Pages
politics, critics of medias, and update of hot news
இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
1.4.10
திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும்...
அரசாங்கமும் படத் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டி போட்டுக் கொண்டு திருட்டு விசிடியை ஒழித்து கட்ட போராடினாலும் பொது மக்கள் திருட்டு விசிடியை வாங்குவதை நிறுத்தா விட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது...
அதே போல போலி மருத்துவர்களால் எண்ணற்ற பிரச்சினைகள் வந்தாலும் பொது மக்களாய் அவர்களிடம் போகாமல் இருக்கும் வரை அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை...
இந்த இரண்டு விஷயங்களையும் மேலோட்டமாய் பார்த்தல் வேறு வேறு விஷயமாய் தெரிந்தாலும் இரண்டுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன என்றால் அது பொது மக்களின் ஆசிர்வாதம் மட்டுமே..
ஆகா, பொது மக்கள் இப்படி இருப்பதற்கு என்ன உண்மையான விஷயம்... அது வேறு ஒன்றுமில்லை, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து கொண்டே வருவதும் சிலவற்றை அவர்களால் செலவு செய்யாமல் இருக்க முடியவில்லை
என்பதே... ஒரு சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நபருக்கு முப்பது முதல் நாற்பது ருபாய் வரை செலவு ஆகிறது, ஒரு குடும்பமே செல்லும் போது அது குறைந்தது நான்கு மடங்கு ஆகிறது, ஆனால் ஒரு திருட்டி சிடியை வாங்கி பார்த்தால் அது முப்பது ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது.... தியேட்டருக்கு போனாலே பாப் கார்ன் வாங்கி தர வேண்டும் என்னும் செலவும் குறைகிறது,
அதே போல ஒரு மருத்துவரிடம் போனால், குறைந்தது நூறு ரூபாய் வரை செலவு ஆகிறது, போதாதற்கு மருந்து மாத்திரைகள் வேறு...
அரசு மருத்துவமனை என்றால் சிபிஎம் பேரா மற்றும் செப்ட்றான் தவிர வேறு மாத்திரைகள் தருவதில்லை, இதை களைந்து எடுக்க வேண்டிய அரசாங்கம் இலவச காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் ஏற்கனவே சரியாக செயல்படாமல் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா எடுக்கின்றது... இந்த காப்பீட்டு திட்டத்திற்கு செலவு செய்யும் தொகைகளுக்கு பதிலாக, அரசு நம் மருத்துவமனைகளை மேம்படுத்தினாலே போதுமானது,
ஆனால் இதை எல்லாம் செய்யாமல் தவறான கொள்கை முடிவுகளால் திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும் பெரிய தலைவளிகளாய் இருக்கிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு தலைவலிக்கு தைலம் மட்டும் தேய்த்து கொண்டிருக்காமல் ஊழல் என்னும் புற்று நோயை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலே போதுமானது.... செய்வார்களா... செய்ய வைப்போமா?
Labels:
விலை வாசி