லாபியிங் என்று எந்த நேரத்தில் நேற்று என் கட்டுரையை முடித்தேனோ.. இன்று காலை செய்தி தாளை பிரித்தால் தலை சுற்றுகிறது...
குளிர்பதன பெட்டியில் நிரப்பப்படும் வாயு குறித்த செய்தி வெளியாகி உள்ளது... சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு சில அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்று இருக்கும் ஒரு வாயுவை குளிர்சாதனபெட்டியில் நிரப்புவத்தின் மூலம் புவி வெப்பமயமாவதை தடுக்க போவதாக அமெரிக்க அரசு கிளம்பி உள்ளது...
இதை நாடாளுமன்றமும் பாராளுமன்றமும் விவாத பொருளாக்கி பல்வேறு அமைச்சர்கள் முதற்கொண்டு எதிர்த்து விவகாரத்தை முடித்து விட்ட நிலையில், யாருடைய ஆதரவும் தேவை இல்லை என்று (அல்லது எப்படி ஆதரவு வாங்குவது என்று தெரிந்து விட்டதோ) தன்னிச்சையாக 2012 இல் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் இந்த திட்டத்தை ஆதரித்து இந்திய பிரதமர் கையெழுத்திட்டிருக்கிறார்.. இதனை தொடர்ந்து அனைத்து குளிர்சாதன பெட்டிகளிலும் இந்த வாயுவை நிரப்பி விற்கும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அமெரிக்கா நம் இந்திய அரசின் குரல்வளையை நெரிக்கிறது...

இரு பெரும் தேசிய கட்சிகளும் இவ்விஷயத்தில் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை... எதிர்கட்சியை இருக்கும் பொழுது எதிர்ப்பதும் ஆளுங்கட்சியை இருக்கும் பொழுது நடைமுறை படுத்துவதும் தான் வரலாறு காட்டும் செய்தி...
கூடங்குளம் மட்டுமே இதில் விதிவிலக்கு...