
இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக இருக்கலாம்.. ஆனால் இந்த கேள்விக்கு விடை தேடுவது என்பது கடினமான ஒன்றாகவே உள்ளது...
நமது புராணங்களும் ஆன்மீகமும் உயிர் என்பது நம் உடலில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருப்பது போலவும் அந்த உயிரானது இறந்த உடன் அடுத்த உடலில் புகுந்து கொண்டு அடுத்த ஜென்மம் எடுப்பது போலவும், ஒரு கற்பனை கதையா புகுத்தி உள்ளனர்.
ஒரு விவாதத்தின் போது என்னிடம் ஒருவர் உங்கள் உடலில் உயிர் எங்கு உள்ளது என்று கேட்டார்... என் முழு உடலிலும் பல உயிர்கள் உள்ளது என்றேன், நீங்கள் எந்த உயிரை கேட்கிறீர்கள் என்று கேட்டேன்? அதற்கு அவர் எதனால் இத்தனை உயிர்களும் இயங்குகிறது என்று திருப்பி கேட்டார்...
என் உடல் இயங்குவதற்கு அனைத்து உறுப்புகளும் அனைத்து அணுக்களின் உயிரும் அவசியமே.. தனி ஒரு அணு இதை சாதிப்பதில்லை என்று கூறினேன்...
வாதம் பன்றவரிடம் பேசலாம் விதண்டாவாதம் செய்பவரிடம் பேச முடியாது என்று கூறி நழுவினார்... நானும் அதையே சொல்கிறேன் என்று அந்த விவாதத்திற்கு தொடரும் குறி போட்டு வைத்தேன்...
நான் கேட்பது என்ன என்றால்
ஒரு காரோ பஸ்சோ இல்லை எந்த வாகனம் ஓடுவதற்கும் எது அவசியம்?
என்ஜினா
டயரா
ட்யுபா
இல்லை அதற்கு உள்ளிருக்கும் காற்றா
பெட்ரோலா
டிரைவரா
ச்டீரிங்கா
ஆக
ஒரு வாகனம் இயங்குவதற்கு எப்படி அதில் பூட்டபட்டிருக்கும் அனைத்து பொருள்களும் அவசியமோ அது போலவே நம் உடல் இயங்குவதற்கு அனைத்து உயிர்களும் அவசியம்
இதயமா
மூளையா
நுரையீரலா
ஈரலா
கனயமா என்று கேள்வி கேட்காமல் உண்மையை ஒத்துக் கொள்வோமே..
ஏங்க, நம் உடம்பு இயங்குரதுக்கு ஒரு உயிர் தான் அவசியம்னா, இந்த செடி கொடிக்கு எல்லாம் உயிர் எங்கங்க இருக்குது? கொஞ்சம் சொல்லுங்களேன் வாதிகளே.. விதண்டாவாதி கேக்கிறேன்?