politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
Showing posts with label media. Show all posts
Showing posts with label media. Show all posts

20.11.11

இந்த வாரம்

இந்த வாரம் நடந்த அரசியல் விவாதங்களில் சில, சுவையாக இருந்தது...
ஆனால் பெரும்பாலானோர் தவறான பார்வையில் இருப்பதாக எனக்கு படுகிறது...

ஒன்று:

மல்லய்யா, அரசின் தவறான கொள்கைகளால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும்.. அதனால் அரசு அவருக்கு உதவி புரிவது தப்பில்லை என்றும்... மிகவும் விலை குறைவாக விமான சேவை நடத்துவது நடுத்தர மக்களுக்கு உதவி புரியவே என்றும்.. ஆகையால் அவருக்கு அரசு கை தூக்கி விட வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்... இங்கு பலர் அவரின் ஆடம்பரமான வாழ்வை பார்க்காமல் பெட்ரோல் விலை வாசி மட்டுமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டு பிடித்துள்ளனர்...

ஆணிவேர் பார்வை:

உங்கள் வீட்டருகே இருக்கும் ஆட்டோ காரர்கள் மக்கள் நலன் கருதி மிகவும் சிறிய தொகையை கட்டணமாக வாங்கி நொடித்து போய், அரசு தான் காரணம் என்றால் என்ன சொல்வீர்கள்?
ஆட்டோ காரர்கள் என்றால் சண்டைக்கு செல்லும் இவர்கள் விமான நிறுவனம் என்றால் இரக்கப் படுவது எதனால்?

இரண்டு:

பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், ஆனால் தவிர்த்திருக்கலாம் என்றும், தனியார் மயமாக்கி இருந்தால் சேவை தரமாக இருந்திருக்கும் என்றும் பலர் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் எதோ ஒரு மாற்றத்தை தேடி அம்மையாருக்கு ஓட்டு போட்டவர்கள் என்பது இவர்களின் ஆதங்கமும், கோபமும், உணர்ச்சி வயப் பட்ட நிலையும் காட்டி கொடுக்கிறது..

ஆணிவேர் பார்வை:

பேருந்து கட்டண உயர்வு கண்டிப்பாக வேண்டும் என்று பல்வேறு தனியார் பேருந்து முதலாளிகள் பல ஆண்டுகளாய் கேட்டுக் கொண்டு இருந்ததை பல்வேறு தரப்பினரும் மறந்து விட்டார்கள். மேலும் தனியார் பால் நிறுவனங்களும்  பால் விலையை ஏற்றினால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்திருக்கிறார்கள் என்பது தனியார் பால்களின் விலையை விட ஆவின் விலை ஏற்றியதை வைத்து கணக்கு போட்டுக் கொள்ளலாம்..

தனியார் முதலாளிகளின் சுயநலமே இந்த தேவை இல்லாத விலை ஏற்றம்.

மூன்று:

அணு உலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதால் , பதிலுக்கு அணு உலை அமைத்தால் தான் மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல சிறு முதலாளிகள் அணு உலை அமைய வேண்டும் என்று போராட்டம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்..
அணு உலை அமைய வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் வைத்திருக்கும் banner  ஐ பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது...

ஆணிவேர் பார்வை:

கண் தெரியாதவன் யானை பார்ப்பது போல் உருவகப் படுத்தி வரையப் பட்ட கார்டூனை துணைக்கு அழைத்து அணு உலை எதிர்ப்பாளர்களை கிண்டல் செய்யும் அவர்கள். அதில் பொதிந்திருக்கும் மர்மத்தை கண்டு பிடிக்காமல் விட்டது வேதனையை தருகிறது...


கூடங்குளம் அணு உலை என்பது ஒரு யானை போல் என்றும் மதம் பிடிக்கும் வரை எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றும், மதம் பிடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தால் கட்டுக் கடங்காத சேதம் இருக்கும் என்றும் புனையப் பட்ட கார்டூன்..

18.11.11

முக்கிய செய்திகள்

இன்றைய மிக மிக முக்கிய செய்திகள்:

சுகப் பிரசவம் ஆக ஒருவர் உடல் உழைப்பு உள்ளவராகவோ, அல்லது இளைமையானவராகவோ  இருக்க வேண்டிய அவசியம் இல்லை..

-ஐஸ்வர்யா ராய் பச்சன் 

அவள் எனக்குத் தான்: காதலால் ஏற்பட்ட மோதல்: சக மாணவனை குத்திக் கொன்ற +2 மாணவன் கைது
 http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=65366  

மேற்கு இந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா வென்றது..
http://www.thinaboomi.com/2011/11/17/8120.html 

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்... -அண்ணா ஹஜாரே கோரிக்கை
http://www.dailythanthi.com/article.asp?NewsID=688591&disdate=11/18/2011

தாஜ் மகாலை பாதுகாப்பது எங்கள் கடமை - சுப்ரீம் கோர்ட்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=350302

அவ்வளவு முக்கியம் இல்லாத செய்திகள்:

கூடங்குளம் மக்கள் போராட்டம்..

பால் விலை வாசி உயர்வு..

பெட்ரோல் விலை வாசி உயர்வு..

பேருந்து கட்டண உயர்வு..

தமிழக மீனவர்கள் பிரச்சினை..

குஜராத் மீனவர்கள் பிரச்சினை..

பாகிஸ்தான் மீனவர்கள் பிரச்சினை...

மக்கள் நலப் பணியாளர் போராட்டம்..

மின்சார கட்டண  உயர்வுக்கு அச்சாணி...

முக்கிய செய்திகளை விட முக்கியமில்லா செய்திகள் அதிகமா இருக்கும் போலிருக்கே..


11.11.11

நண்பரின் கடிதம்

மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான என் தோழர் அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு.. 

-------------------------------

சாதரண மக்களின் உயிர்களையும் உண(ர்)வுகளையும் ஒடுக்க / அழிக்கத் துடிக்கின்ற பிரதிபலனுக்காய் இயங்குகின்ற பிரதிநிதித்துவ சனநாயகம், பார் உயிர்கள் அனைத்தும் என்றென்றும் வளமாய் வாழ வழித்தேடி போராட்டக் களத்தில் இருக்கும் மக்கள் சனநாயகத்தின் முன் மண்டியிடும் நாள் வெகுதொலைவில் இல்லை!

மத்திய அரசே! மாற்றான் கைகூலியே!

அணுவிற்கு எதிரான எங்கள் போராட்டம்
அணுகுண்டு போட்டு ஒடுக்க நேர்ந்தாலும்
அனுதினமும் களமாடி உங்கள் கடைசிசிசி....
அணுகுண்டை உண்டாவது எம்மவர்க்கும்

அடுத்த தலைமுறைக்கும் ஆவன செய்யாது அயரமாட்டோம்!
அணு உலையை மாய்க்கும்வரை ஓயமாட்டோம்! 

அஞ்சினால் வரலாறு படைக்க முடியாதாம்... ஆம்
அகிலத்திற்கே ஆபத்தை விளைவிக்கும்

அணு உலைகளை அழித்தொழிக்க 
அதிகார மையங்களுக்கு பயந்து ஒதுங்கினால்

அருந்தமிழர்க்கு மட்டுமல்ல அகில உயிர்களுக்கும் 
அச்சமில்லா வாழ்வை உறுதிசெய்யும் வரலாறு நிகழ்ந்திடுமா?

அணு உலையை மூடாமல் 
கூடங்குளத்திலிருந்து கூட்டத்தை 
களையமாட்டோம் என அறைகூவலிடும்
அஞ்சா நெஞ்சர்களுக்கு 
உயிர்க்கருணை உள்ளங்களுக்கு 
தலைவணங்குகிறோம்!

சகப்போராளியாக

கன். மோகன்
91500 40096

தற்காலிகமாக தேச இறையாண்மை என்ற பெயரில் அவர்களை அடக்கி ஒடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. அது கனன்று கொண்டு இருக்கும் தீப்பொறியை பரவ செய்யும் என்பதை தவிர வேறு எதுவும் செய்யப் போவதில்லை என்பது என் எண்ணம்...

6.11.11

நூலகம் தரும் செய்தி

நூலகத்தை மாற்றப் போகிறார் முதல்வர் என்றதும் அனைவரும் கொதித்து போய் விட்டனர்... இதில் அதிகம் கொதித்தது பல எழுத்தாளர்கள்... 

ஒன்று மட்டும் தெரிந்தது, எழுத்தாளர்களுக்கு மக்களை விட புத்தகம் பெரியதாக தெரிகிறது என்று...

சாதாரண மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால், அது அவன் தவறில்லை... போராட்டம் குறித்த பார்வையும், வர்க்கப் பிரிவினைகளையும் அவன் தெரிந்து கொள்ளாததும் ஒரு காரணம்.. அதையும் மீறி இன்று எத்தனையோ போராட்டங்களை, நையாண்டி செய்த பொதுமக்கள் போராட்ட களத்தில், ஏதேதோ காரணங்களுக்காக வீதியில் கை கோர்ப்பதை காண முடியும் நேரத்தில்.. அன்னியப் பட்டு நிற்கிறார்கள் எழுத்தாளர்கள்... குறைந்த பட்சம் இந்த போராட்டங்கள் குறித்து எழுத்துக்கள் கூட அவர்களிடம் இருந்து வருவதில்லை...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் ச.தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்ட காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக கண்டிப்பாக ஒவ்வொரு எழுத்தாளர்களும் போராட வேண்டும் ஒரு விதி உருவாக்கப் பட்டது... அப்பொழுது இதை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டார்கள் எழுத்தாளர்கள்...

அந்த ஆண்டு நடந்த பல எழுத்தாளர் போராட்டங்களில், முறை சாரா தொழிலாளர்களே எழுத்தாளர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டு எண்ணிக்கையை அதிகப் படுத்தி காட்டினார்கள்... [நான் அப்பொழுது காஞ்சிபுரம் மாவட்ட கமிட்டி உறுப்பினர்]

நீங்கள் நூலகத்துக்காக போராடும் களத்தில்,  எழுத்துக்களை நேசிப்பதால் இந்த போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம்.. ஆனால் சாதாரண மனிதனின் பிரச்சினைகளுக்கு நீங்கள் குரல் கொடுக்கப் போவது எப்பொழுது? போராட போவது எப்பொழுது?

சேலம் மருத்துவமனை திறக்க சொல்லி போராடிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் மண்டையில் ரத்தம் சொட்ட அடி வாங்கி நின்ற பொழுது சக மனிதனாக எனக்கு வலித்தது.... 

நீங்கள் அவர்களின் போராட்டத்திர்க்காக என்ன செய்தீர்கள்? என்று யோசித்துப் பாருங்கள்...

சமூக அவலங்களை துவைத்து வெளுப்பாக்கும் தொழிலை நீங்கள் தாங்கி இருக்கிறீர்கள்... உங்கள் மீது அழுக்குப் படும் என்று ஒதுங்கி இருந்தால்...

24.8.11

வரும் ஆனா வராது..

அன்றாடம் எதோ ஒரு ஊடகத்திலோ நாள்காட்டியிலோ தவறாமல் ஒலிபரப்பப் படுவதில் ஒன்றாக ஜோதிடமும் உள்ளது... நம் வாழ்க்கை என்பது ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டது என்று பரப்பப் பட்டு வருகிறது... இவர்கள் சொல்வது போல் அனைத்தும் ஏற்கனவே விதிக்கப் பட்டதா, விதி என்று ஒன்று உள்ளதா? இது தான் இன்றைய தலைப்பு...

ஊழ் என்ற தலைப்பில் திருவள்ளுவரே எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார் என்று திருவள்ளுவரையும் சித்தர்களில் ஒருவராக்கி தங்கள் ஜோதிடத்துக்கு மரியாதை தேடுகின்றனர் சிலர்.. திருக்குறளின் உண்மையான அர்த்தம் என்ன என்பது திருவள்ளுவரே வந்து சொன்னால் தான் உண்டு... மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டு படித்தால் மஞ்சளாகவே தெரியும் திருக்குறள்.. அதே போல் தான் பச்சை கண்ணாடி போட்டு படித்தாலும்.. கடவுள் உண்டு என்று திருக்குறள் சொல்வதாக பரிமேலழகர் கூறினால், இல்லை என்று எழுத கலைஞரால் முடியும் என்னும் பொழுது எது உண்மை என்பது ஊழ் தலைப்பிலும் பார்க்கலாம்.. அவர் விதி என்று கூறியது அந்த கால கட்டங்களில் இருந்த அரசாட்சியின் சட்ட விதிகள் குறித்தா என்பது தெளிவாக தெரிய நமக்கு அந்த கால கட்டங்கள் குறித்த வரலாறு பார்வை போதுமானதாக இல்லை... 

தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு தனக்கு தேவையற்ற பாகத்தை மறைத்து விடுவதால் நியாயமாக தோன்றும் சந்தேகங்கள் தனக்கு உண்டான பதில் கிடைக்காமல் அனாதையாக திரிகின்றன... 

அனைத்து ஜோசியர்களும் வாழ்க்கை குறித்த அனைத்தும் ஏற்கனவே எழுதப் பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு அதை மாற்ற பரிகாரம் செய்யலாம் என்று கூறுவது அவர்களின் முதலுக்கே ஆப்பு அடிக்கிறது...

எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்று எதிர்காலத்தை நோக்கி கூறுவது, செய்யும் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கு... 

எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்றால் அதை கேள்வி கேட்க முடியாது... அதை மாற்ற முடியாது.. அப்படி மாற்றினால் அதுவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்... கடவுளால் மாற்ற முடியும் என்றால் அதுவும் ஏற்கனவே திட்டமிடப் பட்டிருக்க வேண்டும்.. ஏற்கனவே எழுதிய விதியை மாற்ற முடியாது என்றால் கடவுள் காணாமல் போய் விடுகிறார்... ஆனால் மிகவும் சாமர்த்தியமாக கடவுள் விதியை மாற்ற முடியும் என்று கூறுவதன் மூலம் ஏற்கனவே அனைத்தும் திட்டமிடப் பட்டவை தான் என்பது வாதத்துக்குள் வர மறுக்கிறது... இதை புரிந்து கொள்ள யாரும் விளக்கி சொல்ல முடியாது ஒவ்வொருவரும் யோசித்தால் ஒழிய இந்த வாதம் விதண்டாவாதமாக வளர்ந்து கொண்டு தான் இருக்க போகிறது...

சரி, அப்படி எல்லாமே திட்டமிடப் பட்டவை இல்லை என்றால் நம் உலகில் நடக்கும் காரண காரியங்களின் காரணம் என்ன? என்று கேள்வி எழுவது இயல்பே...

நம் வாழ்வில் மூன்றாவது மனிதனின் செயலின் பாதிப்பை நாம் உணர்வது தான் விதி என்று வரை அறுக்கப் படுகிறது... எவனோ ஒருவனின் கவனக் குறைவே நம் வண்டியின் சக்கரத்தை பஞ்சராக்குகிறது...  நம் வண்டி பஞ்சராகுவதின் காரணம் செவ்வாய் அல்லது வியாழன் என்றால் எப்படி சிரிப்பு வரும் என்பதை சற்று யோசித்துப் பார்த்தால் கீழே சொல்லப் போகும் விளக்கம் நன்றாக புரியும்...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் விலை வாசி உயரும் என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம்... ஆனால் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எந்த கிரகங்கள் மேல் நாம் குற்றம் சாட்டுகிறோம்.. 

ஊழல் தலை விரித்தாடுவது கிரக சாரங்களின் நிலை என்றால் ஏன் நாம் காங்கிரஸ் அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்.. ஒரு வேளை அப்படி விமர்சிப்பது நம் விதியோ? இப்படி கேட்டுக் கொண்டே போகலாம்.. மனிதன் கண்டுபிடித்த மிக சிறந்த கண்டுபிடிப்பு விதியாக தான் இருக்கும்.. 

கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக 

என்ற குறளை அனைவரும் புரிந்து கொண்டாலே நம் வாழ்வில் இருள் போல் போர்த்தியிருக்கும் துன்பங்கள் அகன்று போய் விடும்...

[வானிலை ஆய்வு அறிக்கை எப்படி தவறாக வந்தாலும் அதை அறிவியல் என்று ஏற்றுக் கொள்கிற நீங்கள் என் ஜோசியத்தை அதே போல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்பவர்களா நீங்கள், பூகோள பாடத்தை எத்தனை பேர் உங்கள் பிள்ளைகள் படிக்க நீங்கள் ஊக்கப்படுத்தி இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள்... விடை உங்களுக்கே கிடைக்கும்...]

6.8.11

இருளில் மூழ்கிய ஊடகம்...

அன்னை, இந்தியாவை விட்டு பறந்து சென்று அயல் நாட்டில் சிகிச்சை எடுக்க சென்றது, உடனடியாக யார் கவனத்துக்கும் வரவில்லை... காங்கிரஸ் கட்சியினரே முன்வந்து அவர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றும், அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்து விட்டது என்றும், இன்னும் முடியவில்லை நாளை அல்லது அடுத்த நாள் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என்றும் குழப்பி குழப்பி சிதறடித்த பிறகும் இன்னும் தெளியவில்லை ஊடகம்...

நேற்று அம்மா வானத்தில் பறந்து குப்பை தொட்டிகளை பார்வையிட்டதும், உடனடியாக கவனத்துக்கு வராமல் முதல்வர் அலுவலகமே தகவல் கொடுத்து தெரிந்து கொண்டாலும் இன்னும் அடங்காத கேள்விகள் எவ்வளவோ...

முதல் முறையாக இந்திய வரலாற்றிலேயே நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியை அப்படியே எழுதியதற்காக PTI மீது அமைச்சர் வழக்கு தொடர்ந்ததும் நடந்து உள்ளது...

தமிழகத்தில் மண்ணெண்ணெய் விலை உயர்ந்திருப்பதை சுட்டி காட்டவும் தவறி விட்டது ஊடகம்.. ஒரு வேலை எந்த ஊடகத்தை சேர்ந்தவர்களும் மண்ணெண்ணெய் வாங்குவதில்லையோ?

முன்பெல்லாம் துப்பறியும் ஊடகம் என்ற பெயரில் கலக்கி கொண்டிருந்த ஊடகம், இப்பொழுதெல்லாம் அந்த வேலையை லோக் ஆயுக்தாவிடமும், CAG குழுவினரிடமும் அந்த வேலையே விட்டு விட்டார்கள் போல... ஹிந்து நாளிதழ் சில நாட்கள் மும்முரமாய் வெளியிட்ட விகிலீக்ஸ் பக்கங்களும் பேச்சு மூச்சின்றி கிடக்கின்றது... 

பல செய்தி தாள்களை படித்து, பல ஊடகங்களை பார்த்து தன் வேலை பளுவுக்கும் நடுவில் பலர் அரசியல் செய்திகளை வலைப்பூவில் பதிவு செய்து கொண்டு தான் வருகின்றனர்.. அதையும் நீர்த்து போக செய்ய புது சட்டம் தயார் நிலையில் உள்ளது... மேலும் தவறான செய்திகளும் இதனுடன் இணைந்து தவறான செய்திகளும் இணைந்தே வருகின்றது... அதுவும் வலைபூக்களின் நம்பகத்தன்மையை சோதித்து பார்க்கின்றது...

வெளிச்சத்தில் வருமா ஊடகங்கள், பொறுத்திருந்து பார்ப்போம்...