politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

22.11.11

கழுகு பார்த்த பார்வை

ஆபத்தான உணவா இந்த பரோட்டா????? ஒரு திடுக் பகிர்வு என்ற தலைப்பில் ஒரு பதிவை கழுகு வலை தளத்தில் பார்த்ததும்... நானும் வழக்கமான ஒரு விழிப்புணர்வு பதிவு என்று தான் நினைத்தேன்...


சிந்தனைகளில் சுழல சுழல, என் புத்திக்கு மிகவும் மெதுவாக உரைத்தது ஒரு விஷயம்.. பரோட்டா மட்டுமா மைதாவில் செய்கிறார்கள்...

குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும்..
பிஸ்கட்
கேக்
நூடுல்ஸ்
மற்றும் அனைத்து பேகரி தின்பண்டங்களும் மைதாவில் தான் செய்கிறார்கள்.

சரி, என்னடா விஷயம் என்று என் நண்பனை அழைத்தேன்...
ராமு என்னும் என் நண்பன் முனைவர் ஆக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்..
அவனை அணுகினேன்...

இருவருக்கும் இது புது விஷயமாக இருக்கிறது என்று ஆராய்ந்தோம்.. விளைவு யூக அடிப்படையில், லாஜிக் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.. இதற்க்கு மேல் என்ன செய்வது, எப்படி செய்வது, என்பதை விவாதத்துக்கு விடுவோம் என்ற அடிப்படையில் இங்கு நாங்கள் அறிந்ததை ஒப்படைக்கிறோம்...

கழுகு வலைதளத்தில் கூறியது போலவே வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மைதாவை வெண்மையாக்க benzyl  peroxide அல்லது அதற்க்கு ஈடான எதோ ஒரு ரசாயனத்தை வைத்து  வென்மையாக்குகிறார்கள்.
http://www.healthy-eating-politics.com/white-flour.html

இதனால் அந்த மைதாவில் உருவாகும் உப பொருள் தான் alloxan . என்ற  வேதியியல் பொருள். இது எலி மற்றும் பிற மிருகங்களின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீடா அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது...

ஆனால் இது மனிதன் மீது எந்த வித குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்பது சரியான முறையில் கணிக்கப் படவில்லை என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். ஆனால் ஒரு முடிவு குறிப்பிடுவது சுவாரசியமான பதிலை தருகிறது. அதாவது மனிதனுக்கு alloxan  கொடுக்கப் படும் அந்த தருணத்தில் மட்டும் இன்சுலின் சுரப்பது இல்லை என்றும் மீண்டும் சில நேரங்களில் சுரப்பது தொடர்கிறது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7716136

பீடா அணுக்களின் ஆயுள் காலம் மூன்று முதல் ஆறு நாட்கள், சிறு குழந்தைகளுக்கு ஆறு முதல் பன்னிரண்டு நாட்களாக இருக்கும். எவ்வளவு அணுக்கள் இறக்கிறதோ அவ்வளவு அணுக்கள் மீண்டும் உற்பத்தி ஆகி விடும்.. ஆனால் உற்பத்தி திறன் குறைய ஆரம்பிக்கும். இன்சுலின் சரியாக உடலில் எடுத்துக் கொள்ளப் படவில்லை என்றாலும் இந்த புது பீடா அணுக்கள் பிறக்கும்..

நாளடைவில் இந்த இளம் வயதில் உற்பத்தி அதிகரிப்பு, பிற்கால நாட்களின் உற்பத்திக்கு உலை வைக்கும்.. அதாவது சாதாரணமாக 60  வயதில் எதிர்பார்க்கப் படும் நீரிழிவு நோய்.. 30 வயதில் உருவாகும் என்பது தான் எங்கள் முடிவு.. மேலும் இப்பொழுது இந்த வயதிலேயே நீரிழிவு நோய் வருகிறது என்றும் பல முன்னணி மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..

1919  ஆம் வருடம் வெளி வந்த இந்த விஷயம் இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த வித ஆராய்ச்சிக்கும் என் உட்படுத்தப் படவில்லை என்று தான் யோசனையாய் இருக்கிறது...

வேர்கடலை எண்ணெய் மூலம் புற்று நோய் வரும் காரணிகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் என் மற்றொரு நண்பர் ஆனந்த் ராஜ் அவர்களிடமும் இந்த செய்தியை கூறி ஆராய சொல்லி இருக்கிறேன்...

குழந்தைகள் விரும்பி உண்ணும் அனைத்து பொருட்களும் மைதாவில் செய்யப் படுகிறதே என்று தான் உறுத்துகிறது...

உங்கள் சிந்தனைகளையும்,  உங்கள் கருத்துக்களையும், என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்களேன்...

5.9.11

மருந்து மட்டுமா கசக்குது?

மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்து பல்வேறு வகையான விவாதங்கள் நம் நாட்டில் ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை எழுந்து பின்பு அடங்கும்... இதை பற்றி பெரிய அளவில் எந்த ஊடகமும் கண்டு கொள்வதில்லை...

சமீபத்தில் கூட பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தாமாகவே தடுப்பூசிகளின் விலைகளை குறைத்தது குறித்து புகழ்ந்து தள்ளிய ஊடகங்கள் அப்படி பட்ட நடவடிக்கையின் பின்னால் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை இருந்தது என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்கள்..

புதிய பொருளாதார கொள்கை படி நூறு % வெளிநாட்டு மூலதனம் மருந்து துறையில் அனுமதிக்கப் பட்டதால் பல்வேறு வகையான இந்திய மருந்து நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களால் வாங்கப் படுவதை கவலையுடன் கவனிக்கிறது இந்திய சுகாதார துறை...

நிறுவனங்கள் தாமாகவே நேர்மையுடன் விலை கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கவலைபட்டாலும், எந்த வித சிரமமும் இல்லாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நம் நாட்டு பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு நிதர்சன உண்மை விளங்க போவதில்லை...

ciprofloxacin எனப்படும் மருந்தை 500 mg ஒரு மாத்திரை, ஆறு ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்று விலை கட்டுபாட்டு திட்டம் செயல் பாட்டில் இருந்த பொழுதே பத்து ரூபாய்க்கு குறையாமல் விற்று லாபம் சம்பாதித்து, சட்டத்திற்கு அடி பணியாமல் நடந்து கொண்டன சிப்லா மற்றும் ரான்பாக்சி நிறுவனங்கள்.. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் உபரியாக சம்பாதித்த லாபத்தை திருப்பி செலுத்துமாறு கூறிய பின்பும் தடை உத்தரவு வாங்கி நம் நாட்டு சட்டங்களின் சந்து பொந்துகளில் நுழைந்து ஓடி கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த நேர்மையான நிறுவனங்கள்..

generic வகை மருந்துகளும் 200 சதவிகித அளவுக்கு மேல் லாபத்தை மருந்து கடைகளுக்கு குடுப்பதை தடுத்து நிறுத்த கிளம்பிய முன்னாள் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் திட்டம் தேர்தலில் தோல்வி அடைந்ததால் காணாமல் போனது... அதை பற்றி கவலைப்பட கூட அடுத்த வந்த அமைச்சர் தயாரில்லை என்பது தெளிவாகிறது...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது எல்லாம் உண்மை தான்.. ஆனால் பகல் கொள்ளை, கண்ணெதிரே நடக்கும் திருட்டை ஒழிக்க அரசு முயற்சி எடுத்தால் மட்டுமே முடியும் என்பதும் உண்மை..

[இதில் எங்கு ராம் விலாஸ் பஸ்வான் வந்தார் என்று குழம்புபவர்களுக்கு, நம் நாட்டு மருந்து துறை நீங்கள் நினைப்பது போல் சுகாதார துறையின் கீழ் வருவது இல்லை, அது நம் நாட்டு உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது இன்னும் ஒரு கசப்பான உண்மை..]

http://thatstamil.oneindia.in/news/2011/09/05/the-cost-medicines-must-come-down-president-aid0180.html

http://www.thehindu.com/news/national/article2421520.ece

31.7.11

சீரியசான சமாச்சாரம்

இந்திய காப்புரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்க முன்வரவில்லை...

சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் போலி மருத்துவர்களை ஒழிக்க ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை...

போலி மருந்துகளின் புழக்கத்தை கட்டுபடுத்த எந்த முயற்சியும் செய்ததில்லை...

இப்படி எவ்வளவோ அடுக்கி கொண்டே போகலாம்,

ஆனால் மிகவும் கவனமாக பரிந்துரைக்கப் பட வேண்டிய நுண்ணுயிர் கொல்லி [அண்டிபயோடிக்] மருந்துகளை கை ஆளுவதில் விதி முறைகள் வகுக்கப் படும் பொழுது எதற்கு இந்த மருந்து கடைக்கார்கள் பொங்க வேண்டும் என்று தான் தெரியவில்லை...

பேக்டேரியக்களால் [Bacteria ] உருவாகும் நோய்களை ஒடுக்க கொடுக்கப் படும் மருந்துகள் இவ்வளவு நாட்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற வரைமுறையை யாரும் கடை பிடிப்பதில்லை... இதனால் இந்த கிருமிகள் எந்த மருந்துகளுக்கும் தாக்கு பிடிக்கும் தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன...

இதை தடுக்க புறப்பட்ட இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து நாளை கடைகள் அடைத்து போராட போகிறார்களாம் டெல்லியில்.. 

அண்ணா ஹஜாறேவுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, இது போன்ற போராட்டத்திற்கு எல்லாம் அனுமதி கொடுப்பதை மறுப்பதில்லை...

இது போன்ற சட்டங்கள் நாட்டுக்கு தேவை, அதே சமயத்தில் இதை கண்காணிக்கும் அதிகாரிகளும் தேவை... 

மேலும் முறையாக படித்த மருத்துவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து சீட்டின் நகலையும் இணைத்து கொடுத்தால் மருந்து கடைக்காரர்கள் நகலெடுக்க ஓட வேண்டியதாக  இருக்காது.. 

வேலை வாய்ப்பை உருவாக்கும் இது போன்ற சட்ட முன்வடிவுகள் முடிந்த  வரை பலரின் ஒத்துழைப்பையும் நல்கி அமுல்படுத்தினால் அனைவருக்கும் ஆனந்தமே...

மருந்து ஆய்வாளர்களின் பஞ்சம் இந்த சட்டம் அமுலுக்கு வந்தாலும் நீர்த்து போக செய்து விடும்.. என்றாவது ஒரு நாள், கிளம்பி சென்று கைப்பற்றி விட்டோம் என்று கூக்குரல் இடுவதை விட்டு விட்டு காலியாக உள்ள இந்த துறையின் வேலைகளுக்கு ஆட்களை உடனே நிறுவ வேண்டும்...

அதற்கு முதலில் மருந்து துறையை, ரசாயனம் மற்றும் உரத்தொழிற்சாலை அமைச்சகத்தில் இருந்து மாற்றி அதை சுகாதார துறையில் இணைக்க வேண்டும்...

அரசிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்...
சீரியசா அணுக வேண்டிய சமாச்சாரம் சார், வழக்கம் போல சின்ன புள்ள தனமா அணுகிடாதீங்க...



15.6.11

மனசாட்சியை அடகு வைப்போம்..


இன்று இந்திய சமுதாயத்தில் பணம் ஆட்சி செய்வதால், அவரவர்களும் மனசாட்சியை கழற்றி போட்டு விட்டு பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்...

என்றோ ஒரு முறை, என் நண்பன் என்றோ ஒரு நாள் அனுப்பிய குறுஞ்செய்தியை... கீழே குறிப்பிட்டுள்ளேன்

( ~_~ )

( ~_~)

( ~_~ )

( ~_~ )

ஏரியா புல்லா அவன தான் தேடிகிட்டு இருக்கேன்...B.Pharm படி தம்பி செம ஸ்கோப் நு சொன்னான்..

மருந்து ஆய்வாளர் பதவிக்கு, 2008 ஆம் ஆண்டு தேர்வு செய்தனர். தமிழகத்திற்கு மட்டும் 24 பதவிகளுக்கு மட்டும் ஆள் எடுத்தனர், அதற்கு மட்டும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதியிருப்பார்கள்... இது ஒரு சாம்பிள் மட்டுமே... நாடு முழுவதும் இது போல் பல்லாயிரக் கணக்கான காலி இடங்கள் உள்ளன, ஆனால் ஆள் மட்டும் எடுப்பதில்லை... மருந்துகளை சோதனை செய்ய முறையான ஆட்களும், சாதனங்களும் குறைவு என்பதால் போலி மருந்து வியாபாரம் பிரமாதமாக இயங்கி கொண்டிருக்கிறது...

மருந்து துறையில் பிரம்மாண்டமான மாற்றம் உருவாகும் வரை இந்த துறையில் குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்... அது வரை, எந்த மருந்து கடையில் வாங்கினால் நல்ல மருந்து கிடைக்கும் குழம்பி திரிவது தான் மக்களின் வாழ்கையாய் இருக்கும்...

http://timesofindia.indiatimes.com/city/delhi/Spurious-medicines-worth-Rs-42L-seized/articleshow/8856228.cms




26.4.11

அப்படி தான் சமாளிக்கணும்..


தமிழ் நாட்டில் வியாபாரிகளிடம், ஒரு கொள்கை உண்டு..
வியாபாரத்தில எதுவும் தப்பில்ல சார்...
பணம் செய்வது என்றால் எந்த வழியில் வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம் என்பது தான் அது...
தப்பு செய்து மாட்டிக் கொண்டால் அவர்கள் கூறும் பதில் இது தான்...
அந்த எண்ணம் இப்பொழுது வியாபாரிகளை மாறியிருக்கும் மருத்துவர்கள், மருந்து கடை காரர்கள் இன்னும் உயிர் காக்கும் தொழிலில் இருக்கும் அனைவருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான் இந்த முதலாளித்துவ சமுதாயம் முடித்து வைத்துள்ள சாதனை...
கேரளத்தில் ஒரே நாளில் அனைவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெத்துக் கொடுத்து விட்டு அனைத்து மருத்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட சென்று விட்டனர்...
இப்படி செல்வதினால் இவர்கள் பண்டிகையை கொண்டாட சென்றது போல் தெரியவில்லை...
மாறாக விடுமுறையை கொண்டாட சென்றதாக தான் இருக்கிறது...
இவர்கள் அனைவரையும் தனி தனியாக விசாரித்தால் ஒன்று மட்டும் கூறுவார்கள்,
வியாபாரத்தில எதுவும் தப்பில்ல சார்...
நான் சொல்வது என்ன என்றால் வியாபாரத்தினால் எதுவும் தப்பவில்லை சார்...

http://www.ndtv.com/article/india/kerala-another-case-of-mass-caesarean-101474

7.4.11

பிள்ளையார் பிடிக்க குரங்காய்....


நமது நாட்டு மக்களுக்கு பொதுவாகவே மருத்துவத்தை பற்றி அபார ஞானம் உண்டு..
அவர்களை எந்த மருத்துவர்களாலும் ஏமாற்ற முடியாது...
அவற்றில் சில...
சளிக்கு மாத்திரை சாப்பிட்டால் குணமாகி விடும்...
எந்த காய்ச்சல் அடித்தாலும் ஊசி போட்டு கொண்டால் குணமாகி விடும்...
மல்டி வைட்டமின் மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் கூடிவிடும்...
எல்லா நோய்க்கும் மருந்து உண்டு...
எல்லா வகை நீரிழிவு நோய்க்கும், இன்சுலின் போட்டு கொண்டால் குணமாகி விடும்...
இப்படி நீங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்...
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, மருத்துவர்களும் இதற்கு ஒத்து ஊதுவது, இவர்களின் நம்பிக்கயை ஊர்ஜிதப் படுத்திவிடுகிறது...
இதை எதிர்த்து யாராவது பேசினால், அவர்களை லூசு என்று முத்திரை குத்துவதும் நமது நாட்டில் சாதாரணமான விஷயம்...
இப்பொழுதோ இவர்கள் கொடுத்த தவறான சிகிச்சை முறையால், பேக்டீரியாக்கள் தங்களை முழுவதும் உருமாற்றிக் கொண்டு, எந்த மருந்தினாலும் செயலிழக்காத வாறு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது...
அதற்க்கு தோதாக, மருந்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு பார்வையை, பேக்டீரியாக்க லை கொள்ளும் மருந்துகளின் மேல் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு ஆண்டு தோறும் வருமானம் தரும் நீரிழிவு நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோய்க்கு மருந்துகளை கண்டுபிடிக்க சென்று விட்டது...
வைரஸ்களை கொல்கிறோம் என்று புறப்பட்டு, அதை விட பலமான ஒரு விரோதியை நாம் உண்டாக்கி விட்டோம் என்பது மட்டும் தெரிகிறது...
அவைகள் எப்படி தன்னை தானே மாற்றிக் கொண்டதோ அதே போல, மருத்துவர்களும் விழித்து எழுந்து தங்களை தாங்களே மாற்றிக் கொண்டால் ஒழிய, மருத்துவர்களை தெய்வமாக மதிக்கும் நம் நாட்டு மக்கள் பிழைக்க போவதில்லை...
http://www.medicalnewstoday.com/articles/221691.php

30.3.11

சீனியா? விஷமா?


NOVA NORDISK
மேலே குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனமானது நம் நாட்டு மக்களின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மிக எளிதில் பணம் சம்பாதிக்க முடிவு கட்டியுள்ளது தெள்ள தெளிவாகிறது...
இவர்கள் கொட்டி கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு பல மருத்துவர்கள் நீரிழிவு இரண்டாம் வகை நோய் உள்ளவர்களை நிரிழிவு ஒன்றாம் வகை நோய் உள்ளவர்களாய் மாற்றி கொண்டிருக்கிறார்கள்..
இன்சுலின் எனப்படும் மருந்தை மட்டுமே விர்ப்பதால் இவர்கள் இந்த வகை வியாபார தந்திரத்திற்கு தள்ள பட்டுள்ளனர்...
நீரிழிவு ஒன்றாம் வகை குறைபாடு உள்ளவர்களால், அவர்கள் உடலிலேயே இன்சுலின் சுரக்கும் சக்தியை இழந்தவர்கள் ஆவார்கள்...
நீரில்ழிவு இரண்டாம் வகை குறைபாடு உள்ளவர்கள், உடலில் இன்சுலின் சுரந்தாலும் அதை ஏற்று கொள்ளும் நிலை அவர்கள் உடல் இருப்பதில்லை,
ஆனால்
மேலே குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனமானது இரண்டாம் வகை குறைபாடு உள்ளவர்களுக்கு வெளியில் இருந்து இன்சுலின் மருந்தை செலுத்தி இயற்கையிலேயே அவர்கள் உடலில் சுரக்கும் இன்சுலின் இயக்கத்தை கட்டுபடுத்தி விடுகிறார்கள்..
அதனால் இரண்டாம் வகை குறைபாடு உள்ளவர்கள், பிற்காலத்தில் ஒன்றாம் வகை குறைபாடு உள்ளவர்களை மாறி விடுகிறார்கள்..
இந்த வகையான விற்பனைக்கு தெரிந்தோ தெரியாமலோ உடன் படும் மருத்துவர்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான் பணத்தை இந்த நிறுவனம் செலவு செய்கிறது..
இதை உணர்ந்து கொண்ட மருத்துவர்களை இந்த நிறுவனம் உதாசீனப் படுத்துகிறது...
நமது மருந்து துறையின் கொள்கைகள் மாறும் வரை மாற்றம் வரப் போவதில்லை...
அதற்குள் நாமாவது நமது அறிவை வளப்படுத்திக் கொண்டு தப்பித்துக் கொள்வோம்..
http://www.moneycontrol.com/news/health/30m-people-to-sufferdiabetes20-yrs-novo-nordisk_532705.html

26.3.10

வெளிச்சத்திற்கு வந்த போலி மருந்துகள்


காலம் காலமாய் நம் நாட்டில் உலவி வந்துள்ள போலி மருந்துகளின் ஒரே ஒரு துளியை மட்டுமே பிடித்து இருக்கிறார்கள். நம் நாட்டில் உலவும் மருந்துகளில் ௪0% போலி மருந்துகள் தான் என்று அப்பொழுது ஜனாதிபதியை இருந்த அப்துல் கலாம் அவர்கள் தனது உரையிலே பதிவு செய்து இருக்கிறார். சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து அதன் ஒரு நுனியை மட்டும் இப்பொழுது வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் இதன் ஒரு பகுதியை இயங்கி வரும் மருந்து நிறுவனங்களையும் சோதனை செய்வதன் மூலமே இந்த போலி மருந்துகளின் நடமாட்டத்தை குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
மொத்தத்தில் நம் நாட்டில் மருந்து துறையானது சுகாதார துறையின் கீழ் வராமல், எதோ ஒரு பெட்ரோல் மற்றும் ரசாயன துறையின் கீழ் வருவதினாலேயே இந்த அளவுக்கு ஊழல் மலிந்திருக்கிறது... இவை அனைத்தும் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இத்தனை ஆண்டுகளாய் நடந்து வந்திருக்கிறது என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும்... இந்த நிலையை மாற்ற மக்கள் அனைவரும்
௪௯ ஓ வை பதிவு செய்வதை தவிர வேறு வழி என்பது இல்லை....