politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
Showing posts with label அரசு. Show all posts
Showing posts with label அரசு. Show all posts

2.12.11

சந்து பொந்துகளில் புகுந்து..

அணுசக்தி கட்டுப்பாடு இழப்பீடு மசோதா...
Nuclear Liability bill

இந்தோனேசியாவில் நடந்த மாநாட்டில், அமெரிக்க அரசின் பயத்திற்கு இந்திய அரசு எதுவும் செய்ய முடியாது என்றும்... அந்த பயத்தை நீக்க இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே மசோதாவை அமுல் படுத்த முடியும் என்றும் நமது பிரதமர் சூளுரைத்ததை பலர் கை கொட்டி ஆரவாரமாக கொண்டாடினர்...

நேற்று இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளில் ஒன்று இந்த மசோதாவானது எப்படி இந்திய அரசின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது என்று புட்டு புட்டு வைக்கிறது...

24 பிரிவின் கீழ் என்ன என்ன வரை அறுக்கப் பட்டு இருக்கிறது என்றால்

முதலில்

இழப்பீடு தொகை என்பது ஒப்பந்தத்தில் என்ன கூறியிருக்கிறதோ அல்லது எவ்வளவு இழப்பீடோ; இவற்றில் எது குறைவானதோ அதை அந்த நிறுவனம் கொடுத்தால் போதுமானது என்று அறிவுறுத்துகிறது...

உதாரணத்திற்கு
பாதிக்கப் பட்டவர்களுக்கு கணக்கிடப்பட்ட இழப்பீடு என்பது ஐந்து லட்சம் என்றால்,
ஒப்பந்தத்தில் ஒரு லட்சம் என்று இருக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனம் இதில் குறைந்த தொகையை செலுத்தினால் போதுமானது..

இரண்டாவது..

அணு சக்தி கழகமானது ஒரு அணு உலைக்கான வாரண்டி நாட்களை ஐந்து வருடமாக வரை அறை செய்து வைத்துள்ளது... ஒரு வேளை விபத்தானது ஆறாவது வருடத்தில் நடந்தால் சம்பந்தப் பட்ட நிறுவனம் எந்த இழப்பீடும் தர வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது..

மூன்றாவது..

இந்த சட்டத்தில் எங்கும் சம்பந்தப் பட்டவர்களை நிர்ப்பந்தம் செய்ய எந்த விதியும் இல்லை என்றும் கூறி உள்ளார்.

கட்டுரையாளர் இவை அனைத்தையும் கூறி விட்டு, இந்த விதி 24 என்பதை நீக்க மக்கள் நலன் மீது அக்கறை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்..

http://www.thehindu.com/opinion/lead/article2675389.ece


ஆபத்தே இல்லைன்னு சொல்லி கிட்டு இருக்கிறோம், அப்புறம் ஏன்யா சட்டத்தில் இருக்கும் ஓட்டை பற்றி எல்லாம் கவலை பட்டு கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்...

30.11.11

சில்லறை வணிகத்தில்....?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்து பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... அந்நியர்கள் உள்ளே வரக் கூடாது என்று ஒரு தரப்பினரும், உள்ளே வரலாம் என்று ஒரு தரப்பினரும் பேசிக் கொண்டு உள்ளனர். இருவருமே ஒரு முக்கியமான பார்வையை பார்க்காமல் பேசுவது போன்று எனக்கு தெரிந்ததால், என் அறிவுக்கு எட்டிய வரை ஆணிவேர் பார்வையில் இந்த பதிவை பகிர்கிறேன்...

கமாடிட்டி மார்கெட் என்று அழைக்கப் படும் ஊக வணிகம் குறித்து முழு புரிதல் இல்லை என்றாலும், எனக்கு புரிந்த வரையில் இங்கு என் வாதத்தை முன் வைக்கிறேன்... தவறான கருத்து எனில் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்..

ஒன்று:

ஏற்கனவே இந்தியாவில் ஊக வணிகத்தில் அந்நியர்கள் முதலீடு செய்ய முழு கதவையும் திறந்து விட்டு உள்ளனர்.

அந்நியர்கள் மளிகை கடைகளையும் திறக்கும் பட்சத்தில் இது எப்படி அவர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்ற மாற்று சிந்தனை இது.
உதாரணமாக...

ஒரு கிலோ அரிசி 40 ரூபாய் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஊக வணிகத்தில் வெறும் காகிதம் தான் என்பதால் எவ்வளவு கிலோ அரிசி வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அடிப்படையில், நான் என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு வாங்கி கொள்கிறேன்.

பின்பு வெளி சந்தையில், என் மளிகை கடைக்கு தேவையான அரிசி என்று பல்லாயிரக்கணக்கான மூட்டை அரிசி வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறேன்.. ஆனால் விநியோகம் செய்யாமல் செயற்கையான தட்டுப்படை உருவாக்குவதின் மூலம் அரிசியின் விலையை இரு மடங்காக ஆகும் வரை காத்திருந்து, ஒரே நேரத்தில் ஊக வணிகத்தில் வந்த விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விட்டு, வெளி சந்தையில் விற்பதை விட ஐந்து ரூபாய் குறைவாக விற்று லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல் வாடிக்கயாளர்களையும் சம்பாதித்து கொள்கிறேன்..

அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்பவர்களுக்கு, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இரண்டாவது:

மொத்தமாக விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி விரயம் இல்லாமல் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்ப்பார்கள் என்ற பார்வையும் உள்ளது என்பதால்,
மேலே கூறிய காரணம் இங்கும் பொருந்துகிறது...

விவசாயிகளை இந்த பொருள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதின் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்க எதுவாக இருக்கும்...

மூன்றாவது:

முப்பது சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திகளை வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த உள்விதி உள்ளது என்கிறது ஒரு அமைப்பு. ஆகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப் படாது என்றும் கூறுகின்றனர்.

அது ஏன் வெறும் முப்பது சதவிகிதம் என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.

பொருளாதாரம் குறித்த புரிதல் கொஞ்சம் தலை சுற்றும் விஷயமாக உள்ளதால், சரியாக தான் புரிந்து கொண்டேனா என்ற குழப்பம் உள்ளது... ஆகையால் நண்பர்கள் என் பார்வை சரியாக இருக்குமா என்று தெளிவு படுத்தினால் உற்சாகமாக பொருளாதார பார்வையிலும் இறங்குவேன் என்று கூறிக் கொள்கிறேன்

27.11.11

மால்குடி சித்தன்

நீ ஏழையாக பிறந்தது உன் குற்றமல்ல...
ஆனால் நீ ஏழையாக இறப்பது உன் குற்றமே...


இப்படி ஒரு புது மொழி உண்டு

மால்குடி சித்தனின் சிந்தனை என்ன என்றால்..

இந்த புது மொழி ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால், அவதிப் படும் சோமாலிய மக்களுக்கும் பொருந்துமா?

சோமாலியா பஞ்சத்தால் வாடும் தேசம் என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு இருந்தாலும்.. இன்றைய சோமாலிய மக்களின் ஏழ்மை நிலைக்கு பஞ்சம் ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமானது இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் ஊழலும், தவறான கொள்கைகளும் தான்.. 

உதவி என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் செய்தவை அனைத்தும் உதவி புரிந்த நாடுகள் வளரவே உதவி  புரிந்தன. ஆக மேலும் மேலும் சுரண்டப் பட்ட மக்கள் இன்று வாழ்வாதாரம் இல்லாமல் நொடிந்து போய் உள்ளனர்...


ஒரு வேளை ஏழையாக இருக்க விருப்பம் இல்லாமல் தாய் நாட்டை விட்டு பிற நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ?


மேலும் படிக்க
http://www.cato.org/pubs/pas/pa-205.html

மேற்கண்ட கட்டுரையை படிக்கும் பொழுது இந்தியா மனதில் வந்து சென்றதை மறுக்கவில்லை...

18.11.11

முதுகில் குத்துவது எப்படி?

PFRDA [Pension Fund Regulatory and Development Authority] மசோதா

பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் பென்ஷன் பணத்தை, பங்கு சந்தையில் முதலீடு செய்ய உருவாக்கப் படும் மசோதா, வரும் குளிர் கால கூட்டத் தொடரில் சட்டமாக இயற்றப் படும் என்றும்...

இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் 26 % முதலீடு செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ள போதிலும், இந்த வரிகள் அந்த சட்டத்தில் இருக்காது என்றும் கூறி உள்ளார்கள். இதற்க்கு முதன்மையான காரணம் பிற்காலத்தில் எந்த வித சட்டமும் இயற்றாமல் அதன் அளவை கூட்டிக் கொள்ளவே என்றும் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன...

மேலும் இதன் மூலம் உத்தரவாதமான தொகை சம்பந்தப் பட்ட தொழிலாளிக்கு கிடைக்காது என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது...
http://articles.economictimes.indiatimes.com/2011-11-16/news/30405824_1_fdi-cap-insurance-sector-pension-sector

இந்த திட்டத்தில் உள்ள தொழிலாளிகள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக இடது சாரிகள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளனர்...

இதில் கொடுமை என்ன என்றால் இந்த திட்டத்தில் பல கிராமத்து மக்களும் இணைந்திருக்கிறார்கள் என்பதே.. வருங்கால கனவுகளுடன் விவசாய வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் மூலம் சேர்ந்துள்ளனர்... அவர்களுக்கு இந்த மாதிரி சட்டம் நிறைவேற்றப் படப் போகிறது என்று தெரிந்திருக்குமா என்ற கேள்வி இன்று என் தூக்கத்தை கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
http://en.wikipedia.org/wiki/New_Pension_Scheme_%28India%29
http://pfrda.org.in/writereaddata/eventimages/Aggregato20List8968663130.pdf

நீர் வீதி

வெனிஸ் நகர நீர் வீதி, பல படங்கள் இங்கு எடுக்கப் பட்டு நம்மை ஆ என்று வாய் பிளக்க வைத்துள்ளது...


என்னங்க பெரிய வெளிநாடு, நம் நாட்டுக்கு ஈடு வருமா?


நம்ம சிங்கார சென்னை தான் இது...

13.11.11

அருகி வரும் இனம் எது?

வழக்கமாய் அமெரிக்காவில் மட்டுமே வெளிப்படையாய், பெரும் பணக்காரர்களுக்கு பல சலுகைகள் அளித்து காப்பாற்றி வந்தனர்.

அதன் எதிரொலி தான் இன்று வால் தெரு முற்றுகை போராட்டம் என்பதை காண முடிகிறது..

இத்தனை ஆண்டுகளாய் இந்தியாவில் திரை மறைவில் நடந்த இந்த கூத்துக்கள், இன்று வெட்ட வெளிச்சமாய் அரங்கேறுமா என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எழுந்துள்ளது.

விஜய் மல்லய்யா என்ற மாபெரும் சக்தி இன்று தவறான பொருளாதார அணுகுமுறையால் பல கோடி ரூபாய்கள் கடனில் தத்தளிப்பதாகவும், அவர் அரசின் தவறான அணுகுமுறையால் தான் நஷ்டம் அடைந்தேன் என்று கூறி அரசின் கையை எதிர்பார்த்தும் காத்திருப்பதாக இந்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் குறிப்பிடுகிறது...

சுரண்டி கொழுத்ததால் வந்த ஆடம்பரம் இன்று மல்லய்யாவை ஆட்டம் காண வைத்தாலும், அரசு என்றும் போல் அவரை காப்பாற்றும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...

அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர், என் ஊழியர்கள் கட்டும் வரியை விட, நான் குறைவாக கட்டுகிறேன் என்று கூறி...

பணக்காரர்கள் என்பவர்கள் அழிந்து வரும் இனமல்ல[Rich are not an endangered species], ஆகையால் அவர்களுக்கு உதவி தேவை இல்லை என்று வெளிப்படையாக கூறியதை நம் ஆட்சியாளர்கள் நினைத்து பார்ப்பார்களா என்பது கேள்விக் குறியே...

http://www.thehindu.com/news/national/article2622215.ece

9.11.11

யாரை பழிவாங்குகிறார்கள்?

மக்கள் விரோத திட்டங்களை கட்டவிழ்த்து விடுவதை தமிழகத்தில் ஆளும் கட்சிகள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பது தெரிந்ததே...

இன்று பதவி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் குறித்து விரிவான கட்டுரை கீழ்காணும் சுட்டியில் வெளியாகி உள்ளது.. உங்கள் பார்வைக்கு...


இதை ஒட்டி முகநூல் பக்கங்களில் பரவும் புகைப்படம் உங்கள் பார்வைக்கு...
பெரிதாக பார்க்க படத்தை சுட்டவும் 

6.11.11

யார் பொறுப்பு?

பத்து நாட்கள் கழித்து பேசுவேன் என்று கூறிவிட்டு, 
இன்று கூடங்குளத்தை ஆய்வு  செய்வதாக கூறி விட்டு,
ஆய்வுக்கு புறப்படும் முன்பே அணு சக்தி தான் சிறந்தது என்று கட்டுரை வரைவது, எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை...

பிறக்கப் போகும் சந்ததியினரை கதிர்வீச்சு என்பது எந்த விதத்திலும் பாதிக்காது என்று உத்தரவாதம் அளித்துள்ளார். கதிர்வீச்சு பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுவது கற்பனாவாதமானது என்று கூறியுள்ளார். அதற்கு அவர் காட்டும் உதாரணம், நாகாசாகியும் ஹிரோஷிமாவும்...

செர்நோபில் விபத்துக்கு பிறகு சுமார் 83,000 குழந்தைகள் குறைகளுடன் பிறந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

அணுசக்தி தான் சிறந்தது என்று கூறும் நம் முன்னாள் ஜனாதிபதி அவரது கனவு திட்டமான புறா [ PURA ] வில், சூரிய ஒளி சக்தி மூலமே ஒரு கிராமம் முழுவதும் மின்சார தேவையில் தன்னிறைவு அடைய முடியும் என்று திட்டம் வகுத்துள்ளார்.

அவரை பற்றி பலருக்கு மரியாதை இருப்பதால் இதற்கு மேல் வேறு எதுவும் பேசாமல் ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்...

நாளை இந்த திட்டம் நிறைவேறி கல்பாக்கம் மக்கள் போல், கூடங்குளம் மக்கள் பாதிக்கப் பட்டால், அதற்கு முழு பொறுப்பாளியாக இந்த திட்டத்தை ஆதரித்த அனைவருக்கும் சாரும் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்...

4.11.11

சூரியன் ஜீவன்

தியாகு என்ற வலைப் பதிவர்

அணு உலை எதிர்ப்பாளர்களிடம் கேட்கும் கேள்வி இது..
அவர் கேட்டு விட்டார், கேட்காதவர்களும் இருப்பார்கள்..

ஒரு வகையில் இந்த கேள்விகள் இன்னும் உண்மைகளை வெளிக் கொணர்வதால் அவரை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை.

இனி கேள்விகள்...

1.இந்தியாவின் மொத்த கரண்டு தேவை எவ்வளவு ?
2.சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் மின்சாரம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு ?
3.எத்தனை சதுர கிலோ மீட்டர்கள் வெற்றிடம் உள்ளது ?
4.இருக்கிற இடத்தில் மேக்சிம எவ்வளவு பெற முடியும் ?
5.அடுத்து அதற்காகும் செலவு எவ்வளவு ?

1.மேஜர் தெர்மல் பவர் அதுக்கு நிலக்கரி வேண்டும் அதன் கையிருப்பு குறைந்து விட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டு இருந்தேன் பதில் இல்லை ?

2.முற்றிலும் சூரிய ஒளி அல்லது காற்றாலையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நாடு எது அப்படி இல்லைன்னா ஏன் இல்லை ?

3.சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மொத்த இடம் எவ்வளவு அதாவது நமது மொத்த மின்சார தேவையின் அடிப்படையில் அதற்கான செலவு எவ்வளவு ?

இந்த கேள்விகளுக்கான பதில்கள்.

அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது படி பார்த்தால் 1,03,000 mega watt மின்சாரம் தேவை படும்.
இதில் 11.5% பற்றாக்குறையுடன் 90,000 mega watt மின்சாரம் தயாரிக்கப் படுவதாக எழுதி இருந்தார்.

ஆனால் உண்மையில் இந்தியாவுக்கு 9,50,000 mega watt மின்சாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் தேவை ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது...

இந்தியா பெறும் சூரிய ஒளியில் இருந்து ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 200 mega watt மின்சாரம் எடுக்க முடியும்.

ராஜஸ்தானிலும் குஜராத்திலும் உள்ள பாலைவனங்களின் பரப்பளவு 2,08,110 சதுர கிலோ மீட்டர்கள்.

அதில் வெறும் 15,000 சதுர கிலோ மீட்டர்களை மட்டும் உபயோகப் படுத்தினாலே 3,00,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற நிதர்சன உண்மை உள்ளது.

http://en.wikipedia.org/wiki/Electricity_sector_in_India

இப்பொழுது இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டதால், இவர்கள் அடுத்த கேட்கப் போகும் கேள்வி, மூலதனம்..
ஒரு அணு உலை அமைக்க மட்டுமே 2500 கோடி செலவு செய்யும் அரசு, இதற்க்கு மூலதனம் இட முடியாதா...

ஏற்கனவே நான் பல பதிவுகளில் சொல்லியது போல் ஒரு கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கவும், சோலார் பானேல்களை பராமரிக்கவும் சேர்த்து மூன்று ரூபாய் மட்டுமே செலவாகும். இது தனியார் நிறுவனங்கள் விற்கும் பொருட்களை வைத்து கணக்கிட்டு உள்ளேன். இன்னும் அரசு முனைப்பு எடுத்து அவர்களை இந்த பானேல்களை தயாரித்தால் செலவு குறைய பெரும் வாய்ப்பு உள்ளது.

1 kilo watt = 1 unit = 3.00 rupees

இதற்கு ஆதாரம் என் முந்தய பதிவில் உள்ளது...
http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_04.html

கடைசியாக அவருடைய ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
ஏன் எந்த நாடும் முற்றிலும் சூரிய ஒளி  மூலமாகவும், காற்றாலை மூலமாகவும் மின்சாரம் தயாரிக்கவில்லை என்று கேட்டிருந்தார்...
அதற்கான பதில் அவர் பதிவின் தலைப்பு தான்..

விஞ்ஞானத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறோம் –பிற்போக்கு தனத்தையா?

ஆக்கப் பூர்வ அறிவியலை எதிர்ப்பதை விட்டு விட்டு, அழிவு அறிவியலை எதிர்ப்பதை கொள்கையாக்குவோம்..

வாழ்வோம், நம் சந்ததிகளை வாழ விடுவோம்...

பின் குறிப்பு: கல்பாக்கம் அணு உலை குறித்தும் கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டது, மகிழ்ச்சியாக இருக்கிறது. பூவுலக நண்பர்களின் ஒரு கட்டுரையின் சுட்டியை நமக்கு அளித்து உள்ளார் தோழர். ராஜா MVS

3.11.11

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம்- ஓர் வரலாற்று நிகழ்வு


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம்- ஓர் வரலாற்று நிகழ்வு

மேலே உள்ள சுட்டியில், பூவுலகின் நண்பர்கள் வலை பூவில் கூடங்குளம் குறித்த பார்வை, உங்கள் பார்வைக்கு  

அருகில் ப்ளாக் லிஸ்ட்டிலும் இணைத்துள்ளேன்..

விழிக்கும் வரை கொட்டு முரசே...

வளர்ந்த உலக நாடுகள் பெரும்பான்மை, அணு உலைகள் குறித்து மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்து விட்டதாக ஐரோப்பிய ஆற்றல் மற்றும் பாதுகாப்பு மைய இயக்குனர் சென்னையில் நேற்று நடை பெற்ற கருத்தரங்கில் பேசி உள்ளார்... 

பெரும்பாலான நாடுகள் புகுஷிமாவுக்கு பிறகு தங்கள் அணு மின்சாரம் குறித்த பார்வையை சுய பரிசோதனை செய்ய ஆரம்பித்த விட்டதாக கூறுகிறார் இவர்.

ஜப்பான் தன நாட்டில் இனி மேல் அணு உலைகளை அமைக்கவே அமைக்காது என்று கூறி விட்டு, ஆனால் பிற நாடுகளில் அணு உலைகளை அமைக்க உதவும் என்று கூறுவது, எந்த விதத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை...

கூடங்குளம் மக்கள், அனைத்து அணு உலைகளையும் எதிர்த்து போராட வேண்டும் என்று கூறுகிறார் ஒரு பதிவர்... கண்டிப்பாக போராடுவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனக்கு... 

ஏதேதோ சாயம் பூசி, மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாததால்.. ஏன் அவர்கள் கல்பாக்கம் எதிர்த்து போராட வில்லை என்ற கேள்வி கேட்டு அந்த மக்களின் உணர்வை கொச்சை படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்...

ஜைதாபூர் மக்கள், கேரளா மக்கள், மேற்கு வங்க மக்கள், ஜப்பான் மக்கள் என்று எங்கெங்கோ இருந்து கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீள்வதை நீர்த்து போக வைப்பதில் உள்ளது பலர் நோக்கம்...

அது நடக்காது...
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள், ஒரு வேளை இந்த மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மின்சாரம் தயாரித்தாலும் இனி இந்நாட்டில் வேறு எங்கும் அணு உலைகள் அமையாது என்பது மட்டும் உறுதி...

மாற்று வழி என்ன என்று கூறாமல் போராடுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, நாங்கள் எவ்வளவு கூறினாலும் நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்..[சூரிய சக்தி, கடலில் காற்றாலை] மாறுதலுக்கு மாற்று வழி என்ன என்று நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், இந்த மக்கள் போராட்டத்தின் உண்மை புரியும்..

1.11.11

மக்கள் போராட்டம் வெல்லும்...

கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு, ஆதரவு கரம் நீண்டு கொண்டே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

வழக்கமாய் தமிழக தமிழனுக்காக போராடாத சீமான் அவர்களும், உணர்ச்சி பிழம்பான வை.கோ அவர்களும் இந்த போராட்டத்தில் இணைத்து கொண்டுள்ளார்கள்...

தூக்கு தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் மூவரை காப்பாற்றும் முயற்சியில் உள்ளவர்கள், இந்த போராட்டத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூடங்குளம் மக்களின் மன நிலையை படம் பிடித்து காட்டும் செயலாக உள்ளது.. 

இந்த போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசாமல் இது வரை மக்கள் ஒன்று பட்டு போராடிக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி..

எத்தனையோ போராட்டங்களை இந்த நாடு கண்டுள்ளது...

இது இடது சாரிகளின் போராட்டம்..

இது வலது சாரிகளின் போராட்டம்...

இது தீவிரவாதிகளின் போராட்டம்..

என்று எத்தனையோ போராட்டங்கள் நீர்த்து போயிருக்கிறது...

மக்களின் போராட்டம் என்று சுதந்திர போராட்டத்திற்கு பிறகு, இந்த போராட்டத்தையும், மணிப்பூர் இரோம் ஷர்மிளா போராட்டத்தையும் கூறியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பாதிக்கப் பட்டவர்களின் போராட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களின் பங்களிப்பு உணர்ச்சி பூர்வமானது.. ஆனால் இங்கு யார் பாதிக்கப் படுவோம் என்று தெரியாமல், யாருமே பாதிக்காமல் இருக்கலாமே என்று போராடுவது இந்த போராட்டத்தை தனித்து காட்டுகிறது...

இந்த மக்களின் வெற்றியில் தான் நம் நாட்டின் அணு உலை திட்டத்திற்கு ஆப்பு அடிக்கும் அதிகாரம் இருக்கிறது...

30.10.11

கேள்வியும் கேள்வியும்

கூடங்குளம் அணு மின் உலையில் மின்சார தயாரிப்பின் ஒத்திகை செய்ய ஆரம்பித்து விட்டதாகவும், இனிமேல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்காமல் இருப்பது ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.

ஒத்திகை செய்ததற்கே பராமரிப்பு வேண்டும் என்று நீங்கள் சொல்வதும், முழு வீச்சில் மின்சாரம் தயாரித்தால் முப்பது ஆண்டுகள் கழித்து வீணாகவே அந்த அணு உலை பராமரிக்க வேண்டுமே என்று பொதுமக்கள் கூறுவதும் ஒன்று தானே...

கூடங்குளம் போராட்ட குழுவினர், திரு.பானர்ஜி அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்... 

என் கேள்வி என்ன என்றால், mock evacuations என்னும் ஒத்திகை வெளியேற்றம் எதுவும் செய்யாமல் இவர்கள் எப்படி மின்சாரம் தயாரிக்கும் ஒத்திகை மட்டும் நடத்தினார்கள் என்பதே...

பத்தோடு பதினொன்றாய் எத்தனையோ கேள்விகள், அனைத்துக்கும் கேள்வியே பதிலாக...

29.10.11

ஷாக்கடிக்குது...

இந்த மாத ஆரம்பத்தில் தமிழ் நாடு  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன் அறிவிப்பு இல்லாத மின் வெட்டை கண்டது...

அனைவரும் கேள்வி எழுப்பிய பொழுது அரசிடம் இருந்து நமக்கு வந்த பதில், ஆந்த்ராவில் தெலுங்கானா போராட்டம் நடந்து கொண்டு இருந்ததால் அங்கிருந்து வர வேண்டிய நிலக்கரி வருகை தடை பட்டு, மின் உற்பத்தி தடை பட்டதாக அறிவிப்பு வெளியாகியது...

கூடங்குளம் போராட்டத்தை குறித்து தவறான சமிங்க்ஜைகளை மக்களுக்கு கொண்டு செல்லவே மின் தடை உருவாக்கப் பட்டுள்ளதோ என்ற சந்தேகம் நேற்று வெளியான ஒரு செய்தியால் எழுந்து நிற்கிறது...

டெக்கான் குரோனிகள் நாளிதழில் வந்த செய்தி, இன்னும் நான்கு நாட்களுக்கான நிலக்கரி தான் இருப்பு இருப்பதாகவும், வழக்கமாய் இருப்பு இருக்கும் முப்பது நாட்களுக்கான நிலக்கரி இல்லை என்றும் கூறி உள்ளனர்...

அப்படி என்றால் இத்தனை நாட்களாய் முப்பது நாளுக்கு தேவையான நிலக்கரியை, கை வசம் வைத்து கொண்டு தான் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதாக கூறி இருக்கின்றனர் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது...
பொய்கள் சொல்வதை விட, பொய்களை சொல்லாமல் இருப்பது பெரிது, ஏனெனில் என்ன என்ன பொய்கள் சொல்லி இருக்கிறோம் என்பதை சாகும் வரை நினைவில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் வருவதை தவிர்க்கலாம் என்று சும்மாவா சொன்னார்கள்....

28.10.11

பகடைக் காயாய்

ஆந்திரா மாநிலத்தில் மக்களை பகடையாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட உத்தமர்களின் ஊழல் வெளிச்சத்தில் வருமா என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன்... அநேகமாய், தெலுங்கானா தீயில் கொழுந்து விட்டு எரிந்து விடும் என்று தோன்றுகிறது...

merck  மற்றும் GSK  போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பயங்கர லாப பசிக்கு ஆந்த்ராவின் மலை வாழ் மக்கள் பலியாகிரார்களோ என்று என்ன தோன்றுகிறது... ஏற்கனவே இது குறித்து ஒரு சின்ன பதிவு போட்டிருந்தாலும், இன்று பிருந்தா காரத் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி மீண்டும் அந்த பிரச்சினையில் என் மூக்கை நுழைக்க வைத்துள்ளது...

  • பல்வேறு வகையான பக்க விளைவுகள் உள்ள இந்த தடுப்பூசி குறித்து எந்த வித உண்மைகளையும் தெரிவிக்காமல் படிக்காத பாமர மக்களின் மேல் பிரயோகித்து இன்று பல பேர் இறந்தும், இறந்த விஷயங்களை மூடி மறைத்தும், பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கிறது...
  • மிகவும் விலை உயர்ந்த இந்த தடுப்பூசி மருந்தை தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்ப்பதால் மிகவும் பெரிய இந்திய சந்தையை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து எந்த வித செலவும் இல்லாமல் கொள்ளை லாபம் அடிக்கும் திட்டமே இது...
  • இந்த தடுப்பூசி போடுவதால் மட்டும் இந்த தடுப்பூசி எதற்க்காக போட படுகிறதோ அந்த நோயை தடுக்க முடியும் என்று எந்த விதத்திலும் எங்கும் ஆணித்தரமான செய்திகள் காண கிடைக்கவில்லை...
  • ஏற்கனவே சோதனை செய்யப் பட்டு கிடைத்த தகவல்களை கூட பரிசோதனை செய்து கொண்ட மக்களிடம் சம்பந்தப்பட்ட எவரும் சொல்லாததும், PATH  என்கிற அரசு சாரா பன்னாட்டு நிறுவனம், இதனால் எந்த பக்க விளைவும் இல்லை என்று, பொய் சொல்வதும் நடக்கிறது..
பிரச்சினை என்ன என்றால் விஷயம் வெளி வந்த பின்பு சுகாதார துறை அமைச்சகம் இந்த சோதனைக்கு தடை போட்ட பின்பும், தடை போட பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த பின்பும், இந்த ஆட்சியாளர்களை மதிக்காமல் இந்த சோதனையை முழுவதும் நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, இந்த அரசு சாரா நிறுவனம்.

மேலும் அரசுக்கு சில வழிகாட்டுதல்களையும் அதன் அறிக்கையில் கூறியிருப்பது எவ்வளவு கோடி ஊழல் இந்த தடுப்பூசி விஷயத்தில் நடந்தேறியிருக்கும் என்று கற்பனையில் என்னை மிதக்க விட்டுள்ளது



27.10.11

தமிழக வாக்காள பெருமக்களே

உள்ளாட்சி தேர்தல் குறித்து நான் பதிவு எழுதிய பொழுது, சிலர் கூறிய கருத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூறிய கருத்தும் தவறு என்பது இன்று வெளி வரும் பலப் பரீட்சை செய்திகளில் வெளிவருகிறது...

உள்ளாட்சி தேர்தல் என்பது அங்கங்கே நிற்கும் வேட்பாளர்களை பொறுத்தது என்றும், இதில் கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் தேர்தலுக்கு முன் கூறிய அனைத்து கட்சிகளின் தலைவர்களும், இன்று பலப் பரிட்சையில் ஈடு பட்டுள்ளது, உண்மையை அப்பட்டமாக விளக்குகிறது...

என் வாக்கு வங்கி சரியவில்லை என்றும், எங்கள் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்றும் ஒவ்வொருவரும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தெள்ள தெளிவாக கூறி வருகின்றனர்... கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறியவர்கள், ஏன் கட்சியின் பலத்தை பற்றி அலச வேண்டும்...

இதை விட கொடுமை என்ன என்றால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த கட்சியின் தலைவர், அன்புள்ள தந்தை, என்ன கூறியிருக்கிறார் என்பது தான்...

நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஜெயித்தது போல தான் இன்று ஆளும் கட்சியில் இருப்பவர்கள் ஜெயித்துள்ளார்கள் என்று எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்று கூறியுள்ளார்...

ஆக ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தான் ஜெயிப்பார்கள் என்று தெரிந்த பிறகு ஏன் மக்களை வைத்து காமடி பண்ணி கொண்டு திரிய வேண்டும்...

ஓட்டுக்கு பணமும், வாக்காளர்களுக்கு பரிசு பொருள்களும் தீபாவளி நெருங்கிய சமயத்தில் பலருக்கு கை கொடுத்தது என்றாலும், தோற்றவன் வீடு வீடாக சென்று அருவெறுப்பான வார்த்தைகளில் திட்டுவதும், கள்ள பணம் கொடுத்த வெற்றி பெற்றவன் ஓடி ஒளிவதும் இது தாண்டா தேர்தல் என்று தெள்ள தெளிவாக காட்டுகிறது...

மக்கள் விழிப்புணர்வு பெரும் கால பெருவெளியில் நாம் நிற்கிறோம், இனிமேலும் அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கி செல்லாமல், கற்றுணர்ந்தவர்கள் இறங்கி சுத்தம் செய்ய தொடங்க வேண்டிய நேரமிது...

காலம் கனியும், காத்திருப்போம்... 
காலம் கனிந்த பின், வழிநடத்துவோம்...

23.10.11

கபில் சிபல்

மிக அருமையான படம் 



சிலர் போடோஷப் வேலை என்ற நினைக்க வாய்ப்பு உள்ளதால், அதிகார பூர்வ வலை தளத்தில் இருந்து அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போட்டு உள்ளேன்.

பெரிதாக்கி பார்க்க படங்களை கிளிக் பண்ணவும்  

 ஒரு ஊழியனின் குரல் என்ற வலைப்பதிவை பார்த்து இந்த படத்தின் மூலத்தை தேடி எடுத்தேன்... 
பலர் இன்னும் இதை போடோஷப் வேலை என்றே நினைக்கிறார்கள் என்பது அதை விட கொடுமை.
http://ramaniecuvellore.blogspot.com/2011/10/blog-post_8554.html

21.10.11

கழுகு வலை தள கோரிக்கை..

கழுகு வலை தளத்தில் இன்று வெளியான பதிவு ஒன்று உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்...
தேசிய நெடுஞ்சாலைகளில் கண் கூசும் விளக்கு பொருத்தி செல்லும் வாகனங்களால் வரும் விபத்துகள் குறித்தும் அதை தடுப்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்... சென்று பாருங்களேன்..



ஜனநாயகம் கேள்விக்குறியாய்...

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு மக்களை வஞ்சிக்குமா? மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்குமா? இது கூடங்குளம் அணு மின் நிலைய ஆதரவாளர்கள் வைக்கும் முக்கிய கேள்வி.

வரலாறை உற்று நோக்குபவர்கள் இருளில் வாங்கிய சுதந்திரத்தை விடிய விடாமலே, இன்னும் மக்களை இருளிலேயே வைத்திருக்கிறது மக்கள் தேர்ந்தெடுத்த அரசு என்று அடித்து சொல்லுவார்கள்...

ஆனால் சுற்றுப் புறச் சூழல் குறித்து கேள்வி இது என்று கேட்பார்களேயானால், அவர்களுக்கு சிறந்த பதிலாக அமைந்துள்ளது, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளும் - அந்த நிறுவனத்தை ஆதரிக்கும் மக்கள் தேர்ந்தெடுத்த அரசும் ஆகும்...

மகாராஷ்ட்ராவில் துரத்தி அடிக்கப் பட்டு, குஜராத்தில் மறுக்க்கப் பட்டு, கோவாவில் கால் பதிக்க முடியாமல் தமிழகத்தில் கால் பதித்திருக்கிறது ஸ்டெர்லைட் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர் புதிய தென்றல்

நிலத்தடி நீரும், காற்றும் மாசுப்பட்டு சுற்றுபுறத்தில் வாழும் கிராம மக்கள் மிகுந்த நோய் வாய்ப்படுகிறார்கள் என்று கவலைப்படுகிறார்  படித்ததும், பாதித்ததும் வலைபதிவர்

இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை விட அதிகமாக கூடங்குளம் ஆலைக்கு எதிராக மக்கள் அணி திரண்டு உள்ளது, மக்களின் எழுச்சியை அறிவித்தாலும்... அதை நிராகரிக்கும் போக்கை மத்திய மாநில அரசுகள் கடைபிடிப்பதை நன்றாக உணர முடிகிறது...

இன்றைய தேவை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தும் பொழுது, மக்களின் தேவை கூடங்குளம் அணு உலை முற்றிலும் கை விடுவதே ஆகும்...

இரு துருவங்களாய் இருக்கும் மக்களும் ஆட்சியாளர்களும் ஒரே புள்ளியில் சந்திக்க, ஆட்சியாளர்கள் தாங்கள் மக்கள் பிரதிநிதி என்பதை உணர்வதில் உள்ளது...

19.10.11

அயனியாக்கும் கதிர்வீச்சு

அணு உலைக்கு எதிராக பல்லாயிரம் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அணு உலைக்கு ஆதரவாகவும் சில குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழத்தான் செய்கிறது. 

அவற்றில் பல சாமானிய மக்களுக்கு புரியாத வண்ணம் இருப்பதால், ஆதரவு நிலை எடுப்பதா, எதிர்ப்பு நிலை எடுப்பதா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களை குழப்பவே செய்துள்ளது.

அது போன்ற சுவாரசியமான உண்மைகளை மறைத்து, உண்மை போல் தெரியும் அணு உலை ஆதரவு கட்டுரையை படித்து விட்டு , உண்மையை தேடி அலைந்து மேலும் அதிர்ச்சிகர தகவல்களை தெரிந்து கொண்டேன்.. அவை உங்கள் பார்வைக்கு..

கதிர்வீச்சு...
இருவகை 

ஒன்று அயனியாக்கும் கதிர்வீச்சு

மற்றொன்று அயனியாக்காத கதிர்வீச்சு 
அயனியாக்காத கதிர்வீச்சு microwave  ஓவன், அலைபேசிகள் போன்றவைகளில் இருந்து வருபவை. அவ்வளவு அபாயகரம் அல்லாதவை. 

அணு உருவாக்குவது அயனியாக்கும் கதிர்வீச்சு, அவற்றை பற்றி தான் பேசப் போகிறேன்..

இயற்கையில் கலந்திருக்கும் கதிர்வீச்சுக்களில் முக்கியமானதும், பெரும்பான்மையாகவும் இருப்பது radon என்னும் வாசமில்லா நிறமில்லா வாயு. அணு உலைகளில் உபயோகிக்கப் படும் uranium கழிவுகளில் இருந்து பிறக்கும் வாயு இது. இயற்கையில் கலந்திருக்கும் கதிர்வீச்சில் ஐம்பது விழுக்காடு இதுவே ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு இந்த வாயுவின் பாதிப்பால் சராசரியாக 21 ,000௦௦௦ நபர்கள் நுரையீரல் புற்றுநோய் தாக்கி பலியாகின்றனராம்.
இந்த ராடன் வாயுவால் பாதிக்கப் படுபவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் தான், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டிருக்கிறது என்று விக்கிபீடியா தெரிவிக்கிறது.

எக்ஸ்ரே க்களில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு 10 rem அளவே உள்ளது. மருத்துவ துறை ஒரு ஆண்டுக்கு நூறு rem அளவு கதிர்வீச்சை ஒரு மனிதன் மேல் பிரயோகிக்க அனுமதிக்கிறது. அப்படி இருந்தும் எக்ஸ்ரே க்களில் பயன்படுத்தும் மிக குறைந்த கதிர்வீச்சு உயிரணுக்களின் மேல் ஒரு வேளை பிரயோகிக்கப் பட்டால், அந்த நேரத்தில் அந்த உயிரணுக்கள் உண்டாக்கும் குழந்தைகள் ரத்த புற்று நோயுடன் தான் பிறப்பார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

நானூறு rem களுக்கு மேல் கதிர்வீச்சு இருந்தால் மரணம் நிச்சயம் என்று குறிப்பிட்டுள்ளது..

செர்நோபில்  மற்றும் புகுஷிமா வால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றி பேசினால் அதிகாரப் பூர்வ தகவல் உண்டா என்று கேள்வி கேட்பார்கள். இழப்பீடு தரப் பட வேண்டி வருமே என்பதாலும் இனி வரும் எதிர்ப்புகளை சமாளிக்கவும் அதிகாரப் பூர்வ தகவல்கள் என்றும் வரப் போவதில்லை. எவ்வளவு தான் இழப்பீடு கொடுத்தாலும் அனுபவிக்கும் வலியை அது தடுத்து விடப் போவதுமில்லை.

வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை காலி செய்து விட்டு செல்வது எவ்வளவு பெரிய வலி என்பது கள்ளிக் காட்டு இதிகாசம் படித்தவர்களுக்கும், அகதிகளாய் புலம் பெயர்ந்தவர்களுக்கும் தெரியும். அசம்பாவிதம் நிகழ்ந்து விட்ட புகுஷிமா அருகே வாழ்ந்தவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் விஷயம். அந்த வலி நமக்கும் வர வேண்டுமா?

அனைவரும் தலை வலியை அனுபவித்து இருப்போம். நம் நலனுக்காக ஒரே ஒரு முறை தலைவலியை வரவழைத்துக் கொள்ளுங்கள். நான் இழப்பீடு தந்து விடுகிறேன் என்று கூறினால், நாம் தலைவலி வரவைத்துக் கொள்ள தயாராகுவோமா அல்லது அப்படி கேட்டவர்களை எதிர்த்து போராடுவோமா?