politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

லெனின்

லெனின் பார்வைகள்

"சுயநலத்தின் விளைவே அரசு...

பொதுவுடைமை சமுதாயத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்த பொழுது அவர்களுக்கு அரசு என்ற ஒரு இயந்திரம் தேவைபடாமலே இருந்தது.. அப்பொழுது முளைத்த சுயநலம் என்ற எண்ணம், அந்த பொதுவுடைமை சமுதாயத்தையே கேள்விக்குறியாக்கி அடிமை சமுதாயம் தலை பட வழி வகுத்தது...
அடிமைகள் விடுதலை தேடி பயணித்த பொழுது அவர்களை அடக்கி ஆள அரசு என்னும் ஒரு இயந்திரம் தேவை பட்டது... பிற்பாடு வணிகர்களின் வளர்ச்சி முதலாளிகள் என்று பரிமாணம் எடுத்த பொழுது அரசு பல வகையாக பிரிந்தது... ஒரு வர்க்கத்திடம் இருந்து இன்னொரு வர்க்கத்தை காப்பாற்ற என்ற பிரமாணத்தின் மூலமே இன்று நாம் காணும் அரசு என்னும் இயந்திரம் செயல் படுகிறது... சுரண்டி கொழுத்த கூட்டத்தையும், சுரண்டப்பட்ட கூட்டத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்போம் என்பது தான் குடியரசு என்று பெயர் பெற்றது... இந்த குடியரசை தாங்கி பிடிக்கும் தூண்களாக காவல் துறை, ராணுவம் மற்றும் நீதித்துறை செயல் படுகிறது...
நமது வரலாற்றை திரும்பி பார்த்தால், சுரண்டி கொழுத்த கூட்டம் என்றும், தண்டனை அனுபவித்ததாக பதிவாகவே இல்லை... மாறாக, பறிகொடுத்த கூட்டம் தான் குரலை உயர்த்துவதில் இருந்து ஒடுக்கப் படுகிறது... என்றாவது புரட்சி வெடிக்கும் பொழுது சுரண்டி கொழுத்த கூட்டம் தன்னை காப்பாற்றிக் கொள்ள, புரட்சியை நீர்த்து போக செய்வதில் பின் வாங்கியதே இல்லை... பணம் படைத்த இந்த சுரண்டி கொழுத்தவர்களின் கைகளில் திரியும் ஊடகங்களும், பல நேரங்களில் உண்மையான செய்திகளை வெளியிடுவதே இல்லை...
என்று ஒருவரை ஒருவர் சுரண்டி வாழாத நிலை வரும் பொழுது தானாகவே அரசு என்னும் இயந்திரம் காணாமல் போய் விடும்..."

"பணக்காரர்களிடம் பணமும், ஏழைகளிடம் வோட்டும் வாங்கி கொண்டு ஒருவரை மற்றவரிடம் இருந்து காப்பாற்றுவேன்  என்று கூறும் கலையே அரசியல்..."