ஏன்டா இதை பத்தி படிச்சோம்னு ஆயிடுச்சுங்க...
விளையாட்டா நேத்து பின்னூட்டம் இட்டு விட்டேன்... நாளைக்கு சூரிய சக்தி மின்சாரம் குறித்து எழுத போறேன்னு...
அதை பத்தி நோண்ட நோண்ட ஆச்சரியமும்...
அணு மின்சாரம் பற்றி நோண்ட நோண்ட எரிச்சலும் தான் மிச்சம்...
முதலில் சூரிய ஒளி சக்தி..
ஒரு நாளில் 8000 kwh மின்சாரம் தயாரிக்க நிறுவப்படும் பொருட்களின் விலை சுமார் 25 கோடி... [ ஒரு நாளைக்கு 1 மணி நேர எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்]
இதன் ஆயுள் முப்பது ஆண்டுகள்...
ஆக
8000 kwh x 10950 நாட்கள் = 87600000 kwh
ஆக ஒரு யூனிட் மின்சாரம் விலை தோராயமாக 2 .85 ரூபாய் என்று வருகிறது... பராமரிப்பு செலவையும் சேர்த்தால் 3.00 ரூபாய் வருகிறது...
http://business.rediff.com/special/2009/dec/09/indias-first-entrepreneur-to-sell-solar-power.htm
[முன்பு கொடுத்திருந்த சுட்டியில் இருந்த தகவல்கள் நீக்கப் பட்டிருக்கிறது என்று தோழர். தியாகு கூறியுள்ளார்.. ஆகையால் அதே தகவல்களை சார்ந்திருக்கும் புது சுட்டியை மேலே கொடுத்து உள்ளேன் http://www.ebay.in/itm/1-MW-SOLAR-POWER-PLANT-/160420076368 ]
இது தனியார் சந்தையில் விற்கும் பொருட்களின் விலையை வைத்தே கணிக்கப் பட்டுள்ளது... அரசே இதை தயாரித்தால் எவ்வளவோ விலை குறைய வாய்ப்பு இருக்கிறது...
தற்பொழுது வெளி சந்தையில் தனியார் மின்சாரம் நான்கு ரூபாய்க்கு விற்கப் படுகிறது... தமிழக அரசு என்ன விலைக்கு வாங்க போகிறார்கள் என்ற தகவல் இல்லை..
குறைகள் என்று இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறுவது:
1. இரவு நேரங்களில் சூரியன் வருவதில்லை, ஆகையால் இரவு நேரத்தில் மின்சாரம் கிடைக்காதாம்...
2. மழை காலங்களில் உற்பத்தி பாதிக்கப் படும்
3. ஆலங்கட்டி மழை வந்தால் பொருட்கள் சேதமடையும்...
4. இதன் கழிவை என்ன செய்வதாய் உத்தேசம் என்றும் கேள்வி எழுகிறது...
இந்த குறைகளை சரி செய்ய டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்டது என்பதும் உண்மை
இந்த குறைகளை சரி செய்ய டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்டது என்பதும் உண்மை
இப்பொழுது அணு மின்சாரம் குறித்து பார்ப்போம்..
ஒரு kwh மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு 1.00 ரூபாய்...
அதனுடன் இந்த அணு உலை கட்ட எடுத்துக் கொண்ட செலவு சேர்த்துக் கொள்ளுங்கள்...
அதை விட கொடுமை, என்ன என்றால் இந்த அணுக் கழிவுகளை என்ன செய்வது என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்...
இன்னும் என் ஆராய்ச்சி முடியவில்லை...
உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் தீர்த்து வைக்க முடியுமா என்று பார்க்கிறேன்...
உங்களுக்கு தெரிந்த தகவலையும் பின்னூட்டமாய் இட்டால் இன்னும் கருத்துக்கு வலு சேர்க்கும்