politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
Showing posts with label அரசியல் கட்சிகள். Show all posts
Showing posts with label அரசியல் கட்சிகள். Show all posts

27.11.11

மால்குடி சித்தன்

நீ ஏழையாக பிறந்தது உன் குற்றமல்ல...
ஆனால் நீ ஏழையாக இறப்பது உன் குற்றமே...


இப்படி ஒரு புது மொழி உண்டு

மால்குடி சித்தனின் சிந்தனை என்ன என்றால்..

இந்த புது மொழி ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால், அவதிப் படும் சோமாலிய மக்களுக்கும் பொருந்துமா?

சோமாலியா பஞ்சத்தால் வாடும் தேசம் என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு இருந்தாலும்.. இன்றைய சோமாலிய மக்களின் ஏழ்மை நிலைக்கு பஞ்சம் ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமானது இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் ஊழலும், தவறான கொள்கைகளும் தான்.. 

உதவி என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் செய்தவை அனைத்தும் உதவி புரிந்த நாடுகள் வளரவே உதவி  புரிந்தன. ஆக மேலும் மேலும் சுரண்டப் பட்ட மக்கள் இன்று வாழ்வாதாரம் இல்லாமல் நொடிந்து போய் உள்ளனர்...


ஒரு வேளை ஏழையாக இருக்க விருப்பம் இல்லாமல் தாய் நாட்டை விட்டு பிற நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ?


மேலும் படிக்க
http://www.cato.org/pubs/pas/pa-205.html

மேற்கண்ட கட்டுரையை படிக்கும் பொழுது இந்தியா மனதில் வந்து சென்றதை மறுக்கவில்லை...

18.11.11

முதுகில் குத்துவது எப்படி?

PFRDA [Pension Fund Regulatory and Development Authority] மசோதா

பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் பென்ஷன் பணத்தை, பங்கு சந்தையில் முதலீடு செய்ய உருவாக்கப் படும் மசோதா, வரும் குளிர் கால கூட்டத் தொடரில் சட்டமாக இயற்றப் படும் என்றும்...

இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் 26 % முதலீடு செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ள போதிலும், இந்த வரிகள் அந்த சட்டத்தில் இருக்காது என்றும் கூறி உள்ளார்கள். இதற்க்கு முதன்மையான காரணம் பிற்காலத்தில் எந்த வித சட்டமும் இயற்றாமல் அதன் அளவை கூட்டிக் கொள்ளவே என்றும் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன...

மேலும் இதன் மூலம் உத்தரவாதமான தொகை சம்பந்தப் பட்ட தொழிலாளிக்கு கிடைக்காது என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது...
http://articles.economictimes.indiatimes.com/2011-11-16/news/30405824_1_fdi-cap-insurance-sector-pension-sector

இந்த திட்டத்தில் உள்ள தொழிலாளிகள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக இடது சாரிகள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளனர்...

இதில் கொடுமை என்ன என்றால் இந்த திட்டத்தில் பல கிராமத்து மக்களும் இணைந்திருக்கிறார்கள் என்பதே.. வருங்கால கனவுகளுடன் விவசாய வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் மூலம் சேர்ந்துள்ளனர்... அவர்களுக்கு இந்த மாதிரி சட்டம் நிறைவேற்றப் படப் போகிறது என்று தெரிந்திருக்குமா என்ற கேள்வி இன்று என் தூக்கத்தை கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
http://en.wikipedia.org/wiki/New_Pension_Scheme_%28India%29
http://pfrda.org.in/writereaddata/eventimages/Aggregato20List8968663130.pdf

நீர் வீதி

வெனிஸ் நகர நீர் வீதி, பல படங்கள் இங்கு எடுக்கப் பட்டு நம்மை ஆ என்று வாய் பிளக்க வைத்துள்ளது...


என்னங்க பெரிய வெளிநாடு, நம் நாட்டுக்கு ஈடு வருமா?


நம்ம சிங்கார சென்னை தான் இது...

13.11.11

அருகி வரும் இனம் எது?

வழக்கமாய் அமெரிக்காவில் மட்டுமே வெளிப்படையாய், பெரும் பணக்காரர்களுக்கு பல சலுகைகள் அளித்து காப்பாற்றி வந்தனர்.

அதன் எதிரொலி தான் இன்று வால் தெரு முற்றுகை போராட்டம் என்பதை காண முடிகிறது..

இத்தனை ஆண்டுகளாய் இந்தியாவில் திரை மறைவில் நடந்த இந்த கூத்துக்கள், இன்று வெட்ட வெளிச்சமாய் அரங்கேறுமா என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எழுந்துள்ளது.

விஜய் மல்லய்யா என்ற மாபெரும் சக்தி இன்று தவறான பொருளாதார அணுகுமுறையால் பல கோடி ரூபாய்கள் கடனில் தத்தளிப்பதாகவும், அவர் அரசின் தவறான அணுகுமுறையால் தான் நஷ்டம் அடைந்தேன் என்று கூறி அரசின் கையை எதிர்பார்த்தும் காத்திருப்பதாக இந்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் குறிப்பிடுகிறது...

சுரண்டி கொழுத்ததால் வந்த ஆடம்பரம் இன்று மல்லய்யாவை ஆட்டம் காண வைத்தாலும், அரசு என்றும் போல் அவரை காப்பாற்றும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...

அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர், என் ஊழியர்கள் கட்டும் வரியை விட, நான் குறைவாக கட்டுகிறேன் என்று கூறி...

பணக்காரர்கள் என்பவர்கள் அழிந்து வரும் இனமல்ல[Rich are not an endangered species], ஆகையால் அவர்களுக்கு உதவி தேவை இல்லை என்று வெளிப்படையாக கூறியதை நம் ஆட்சியாளர்கள் நினைத்து பார்ப்பார்களா என்பது கேள்விக் குறியே...

http://www.thehindu.com/news/national/article2622215.ece

9.11.11

யாரை பழிவாங்குகிறார்கள்?

மக்கள் விரோத திட்டங்களை கட்டவிழ்த்து விடுவதை தமிழகத்தில் ஆளும் கட்சிகள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பது தெரிந்ததே...

இன்று பதவி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் குறித்து விரிவான கட்டுரை கீழ்காணும் சுட்டியில் வெளியாகி உள்ளது.. உங்கள் பார்வைக்கு...


இதை ஒட்டி முகநூல் பக்கங்களில் பரவும் புகைப்படம் உங்கள் பார்வைக்கு...
பெரிதாக பார்க்க படத்தை சுட்டவும் 

24.10.11

ஜைதாபூருக்கு வெண்ணெய், கூடங்குளத்திற்கு சுண்ணாம்பா?

ஜைதாபூர் அணு மின் நிலையத்திற்கு பொதுமக்களின் எதிர்ப்பு கூடுகிறது..

நாட்டின் முக்கியமான இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவியலாளர்களும், சமூக அக்கறை உள்ளவர்களும் கொண்ட பதினைந்து நபர் குழு அமைக்கப் படுவதாக செய்திகள் இன்று காலை தினசரிகளில் வெளியானது.[the hindu]
அது குறித்து இணையத்தில் சரியான தகவல் இல்லை என்றாலும், முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் இணைந்து ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக போராட போவதாக இணைய செய்திகள் உறுதிபடுத்துகிறது...

பிரான்ஸ் நாட்டு அணு உலை என்றும், ரஷ்ய நாட்டு அணு உலை என்றும் பிரித்து பார்க்காமல், எந்த அணு உலை என்றாலும் அது மக்களுக்கு ஆபத்தானதே என்று உணர்ந்து கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உள்ளங்களுக்கும் இவர்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்...

இல்லையேல் ரெட்டை வேடம் போடுகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பது அங்கு உள்ள மக்களுக்கும் வெட்ட வெளிச்சமாகும்... 

கூடங்குளம் குறித்து ராஜா MVS கூறுவது குறிப்பிடத்தக்கது, மனித கழிவுகளையே நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்னும் பொழுது அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற விவாதம் எதற்கு? என்கிறார்...

இனி விவாதங்கள் வேண்டாம், 
அச்சத்தை போக்கும் செயல்கள் தேவை இல்லை, 
இன்றைய தேவை கூடங்குளம் மூடப் படவேண்டும் என்பதே...

24.9.11

49 ' ஓ ' போடு

உள்ளாட்சி தேர்தல்,
எப்ப அறிவிச்சாங்க, எப்படி அறிவிச்சாங்க என்று திரும்பி பார்ப்பதற்குள் எவ்வளவோ நடந்து விட்டது...

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி என்ற நிலைமைக்கு தள்ளப் பட்டது தான் அருமை.. இதில் மதில் மேல் பூனையாக என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருப்பது இரு இந்திய முதலாளித்துவ கட்சிகள்.. [capitalist party of india ]  

தலைமை சிந்திக்காது என்று தெரிந்து கொண்டு தன்மான சிங்கங்கள் தென் தமிழக பொது உடமை வாதிகள் தனித்து போட்டி என்று ஒரு மாவட்ட செயலாளர் பேட்டி கொடுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார்கள்....

சரி; இந்த விஷயம் தீக்கதிர் பத்திரிக்கையில் வந்திருக்கிறதா என்று பார்த்தால், உள்ளாட்சி தேர்தல் குறித்து தனி ஆவர்த்தனமே நடத்தி இருக்கிறார்கள் செய்திகள் என்ற பிரிவில்... இன்று மாநில குழு கூடி விவாதிக்க போகிறார்களாம்... இது மார்க்சிஸ்ட் தகராறு... 

ஆனால் பாண்டியன் குழுவினர் தான், எப்ப கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு.க வில் இணைந்து விடலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது... அப்படி ஒரு மௌனம் சாதிக்கிறார் தா.பா... அட போங்கப்பா...

இதில் இன்னும் கொடுமை என்ன என்றால் அனைத்து கட்சிகள் மீதும் பொது மக்கள் கடுப்பில் இருப்பது தான்...
அ.தி.மு.க செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்ததால் அந்த அணியில் இருந்த பிற கட்சியினர் மீது கோபமும், தி.மு.க வின் கொள்ளைகள் வெளிச்சத்தில் சந்தி சிரிப்பதால் அந்த அணியில் இருந்த கட்சிகள் மீதும் ஆத்திரமும் கொண்டுள்ளனர் பொதுமக்கள்.. [கவனிக்க பொது மக்கள் ]

அனைத்து கட்சிகளும் தனித்தும் மற்றும் பல சுயேட்சைகள் களம் காணும் உள்ளாட்சி தேர்தலில் அத்தனை சின்னங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு 49  வை சேர்த்து வையுங்கப்பா என்று கூறினால் கடுப்பாக போகிறார்கள் தேர்தல் ஆணையாளர்கள்...

ஓட்டு போடும் நாளில் மறுபடியும் நோட்டு புத்தகமா என்று கடுப்பாக தான் போகிறேன் நான்....

இருந்தாலும் ...
மறக்காமல் அனைவரும் 49 ஓ வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..

18.9.11

சேலமும் கூடன்குளமும்

யார் பேச்சையும் கேட்காத, கேட்க விரும்பாத அரசு என்பதை கூடங்குளம் போராட்டமும், சேலம் போராட்டமும் வரலாற்றில் பதிவு செய்து சென்றுள்ளது...

தன் தோழர்கள் மறியல் செய்ததற்காக காவலர்களிடம் அடி வாங்கி மண்டை உடைந்து காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது ஆட்சியாளர்களை கண்டிக்க விரும்பாத பொதுவுடைமை கட்சிகள், நான்கு சீட்டுக்கு நாக்கை தொங்க போட்டு கொண்டு காத்திருந்தது, மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுத்து சென்றது...

உத்தமர்கள், பொய் சொல்ல மாட்டார்கள், ஊழல் செய்ய விரும்ப மாட்டார்கள் என்று எத்தனை பெயர் வேண்டுமானாலும் வாங்குங்கள், ஆனால் தேர்தல் களத்தில் நம்பியவர்களை கை விடும் கட்சி என்று பெயர் வாங்குவதால் மண்ணை தான் கவ்வுவீர்கள்... 

உங்கள் தொண்டர்களும், கொஞ்சம் மக்களும் நிஜமாகவே உங்கள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அது என்று அரசு ஊழியர்களை கூட்டம் கூட்டமாக வீட்டுக்கு அனுப்பிய ஆத்தாவை ஆதரித்த அன்றே சிதைந்து போனது... 
அடித்த காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதாக தயவு செய்து சொல்லாதீர்கள்... ஆட்சியாளர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் காவலர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்..

அதே போல் தான் நடந்து கொண்டிருக்கிறார் கேப்டன் , கூடங்குளம் போராட்டத்தில் நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் உண்ணாவிரதத்தில் உட்கார வையுங்கள், ஏன் நீங்களே கூட உட்காருங்கள், ஆனால் இதை சட்டமன்றத்தில் பேசுவது என்ற அரசியலை நான் செய்ய மாட்டேன் என்று ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் என்பதை ரசிக்க முடியல கேப்டன்..

8.9.11

மனிதனா? மதம் பிடித்தவனா?

தொடர் நிகழ்வாகியிருக்கிறது குண்டு வெடிப்புகள், வழக்கம் போல திரைப்படத்தில் காட்டுவது போலவே, தாமதமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள் காவல் துறையினர்..
மார்க்கெட்டில் குண்டு வெடித்த பின் ஒரு மாத காலத்திற்கு பலத்த பாதுகாப்பு இருக்கும் பல மார்க்கேட்டுகளுக்கு..
இப்பொழுது நீதிமன்றத்தில் குண்டு வெடித்த பின் அனைத்து நீதி மன்றங்களுக்கும் பாதுகாப்பு போட்டுள்ளனர்..
எனக்கு ரொம்ப நாளாகவே இந்த லாஜிக் புரிய மாட்டேங்குது.. 
இன்று நீதிமன்றத்தில் குண்டு வைப்பவன் திரும்பவும் நீதிமன்றத்திலேவா குண்டு வைக்க போகிறான்...

அதை விட கொடுமை என்ன என்றால், இதற்கு யாரை பொறுப்பாளி ஆக்கலாம் என்று ஊடகங்கள் தேடுவது தான்..
இந்து தீவிரவாதிகள் தான் செய்தார்கள் என்றும்
முஸ்லிம் தீவிர வாதிகள் தான் செய்தார்கள் என்றும்
புறப்பட்டு விட்டார்கள்...
ஏன்யா தீவிரவாதியில கூடவா சாதி மதம் லாம் பார்ப்பீங்க..
மிருகத்தில என்னய்யா மதம் வேண்டி கிடக்குது..

செத்தவங்கள்ள எல்லா மதத்த சார்ந்தவனும் தான் இருக்க போகிறான்..

அப்ப யாரு இதுக்கு காரணம் நு அரசு கேட்குதுன்னா ஏன்னு யோசிங்கப்பு..
படிச்சவனுக்கு வேலை இல்ல,
நிறைய பேர் கிட்ட ஒரு வேளை சொத்துக்கு கூட பணம் இல்ல..
தன் குடும்பத்த காப்பாத்த நாதி இல்ல..
ஏதாவது செஞ்சு குடும்பத்த காப்பாத்துனும்னு திரியரவனை சில சுயநலவாதிகள் இப்படி இழுத்து விட்டுடுரானுங்க..
ஒரு வாட்டி சுலபமா பணம் பாத்தவன் மனசு சும்மா இருக்குமா? 
நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவும் தப்பில்ல நு சொல்லி குடுத்து தப்பை செய்ய வைச்சுடுவானுங்க?

புதிய பொருளாதார கொள்கை, 
சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள்,
பேராசை.. பணம்.. பதவி.. சுரண்டல்கள்..
கண்டும் காணாமல் செல்லும் அரசு...

அதை விட கொடுமை இந்து என்றும் முஸ்லிம் என்றும் பாதிக்கப் பட்ட நாமே ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வது... 
நாம் நம்மை மனிதன் என்று அடையாளப் படுத்திக் கொள்ளும் வரை, புல்லுருவிகள் நம் ரத்தத்தை உறிஞ்சி கொழுத்துக் கொண்டு தான் போவார்கள்..

1.9.11

காமடி டைம் பா..


ஒரு லட்ச ரூபாய் லஞ்ச பணமாக கபில் சிபலுக்கு செக்காகவே அனுப்பி வைத்துள்ளார் பீகார் நபர்..

லஞ்சத்திற்கு செக் வைங்கடான்னு பல பேர் போராடி கொண்டு இருக்கும் நேரத்தில் லஞ்சத்தை செக்காகவே  குடுத்த அஞ்சா நெஞ்சன்...



வ.உ.சி யை தீவிரவாதி என்று சித்தரிக்கப் பட்டுள்ளதாம் பத்தாவது வகுப்பு புத்தகத்தில்; 

இன்று நேற்று நடக்கவில்லை என்பது பொன் ராதா க்ரிஷ்ணனுக்கு தெரியவில்லை..
பகத் சிங்கை கூட தீவிரவாதின்னு தான் போட்டிருந்தார்கள் நான் படிக்கும் காலத்திலேயே .. 1993

இந்தியர்கள் அல்லாத தமிழர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. -சுவாமி 

சரியான ஜோக்கு சாமியோ, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சதால நாளைக்கு பேசிக்கலாம்.. நாளைக்கு... ஹ்ம்ம்ம் 



11 ஆண்டுகளாக தூக்கு தண்டனை நிறைவேற்றப் படாததற்கு தி.மு.க தான் காரணம்... - கலைஞர்..

இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புது?

17.8.11

சரியான பாதையில் ஓடலாமே

 லெனின் தோழரின் அரசு என்னும் புத்தகம் படித்தவர்கள் இந்நேரம் புரிந்து கொண்டதை கூட காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது .. 

ஒரு அரசின் அடித்தளமான நீதித்துறையும் மற்றும் ஊடகங்களும் இந்தியாவை ஆளும் அரசை அக்கக்காக கழட்டி துவைக்க ஆரம்பித்து விட்டனர் என்பது இன்று புதிதாக வெளிச்சத்துக்கு வந்த NTRO ஊழலும், http://www.dnaindia.com/india/report_court-to-probe-into-national-research-organisation-rs800-crore-scam_1576748 அண்ணா வை மட்டும் காட்டி மக்களின் கவனத்தை அரசின் மேல் எரிச்சல் ஊட்டும் செய்திகளும் உறுதிபடுத்துகின்றன... 

வழக்கமாய் மக்களை கட்டிப் போட்டு வைக்கும் சினிமா செய்திகளும், விளையாட்டு செய்திகளும் கூட எந்த மாற்றத்தையும் தராமல் மக்கள், ஜனநாயகம் என்று கூறப்படும் போலி வார்த்தையின் நிஜமான கோர முகத்தை பார்த்தபடி உள்ளனர்.. 

போதாக்குறைக்கு அனைத்து வளரும் நாடுகளிலும் மூக்கை நுழைத்து கலகம் விளைவிக்கும் உலக ரௌடியும் அண்ணா விஷயத்தில் போகிற போக்கில் எதோ ஒன்றை சொல்லி பத்த வச்சிட்டியே பரட்டை என்று சொல்ல வைக்கிறார்...
 

பரட்டை ஏன் இவர் விஷயத்தில் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.. http://www.thehindu.com/news/national/article2366033.ece அமெரிக்க நிறுவனங்கள் பல அண்ணாவின் குழுவில் உள்ள பலரின் அரசு சாரா இயக்கங்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை... அமெரிக்கா தான் பல நாடுகளில் தனக்கு வேண்டிய அரசை நிறுவி குளிர் காய்கிறது என்பதும் பலருக்கும் தெரியும்... இதற்கு ஆதாரமாக எத்தனை ஜான் பெர்க்கின்ஸ் வந்தாலும் ஒரு அரசு அதை ஒத்துக் கொண்டதாக சரித்திரம் இல்லை... கியூபா அரசு எத்தனை முறை கரடியாக கத்திய பொழுதும், இராக்கில் சதாம் உயிருக்கு பயந்து கூப்பாடு போட்ட போதும் இன்னும் பல ஊடகங்கள் அவற்றை கட்டுக் கதை என்று தான் திரித்து சொல்லி வருகின்றனர்...
 

அமெரிக்காவின் ஆசை என்ன என்று ஆராய்ச்சி செய்து அதை எங்களுக்கு சொல்வீர்கள் என்று எல்லாம் நாங்கள் நம்பவில்லை.. மேலும் அவற்றை தேசிய ரகசியம் என்று கூறி முடக்கி தான் வைக்க போகிறீர்கள்... அவர்களுக்கு காவடி தூக்குவதை விட்டு விட்டு இனி மேலாவது உருப்படியாக நல்லவிதமாக ஆட்சி செய்யுங்கள்... புதிய பொருளாதார கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அரசை எதோ தனியார் நிறுவனம் போல் நடத்தாமல் உங்களை நம்பி வோட்டு போட்ட மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாருங்கள்.. ஏழைகளை  பணக்காரனாக்குகிறேன் என்று கூறி மேலும் அவனை ஏழையாக்காமல், மேலும் ஏழையாகாமல் அவனுக்கு தேவை யானதை கொடுத்து நிம்மதியாக வாழ வையுங்கள்...

அது தான் நீங்கள் உண்மையாக இந்தியர்களுக்கு வாங்கி தரப் போகும் சுதந்திரம்.. இப்பொழுது இருக்கும் சுதந்திரம் வெறும் காகித மலர் தான்..

16.8.11

பரமபதம்

இலவசங்கள் என்ற பெயரில் லஞ்சம் வாங்கி ஓட்டு வாங்கினார்களா அல்லது அது கொள்கை முடிவா என்று பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இவற்றை எல்லாம் குடுப்பேன் என்று சொல்லி விட்டு அதை எப்படி எல்லாம் குடுக்காமல் நிறுத்த முடியும் என்று கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தின் ஆளும் கட்சியினர்... 
இலவசங்கள் கொடுப்பது சட்டப்படி தவறு என்று நீதிமன்றம் மூலமாகவே சொல்ல வைத்து சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.. 
முதலில் நம் பார்வைக்கு வருவது மாணவர்களுக்கு கொடுப்பதாக கூறிய மடிக்கணினி, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் [கவனிக்க- அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு] குடுப்பதாக [எண்:18 ] தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருந்தாலும், இது வரை அதை பற்றி மூச்சையும் காணோம் பேச்சையும் காணோம்.. இதை பற்றி எந்த ஊடகமும் விசாரிப்பதாக கூட தெரியவில்லை...

இரண்டாவது, சமீபத்தில் சட்ட மன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அம்மையார், தமிழ் நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்..... http://www.maalaimalar.com/2011/08/08150235/No-list-of-those-under-the-pov.html
ஆனால், எண்:4 , வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு 20 . லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அடிப்படையில் வறுமை கோட்டுக்கு கீழே யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் இந்த திட்டங்களை எப்படி செயல் படுத்தப் போகிறார் என்று தெரியவில்லை... 

மூன்றாவது, ஊக வணிகம் ஒழிக்கப் படும் என்று எண்: 49  இல் குறிப்பிட்டுள்ளார்.. இந்த ஆண்டு இது ஒழிக்கப் படாது என்பது தெளிவாக தெரிகிறது.. 

நான்காவது, எண்: 26 இல் இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மருத்துவ வசதி கல்வி ஆகியவை வழங்கப் படும் என்று கூறியுள்ளது இந்த ஆண்டு நிதி அறிக்கையில் இடம் பெறவில்லை...

கடைசியாக என் கண்ணில் உறுத்துவது, 
எண்: 6 இல் வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு மூன்று சென்ட் இடம் அளிக்கப் படும் என்று கூறியுள்ளார்... ஆனால் வெற்றி பெற்று வந்த பின் அவர் ஆளுநர் உரையில் தெரிவித்த கருத்தில் அனைத்து காலியிடங்களும் ஏற்கனவே பழைய அ.தி.மு.க ஆட்சிகளிலே குடுக்கப் பட்டு காலியாகி விட்டதாகவும் இதற்கு மேல் குடுப்பதற்கு தமிழகத்தில் காலி இடங்களே இல்லை என்றும் முகத்திற்கு நேராய் நின்று ஓட்டு போட்ட மக்களின் முகத்தில் குத்தியுள்ளார்.. http://ibnlive.in.com/news/no-waste-land-left-to-give-poor/157599-60-118.html
இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவராய் இருப்பவர் அமைதியாக இருக்கிறார்.. சென்ற தி.மு.க ஆட்சியிலே இது குறித்து சத்தமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்த பொதுவுடைமை வாதிகள் பியூஸ் போன பல்பாய் திரிகிறார்கள்...
இது பற்றி அலச அ.தி.மு.க வின் அதிகாரப் பூர்வ தேர்தல் அறிக்கையை இத்தனை காலமாய் தேடி இன்று தான் இணையத்தில் கிடைத்தது.. http://www.aiadmkallindia.org/AIADMK%20Election%20Manifesto%20-%20Tamil%20Nadu%20State.pdf

அனைத்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இந்த விஷயத்தில் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு கேள்வி கேட்க்காமல் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை..

14.8.11

வரலாறின் மறுபக்கம்..

காந்தியும் காங்கிரஸ் ஸும் - ஒரு துரோக வரலாறு...
ஏழாவது பதிப்பின் மின் புத்தகம்..
அளவு - 4.5 MB
வடிவம் - pdf

இணையத்தில் படிக்க 
http://www.scribd.com/doc/62254868/GANDHIYUM-CONGRESSUM

பதிவிறக்கி படிக்க
https://rapidshare.com/files/1103364444/GANDHIYUM_CONGRESSUM.pdf

சந்தி சிரிக்கும் இந்திய மானம் என்னும் ராணுவத்தின் அட்டூழியங்களை பட்டியலிடும் ஆனந்த விகடனின் கட்டுரையை படிக்க

http://www.scribd.com/doc/62256141/Santhi-Sirikkum-Indhiya-Maanam

இன்குலாப் ஜிந்தாபாத் 

9.8.11

மார்க்சிஸ்டுகளுக்கு...

இந்த கட்டுரை மார்க்சிஸ்டுகளுக்கு மட்டுமே, மார்க்சிஸ்ட் என்ற பெயரில் மார்க்சை அணு அளவுக்கு கூட தெரியாதவர்களுக்கு அல்ல....

இந்திய அரசாங்கம் தன் சந்தையை பெருக்கிக் கொள்ளவே இலங்கை அரசுடன் நேற்றும் இன்றும் ஒப்பந்தம் போட்டு ஈழ தமிழனின் முதுகில் குத்திக் கொண்டிருக்கிறார்கள்...
அதற்கு விடை தேடாமல் , அந்த பிரச்சினையை வைத்து இந்திய அளவிலும் மாநில அளவிலும் பிணந்தின்னி கூட்டம் போல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் பலர்...

தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று வாய் கிழிய கூவும் அனைவரும் நாடு கடத்தப் பட்ட ஈழ அரசை இந்திய மண்ணில் நிறுவுவதற்கு ஏன் ஒரு சத்தம் கூட போடாமல் அமைதி காக்கின்றனர்..

போராட்டம் என்பது இடத்திற்கு இடம் மாறும் என்பது மார்க்சிய கொள்கை..
நாங்கள் என்ன ஆயுதம் தாங்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான் என்பது மாவோ கொள்கை..
மற்ற அனைத்து நாடுகளின் பிரச்சினைகளிலும் மேற்கூறிய வசனத்தை கூறி அமைதி காக்கும் பொதுவுடைமை கட்சிகள் ஏன் ஈழம் என்று வரும் பொழுது மட்டும் ஆயுதம் தாங்குவது தவறு என்று கூற வேண்டும்...

ஒரு மாநிலத்தை அரசாண்டுக் கொண்டிருக்கும் பொழுதே, காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொழுதே உங்கள் எதிரிகளான மாவோ இஸ்ட்களை சமாளிக்க பொது மக்கள் கையில் ஆயுதம் கொடுப்போம் என்று பேசியது சரி என்றால், தன் உயிரை காத்துக் கொள்ள சக தமிழன் ஆயுதம் தாங்கியது என்பது எந்த விதத்தில் தவறு..

ஈழப் பிரச்சினை நிறம் மாறி ஆண்டுகள் பல ஆகிவிட்டது...
அந்த நிறம் மாறாமல் தடுக்க வேண்டிய கடமை பொதுவுடைமை கட்சிகளுக்கு உள்ளது, அதை விட்டு விட்டு உள்ளூர் அரசியலை கருத்தில் கொண்டு வேஷம் போடும் போலி பொதுவுடைமை வாதிகளால் பொதுவுடைமை கட்சி சிதைந்து வருகிறது...

பொதுவுடைமை கட்சி தேய்ந்து வருவதால் பொதுவுடைமை சிந்தனை உள்ள யாருக்கும் ஆனந்தம் தருவதில்லை, மாறாக ஆத்திரத்தை தான் தருகிறது... அந்த ஆத்திரம் ஏளனமாக வெளிப்படுகிறது...
மற்றவர்களின் விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் முன் கொஞ்சம் யோசியுங்கள், நியாயம் இருந்தால் தட்டி கொடுங்கள் இல்லை என்றால் தட்டிக் கேளுங்கள்... அது தான் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு..

-உங்கள் கட்சி ஏன் நாடுகடத்தப் பட்ட தமிழ் ஈழம் அமைக்க குரல் கொடுக்கவில்லை என்று யோசித்து பாருங்கள்.. 

-சீனாவிற்கு எதிராய் அமைந்துள்ள திபெத் தின் நாடு கடத்தப் பட்ட அரசுக்கு எதிராய் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று யோசித்து பாருங்கள்.. அது சரி என்றால் நாடு கடத்தப் பட்ட ஈழ அரசு சரியானது தானே... 

-தமிழகத்தில் உள்ள அகதிகளின் நிலை குறித்து ச.தமிழ் செல்வன் போன்ற தோழர்கள் கருத்து கூறிய பிறகும் அது ஏன் கருத்துக் களத்தில் இணையவில்லை என்று கேள்வி கேளுங்கள்?

-பொதுவுடைமை ஊடகங்கள், உங்கள் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடுகள் ஏன் இதை ஊதி பெரிதாக்கவில்லை என்று கேளுங்கள்?

- கடைசியாக, ஒவ்வொரு தேர்தலிலும் முதலாளித்துவ கட்சிகளுக்கு காவடி தூக்க வேண்டிய கட்டாயம் ஏன் பொதுவுடைமை கட்சிகளுக்கு வந்தது என்று கேள்வி கேளுங்கள்?

-தேர்தல் என்பது போலியானது என்று கூறும் உங்கள் கட்சி ஏன் ஒரு தேர்தல் தோல்வியை இந்த அளவுக்கு பெரிய தோல்வியாக கருதி கருத்து கேட்க வேண்டும் என்று யோசியுங்கள்?

-சரியான பதில் கிடைத்தால் நீங்களும் உங்கள் கட்சியை கேள்வி கேட்பீர்கள், இல்லை என்றால் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு எங்களை கேள்வி கேட்டுக் கொண்டு இருங்கள்?


8.8.11

அறியாமை போர்வை விலக..

பொதுவுடைமை கட்சியினர் மீது ஜால்ரா அடிக்கும் தன்மையை கேள்வி கேட்டால் ஊடகங்கள் சரியான செய்திகளை வெளியிடுவதில்லை என்று பூசி மெழுகி விடுவார்கள்... இது தொண்டர்களை சமாதானப்படுத்த இவர்கள் தயாராக வைத்திருக்கும் பதில்... 

எது எப்படியோ... 

தோழர்.காரத் கொடுத்த பேட்டி ஒன்றில் நமது மரியாதைக்குறிய(?) பிரதமர் மேல் நேரடியாக குற்றம் சாட்ட முடியாதென்றும், அவர் ஊழல்கள் நடக்கும் பொழுது வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது தான் குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்... கே ஜி எரிவாயு படுக்கை ஊழலும், இஸ்ரோ ஊழலும் பிரதமர் நேரடியாக கலந்திருப்பது அவரது நம்பகத்தன்மையை தெளிவாக உடைத்து எரிகிறது.. அப்படி இருந்தும் அவரது நம்பகத்தன்மையை கேள்வி கேட்க முடியாது என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது ஆகும்...

பொதுவுடைமை சிந்தனை படி ஊழலை ஊக்குவிப்பதே முதலாளித்துவம் தான், முதலாளித்துவ சித்தாந்தம் உள்ள ஒரு அரசு ஊழலின் அடிப்படையில் தான் அமைகிறது என்பது மார்க்சிய தத்துவம்.. அப்படிப்பட்ட சூழலை உடைத்து வெளியிடாமல் மூக்கை தொடுவது, வங்காளத்தில் மீண்டும் அக்கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்டுகிறது... வங்காளம் என்று குறுகிய நோக்கில் தான் இவர்கள் பார்வையும் இருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது... 

குஜராத் என்று குறுகிய நோக்கு பார்வையுடன் முன்னேறிய பா.ஜ.க வினர் தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை இழந்து கொண்டு வருகின்றனர்... ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் மட்டுமே வலுவாக உள்ள பொதுவுடைமை கட்சியினர் இத்தகைய நடவடிக்கையால் அங்கேயே முடங்கி கொள்ள போகிறார்கள் என்பது தெரிகிறது.. 

காரத்தின் பேட்டியில் நான் தேடியது எங்காவது டாடாவையும் அம்பானியையும் இவர் சந்திக்கு இழுத்திருக்கிறாரா என்பது தான்... வங்காள அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் நடுவில் போடப் பட்ட ஒப்பந்தமே வெளிப்படையாக தெரிவிக்காதவர்கள், பெரிய நிறுவனங்களை சந்திக்கு இழுப்பார்கள் என்பது சாத்தியம் அல்ல என்பது தெரிகிறது..

பொதுவுடைமை என்ற போர்வையில் முதலாளித்துவம் உறங்கி கொண்டிருப்பது தெளிவாகிறது... இதை எதிர் கொள்ள அனைவரும் சற்று பொதுவுடைமை கொள்கைகளை பற்றி சிறிதளவேனும் தெரிந்து கொண்டால் நம் மீது படர்ந்திருக்கும் அறியாமை போர்வை விலகி விடும்....

5.8.11

ஒரே குட்டையில்...

கொள்கைகள்; 
முதலாளித்துவம் சார்ந்தது...

மத சார்பற்றது இல்லாதது ...

மக்களை பற்றி கவலைபடாமல் கவலைப்படுவது போல் நடிப்பது...

ஊழலில் திளைப்பது..

அமெரிக்காவுக்கு காவடி தூக்குவது..

இது எந்த கட்சிக்கு பொருந்தும் என்று கேட்டால், கண்ணை மூடி கொண்டு சொல்லலாம்...

காங்கிரஸ் உம், பா.ஜ.க வும்...

அப்படி பட்டவர்கள் மக்களின் முதுகில் குத்துவது கைப்புண் போல் தெரியும் பொழுது எதற்கு கண்ணாடியை தேடி கொண்டிருக்கிறார்கள் மற்ற கட்சிகள்...
பொதுவுடமைவாதிகளை பிரித்தாளும் கட்சிகளில் உள்ள பொதுவுடைமை வாதிகள் தங்கள் கொள்கைகளை சீர்தூக்கி பார்த்து ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு கொள்ளாமல் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது.. முதலாளித்துவம் கை கோர்த்து பலம் கொள்ளும் பொழுது பொதுவுடைமை சிதறி திரிவது அதன் சொற்ப பலமும் கூடி விடுவதற்கு உதவி தான் புரியும் ...

நான் காண்பது கனவா, இல்லை நனவாகுமா என்பது உங்கள் கைகளில் உள்ளது.. அது வரை நம்பிக்கையுடன் தொடரும் என் பயணம்...

30.7.11

தாவல்





தாவுவதில் சிறந்தவர்.

.யார் என்று போட்டி...

  




எப்புடி?





இது எப்புடி?




அட போங்கப்பா...

நீங்க யாருமே கிட்டவே வரமாட்டேங்கறீங்க..



இவங்க தாவுவாங்க பாரு ஒரு தாவல்... 
அடா அடா அடா 














படங்கள் உதவி:
ujiladevi.blogspot.com
tamilmakkalkural.blogspot.com 

 இதுக்கு செய்திகளோட இணைப்பு தேவை இல்லைன்னு நினைக்கிறேன்...

23.7.11

சாயம் போகும் சிகப்பு சிந்தனைகள்..

நில அபகரிப்பு என்பது கடந்த தி.மு.க ஆட்சியில் தான் அதிகம் நடந்தது என்றும், ஆகையால் அதை பற்றி விசாரிப்பது பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என்பது தோழர்(?). ராம கிருஷ்ணனின் அறிக்கை...

தொடரும் நம் கேள்விகள்...

-பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என்றால் ஏன் 2006 - 2011 கால வரையில் உள்ள மோசடிகளை பற்றி மட்டும் விசாரிக்க வேண்டும்...

-ஒரு ஆளும் கட்சி அமைச்சர் மேலேயே சொந்த கட்சியினரே புகார் தெரிவித்து மேலிட சமரசத்திற்கு பின்பு, புகார் திரும்ப பெறப் பட்டது.. அது பொய் புகார் என்றால் புகார் கொடுத்தவரின் மேல் நடவடிக்கை என்ன? அது உண்மை என்றால் அமைச்சர் மீதான நடவடிக்கை என்ன? 

-அதிகார போதை தலைக்கு ஏறியவர்கள் இது போன்ற சமயங்களில் இப்படி தான் சட்டத்தை கையிலே எடுப்பார்கள் என்பது அரசு என்னும் புத்தகத்தை படித்த உங்களுக்கு தெரியாதா?

-அப்படி இருந்தும் பொதுவுடைமை தத்துவங்களை, லாப நோக்கத்திற்காக மட்டும் முதலாளித்துவ கொள்கைகளிடம் அடகு வைப்பது நியாயமா?

நில அபகரிப்பு குறித்து கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும், ஆனால் அது ஒரு தலை பட்சமாக இருக்க கூடாது என்பது தான் எங்கள் கவலை... தகர டப்பாவில் உண்டியல் செய்து காசு வசூலிப்பது நம் இயக்கத்தின் பெருமை, அதை விட்டு அந்த சத்தத்தை ஜால்ரா சத்தமாக மாற்றாமல் இருந்தால் நாங்கள் உற்சாகமாக இருப்போம்...

தூக்கத்தில் கூட பொதுவுடைமை தத்துவங்களை கனவு கண்டு உறங்கும் தொண்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,
கட்சிக்கு செலவு வைக்க கூடாது என்று சுவரொட்டிகளை தூக்கம் கெடுத்து ஒட்டி விட்டு வரும் தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள்...

பேசுவதற்கு முன்பு அவர்களையும் சிறிது நேரம் சிந்தியுங்கள்...


22.7.11

அலட்சியம் - சாமர்த்தியம் - சதி

சிங்கூர்... 

இடது சாரிகளின் அலட்சியம்..
மம்தாவின் சாமர்த்தியம்...
வலது சாரி ஊடகங்களின் சதி...

இடது சாரிகளின் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிங்கூர் எப்படி திரிணமுல் கட்சிக்கு கல்லறை ஆகியிருக்கிறது என்று பல்வேறு ஊடகங்கள் கட்டுரை வரைய தொடங்கி விட்டன..
இரட்டை வேடம் போட எடுத்த நாடகம், வெற்றியில் முடிந்து விட அடுத்து எப்படி வேஷம் கட்டுவது என்பதில் குழப்பம்...
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை... 
இப்படி பட்ட விஷயம் என்றுமே குழப்பம் தான்...

இதில் குழம்ப ஒன்றுமே கிடையாது,
உங்களை நம்பி மக்கள் வாக்களித்து உள்ளனர், 
ஆகையால் அவர்களின் நலன் எதுவோ அதை செய்யுங்கள்...
மக்களின் ஏழ்மையை ஒழித்துக் காட்டுங்கள், பொதுவுடைமை சிந்தனைகளை நீங்கள் கையில் எடுத்து ஆட்சி செய்தாலும் தவறில்லை...
அப்படி மக்கள் நலன் மேல் அக்கறை இல்லாமல், மற்ற அரசுகள் போல் பணம் சம்பாதிக்க இறங்கினால், உங்கள் கனவுகள் கனவுகளாகவே இருக்கும்...


18.7.11

இந்திய முதலாளித்துவ கட்சி...


நமது மத்திய அரசாங்கத்தின் கடன் தொகை, 34 லட்சம் கோடி,

http://www.rediff.com/money/2009/feb/17bud-every-indian-to-have-debt.htm

தமிழக அரசின் கடன் தொகை 1 .5 லட்சம் கோடி...

தமிழக அரசுக்கு கடன் தொகை இருப்பதால், வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறும் தா. பா..
தனக்கே உண்டான பாணியில் மத்திய அரசின் வரி உயர்வை எதிர்த்து போராட்டம் ஆரம்பிக்க போவதாக கர்ஜித்துள்ளார்...

தமிழக அரசின் வரி உயர்வால் விவசாயிகள் பாதிப்படைவார்களா என்று ஆராய்ந்து கூறுவார்களாம், வரி உயர்வு அறிவித்து சில நாட்கள் ஆகியும் இன்னும் ஆராயாமல் அப்படி என்ன முக்கியமான வேலையில் இருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை...

நீங்கள் பிரணாப் முகேர்ஜியிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,
அவர் உங்களை விட அருமையாக சப்பை கட்டு கட்டுவார்...

கட்சியின் பெயரை capitalist party of india(cpi) என்று மாற்றி விடுங்கள்...

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/18/1110718005_1.htm

உண்மையான பொதுவுடைமை தோழர்கள் என் கருத்தை ஆமோதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...