக கூறி வருகின்றனர்... கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறியவர்கள், ஏன் கட்சியின் பலத்தை பற்றி அலச வேண்டும்...

இதை விட கொடுமை என்ன என்றால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த கட்சியின் தலைவர், அன்புள்ள தந்தை, என்ன கூறியிருக்கிறார் என்பது தான்...

நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஜெயித்தது போல தான் இன்று ஆளும் கட்சியில் இருப்பவர்கள் ஜெயித்துள்ளார்கள் என்று எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்று கூறியுள்ளார்...

ஆக ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தான் ஜெயிப்பார்கள் என்று தெரிந்த பிறகு ஏன் மக்களை வைத்து காமடி பண்ணி கொண்டு திரிய வேண்டும்...

ஓட்டுக்கு பணமும், வாக்காளர்களுக்கு பரிசு பொருள்களும் தீபாவளி நெருங்கிய சமயத்தில் பலருக்கு கை கொடுத்தது என்றாலும், தோற்றவன் வீடு வீடாக சென்று அருவெறுப்பான வார்த்தைகளில் திட்டுவதும், கள்ள பணம் கொடுத்த வெற்றி பெற்றவன் ஓடி ஒளிவதும் இது தாண்டா தேர்தல் என்று தெள்ள தெளிவாக காட்டுகிறது...

மக்கள் விழிப்புணர்வு பெரும் கால பெருவெளியில் நாம் நிற்கிறோம், இனிமேலும் அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கி செல்லாமல், கற்றுணர்ந்தவர்கள் இறங்கி சுத்தம் செய்ய தொடங்க வேண்டிய நேரமிது...

காலம் கனியும், காத்திருப்போம்... 
காலம் கனிந்த பின், வழிநடத்துவோம்...

25.10.11

மால்குடி சித்தன்

ஆன்மா, ஆவி, உயிர்...

பெரும்பாலும் மேற்கூறியவற்றை பற்றி பொதுவான கருத்து கீழே கொடுக்கப் பட்டுள்ளது

ஆத்மா பரமாத்மாவுடன் கலந்து விடுகிறது...

உயிர் இதயத்தில் இருக்கிறது, அதனால் தான் நாம் இதயம் இருக்கும் இடத்தை நான் என்று சொல்லும் பொழுது சுட்டுகிறோம்

ஆவி உலவியது, இறந்த உயிர் ஆவியாக திரிகிறது என்றும் செய்திகள் வருகிறது...

என் கேள்வி என்ன என்றால்,

நாம் ஒரு செல் உயிர் கிடையாது, பல செல் உயிர்...
ஆகையால் நம் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு உயிராகவே இயங்குகிறது..

பிராணவாயுவை ஒவ்வொரு பகுதிக்கும் கடத்தி செல்லும் சிவப்பு அணுக்களின் வாழ்நாள் நூறு முதல் நூற்றி இருபது நாட்கள்..

இறந்த மனிதனின் கண்களை நான்கு மணி நேரத்துக்குள் எடுத்து வைத்தால், அந்த கண்கள் உயிர் இழப்பதில்லை...

ஆக உயிர் எங்கு உள்ளது என்ற ஒரே சர்ச்சையில் தான் ஆத்மா, உயிர், ஆவி ஆகியவை இன்னும் உலகில் உலவிக் கொண்டிருக்கிறது..

என் கேள்வி என்ன என்றால்,
மனிதனின் உயிர் அவன் உடலில் எங்கோ இருக்கிறது என்றால் செடி கொடிகளின் உயிர் எங்கு உள்ளது?

ஆன்மா, ஆவி, உயிர்...
இவை மிகவும் சர்ச்சையான விஷயங்கள்...
இவற்றை பற்றி விரிவாக வேறு ஒரு பதிவில் அலசியிருக்கிறேன்... [புழிந்து, காயப்போடவில்லை]

http://suryajeeva.blogspot.com/2010/11/blog-post.html

மாற்றுக் கருத்துக்கள் இந்த விஷயத்தில் பலருக்கும் இருக்கும், ஆகையால் பதிவு செய்யுங்கள்... என்னை கூர் தீட்டிக் கொள்ள அவை என்றும் வரவேற்க்கப் படுகின்றன, விவாதமோ? விதண்டாவாதமோ தவிர்த்து விடுவோம்...

24.10.11

ஜைதாபூருக்கு வெண்ணெய், கூடங்குளத்திற்கு சுண்ணாம்பா?

ஜைதாபூர் அணு மின் நிலையத்திற்கு பொதுமக்களின் எதிர்ப்பு கூடுகிறது..

நாட்டின் முக்கியமான இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவியலாளர்களும், சமூக அக்கறை உள்ளவர்களும் கொண்ட பதினைந்து நபர் குழு அமைக்கப் படுவதாக செய்திகள் இன்று காலை தினசரிகளில் வெளியானது.[the hindu]
அது குறித்து இணையத்தில் சரியான தகவல் இல்லை என்றாலும், முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் இணைந்து ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக போராட போவதாக இணைய செய்திகள் உறுதிபடுத்துகிறது...

பிரான்ஸ் நாட்டு அணு உலை என்றும், ரஷ்ய நாட்டு அணு உலை என்றும் பிரித்து பார்க்காமல், எந்த அணு உலை என்றாலும் அது மக்களுக்கு ஆபத்தானதே என்று உணர்ந்து கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உள்ளங்களுக்கும் இவர்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்...

இல்லையேல் ரெட்டை வேடம் போடுகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பது அங்கு உள்ள மக்களுக்கும் வெட்ட வெளிச்சமாகும்... 

கூடங்குளம் குறித்து ராஜா MVS கூறுவது குறிப்பிடத்தக்கது, மனித கழிவுகளையே நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்னும் பொழுது அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற விவாதம் எதற்கு? என்கிறார்...

இனி விவாதங்கள் வேண்டாம், 
அச்சத்தை போக்கும் செயல்கள் தேவை இல்லை, 
இன்றைய தேவை கூடங்குளம் மூடப் படவேண்டும் என்பதே...

23.10.11

கபில் சிபல்

மிக அருமையான படம் 



சிலர் போடோஷப் வேலை என்ற நினைக்க வாய்ப்பு உள்ளதால், அதிகார பூர்வ வலை தளத்தில் இருந்து அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போட்டு உள்ளேன்.

பெரிதாக்கி பார்க்க படங்களை கிளிக் பண்ணவும்  

 ஒரு ஊழியனின் குரல் என்ற வலைப்பதிவை பார்த்து இந்த படத்தின் மூலத்தை தேடி எடுத்தேன்... 
பலர் இன்னும் இதை போடோஷப் வேலை என்றே நினைக்கிறார்கள் என்பது அதை விட கொடுமை.
http://ramaniecuvellore.blogspot.com/2011/10/blog-post_8554.html

22.10.11

மால்குடி சித்தன்

plan for the stars, then only you will land in the clouds.

விண்மீனை தொட திட்டமிடு, அப்பொழுது தான் உன்னால் மேகத்தையாவது  தொட முடியும் 

இந்த வார்த்தை பெரும்பாலனவர்கள் கேட்டிருப்பார்கள்...

என் கேள்வி என்ன என்றால்,
விண்மீனை தொட திட்டமிட்டு விட்டு, மேகத்தை தொட்டால் அது சரியான திட்டமிடல் இல்லை... அல்லது திட்டமிட்டதை சரியாக செயல் படுத்தவில்லை என்று தானே அர்த்தம்...

என்னை பொறுத்தவரை வெற்றி என்பது முதலில் வருவது அல்ல, எவ்வளவு கடினமான சமயங்களிலும் கொண்ட கொள்கையில் தவறாது, மனம் தளராமல் வெற்றிக் கோட்டை தொடுவதே ஆகும்....


இது தான் உண்மையான வெற்றி

பெருகும் கூடங்குளம் போராட்ட ஆதரவு

கீற்று வலை குழுமம் மூலம் வந்த மின்னஞ்சல்...

கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளைக் கண்டு நாம் ஏன் அச்சப்படவேண்டும்?

பத்திரிகையாளர் சந்திப்பு
மற்றும்
அணு உலைகளின் அச்சங்களைப் பற்றிய
அறிவியல் பூர்வமான  விளக்கக்கூட்டம்.

பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் அமைப்பிலிருந்து
மருத்துவர் ரமேஷ், மருத்துவர் புகழேந்தி விளக்கமளிக்கிறார்கள்.

நாள்: 22.10.2011
இடம்: அய்க்கஃப் வளாகம், சென்னை
லயோலா கல்லூரி அருகில், காலை 10 மணி

இந்தியாவிலிருந்து அணு உலைகளை முற்றிலும் மூடக்கோருவதற்கான
வாய்ப்பும், தலைமையும் இயல்பாகவே தமிழகத்திற்கு வந்துள்ளது!
இந்தத் தலைமையை முன்னெடுத்து மக்களைப் பாதுகாக்கவேண்டியது
ஒவ்வொரு தமிழனின் கடமை!

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு அனைத்து சுற்றுச்சூழல் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மக்களைக் காக்கும் அறிவியலாளர்கள், படைப்பாளிகள், அறிவுஜீவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை இணைத்து 'அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி' என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்று உருவாக்குவதற்காக உங்களுடைய செயல்திட்டங்களுடன் வாருங்கள்!  

பூவுலகின் நண்பர்கள்,
பூவுலகு - சுற்றுச்சூழல் இதழ்


www.poovulagu.org
info@poovulagu.org

98410 31730, 94440 65336, 91765 33157

21.10.11

கழுகு வலை தள கோரிக்கை..

கழுகு வலை தளத்தில் இன்று வெளியான பதிவு ஒன்று உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்...
தேசிய நெடுஞ்சாலைகளில் கண் கூசும் விளக்கு பொருத்தி செல்லும் வாகனங்களால் வரும் விபத்துகள் குறித்தும் அதை தடுப்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்... சென்று பாருங்களேன்..



ஜனநாயகம் கேள்விக்குறியாய்...

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு மக்களை வஞ்சிக்குமா? மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்குமா? இது கூடங்குளம் அணு மின் நிலைய ஆதரவாளர்கள் வைக்கும் முக்கிய கேள்வி.

வரலாறை உற்று நோக்குபவர்கள் இருளில் வாங்கிய சுதந்திரத்தை விடிய விடாமலே, இன்னும் மக்களை இருளிலேயே வைத்திருக்கிறது மக்கள் தேர்ந்தெடுத்த அரசு என்று அடித்து சொல்லுவார்கள்...

ஆனால் சுற்றுப் புறச் சூழல் குறித்து கேள்வி இது என்று கேட்பார்களேயானால், அவர்களுக்கு சிறந்த பதிலாக அமைந்துள்ளது, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளும் - அந்த நிறுவனத்தை ஆதரிக்கும் மக்கள் தேர்ந்தெடுத்த அரசும் ஆகும்...

மகாராஷ்ட்ராவில் துரத்தி அடிக்கப் பட்டு, குஜராத்தில் மறுக்க்கப் பட்டு, கோவாவில் கால் பதிக்க முடியாமல் தமிழகத்தில் கால் பதித்திருக்கிறது ஸ்டெர்லைட் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர் புதிய தென்றல்

நிலத்தடி நீரும், காற்றும் மாசுப்பட்டு சுற்றுபுறத்தில் வாழும் கிராம மக்கள் மிகுந்த நோய் வாய்ப்படுகிறார்கள் என்று கவலைப்படுகிறார்  படித்ததும், பாதித்ததும் வலைபதிவர்

இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை விட அதிகமாக கூடங்குளம் ஆலைக்கு எதிராக மக்கள் அணி திரண்டு உள்ளது, மக்களின் எழுச்சியை அறிவித்தாலும்... அதை நிராகரிக்கும் போக்கை மத்திய மாநில அரசுகள் கடைபிடிப்பதை நன்றாக உணர முடிகிறது...

இன்றைய தேவை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தும் பொழுது, மக்களின் தேவை கூடங்குளம் அணு உலை முற்றிலும் கை விடுவதே ஆகும்...

இரு துருவங்களாய் இருக்கும் மக்களும் ஆட்சியாளர்களும் ஒரே புள்ளியில் சந்திக்க, ஆட்சியாளர்கள் தாங்கள் மக்கள் பிரதிநிதி என்பதை உணர்வதில் உள்ளது...

19.10.11

அயனியாக்கும் கதிர்வீச்சு

அணு உலைக்கு எதிராக பல்லாயிரம் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அணு உலைக்கு ஆதரவாகவும் சில குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழத்தான் செய்கிறது. 

அவற்றில் பல சாமானிய மக்களுக்கு புரியாத வண்ணம் இருப்பதால், ஆதரவு நிலை எடுப்பதா, எதிர்ப்பு நிலை எடுப்பதா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களை குழப்பவே செய்துள்ளது.

அது போன்ற சுவாரசியமான உண்மைகளை மறைத்து, உண்மை போல் தெரியும் அணு உலை ஆதரவு கட்டுரையை படித்து விட்டு , உண்மையை தேடி அலைந்து மேலும் அதிர்ச்சிகர தகவல்களை தெரிந்து கொண்டேன்.. அவை உங்கள் பார்வைக்கு..

கதிர்வீச்சு...
இருவகை 

ஒன்று அயனியாக்கும் கதிர்வீச்சு

மற்றொன்று அயனியாக்காத கதிர்வீச்சு 
அயனியாக்காத கதிர்வீச்சு microwave  ஓவன், அலைபேசிகள் போன்றவைகளில் இருந்து வருபவை. அவ்வளவு அபாயகரம் அல்லாதவை. 

அணு உருவாக்குவது அயனியாக்கும் கதிர்வீச்சு, அவற்றை பற்றி தான் பேசப் போகிறேன்..

இயற்கையில் கலந்திருக்கும் கதிர்வீச்சுக்களில் முக்கியமானதும், பெரும்பான்மையாகவும் இருப்பது radon என்னும் வாசமில்லா நிறமில்லா வாயு. அணு உலைகளில் உபயோகிக்கப் படும் uranium கழிவுகளில் இருந்து பிறக்கும் வாயு இது. இயற்கையில் கலந்திருக்கும் கதிர்வீச்சில் ஐம்பது விழுக்காடு இதுவே ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு இந்த வாயுவின் பாதிப்பால் சராசரியாக 21 ,000௦௦௦ நபர்கள் நுரையீரல் புற்றுநோய் தாக்கி பலியாகின்றனராம்.
இந்த ராடன் வாயுவால் பாதிக்கப் படுபவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் தான், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டிருக்கிறது என்று விக்கிபீடியா தெரிவிக்கிறது.

எக்ஸ்ரே க்களில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு 10 rem அளவே உள்ளது. மருத்துவ துறை ஒரு ஆண்டுக்கு நூறு rem அளவு கதிர்வீச்சை ஒரு மனிதன் மேல் பிரயோகிக்க அனுமதிக்கிறது. அப்படி இருந்தும் எக்ஸ்ரே க்களில் பயன்படுத்தும் மிக குறைந்த கதிர்வீச்சு உயிரணுக்களின் மேல் ஒரு வேளை பிரயோகிக்கப் பட்டால், அந்த நேரத்தில் அந்த உயிரணுக்கள் உண்டாக்கும் குழந்தைகள் ரத்த புற்று நோயுடன் தான் பிறப்பார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

நானூறு rem களுக்கு மேல் கதிர்வீச்சு இருந்தால் மரணம் நிச்சயம் என்று குறிப்பிட்டுள்ளது..

செர்நோபில்  மற்றும் புகுஷிமா வால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றி பேசினால் அதிகாரப் பூர்வ தகவல் உண்டா என்று கேள்வி கேட்பார்கள். இழப்பீடு தரப் பட வேண்டி வருமே என்பதாலும் இனி வரும் எதிர்ப்புகளை சமாளிக்கவும் அதிகாரப் பூர்வ தகவல்கள் என்றும் வரப் போவதில்லை. எவ்வளவு தான் இழப்பீடு கொடுத்தாலும் அனுபவிக்கும் வலியை அது தடுத்து விடப் போவதுமில்லை.

வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை காலி செய்து விட்டு செல்வது எவ்வளவு பெரிய வலி என்பது கள்ளிக் காட்டு இதிகாசம் படித்தவர்களுக்கும், அகதிகளாய் புலம் பெயர்ந்தவர்களுக்கும் தெரியும். அசம்பாவிதம் நிகழ்ந்து விட்ட புகுஷிமா அருகே வாழ்ந்தவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் விஷயம். அந்த வலி நமக்கும் வர வேண்டுமா?

அனைவரும் தலை வலியை அனுபவித்து இருப்போம். நம் நலனுக்காக ஒரே ஒரு முறை தலைவலியை வரவழைத்துக் கொள்ளுங்கள். நான் இழப்பீடு தந்து விடுகிறேன் என்று கூறினால், நாம் தலைவலி வரவைத்துக் கொள்ள தயாராகுவோமா அல்லது அப்படி கேட்டவர்களை எதிர்த்து போராடுவோமா?



17.10.11

ஊடறுக்கும் ஊடகம்

காசு கொடுத்தால் செய்தி போடும் ஊடகங்கள் மத்தியில் http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2535541.ece நேர்மையாக பலவற்றை ஆராய்ந்து செய்தி வெளியிடும் ஊடகங்களாக வலை பூக்கள், அந்த வெற்றிடத்தை நிரப்புகின்றன...

அணு மின் நிலைய போராட்டம் குறித்து முக்கியமான ஊடகங்கள் அனைத்தும் வாயை மூடிக் கொண்ட பின் கூடல் பாலாவின் வலை பூ அங்கு நடக்கும் விஷயங்களை ஒரு நேரடி ஒளி பரப்பு போல செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது...

கௌசல்யா என்பவற்றின் வலை பூவிலும் இதற்காகவே மெனக்கெட்டு தொண்ணூறு கிலோ மீட்டர் பயணம் செய்து தன நேரடி அனுபவத்தை பதிவு செய்து உள்ளார்.. http://kousalya2010.blogspot.com/2011/10/blog-post_17.html

போராட்டம் நடக்கும் இடத்தின் அருகில் இல்லாத காரணத்தால், உலகத்தை சுருக்கி கைக்குள் வைத்திருக்கும் இனைய உலகத்தில் உலவும் பல்வேறு கருத்துக்களை உங்கள் முன் போராட்டத்திற்கு ஆதரவாக என் பதிவுகள் மூலம் வைத்துக் கொண்டு வருகிறேன்...

கூடங்குளம் மட்டும் அல்ல மற்ற அனைத்து அணு மின் நிலையங்களின் நிலை குறித்தும்  முடிவு எடுக்க இந்த போராட்டத்தின் வெற்றி மட்டுமே நிர்ணயிக்கும்...

இன்று அப்துல் கலாம் அவர்கள் கூறிய கருத்து ஒன்றும் என் கவனத்தை ஈர்த்தது..
கூடங்குளம் குறித்து முடிவு செய்ய பத்து நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார் அணு விஞ்ஞானி...
அனைத்து அணு உலைகளையும் பார்த்த பிறகே அவரால் பதில் சொல்ல முடியும் என்று பத்து நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார்...
ஒரு அணு விஞ்ஞானிக்கே இது குறித்து பத்து நாட்கள் அவகாசம் தேவை படுகிறது.. ஒரு சாதாரண மனிதனாய் என் கவலை எல்லாம் நம் சந்ததியர் நிலை என்ன என்பதே...
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=332615

மேலும் முனைவர் சிவாஜி ராவ் கேட்கும் கேள்வியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்...
அநேகமாக இந்த பதிவுக்கு எதிர் கருத்து போட வரும் உள்ளங்கள், இதையும் படித்து விட்டு, அப்புறம் கருத்திடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..
http://www.newsreporter.in/dr-apj-abdul-kalams-statements-on-nuclear-power-improper-prof-shivji-rao

இத்தனை நாட்கள் அணு சக்திக்கு ஆதரவாய் பேசிய அப்துல் கலாம் இன்று திடீர் என்று பத்து நாட்கள் அவகாசம் கேட்க காரணம் பல்வேறு துறையின் சிறந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்காய் இருக்கும் என்பது என் சந்தேகம்...
http://www.dnaindia.com/india/report_experts-file-petition-urging-sc-to-stay-contracts-for-nuclear-plants_1598945

தொழில் நுட்ப அறிவை சார்ந்த பல்வேறு அறிஞர்களே கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கும் பொழுது சாமானிய மக்களாய் என் கேள்வி ஒன்றே ஒன்று தான் நம் சந்ததியர் நிலை என்ன என்பதே...

கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தரும் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க, இன்று ஒரு நாள் தேர்தலில் பங்கேற்க போராட்டம் தற்காலிகமாய் நிறுத்திக் கொள்ளப் பட்டது என்று முடிவு எடுத்துள்ளார்கள் என்று கூடல் பாலா நேற்று தொலைபேசியில் தெரிவித்தார்...

மனோ அண்ணன் சொல்லியது போல், "நான் போராட்ட களத்தில் உங்களுடன் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன், அல்லாமலும் எனது மனம் முழுவதும் அங்கேயே இருக்கிறது." http://nanjilmano.blogspot.com/2011/10/blog-post_15.html#ixzz1b17d8SX8
நானும் அங்கு நேரடியாய் இருக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

மக்களின் போராட்டத்தை கலவரமாக மாற்ற முயற்சி செய்யும் அத்தனை முயற்சிகளும் தோற்று போய் உள்ளதாக தெரிகிறது..
பல்வேறு தரப்பினரின் கவனத்தை கவர்ந்து வரலாற்றில் இடம் பெற்ற அனைத்து போராட்டக் காரர்களுக்கும் இன்குலாப் ஜிந்தாபாத் தவிர வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை எனக்கு...

16.10.11

மால்குடி சித்தன்

எனக்கு வந்த குறுஞ்செய்தி..

நேராக நிற்கும் மரம் தான் முதலில் வெட்டுப்படும் ஆகையால் நேர்மையாக இல்லாமல் கொஞ்சம் வளைந்து கொடு...

என் கேள்வி என்ன என்றால்,

நேராக நிற்கும் மரம் வெட்டப் படுவது நல்ல பலகையாக, மரச்சாமான்கள் செய்து ஆண்டாண்டுகாலம் பயன் படத்தானே... மாறாக வளைந்து நெளிந்த மரங்கள் விறகாக பயன்பட்டு எரிந்து சாம்பலாக தானே போகிறது... 

ஆண்டாண்டுகாலம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் நேரான மரமாக வெட்டுபடலாமே?

இதுக்கு என்ன சொல்ல போறீங்க

குறிப்பு:
கூடங்குளம் போராட்டம் வெளிமாநில மக்களை அவர்கள் ஊருக்கு திரும்பி போக வைத்திருப்பதால் சில ஊடகங்கள் வந்தாரை வாழ வைக்காதா தமிழகம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர், அதே ஊடகத்தில் வெளிமாநிலத்தவர் சொன்னது, இரண்டு மாதம் சம்பளம் பாக்கி இருந்தும் வேறு வழி இல்லாமல் திரும்பி செல்கிறோம்... இரண்டு மாத சம்பளம் கொடுக்காதது தமிழகத்தின் தவறா? 

15.10.11

உண்மையா பொய்யா.. [உண்மையே]

நேற்று இரவு DNA  என்னும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் உண்ணாவிரதம் இருந்த ஆறு மாற்று திறநாளிகள் காவலர்களால் தாக்கப் பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது...

இந்த செய்தி உண்மையா பொய்யா என்று பிற செய்தி தளங்களை ஆராய்ந்தாலும், எங்கும் குறிப்பிட படவில்லை...
எது எப்படியோ அடக்குமுறை எந்த போராட்டத்தையும் அடக்கி விட முடியாது என்று இங்கு நாம் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்...

போராடும் உள்ளங்களுக்கு ஆதரவு பெருகும் வேலையில் உரக்கச் சொல்கிறேன் இன்குலாப் ஜிந்தாபாத் 

 செய்தியை படிக்க சுட்டி

பிற்சேர்க்கை: சமீபத்தில் கூடல் பாலா அவர்கள் அளித்த தகவல்படி இருபது மாற்று திறனாளிகள் அணு மின் நிலைய வாசலில் தர்ணா இருந்த பொழுது அவர்களை தாக்கியதால் ஒருவர் மண்டை உடைபட்டு கஸ்தூரி மருத்துவமனையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது.. இந்த செய்திகளை இது வரை வெளியிடாத அனைத்து ஊடகங்களையும் கண்டிக்கும் அதே சமயம் உண்மையான செய்திகளை தாங்கி வருவது வலைபூ ஊடகங்களே என்று மீண்டும் முழக்கமிடுகிறேன் இன்குலாப் ஜிந்தாபாத்  

14.10.11

புது ஒரு ரூபாய்


புது ஒரு ரூபாய் நாணயமும் பழைய ஐம்பது பைசா நாணயமும் ஒரே அளவு..
விழிப்புனர்வாய் இருந்து கொள்ளுங்கள்...


ரெவெரி கூறியது போல் நாணயத்தின் மதிப்பு குறைஞ்சு போச்சு போல 


13.10.11

மால்குடி சித்தன்.

தனிமரம் தோப்பாகாது.

ஒரு மனிதன் ஏதாவது அநீதியை கண்டு போராட வேண்டும் என்று நினைக்கும் பொழுது அநேகமாக நம் சொந்தங்களும் நட்புக்களும் கூறும் பதில் இது தான்...

என் கேள்வி என்ன என்றால்...

நீங்கள் கூறுவது உண்மை தான்,
தனி மரம் தோப்பாகாது னு ஒத்துக்கிறேன், ஆனால் ஆப்பாகுமே... இதுக்கு என்ன சொல்ல வரீங்க?

12.10.11

தொடர் விளைவு...

27  வருடங்கள் கழித்து முதல் முறையாக போபால் விஷ வாயுவால் தாக்கப் பட்ட மக்கள் முழு கடையடைப்பை நேற்று கோரியிருக்கிறார்கள்... 
கோரிக்கை ரொம்ப சாதாரணமானது..

உண்மையாகவே அந்த விபத்தில் பாதிக்கப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கொஞ்சம் ஆணித்தரமாக அரசு சொல்ல வேண்டும் என்பதே, ஒரு நாள் 5000  என்பதும் மறுநாள் 15,000 என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று முழு கடையடைப்பை கோரியிருக்கிறார்கள்.. 
பாதிக்கப் பட்ட நம் நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் அந்த நிறுவனத்தின் முதலாளியை பத்திரமாக தாய் மண்ணுக்கு அனுப்பி வைக்க கவலைப்பட்டு கொண்டிருந்த அரசு, நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது..

பிரான்ஸ் நாட்டில் அணுக கழிவுகளை நிலத்தடி நீருக்குள் செலுத்தியதை கண்டுபிடித்து 40,000 யுரோக்களை அபராதமாக கட்ட சொல்லியிருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.. சாதாரணமாய் எழும்பும் கேள்வி என்ன என்றால் இதனால் பதிக்கப் பட்டவர்களுக்கு இந்த அபராதத்தால் எப்படி நீதி கிடைக்கும் என்பதே?http://www.thehindu.com/opinion/op-ed/article2526288.ece

இப்படி மக்கள் பற்றி சிந்திக்காத அரசுகள் தான் இன்று கூடங்குளத்திலும் வாழ்வுக்கு [அணு]உலை வைக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்பதால் சாதாரணமாகவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது... சாதி மதம் பாராமல் இணைந்திருக்கும் ஒற்றுமை கண்ணை உறுத்த ஊடகங்கள் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கின்றனர்.. 

என்ன இருந்தாலும் காங்கிரஸ் வெள்ளைக்காரன், அமைத்து விட்டு சென்ற கட்சி தானே...

அரசு, பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் செய்வதை விட, வரும் காலங்களில் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்வது தானே நியாயம்..

சும்மாவா சொன்னாங்க, வருமுன் காப்பது நலம் என்று...

பிற்சேர்க்கை: பின்னூட்டங்களில் ஒரு அனானி தவறான தகவல்களை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்... இணையத்தில் வரும் தகவல்களை வைத்தே நான் இங்கு பதிவு அமைப்பேன்... அப்படி அவர் கேள்வி கேட்க விரும்பினால் tehelka  இனைய இதழை கேள்வி கேட்கலாம்... சுமார் 20,000 மக்களை வெளியேற்ற கூறி விட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன், அது தவறு 30,000 மக்களை வெளியேற்ற கூறி விட்டார்கள் என்று tehelka  இனைய தளம் வெளியிட்டுள்ளது... இங்கே உள்ள சுட்டியில் கடைசி பத்திக்கு முன் படிக்கவும்... http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp

11.10.11

புது ரெண்டு ரூபாய்



நமது ஆட்சியாளர்களின் கவனக் குறைவை இங்கு இருக்கும் படத்தில் பாருங்கள்... செலவை மிச்சம் பிடிக்கிறார்களா? அல்லது நிஜமாகவே யோசிக்க மாட்டார்களா?

மேலே இருப்பது அருகே அருகே வைத்து ஸ்கேன் செய்யப் பட்ட ஒரு ரூபாய் நாணயமும் இப்பொழுது புழக்கத்திற்கு வந்திருக்கும் இரண்டு ரூபாய் நாணயமும்... ரெண்டும் ஒரே அளவு...

மால்குடி சித்தன்..

சூரியனை ஒரு கடவுள் என்று வணங்குகிறார்கள், அக்னி பகவானை ஒரு கடவுள் என்று வணங்குகிறார்கள்.. 

இங்கு என் கேள்வி என்ன என்றால் நெருப்பு இல்லாமல் சூரியன் இல்லை, ஆக அக்னியும் சூரியனும் ஒன்று தானே...

குறிப்பு:
ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அனைத்து பொருள்களிலும் நெருப்பு இருக்கிறது என்றார்... 
அறிவியல் படி நெருப்பு என்பது தனி விஷயம் அல்ல, என்பதும் அது ஒரு பொருளின் oxidation  இயக்கத்தில் சூடு உண்டானால் நெருப்பு உருவாகும் என்பதையும் கூறி பைத்தியக்காரன் என்று பட்டம் வாங்கி கொண்டேன்.. 

10.10.11

வெள்ளை மாளிகைக்கு மனு...

அவர்கள் உண்மைகள்  பதிவில் எது எதுக்கோ ஓட்டு போடுறீங்க இதுக்கும் ஓட்டு போடுங்களேன் என்று அறிவித்துள்ளார்...

ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க பெரியண்ணனை கேட்டுக் கொள்ளும் ஒரு மனு, அதற்க்கு நான் ஓட்டு போட்ட பொழுது இன்னும் 1733  ஓட்டுகள் அக்டோபர் 29  ஆம் தேதிக்குள் தேவை என்று குறிப்பிட்டிருந்தது... 

சென்று பார்த்தேன்...

நீங்களும் பாருங்க..
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
பிடிக்கலேன்னா பின்னூட்டம் போடுங்க...

9.10.11

மீண்டும்...

கூடங்குளம் மீண்டும் விவாத பொருளாகி இருக்கிறது...
இன்று உண்ணாவிரத அறிவிப்புடன் தொடங்கி இருக்கிறது சில நாட்கள் விடுப்பு எடுத்த போராட்டம்...

கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்க பல்வேறு முயற்சிகள் திரை மறைவில் எடுத்த வண்ணம் உள்ளனர், அவற்றில் ஒன்று ஊடகம் மூலம் இந்த அணு மின் நிலையம் அமைந்தால் மின்வெட்டே இருக்காது என்று தம்பட்டம் அடிப்பது... மேலும் சூரிய ஒளி மின்சாரம் ஒரு அலகு 20 ரூபாய் வரும் என்று திரும்ப திரும்ப பழைய பஞ்சாங்கம் பாடுவதே... இன்றைய சூழ்நிலையில் சூரிய ஒளி மின்சாரம் ஒரு அலகு 3 ரூபாய்க்கு மேல் வராது என்று முந்தய சுடாத சூரியன் என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளதை நினைவு கோருகிறேன்... http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_04.html

மேலும் இவர்கள் கூறுவது கல்பாக்கம் இயக்கத்தில் ஏதாவது தவறு நிகழ்ந்துள்ளதா என்று கேட்பதே, முறையான ஆதாரம் இல்லாமல் கசியும் செய்திகளை வெளியிடுவது ஊடகங்களுக்கு தற்கொலைக்கு சமம் என்பதால் வதந்திகள் வதந்திகளாகவே உள்ளன... ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்று தெஹெல்கா ஊடகம் கல்பாக்கம் குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது 

மேலும் கூறும் பொழுது புகுஷிமா அளவுக்கு நிலநடுக்கத்தை இந்தியா இதுவரை சந்தித்ததில்லை என்று கூறுகிறார்கள்...

உண்மையில் சமீப காலமாய் இந்தியாவில் நிலநடுக்கம் அதிகமாகி இருக்கிறது என்கிறது புள்ளி விவரங்கள்...
புகுஷிமா - 6.6 ரிக்க்ட்டர் அளவுகோல் 
சிக்கிம் - 6.9 ரிக்டர் அளவுகோல் 

தமிழகத்திலும் நிலைமை மாறி வருகிறது என்று எச்சரிக்கிறது 
http://earthquake-report.com/2011/08/11/earthquakes-list-august-12-2011/

அரசுக்கு நாம் கேட்பது ஒரே ஒரு கேள்வி தான் எங்கள் சார்பாய் முடிவெடுக்க தான் உங்களை நாங்கள் ஆட்சி செய்ய அனுப்பி இருக்கிறோம்... வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகள் வாழ்வை முடிவெடுக்க அதிகாரம் நமக்கு இல்லை, நாளை பிறக்க போகும் சந்ததியினர் ஏன் இந்த முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபட்டு அணு உலை அமைத்து எங்கள் வாழ்வில் உலை வைத்தீர்கள் என்று கேட்டால் அதற்க்கு பதில் உங்களிடம் இருக்கிறதா? நிச்சயமாக எங்களிடம் இல்லை.... 


8.10.11

மால்குடி சித்தன்...

இன்று பிறக்கும் இவன்,

இது வரை சாதாரணமாய் கேள்வி கேட்காமல் வழக்கத்தில் இருக்கும் சிலவற்றை கேள்வி கேட்க போகிறான்...

முதல் கேள்வி:

அநேகமாக இந்த கதை அனைவருக்கும் தெரியும்...

விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு  இன்னும் அதிகம் தெரியும் வாய்ப்பும் உள்ளது..

ஒரு பெரிய வெள்ளை தாள் அல்லது வெள்ளை பலகையை காட்டி அதில் ஒரு கருப்பு புள்ளி வைத்து என்ன தெரிகிறது என்று கேட்பார் ஒருவர்...

அநேகமாய் அனைவரும் தரும் பதில் ஒரு கருப்பு புள்ளி தெரிகிறது என்பதாகவே இருக்கும்..

அதற்கு கேள்வி கேட்டவர்,

இவ்வளவு பெரிய வெள்ளை தாள் இருக்கிறது அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை, மாறாக ஒரு சிறு கறும் புள்ளி மட்டும் தான் தெரிகிறதா? என்று கேள்வி கேட்பார்...

இது தான் நேர்மறை எதிர்மறை என்று விளக்கம் வேறு கொடுப்பார்...

இனி மால்குடி சித்தனின் கேள்வி...

விற்பனை துறையில் 85% எடுத்த பிறகும் உங்களுக்கு இலக்கை எட்டாத அந்த 15% மட்டும் எப்படி சார் கண்ணுக்கு தெரிகிறது?

எதிர்மறை எண்ணம் இருந்ததால் தான் parachute என்ற உயிர் காக்கும் சாதனம் கண்டுபிடிக்கப் பட்டது என்பதும் உண்டே...

விற்பனை துறையில் பல்லாயிரம் கஷ்டங்களை அனுபவிக்கும் உள்ளங்களுக்கு அர்பணிப்பு 


பிற்சேர்க்கை: தோழர் சண்முகவேல் கூறிய பிறகு நான் செய்த பிழை என் கண்ணில் பட்டது, எதிர்மறை எண்ணம் parachute  கண்டுபிடிக்க உதவியது என்று குறிப்பிட்டிருந்தேன்... அதை எதிர்மறை எண்ணம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது, உதவக்கூடியது எதுவும் நேர்மறையே

6.10.11

டாஸ்மாக்கை ஒழித்து கட்டுவோம்

தமிழ் தெரு வலை பூவில்  கொள்ளி என்று பதிவு போட்டு வருத்தப் பட்டுள்ளார் த.ஜார்ஜ்... அவருக்கு கை கொடுக்க, தனி மனித ஒழுக்கம் மட்டும் கெடவில்லை குடிப்பதால், உங்கள் உடல்நலனும் கெடுகிறது என்று உறைக்கவே இந்த பதிவு...

மெத்த படித்தவர்களுக்கு பீர் குடிப்பதால் எந்த உடல் நலன் கெடும் வருவதில்லை என்று ஒரு நினைப்பு உண்டு... பீர் குடிப்பது வோட்கா குடிப்பதை விட ஆபத்தானது ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம்...

மேலும் பீர் குடிப்பதால் வரும் பிரச்சினைகள் குறித்து கீழே படிக்கவும்

பீர் குடிப்பது ரத்த கொதிப்பை அதிகரிக்கும்
http://en.wikipedia.org/wiki/Long-term_effects_of_alcohol

பீர் அருந்தும் ஒரு சில மணி துளிகளில் ரத்த அடர்த்தி குறைவதால் bleeding stroke வந்து மக்கள் இறக்க வாய்ப்பு உள்ளது என்கிறார் ஒருவர்... மேலும் குடித்த பல நேரம் கழித்து ரத்தத்தின் அடர்த்தி குறைந்து நீர் அளவு குறைந்து ரத்த கொதிப்பு அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.medicalnewstoday.com/releases/32037.ப்ப்
http://answers.yahoo.com/question/index?qid=௨௦௦௬௦௯௨௨௦௬௫௯௨௩ஆஆ௯ர்வ

மிக அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் மூளை பாதிக்கப் படும்
http://pubs.niaaa.nih.gov/publications/aa63/aa63.ஹதம்

பீர் குடிப்பது பித்தக் கற்களையும் சிறுநீரக கற்களையும் உண்டாக்குவதோடு கீழ்முடக்கு வாதத்தையும் உண்டாக்கும் என்று தெரிகிறது
http://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=80834&page=௨

நாமெல்லாம் போராளிகள்,
நம் போராட்டத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்... இனி வரும் காலங்கள் நம் வாழ்க்கை சூறாவளி புயல் சூழ்ந்த காலமாக இருக்கும்... அப்பொழுது நாம் தெளிவாக ஆரோக்கியமாக இருந்தால் தான் வெற்றி நிச்சயம்... 

5.10.11

இயற்கை மின்சாரம்

நேற்று எழுதிய பதிவில் என் கண்ணோட்டத்திலேயே நான் எழுதி விட்டதால் படிப்பவர்கள் கண்ணோட்டத்தில் குறிப்பிட மறந்து விட்டேன்...  வைரை சதீஷ் குறிப்பிட்ட உடன் தான் புரிந்தது நான் செய்த தவறு... அவரின் பின்னூட்டம் படித்தவுடன் என் பழைய பதிவில் சிறு மாற்றம் செய்த பின் நான் என்ன அர்த்தத்தில் சொல்ல வந்தேனோ அது நிறைவேறியது.. ஆம் சதீஷ், சூரிய சக்தியில் குறைகள் என்று குறிப்பிட்டது அதை எதிர்ப்பவர்களின் வாதம், அதை கூர்ந்து கவனித்தாலே அது எவ்வளவு அபத்தம் என்று தெரிய வரும்..

ஆமினா இராஜராஜேஸ்வரி 
இருவரும் பகலில் கிடைக்கும் சூரிய சக்தியை இரவில் சேமித்து பயன் படுத்த முடியாதா என்று கேட்டுள்ளனர், அதை நோக்கி தான் இன்றைய ஆய்வு உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை இனைய உலகத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது... அதற்க்கு விடிவு சிறந்த battery  களை உருவாக்குவதே 


ஆனால் குடிமகன்  கூறுவதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், "மின்தயாரிப்பு பலவழிகளில் [நீரிலிருந்து சூரிய ஒளியிலிருந்து உயிரினங்களின் கழிவுகளிலிருந்து என எந்த எந்த வழிகளிலெல்லாம் பெரிய ஆபத்து இல்லாமல் மின் உற்பத்தி முடியுமோ] தொடர்ந்து செய்ய வேண்டும்... எதோ ஒரு வழியை மட்டமே நம்பி இருந்தால் பிறகு பிரச்சினை வர வாய்ப்புள்ளது.. மேலும் ஒரே இடத்தில் அதிக முதலீடுகளைக் கொண்டு பெரிய தொழிற்சாலைகளை துவங்காமல் ஆங்காங்கே தேவையான மின்சாரத்தை தாயாரித்துக் கொள்ளும் அளவிற்கு திட்டங்கள் தீட்டப் பட வேண்டும்... மின்னலின் ஆற்றலை கூட சேமிக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்... நாம் நிச்சயம் அணுவிலிருந்து விடுபடலாம் " என்று   நீர்வழி சாலை பற்றிய தன் பதிவை நம் பார்வைக்கு வைக்கிறார்
siva  கூறுவது போல் தூசு solar panel கள் மீது படிந்து விட்டால் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார், அவருக்கான பதில் என் பழைய பதிவிலேயே இருந்தது... அது தான் பராமரிப்பு... பராமரிப்பு இல்லை என்றால் எதுவுமே உபயோகப் படாது என்பது சிவாவுக்கும் தெரியும் என்பது என் கருத்து...

விலை மதிப்பற்ற மனித உயிர்களை கருத்தில் கொண்டு அணு உலைக்கு செலவு செய்ததை கிடப்பில் போட வேண்டும் என்று அக்கறைப்படும்  அப்பு மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் அல்லது கிராமத்திற்கு என்று தனித்து பிரித்து திட்டமிடும் பொழுது மின்சார தேவையை பூர்த்தி செய்யும் என்கிறார்...

சூரிய சக்திக்கு ஆதரவாய் 
நிரூபன் , thendralsaravanan , shanmugavel ,M.R  MANO நெஞ்சில் மனோ, சென்னை பித்தன், தமிழ்வாசி prakash ஆதரவு கரம் நீட்டும் அதே வேளையில் எச்சரிக்கை குரலாய் ஒலிக்கிறது இருதயம்   அவர்களின் பின்னூட்டம்... அணு கழிவு என்று குறிப்பிடக் கூடாது என்றும் எறிந்து மீதியான எரிபொருள் என்று கூற வேண்டும் என்கிறார்... நீங்கள் சொல்வது அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.. ஆனால் உலகம் முழுவதும், வரும் காலங்களில் அணுக்கழிவை [இப்படி தான் சர்வதேச தரப்பில் கூறுகிறார்கள், பார்க்க விக்கிபீடியா ] கையாளுவதில் உள்ள சிரமங்கள் கூடி கொண்டே போவதாக பயந்து வருகின்றனர்.. அணு செரிவூட்டம் என்பது அணு ஆயுத தயாரிப்புக்கு வழி வகுக்கும் என்பதால் இதில் ஈடுபட பல தடைகள் தற்பொழுது இருந்து வருகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

 ராஜா MVS அவர்கள் மழை காலங்களில் சிரமப் பட்டாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் பெரிது இல்லை என்று கூறியுள்ளார்.. மேலும் வினவின்  வலை தளத்தையும் சென்று பார்க்க சுட்டி அளித்துள்ளார்... 



கூட்டி கழித்து பார்த்ததில் சூரிய ஒளி சக்தி, காற்றாலை, நீர்வழி சாலை, குப்பைகளை எரிக்கும் incinerator[?] என்று எத்தனையோ ஆபத்தில்லாத வழிகள் இருப்பதாக அறிய முடிகிறது...

ஒரு மணி நேரம் இணையத்தில் உலவும் போதே நமக்கு இவ்வளவு தகவல்கள் கிடைக்கிறது என்றால் ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் நிபுணர்களை கைவசம் வைத்துக் கொண்டிருக்கும் அரசுக்கு இந்த வழிகளை ஆராய சிரமம் இருக்காது என்று எண்ணுகிறேன்...
 


"To steal one person's idea is plagiarism, to steal from many is researchரெவெரி  சி.பி.செந்தில்குமார் நீங்கள் ஆசைபடுவது போல் நான் டாக்குத்தர் என்று பெயர் வாங்க வேண்டாம், நம் மக்கள் நலமாக வாழ்ந்தாலே போதும்...
இவ்வளவு ஆய்வுக்கு பிறகும் நம் பார்வைக்கு சிக்காத ஒரே பதில், ஏன் நம் அரசாங்கம் இவ்வழிகளை ஆராய மாட்டேன் என்கிறது என்பது தான்..



அரசுக்கு நாம் கேட்பது ஒரே ஒரு கேள்வி தான் எங்கள் சார்பாய் முடிவெடுக்க தான் உங்களை நாங்கள் ஆட்சி செய்ய அனுப்பி இருக்கிறோம்... வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகள் வாழ்வை முடிவெடுக்க அதிகாரம் நமக்கு இல்லை, நாளை பிறக்க போகும் சந்ததியினர் ஏன் இந்த முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபட்டு அணு உலை அமைத்து எங்கள் வாழ்வில் உலை வைத்தீர்கள் என்று கேட்டால் அதற்க்கு பதில் உங்களிடம் இருக்கிறதா? நிச்சயமாக எங்களிடம் இல்லை.... 

4.10.11

சுடாத சூரியன்

ஏன்டா இதை பத்தி படிச்சோம்னு ஆயிடுச்சுங்க...

விளையாட்டா நேத்து பின்னூட்டம் இட்டு விட்டேன்... நாளைக்கு சூரிய சக்தி மின்சாரம் குறித்து எழுத போறேன்னு... 

அதை பத்தி நோண்ட நோண்ட ஆச்சரியமும்...

அணு மின்சாரம் பற்றி நோண்ட நோண்ட எரிச்சலும் தான் மிச்சம்...

முதலில் சூரிய ஒளி சக்தி..

ஒரு நாளில் 8000  kwh  மின்சாரம் தயாரிக்க நிறுவப்படும் பொருட்களின் விலை சுமார் 25  கோடி... [ ஒரு நாளைக்கு 1 மணி நேர எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்]

இதன் ஆயுள் முப்பது ஆண்டுகள்...

ஆக
8000  kwh  x  10950  நாட்கள் = 87600000  kwh 
ஆக ஒரு யூனிட் மின்சாரம் விலை தோராயமாக 2 .85  ரூபாய் என்று வருகிறது... பராமரிப்பு செலவையும் சேர்த்தால் 3.00  ரூபாய் வருகிறது...
http://business.rediff.com/special/2009/dec/09/indias-first-entrepreneur-to-sell-solar-power.htm

[முன்பு கொடுத்திருந்த சுட்டியில் இருந்த தகவல்கள் நீக்கப் பட்டிருக்கிறது என்று தோழர். தியாகு கூறியுள்ளார்.. ஆகையால் அதே தகவல்களை சார்ந்திருக்கும் புது சுட்டியை மேலே கொடுத்து உள்ளேன்  http://www.ebay.in/itm/1-MW-SOLAR-POWER-PLANT-/160420076368 ]

இது தனியார் சந்தையில் விற்கும் பொருட்களின் விலையை வைத்தே கணிக்கப் பட்டுள்ளது... அரசே இதை தயாரித்தால் எவ்வளவோ விலை குறைய வாய்ப்பு இருக்கிறது...

தற்பொழுது வெளி சந்தையில் தனியார் மின்சாரம் நான்கு ரூபாய்க்கு விற்கப் படுகிறது... தமிழக அரசு என்ன விலைக்கு வாங்க போகிறார்கள் என்ற தகவல் இல்லை..

குறைகள் என்று இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறுவது:

1. இரவு நேரங்களில் சூரியன் வருவதில்லை, ஆகையால் இரவு நேரத்தில் மின்சாரம் கிடைக்காதாம்...

2. மழை காலங்களில் உற்பத்தி பாதிக்கப் படும்

3. ஆலங்கட்டி மழை வந்தால் பொருட்கள் சேதமடையும்...

4. இதன் கழிவை என்ன செய்வதாய் உத்தேசம் என்றும் கேள்வி எழுகிறது...

இந்த குறைகளை சரி செய்ய டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்டது என்பதும் உண்மை 

இப்பொழுது அணு மின்சாரம் குறித்து பார்ப்போம்..

ஒரு kwh  மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு 1.00 ரூபாய்... 
அதனுடன் இந்த அணு உலை கட்ட எடுத்துக் கொண்ட செலவு சேர்த்துக் கொள்ளுங்கள்...

அதை விட கொடுமை, என்ன என்றால் இந்த அணுக் கழிவுகளை என்ன செய்வது என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்...



இன்னும் என் ஆராய்ச்சி முடியவில்லை...
உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் தீர்த்து வைக்க முடியுமா என்று பார்க்கிறேன்...
உங்களுக்கு தெரிந்த தகவலையும் பின்னூட்டமாய் இட்டால் இன்னும் கருத்துக்கு வலு சேர்க்கும் 

3.10.11

உறுதி


ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானாவை பிரித்து கொடுக்க சொல்லி போராட்டம் உச்ச கட்டத்தை தொட்டு இருக்கிறது...

தென் தமிழகத்தில் கூடங்குளம் எதிர்ப்பு அலை வலுக்கிறது...

கேரளாவில் அண்மையில் உயர்த்திய பெட்ரோல் விலையை எதிர்த்து நடத்திய முழு அடைப்பு முழு வெற்றி...

மகாராஷ்ட்ராவில் நடந்த போராட்டம் துப்பாக்கி சூடு நடத்தி அணைக்கப் பட்டு இருக்கிறது..

வங்காளம், பீகார், ஓடிஸா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் 
மாவோயிஸ்ட் ஆதிக்கம் போராட்டத்தை கொண்டு செல்கிறது...

உத்தர் பிரதேசத்தில் நொய்டா நில சமாச்சார போராட்டம் ராகுல் காந்தியால் பெரிய 
பெயர் பெற்றது...

குஜராத்தில் போராட்டம் என்ற எண்ணமே வரக் கூடாது என்று முளையிலேயே கில்லி எறிகிறார்கள்...

மற்ற மாநிலத்தில் போராட்டங்கள் நடக்கவில்லை என்று கூற முடியாது...

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு போராட்டங்கள்..

இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் போராட்டமாக ஊடகங்களில் பெரிதும் வெளிவராத ஒரு போராட்டம் இன்று வெளிச்சத்தில் வந்து இருக்கிறது...

இந்திய ராணுவம் எது வேண்டுமானாலும்  செய்யலாம் தவறில்லை என்ற ரீதியில் படைக்கப்பட்ட சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இரோம் ஷர்மிளா...

அவரை irom sharmila என்பதற்கு பதில் iron sharmila என்று கூறலாம் என்னும் அளவுக்கு மன உறுதி...

இவரின் போராட்டம் சற்றே விரிவடைந்து இப்பொழுது ஒவ்வொரு இந்திய மாநிலமாக விரிவடைந்து வருவதை பார்த்தால்... இந்தியர்கள் புரட்சியின் பாதைக்கு வந்து கொண்டிருக்கிறார்களா என்று எண்ண தோன்றுகிறது...

எது எப்படியோ ஆள்பவர்கள் காதில் இவர்களின் சத்தம் விழும் என்ற நம்பிக்கையில் ...

இன்குலாப் ஜிந்தாபாத்...



2.10.11

ஆறப் போட்டால் அடங்கி விடுமா?

அறிவிக்கப் படாத மின்வெட்டுகள் ஆரம்பமாகி உள்ளன... 
சரியான திட்டமிடல் இல்லாத அரசு, ஆகையால் முன்னோக்கு பார்வை இருந்தால் மட்டுமே எந்த அரசு இயந்திரமும் சரியாகும் என்பதால், மின்வெட்டு என்பது இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரியாக போவதில்லை...

இதை காரணம் காட்டி கூடங்குளம் அணு உலை மீண்டும் இயக்க திட்டமிடுவதும்... இயக்குவதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற முயற்சி செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன...

அதன்படி தினமலர் நாளிதழில் வந்த கட்டுரை பல்லாயிரம் கேள்விகளை மக்கள் மீது திணித்து தனக்கு தேவையான பதிலை பெற்றுக் கொண்டது ஆச்சரியமானதே...

கேள்வி 1

விபத்துகள் நிகழ்கிறது என்பதால் வாகனங்களில் யாரும் பயணம் செய்யவே இல்லையா?

இந்த விபத்துகள் அனைத்தும் நிகழ்வது தனி மனித கவனக் குறைவால் தான்.. அணு உலைகள் போன்ற விஷயங்களில் இயற்கையின் தாக்குதலால் விபத்து நிகழ்ந்து விட்டால் கையை பிசைந்து கொண்டு இறந்தவர்களின் உடலை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யப் போகிறீர்கள்... என்ன நடக்கிறது என்று தெரியாமலே ஜனிக்கும் பல்லாயிரம் கணக்கான குழந்தைகளுக்கு உங்கள் பதில் என்ன? எங்கள் சுயநலத்திற்காக உங்களை காவு கொடுத்தோம் என்பதா?

கேள்வி 2 

அலைபேசி பேசுவதால் உடல் உறுப்புகளுக்கு கதிர்வீச்சு அபாயம் இருப்பதால் அலைபேசி உபயோகிப்பதை விட்டு விட்டோமா?

அதற்க்கு தான் ஹெட் போன் உபயோகித்து பேச வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்... நீங்கள் சொல்வது போல் பார்த்தால் கதிர்வீச்சு பயங்கரமாய் இருக்கும் போலிருக்கே... இதை யாரும் இது வரை சொல்லவில்லை... நீங்கள் தான் முதல் ஆள்...

கேள்வி 3

யுரேனியும் இருப்பு வைக்கப் பட்டுள்ளதால், அதுவே இப்பொழுது ஆபத்து தான் என்று கூறியுள்ளீர்கள்... அதை தாங்க நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்... அதை விட அதிக ஆபத்தா அதனுடைய கழிவுகள் இருக்குமாமே..

இன்னும் எவ்வளவோ கேள்விகள் நீங்க கேட்டிருக்கீங்க, ஆனா அதுக்கு பதிலும் உங்களுக்கே தெரியும் என்பதால், நான் ஒரே ஒரு கேள்வி கேக்கிறேன்...

நம் தமிழகத்தில் மண்டையை பிளக்கும் வெயில் அடிக்கிறது...

பிறகு என் சூரிய ஒளியை வைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை எந்த அரசும் ஈடுபட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்?




1.10.11

அதிகாரத்தின் கோர முகம்

வாச்சாத்தி சம்பவம் தொடர்பாக நீதி கிடைத்தது என்று கூக்குரல் இட்டாலும், தாமதமாக கிடைத்த நீதி அநீதி என்ற கூற்று இங்கு நம் முகத்தில் அறைகிறது...

தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இந்த வழக்கை நீர்த்து போக செய்ய எடுத்த முயற்ச்சிகள் எப்படி தோற்றது என்பது இப்பொழுது வரலாறு...

அரசு இயந்திரம் என்ன செய்யும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வழக்கு...

இனிமேலும் இது போல் நடக்காதவாறு அதிகார பலம் படைத்த அரசு ஊழியர்களுக்கு மனிதாபிமானத்தை வளர்க்க வழி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே...

மனம் தளராமல் போராடிய அனைத்து உள்ளங்களுக்கும், போராட்டம் முடிந்து விட்டது என்று ஓய்ந்து விடாதீர்கள், இனி தான் உங்கள் போராட்டமே ஆரம்பம் ஆக போகிறது... 

மேலும் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பத்திரிகை செய்தி இணைப்பாக கீழே...

http://www.scribd.com/doc/67017158/Press-நியூஸ்

சூறாவளி வலைப்பூவில்

நிறப்பிரிகை வலைப்பூவில்

கோகுல் மனதில் வலைப்பூவில்

http://marudhang.blogspot.com/2011/10/blog-post.html