politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

24.5.11

முதல் கோணல்..


வரலாற்றில் தனது பெயரை வெற்றிகரமாக பதித்து விட்ட பொழுதும் ஆசை தீராமல் மாணவர்களின் புத்தகங்களிலும் தனது பெயரை பதிய வைக்க வேண்டும் என்ற பேராசை, தற்பொழுது மாணவர்களின் கல்வியை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது...
உங்கள் சண்டையை தேர்தல் களத்திலும், சட்ட சபையிலும் நிறுத்திக் கொள்ளுங்களேன்... ஏன் இப்படி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டும்...
ஆனா ஊன்னா கண்டனம் தெரிவிக்கும் கட்சியே, மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் பொழுது, என்ன செய்தால் ஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைய வைக்க முடியும் என்று குழப்பம் தான் மிஞ்சுகிறது...
புது புத்தகங்கள் அச்சிட்டு வருவதற்கு நாட்கள் ஆகும் என்பதால், மாணவர்களே உங்களுக்கு முன் படித்து முடித்து கிழித்து விட்ட புத்தகங்களை இரவில் வாங்கி படித்து கொள்ளுங்களேன், என்று அரசு அறிவிப்பு வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை...
200 கோடி ரூபாய், புத்தகம் வீணாகி விட்டது.
200 கோடி ரூபாய்க்கு மறுபடியும் புத்தகம் தயாராக உள்ளது...
சந்தோசம் மகிழ்ச்சி...

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.,+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&artid=422007&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=தமிழ்நாடு

26/05/2011 ஒருவருக்கு அன்றாடம் என்ன நடக்கிறது என்பது இரண்டு நாட்கள் கழித்து தான் தெரிகிறதா இல்லை என்றால் கண்டனம் தெரிவிப்பதற்கு அம்மாவின் அனுமதி கிடைக்க நாளாகிவிட்டதா என்று தெரியவில்லை.. பொங்கியிருக்கிறார் தா.. பா..