வலது அரசியலின் நோக்கத்தை அசை போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அப்படியே ஒரு எட்டு இடது அரசியலின் நோக்கத்தை பார்த்து விடுவோம்...
இடது அரசியல் என்பது பெரும்பாலான தொழிலாளர்களின் பலத்தில் இயங்குவது...
இவ்வுலகில் அதிகமான அளவில் இருப்பது தொழிலாளர்கள் என்பதாலும், இவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் பிரிந்து பிளவுபட்டு இருப்பதால் இடது அரசியல் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு பரந்த மனப்பான்மை உள்ள தலைவனால் மட்டுமே முடியும்...
ஆனால் பரந்த மனம் உள்ள தலைவர்கள் பல்வேறு காரணங்களால் முடிவெடுக்கும் நிலையில் இல்லாததால் குறுகிய மனப்பான்மை இங்கு ஓங்கி வளர்கிறது...
எவ்வளவுக்கு எவ்வளவு தொழிலாளர்களை சங்கத்தில் சேர்ப்பதின் மூலம் கட்சியின் பலத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற குறுகிய மனம் உலக மக்களின் நன்மைக்கு சாவு மணி அடிக்கவே செய்கிறது...
கொக்கா கோலா நிறுவனம் அமைவதை எதிர்க்கும் அதே கட்சி வேறொரு இடத்தில் நடைபெறும் கொக்கா கோலா நிறுவனத்தில் தங்கள் தொழிற்சங்கத்தை வைத்திருக்கவே செய்கிறார்கள்..
ஒரு வேளை இந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் தொழிலாளர்களை காப்பாற்றுவார்களா அல்லது இழுத்து மூட போராடுவார்களா என்ற கேள்விக்குறி பல நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது... கண்டிப்பாக அவர்களிடம் கேட்டால் இதற்கும் ஒரு பதில் இருக்கும்..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் இழுத்து மூடப் பட்ட பொழுது அதன் தொழிற்சங்கம் அதனை எவ்வாறு எதிர்த்தது என்று அனைவரும் அறிந்ததே...
ஆதலால் தொழிலாலர்களின் ஒருங்கிணைப்புக்காக இவர்களுக்கு தொழிற்சாலைகள் தேவைப் படுகிறது...
அப்படிப்பட்ட தொழிற்சாலையாகவே கூடங்குளம் அணுமின் நிலையங்களையும் இடது அரசியல் பார்க்கிறது...