இது நியூஸ்...
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=412017&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
ஆனால் இந்த செய்தியை பற்றி எதுவும் கூறப் போவதில்லை...
ஆனால் இரண்டு அஞ்சா நெஞ்சர்கள் இந்த செய்திக்கு எழுதியிருக்கும் பின்னூட்டம் சூப்பர்...
Pages
politics, critics of medias, and update of hot news
இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
30.4.11
சத்திய சோதனை...
The Information Act 2008
அமைதியாக இந்திய அரசாங்கம் சத்தமில்லாமல் கொண்டு வந்திருக்கும் சட்டம் இது...
ஊடகங்கள் அனைத்தும் உண்மையான செய்திகளை நமக்கு கொடுப்பதில்லை என்பது நமது அரசாங்கம் புதிதாக கொண்டு வந்திருக்கும் சட்டம் புலனாக்குகிறது...
இவ்விஷயத்தில் பல உண்மையான விஷயங்களை இணைய ஊடகங்கள் வெளி கொண்டு வருகிறது என்பது மேலும் தெளிவாகிறது...
இந்த சட்டத்தின் படி இணையத்தில் யாரும் உண்மைகளை எழுதக் கூடாது என்பது தெள்ள தெளிவாகிறது...
வாழ்க ஜனநாயகம்?????????????????
http://cybercrime.planetindia.net/it-act-2008.htm
Labels:
அரசு
நம்ம பணம் சாமியோ....
1.75 லட்சம் கோடி ஊழலை பார்த்து விட்ட பிறகு 16000 கோடி ரூபாய் ஊழல் எல்லாம் நம் கண்ணுக்கு பெரிசாவே தெரிய மாட்டேங்குது...
இந்த விமான ஓட்டிகள் எல்லோரும் வேலை நிறுத்தம் செய்வதையும், அதனால் அவதிப் படும் பொது மக்களின் கஷ்டங்களையும் கண் முன்னே கொண்டு வரும் ஊடகங்கள் அவர்கள் என் போராட்டம் செய்கிறார்கள் என்பதை கண்ணுக்கு மறைவாக தெரியப் படுத்துகிறார்கள்...
பொதுவாக வேலை நிறுத்தம் என்பதே சம்பள உயர்வுக்காக மட்டும் தான் என்ற பொதுவான கருத்து நிலவி வருவதால், அதை பற்றி யாரும் ஆராய்ச்சியும் செய்வதில்லை...
விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம் என்பது, ஏர் இந்திய நிறுவனத்தின் பொருளாதார முறைகேடுகளை குற்றப் புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும் என்னும் கோரிக்கை அடங்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...
தொழிலாளர்கள் தினம் என்பது தொலைக்காட்சியில் புது படம் பார்ப்பதற்காக என்று இல்லாமல் இந்த விமான ஓட்டிகளின் போராட்டம் வெற்றி பெறுவதற்காக இருக்கட்டும்....
இந்த போராட்டத்திற்கு உடனே முடிவு காணாமல், நமது அரசாங்கம் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதும் தெளிவாகிறது...
ஒரு ரூபாயோ ஒரு கோடி ரூபாயோ அது நம்ம பணங்க..
இன்குலாப் ஜிந்தாபாத்...
http://www.thehindu.com/news/national/article1980580.ece
Labels:
அரசு
29.4.11
உள்ளே வெளியே..
பங்கு வணிகம்னா என்னன்னு யாருக்கு தெரியும்?
எல்லோரும் பொதுவா அது ஒரு வியாபாரம்,
பணம் செய்ய சுலபமான வழி...
என்று ஏதேதோ காரணம் சொல்லலாம்...
ஆனால் எத்தனை பேருக்கு அது சூதாட்டம் என்பது தெரியும்...
கரிக்ட் நைனா நான்கூட மங்காத்தா ஆட சொல்ல இப்படி தான் எத்தி வுட்டுக்கினே இருப்போம்..
அட்சா ப்ரைஸ் இல்லாங்காட்டி
அத்தை விடு அதை ஏன் என் வாயாலே சொல்லிக்கினு...
இப்படி தான் நம்ம பக்கிரி அண்ணன் இந்த பங்கு வணிகம் பத்தி நல்ல படியா என் புத்திக்கு எட்டும்படி எடுத்து உரைத்தார்...
இதில் நகைச்சுவை என்னனா இது சட்டத்தோட அனுமதியோட நடக்கும் ஒரு சூதாட்டம்...
பணம் சம்பாதிக்க சிறந்த வழி
வேற ஒண்ணுமே இல்ல
ஆனா நிம்மதியா இருக்கணும்னா ஒரு வழி இருக்கு
அது தான் உழைப்பு...
மே தின வாழ்த்துக்கள்....
Labels:
ஊழல்
27.4.11
விடை போச்சே...
இது நியூஸ்...
http://www.indianexpress.com/news/cwg-scam-vigilance-officers-pc-tampered-with-data-erased/782107/1
அவங்களுக்கு ப்ரீயா ஒரு யோசனை:
சார், ப்ரீயா ஒரு சாப்ட்வேர் இருக்கு..
undelete plus நு அதை இன்ஸ்டால் பண்ணி
எல்லா அழிக்கப் பட்ட எல்லா ஆவணங்களையும் கணினியில் இருந்து எடுத்தடலாம்..
அதுக்கான லிங்க் கீழே..
http://www.hiren.info/downloads/freeware-tools/8
கேட்டுச்சா....?
Labels:
விளையாட்டு அரசியல்
26.4.11
அப்படி தான் சமாளிக்கணும்..
தமிழ் நாட்டில் வியாபாரிகளிடம், ஒரு கொள்கை உண்டு..
வியாபாரத்தில எதுவும் தப்பில்ல சார்...
பணம் செய்வது என்றால் எந்த வழியில் வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம் என்பது தான் அது...
தப்பு செய்து மாட்டிக் கொண்டால் அவர்கள் கூறும் பதில் இது தான்...
அந்த எண்ணம் இப்பொழுது வியாபாரிகளை மாறியிருக்கும் மருத்துவர்கள், மருந்து கடை காரர்கள் இன்னும் உயிர் காக்கும் தொழிலில் இருக்கும் அனைவருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான் இந்த முதலாளித்துவ சமுதாயம் முடித்து வைத்துள்ள சாதனை...
கேரளத்தில் ஒரே நாளில் அனைவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெத்துக் கொடுத்து விட்டு அனைத்து மருத்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட சென்று விட்டனர்...
இப்படி செல்வதினால் இவர்கள் பண்டிகையை கொண்டாட சென்றது போல் தெரியவில்லை...
மாறாக விடுமுறையை கொண்டாட சென்றதாக தான் இருக்கிறது...
இவர்கள் அனைவரையும் தனி தனியாக விசாரித்தால் ஒன்று மட்டும் கூறுவார்கள்,
வியாபாரத்தில எதுவும் தப்பில்ல சார்...
நான் சொல்வது என்ன என்றால் வியாபாரத்தினால் எதுவும் தப்பவில்லை சார்...
http://www.ndtv.com/article/india/kerala-another-case-of-mass-caesarean-101474
Labels:
மருத்துவம்
23.4.11
ஆடு நனையுதேன்னு..
எப்படி எல்லாம் கவலை படலாம்?
புதிய புத்தகம் ஒன்று எழுதி அண்ணா தி. மு. க. கட்சியினர் அனைவருக்கும் ஒவ்வொரு காப்பி குடுக்கலாம்...
அந்த அளவுக்கு கவலைபட்டிருக்கிறார்கள்...
மே தின கொண்டாட்டம் நடத்த முடியவில்லையாம்,
சட்டம் ஒழுங்கு பிரச்சினையாம்
தேர்தல் ஆணைய ஒழுங்காம்,
அடுத்த கட்சியை திட்டி அறிக்கை விட முடியாதாம்,
என்னடா இழவு இது..
ஒரே கையெழுத்தில், சர்வதேச தொழிலாளர் ஆணையத்தையே மதிக்க முடியாதவர்களுக்கு
திடீர் என்று தொழிலாளர் மீது என்ன அக்கறை என்று புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும்,
புரிந்தும் புரியாமல் நடிப்பவர்களுக்கும் தெரியும்...
முடியல..............
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=408942&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest
Labels:
அரசியல் கட்சிகள்
19.4.11
ஊழல்...
இன்று இந்தியாவின் மூலை முடுக்கு எல்லாம் ஒலிக்கும் ஒரே வார்த்தை ஊழல்... அனைவரும் ஊழலை ஒழிப்போம் என்று கிளம்பி விட்டார்கள்..
இவர்கள் அனைவரும் ஊழல் என்ற ஒன்றால் பாதிக்க பட்டிருக்கிறார்கள், அவ்வளவே...
இத்தனை காலமாய் ஊழல் நம் நாட்டில் மலிந்து உள்ளதே, அதன் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று தேடாமல்,
ஊழலை வேரோடு பிடுங்காமல்,
வெறும் மண்ணுக்கு மேல் தெரியும் மரத்தை மட்டும் கண்டு பயந்து போயிருக்கிறார்கள்...
ஆலமரம் பிரம்மாண்டமானதாக வெளியில் தெரிந்தாலும், அதை விட பிரம்மாண்டமாக அதன் வேர் எங்கெங்கு பரவி இருக்கிறது, என்பது நுனிப்புல் மேய்வதால் தெரியப் போவதில்லை...
ஊழலின் வேர் எங்கே என்று அனைத்து குடிமகனும் ஆராய்ந்தால் ஒழிய இந்த ஆலமரத்தை சாய்க்க முடியாது...
சாய்த்த மறு கணமே, அதன் வெட்டிய பாகத்தில் துளிர் விட ஆரம்பித்திருக்கும்...
ஆக ஊழலின் ஆணிவேர் எங்கு உள்ளது என்று நான் கூறுவதை விட, நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள்...
தோழர் ஆதி கூறியது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது,
சங்கராச்சாரியாரை நடு இரவில் எழுப்பி கடவுள் இல்லை என்று சொன்னால்...
உனக்கு இப்ப தான் தெரியுமா? எனக்கு எப்பவோ தெரியும்.. என்று கூறி விட்டு தூங்கி விடுவாராம்...
ஆக தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை..
நீங்களே முடிவு செய்யுங்கள் என்ன செய்யலாம் என்று...
மே மாதம் ஆறாம் தேதி வந்த செய்தி நான் மேலே குறிப்பிட்டுள்ள ஆணிவேரின் ஒரு நுனியை வெளிக் கொண்டு வந்துள்ளது...
சஹாரா நிறுவனம் 2g விசாரணையில் தலையிடுகிறது...
http://profit.ndtv.com/news/show/sahara-group-tried-to-interfere-with-2g-inquiry-153111?pfrom=home-பிசினஸ்
27/06/2011
அண்ணாவின் அந்தர் பல்டி ஊழலை எதிர்த்து ஒன்று பட்டு போராட கிளம்பிய மக்களை, தங்களுக்குள்ளே மாநில ரீதியாக அடித்துக் கொள்ள வைத்து விட்டது..
பேசறதுக்கு முன்னாடி யோசிங்க, சாமியோ...
Labels:
ஊழல்
18.4.11
சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு..
இன்றைய இளம் தலைமுறை வாரிசு அரசியல்வாதிகள் அனைவரும், அரசியல் இயக்கங்களை MBA பார்வையில் நடைமுறை படுத்திக் கொண்டு செல்கிறார்கள்.. இவர்களுக்கு கொள்கை வெங்காயம் எல்லாம் என்ன என்பதே தெரிவதில்லை...
குத்து மதிப்பாக எதையாவது பேசி வாயை குடுத்து... புண்ணாக்கி கொள்கிறார்கள்..
கூட்டம் கூட்டுவது,
மக்களை இணைப்பது,
இவை அனைத்தையும் திட்டம் போட்டு செயல் படுத்துவது, என்று பெரிய அளவில் முன்னேறுகிறார்கள்...
இவர்கள் அரசியல் அரிச்சுவடி எதையும் படிப்பதும் இல்லை,
வெறும் நுனிப்புல் மேய்வது மட்டும் தான்...
தாத்தா எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டியது தானே என்று கேட்டதற்கு,
பேரன் கூறிய பதில்
ஏற்கனவே படித்து விட்டேன் வேண்டும் என்றால் மீண்டும் படிக்கிறேன்..
ஒன்றை படித்தவுடன் மனதில் பதியாத படிப்பு எதற்கு என்று பேரன் தான் கூற வேண்டும்...
கற்க கசடற கற்றவை..
என்று ஒரு தாத்தா கூறி விட்டு சென்றார் அதை ஏனோ படித்த யாருமே செயல்படுத்துவதில்லை...
http://thatstamil.oneindia.in/news/2011/04/18/i-have-no-interest-in-becoming-a-hero-says-rahul-aid0136.html
Labels:
அரசியல் கட்சிகள்
13.4.11
எப்புடி...
சார்,
உங்களுக்கு இட்லி வேணுமா?
இல்லை உங்களுக்கு இட்லி வேணுமா?
இந்த மாதிரி ஏதாவது ஒரு ஓட்டலில் சர்வர் கேட்டிருந்தால்... லூசாடா நீ என்று கேட்டிருப்போம்,
ஆனால் இன்று தேர்தல் என்ற பெயரில்,
ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள்...
நீங்க திருடனுக்கு வோட்டு போட போறீங்களா..
இல்லை நீங்க திருடனுக்கு வோட்டு போட போறீங்களா?
போடுவோமில்ல
என்று எதோ ஒரு திருடனை தேர்ந்தெடுக்க 75.2 % மக்கள் புறப்பட்டிருக்கிறார்கள்,
லூசாடா நீ என்று கேள்வி கேட்க விரும்பாதவர்கள், வீட்டிலேயே டிவி பார்த்து கொட்டாவி விட்டு தூங்கியிருக்கிரார்கள்...
நான் ஒருவரிடம் சொன்னேன்,
சார்
மறக்காம 49 ஓவுக்கு வோட்டு போடுங்கனேன்,
அதுக்கு அவர் சொன்னார்,
பூத் அஜெண்டுக்கு யார் சார் பதில் சொல்றது அப்படின்னார்...
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
http://ibnlive.in.com/news/tn-polls-752-pc-voters-peacefully-cast-votes/149141-37-64.html
உங்களுக்கு இட்லி வேணுமா?
இல்லை உங்களுக்கு இட்லி வேணுமா?
இந்த மாதிரி ஏதாவது ஒரு ஓட்டலில் சர்வர் கேட்டிருந்தால்... லூசாடா நீ என்று கேட்டிருப்போம்,
ஆனால் இன்று தேர்தல் என்ற பெயரில்,
ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள்...
நீங்க திருடனுக்கு வோட்டு போட போறீங்களா..
இல்லை நீங்க திருடனுக்கு வோட்டு போட போறீங்களா?
போடுவோமில்ல
என்று எதோ ஒரு திருடனை தேர்ந்தெடுக்க 75.2 % மக்கள் புறப்பட்டிருக்கிறார்கள்,
லூசாடா நீ என்று கேள்வி கேட்க விரும்பாதவர்கள், வீட்டிலேயே டிவி பார்த்து கொட்டாவி விட்டு தூங்கியிருக்கிரார்கள்...
நான் ஒருவரிடம் சொன்னேன்,
சார்
மறக்காம 49 ஓவுக்கு வோட்டு போடுங்கனேன்,
அதுக்கு அவர் சொன்னார்,
பூத் அஜெண்டுக்கு யார் சார் பதில் சொல்றது அப்படின்னார்...
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
http://ibnlive.in.com/news/tn-polls-752-pc-voters-peacefully-cast-votes/149141-37-64.html
Labels:
ஊழல்
8.4.11
முட்டாள்கள் தினம்...
முட்டாள்கள் தினம் ஏப்ரல் ஒன்றாம் தேதி என்று யார் கூறியது, ஏப்ரல் இரண்டாம் தேதி என்று காங்கிரஸ் சொல்கிறது...
இந்திய நாட்டு மக்களின் கவனம் முழுவதும் உலக கோப்பையின் மேல் இருக்க, மிகவும் அமைதியாக ஒரு ஊழல் நடந்தேறியிருப்பது ஊடகங்களின் கண்களுக்கு நான்கு நாட்கள் கழித்து ஆறாம் தேதி தான் திரிந்திருக்கிறது...
கோவா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர், கணக்கு வழக்கு இல்லாமல் 25 இலட்சம் ரூபாய்க்கு மேல் வெளிநாட்டுக்கு எடுத்து சென்றுள்ளதும், அவரை தடுத்து நிறுத்திய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்ததும் எந்த கேள்வியும் இல்லாமல் வழி அனுப்பி வைக்க பட்டதும்.. தெரிய வந்துள்ளது...
என்னடா உலக கோப்பையின் வெற்றிக்கு பின்னால் எந்த ஆப்பும் மறைத்து வைக்க படவில்லையே என்ற என் சந்தேகம் ஆணித்தரம் ஆகிறது...
எத்தனை அண்ணா ஹசாரே உண்ணா விரதம் இருந்தாலும் நம் நாட்டை ஆளும் வர்கத்தினர் திருந்த போவதில்லை...
வாழ்க ஜனநாயகம்..
http://www.thehindu.com/news/national/article1609641.ece
Labels:
அரசியல் கட்சிகள்
7.4.11
பிள்ளையார் பிடிக்க குரங்காய்....
நமது நாட்டு மக்களுக்கு பொதுவாகவே மருத்துவத்தை பற்றி அபார ஞானம் உண்டு..
அவர்களை எந்த மருத்துவர்களாலும் ஏமாற்ற முடியாது...
அவற்றில் சில...
சளிக்கு மாத்திரை சாப்பிட்டால் குணமாகி விடும்...
எந்த காய்ச்சல் அடித்தாலும் ஊசி போட்டு கொண்டால் குணமாகி விடும்...
மல்டி வைட்டமின் மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் கூடிவிடும்...
எல்லா நோய்க்கும் மருந்து உண்டு...
எல்லா வகை நீரிழிவு நோய்க்கும், இன்சுலின் போட்டு கொண்டால் குணமாகி விடும்...
இப்படி நீங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்...
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, மருத்துவர்களும் இதற்கு ஒத்து ஊதுவது, இவர்களின் நம்பிக்கயை ஊர்ஜிதப் படுத்திவிடுகிறது...
இதை எதிர்த்து யாராவது பேசினால், அவர்களை லூசு என்று முத்திரை குத்துவதும் நமது நாட்டில் சாதாரணமான விஷயம்...
இப்பொழுதோ இவர்கள் கொடுத்த தவறான சிகிச்சை முறையால், பேக்டீரியாக்கள் தங்களை முழுவதும் உருமாற்றிக் கொண்டு, எந்த மருந்தினாலும் செயலிழக்காத வாறு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது...
அதற்க்கு தோதாக, மருந்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு பார்வையை, பேக்டீரியாக்க லை கொள்ளும் மருந்துகளின் மேல் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு ஆண்டு தோறும் வருமானம் தரும் நீரிழிவு நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோய்க்கு மருந்துகளை கண்டுபிடிக்க சென்று விட்டது...
வைரஸ்களை கொல்கிறோம் என்று புறப்பட்டு, அதை விட பலமான ஒரு விரோதியை நாம் உண்டாக்கி விட்டோம் என்பது மட்டும் தெரிகிறது...
அவைகள் எப்படி தன்னை தானே மாற்றிக் கொண்டதோ அதே போல, மருத்துவர்களும் விழித்து எழுந்து தங்களை தாங்களே மாற்றிக் கொண்டால் ஒழிய, மருத்துவர்களை தெய்வமாக மதிக்கும் நம் நாட்டு மக்கள் பிழைக்க போவதில்லை...
http://www.medicalnewstoday.com/articles/221691.php
Labels:
மருத்துவம்
3.4.11
செத்த பாம்பை அடித்து விட்டு...
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு இலங்கை வென்றால் யாருக்கு லாபம் என்பதையும், இந்தியா வென்றால் யாருக்கு லாபம் என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டும் ஒரு அலசல்...
http://www.medindia.net/news/indiaspecial/World-Cup-Cricket-Finals-Psychology-of-Betting-83102-1.htm
அதற்க்கு ஒரு படி மேல் போய் இலங்கை அதிபர் நகைச்சுவையாக பேசியிருக்கும் வார்த்தைகள் ஏன்டா இன்னும் பைத்தியமா இருக்கீங்க என்று நம்மை நக்கலடிப்பது போல் உள்ளது...
http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A&artid=401564&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest
செத்த பாம்பை அடித்து விட்டு மார் தட்டிக் கொள்ளும் bcci அணியும், அந்த நகைச்சுவைக்கு அஸ்திவாரம் இடும் சர்வதேச மட்டை பந்து வாரியமும், அடித்திருக்கும் அடுத்த நகைச்சுவை இந்த கோப்பை உண்மையானதா அல்லது போலியானதா...
போலியை கொடுத்து மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்று குமுறிய ஊடகங்களுக்கு பதில் கொடுத்திருக்கும் திரு லோர்காட் அவர்கள், நாங்கள் ஏமாற்றியது இந்திய மக்களை அல்ல, சுங்கத் துறையை தான் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார்... ஆக கோப்பை வாங்கியதும் இதன் பின்னணியில் நடந்த அனைத்து விஷயங்களும் அற்புதமாக இருந்தது...
வரும் எட்டாம் தேதி சென்னையில் ஆரம்பிக்கும் ipl போட்டிகளுக்கு, இவர்கள் குடுத்திருக்கும் விளம்பரம், நாட்டை மறந்து, பிரச்சினைகளை மறந்து, cricket இல் மூழ்கி போய்விடுங்கள்...
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே?
Labels:
விளையாட்டு அரசியல்
1.4.11
வரி வரியாய்! பக்கம் பக்கமாய்!
வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு பத்து ரூபாய் சம்பாதித்தாலும், நீ இந்தியனாக இருந்தாலும் வரி கண்டிப்பாய் கட்ட வேண்டும்...
ஆனால் வியர்வை சிந்தாமல் நோகாமல் நோம்பு கும்பிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தால் நீ வெளிநாட்டு பிரஜையாக இருந்தாலும், உனக்கு வரி விலக்கு உண்டு...
நீ வீடு ஒன்று கட்டி குடியிருப்பவர்களின் ரத்தத்தை உறிஞ்சி பணம் சம்பாதித்தால் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை...
அதே போல நீ ICC என்ற பெயரில் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நீ வரி கட்ட வேண்டியதில்லை...
ஏனென்றால் நீ சம்பாதிக்கும் பணத்தில் குளிர்சாதனத்திர்க்கு பணம் தர வேண்டும், உயர்தர உணவிற்கு பணம் தர வேண்டும், roaming இல் உள்ள அலைபேசிக்கு பணம் கட்ட வேண்டும், குடிக்கும் தண்ணீர்க்கு பணம் தர வேண்டும்... என்று எத்தனையோ கையை கடிக்கும் செலவுகள்... ஆகையால் அத்தனை செலவுகளும் வருமானத்தையும் மீறி கரை கடப்பதால் எங்களுக்கு வரி விலக்கு வேண்டும்... இன்னும் எத்தனை ஊழல்கள் வெளி வந்தாலும், எத்தனை தடவை குற்றங்கள் நடந்தாலும், திரு மன்மோகன் ஒரே பதிலை தான் திரும்ப திரும்ப சொல்ல போகிறார்...
சத்தியமா, எனக்கு தெரியாம நடந்திடுச்சிங்கோ!
[ஏப்ரல் பூல் செய்தியாக இருக்காது என்ற நம்பிக்கையுடன்]
http://www.indianexpress.com/news/With-Pawar-batting--Cabinet-clears-tax-breaks-for-ICC/770097/
Labels:
விளையாட்டு அரசியல்
Subscribe to:
Posts (Atom)