politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
Showing posts with label விலை வாசி. Show all posts
Showing posts with label விலை வாசி. Show all posts

7.12.11

கமாடிடி சந்தை...

நேரடி வர்த்தகம் [spot trade] மற்றும் முன்பேர வர்த்தகம்.. [futures]

நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களில் எப்படி எல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று ஒரு பார்வை. கட்டுரையாக கொடுத்தால் படிக்க சிரமமாக இருக்கும் என்று கேள்வி பதில் மூலம் இங்கு விளக்குகிறேன்...

ஆணிவேர்: நேரடி வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: இணையத்தில் இன்று விற்கும் பொருளை இன்று என்ன விலை என்று பார்த்து இணையத்தில் ஆர்டர் செய்து வீட்டுக்கே டெலிவரி செய்யும் முறை தான் நேரடி வர்த்தகம்.

ஆணிவேர்: முன்பேர வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: ஒரு பொருளை வாங்கிக் கொள்ள, குறிப்பிட்டுள்ள ஊகத்தின் அடிப்படையிலான விலையில் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளப் போடப் படும் ஒப்பந்தமே முன்பேர வர்த்தகம் ஆகும்.

அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 1/1/2012 தேதியில் $.5500/= விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று யூகத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொள்வது..

ஆணிவேர்: அந்த நாளில் குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட அதிகம் இருந்தால்?

நண்பர்: அது லாபம்.

ஆணிவேர்: ஒரு வேளை அது குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட குறைவாக இருந்தால்?

நண்பர்: அது நஷ்டம் என்று எடுத்துக் கொண்டாலும்.. அந்த ஒப்பந்தம் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள ஹெட்ஜிங் என்ற ஒரு வகையை நாங்கள் கை ஆள்வோம்...

ஆணிவேர்: அது என்ன ஹெட்ஜிங்?

நண்பர்: அதாவது இன்னொரு ஒப்பந்தத்தில் வாங்கி, எந்த அளவுக்கு நஷ்டம் அடைந்ததோ அந்தளவு விலை ஏறிய உடன் விற்று விடுவோம்..

ஆணிவேர்: ஒரு நாளைக்கு தடாலடியாக விலை ஏறுமா?

நண்பர்: பங்கு சந்தை போல் இங்கு தடாலடியாக விலை ஏறாது.. ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று சதவிகிதம் விலை ஏற அனுமதிக்கப் படுகிறது.. அந்த குறிப்பிட்ட அளவு வந்தவுடன் விலை ஏற்றம் தடை செய்யப் படும்.

ஆணிவேர்: அப்படி என்றால் பத்து நாளைக்கு முப்பது சதவிகிதம் விலை ஏற முடியும். அப்படி தானே?

நண்பர்: ஏறக் குறைய அப்படி தான்.. ஆனால் முழுமையாக அப்படி நடக்க வாய்ப்பில்லை..

ஆணிவேர்: அப்படி என்றால் ஊக வணிகத்தால் விலை ஏறுகிறது என்று எதை வைத்து போராடுகிறார்கள்?

நண்பர்: ஊக வணிகத்தில் விலை நம் நாட்டு நிலவரம் வைத்து விலை நிர்ணயிக்கப் படுவதில்லை.. சர்வதேச சந்தையின் நிலைமையை வைத்தே உள்நாட்டு பொருட்களின் விலை நிர்ணயிக்கப் படுகிறது.

ஆணிவேர்: தற்காலிக தட்டுப் பாடை உருவாக்கி இங்கு பொருட்களின் விலையை ஏற்ற முடியுமா?

நண்பர்: நான் ஏற்கனவே கூறியது போல் தடாலடியாக உயர்த்த வாய்ப்பில்லை... கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த முடியும். ஆனால் கட்டுப்பாடுகளும் அதிகம். அரிசி வகையாறாக்களில் பாசுமதி அரிசி மட்டுமே இந்த சந்தையில் கிடைக்கும்.. சாதாரண அரிசி கிடைக்காது... அது போல் கட்டுப்பாடுகள் அதிகம்...

ஆணிவேர்: இந்த வணிக முறையில் யார் யார் ஈடுபடலாம்?

நண்பர்: இந்திய நிரந்தர வருமான வரி கணக்கை வைத்து உள்ள யாரும் ஈடுபடலாம். நீங்கள் அடுத்து என்ன கேட்பீர்கள் என்று தெரியும். வெளிநாட்டினரும் ஈடுபடலாம், பாஸ்போர்ட் வைத்து கொண்டு.

ஆக
முட்டை என்பது சைவம் என்றாகிவிட்டது,
பீர் என்பது குளிர்பானம் என்றாகிவிட்டது..
பந்தயம் கட்டி விளையாடும் ரம்மி சூதாட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி விட்டது..
அதே போல் பங்கு சந்தையும் சூதாட்டம் அல்ல என்று காலம் காலமாய் சொல்லி வருவதை, இல்லை என்றே ஆளும் வர்க்கம் சொல்லி வருகிறது.


இதை முழுவதும் புரிந்து கொள்ள நான் இதே துறையில் ஒரு வருடம் இருந்தால் மட்டுமே முடியும் என்று என் நண்பன் கூறி விட்டான்.. ஆகையால் எனக்கு புரிந்த அளவுக்கு நான் இங்கு விளக்கி இருக்கிறேன்..

4.12.11

எப்பூடி...

பெட்ரோல் விலை குறைவதும், விலை ஏறுவதும் சர்வதேச எண்ணெய் சந்தையின் விலையை பொறுத்து என்று நம்பி கொண்டிருப்பவரா நீங்கள்...

நம் நாட்டின் பெட்ரோல் விலை உயர்வை தீர்மானிப்பது சிங்கப்பூர் நாட்டின் பெட்ரோல் விலை மட்டுமே என்ற ரகசியத்தை இன்று நாளிதழின் கட்டுரை அம்பலப் படுத்தி உள்ளது..

இத்தனைக்கும் நாம் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒரு சொட்டு பெட்ரோல் கூட வாங்கவில்லை என்று புலம்புகிறார் கட்டுரையாளர்..

மேலும் படிக்க...

http://www.thehindu.com/news/national/article2684791.ece

மேலும் பெட்ரோல் விலை குறித்த தகவல்களுக்கு

http://suryajeeva.blogspot.com/2011/09/blog-post_17.html


கமாடிடி மற்றும் முன் பேர வர்த்தகம் குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன... இன்னும் ஒரு முழு வடிவம் பெறாததால்.. நாளை அல்லது அதற்க்கு மறு நாள் வெளி இடுவேன்...

17.9.11

பெட்ரோல்

நம் நாட்டை ஆண்டு வரும் ஏழை பங்காளர்களுக்கு நாட்டை ஆள  காசு வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் ஒரே காரியம் பெட்ரோலின் மீது விலையை உயர்த்துவது மட்டுமே...  பெட்ரோலின் விலை சர்வதேச சந்தையில் உயருவது என்னவோ உண்மை தான், ஆனால் சில பதில் வராத கேள்விகள் இந்த நாட்டில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது... அவற்றில் சில இதோ...

*நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பெட்ரோலை என்ன விலை கொடுத்து வாங்குகிறார்கள்?

*அரசு எரிவாயு நிறுவனங்கள் விளம்பரத்திற்காக ஏன் செலவு செய்கிறார்கள்?

*கிரிக்கெட் போட்டி நடத்துவதால் இவர்கள் என்ன லாபத்தை எதிர் பார்க்கிறார்கள்?

*நம் அண்டை தேசமான பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை என்ன?

*பாகிஸ்தானில் நாம் வாங்குவதை விட குறைந்த விலைக்கா வாங்குகிறார்கள்?

*அவர்கள் நாட்டு எண்ணெய் நிறுவனங்களக்கு நம்மை விட அதிக நஷ்டம் வருகிறதா?

*கடைசியாய், பெட்ரோலின் மீது இவ்வளவு அதிகமான வரி விதிப்பதற்கு காரணம் அது என்ன சொகுசு பொருளா?

நம் நாட்டு ஒரு நாள் உற்பத்தி 8,80,000 பேரல்கள் இறக்குமதி 21,00,000 பேரல்கள். கூட்டி கழித்து பார்த்தால் 30% உள்நாட்டு உற்பத்தி என்று வரும்

ஒரு பேரல் [158 லிட்டர்] கச்சா எண்ணெய் விலை, 97 டாலர்
அதாவது 4365 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 27.35 ரூபாய்..
அதில் 500 ml பெட்ரோல் மட்டுமே எடுக்கப் படுவதால் அதன் விலை 14 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் பெட்ரோல் 28 ரூபாய்...
அதனுடன் சுத்திகரிப்பு செலவு, போக்குவரத்து செலவையும் இணைத்தால் இப்பொழுது எண்ணெய் நிறுவனங்கள் வாங்குவதை விட குறைவாக வாங்குவதில்லை...

மேலும் பெட்ரோல் விலை வாசி குறித்த கட்டுரைகளை படிக்க..

என்ன கொடுமை சார் இது?


ஆகாயத்தில் விலை..

6.9.11

வழிகளை திறக்க போராடுவோம்..

வழிகளை மூடும் சமரசங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வரைந்த பொழுது இதற்கு நண்பர் சிவக்குமார் அவர்கள் பதில் அனுப்புவார் என்று தெரியாமல் போய் விட்டது..
பதில் அனுப்பியதால் அந்த பதிவுக்கு தொடர் எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு, பதிவை படிக்க வேண்டிய கஷ்டம் உங்களுக்கு..

தினகரனில் வெளியான தலையங்கத்தை எனக்கு அனுப்பி வைத்தார் நண்பர்..
அதிகப் படியான விலை கேட்பதை கண்டிப்பதை விட்டு விட்டு நேர்மையாக வியாபாரம் செய்யும் சில சிறு முதலாளிகளின் பிழைப்பிலும் மண் போடுவது போல் எழுதியுள்ளனர் தினகரனில்...

ஒவ்வொரு பொருளுக்கும் 10 முதல் 40 % வரை லாபம் இருப்பது போல் தலையங்கத்தை தீட்டி உள்ளனர்.. [பெரிய அங்காடிகளில் தரும் தள்ளுபடி அவர்கள் மொத்தமாக வாங்குவதால் வரும் schemes மூலமாக இருக்கிறதே தவிர வரும் லாபத்தில் இருந்து தள்ளுபடி அல்ல] படிக்கும் சாதாரண மக்களுக்கு உண்மையான நிலை தெரியாமல், பல நேர்மையான கடை காரர்கள் தங்கள் வாடிக்கையாளரை இழக்க போவது என்னவோ உறுதி.. மேலும் இப்படி பட்ட கட்டுரையால் போலிகள் சர்வ சாதாரணமாய் புழங்கும் அபாய நிலையும் அதிகரிக்க வாய்ப்புண்டு.. [ஒரிஜினல் சோனி குறுந்தகடுகளை விட அதே போல் உள்ள போலி குறுந்தகடுகள் விலை குறைவு, ஆனால் தரம் குறைவு]

உண்மையில் மளிகை கடைகளுக்கு வரும் பொருட்களில் mrp அச்சிடப்பட்ட அனைத்திலும் எட்டு சதவிகிதத்திற்கும் மேல் லாபம் இருப்பதில்லை... வேண்டுமானால் வாட் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லாத மிகவும் சிறு கடைகளுக்கு அதனுடன் சேர்ந்த 5 % வரியோ அல்லது 15 % வரியோ லாபமாக இனைய வாய்ப்புண்டு.. தினகரன் கூறியது போல் லாபம் வருவது ஏலேக்ட்ரோனிக் பொருட்கள் விற்கும் கடைகள் போன்றவையாக இருக்கலாம் என்ற ஊகம் தான் மனதில் அடிக்கிறது.. அது எந்த அளவுக்கு உண்மை என்பது அந்த துறையில் இருப்பவர்கள் தவிர பிறர்க்கு தெரிய போவதில்லை.. சில புத்தகங்கள் அச்சகங்களும் தங்கள் புத்தகத்தில் 30 சதவிகித வரை லாபம் தருகின்றன... 

இப்பொழுது சமீப காலங்களில் அலைபேசி நிறுவனங்களின் ரீசார்ஜ் அட்டைகள் மேல் குறிப்பிட்டுள்ள தொகையை விட ஒரு ரூபாய் அதிகமாக வாங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.. அதை விட முக்கியமாக என் நண்பர் கூறியது.. ஆன்லைன் பாங்கிங் மூலமாக இணையத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு வெளியில் ரீசார்ஜ் செய்வதை விட நான்கு ரூபாய் அதிக டாக் டைம் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.. எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை..

அதிக விலை வாங்கும் கடைகள் ரசீதும் குடுக்காததால் சட்டப் படி நடவடிக்கை எடுக்கவும் வழி இல்லை

ஆக அதிக பட்ச விலை என்ன என்று குறிக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு மேல் கேட்கும் கடைகளை ஏற்கனவே முந்தய பதிவில் குறிப்பிட்டுள்ளபடி புறக்கணிப்பதை தவிர வேறு வழி இல்லை... .. சமரசங்கள் நாம் செய்துக் கொள்ளும் வரை இது போல் பகல் கொள்ளை நடை பெற்றுக் கொண்டே தான் இருக்கும்.. புறக்கணிப்பதின் மூலம் வழிகளை திறக்க போராடுவோம்..


26.6.11

பொருளாதார நிபுணர்கள்...


நம் நாட்டில் நாம் கூறுபவர்களின் நிபுணத்துவத்தை வைத்து, அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தில் உள்ளோம்....
அவர்கள் கூறுவது பொய்யா இல்லையா என்று கூட ஆராய்வது இல்லை...
நம் நாட்டை தற்பொழுது ஆட்சி செய்பவர் ஒரு மிகப் பெரிய பொருளாதார நிபுணர்...
ஆகையால் அவர் பொருளாதாரம் குறித்து என்ன கூறினாலும் கண் மூடி கேட்டுக் கொள்கிறோம்...
இன்று இந்து நாளிதழில் வெளியாகி உள்ள அரசு விளம்பரம், உண்மையை குழிதோண்டி புதைப்பதாக உள்ளது...

1. அரசு: நமது நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 16 % தான்...

ஆணிவேர்: நம் நாட்டு ஒரு நாள் உற்பத்தி 8,80,000 பேரல்கள்
இறக்குமதி 21,00,000 பேரல்கள்.
கூட்டி கழித்து பார்த்தால் 30% உள்நாட்டு உற்பத்தி என்று வரும்

ஆதாரம்: http://www.eia.gov/countries/country-data.cfm?fips=IN

2. ஒரு பேரல் [158 லிட்டர்] கச்சா எண்ணெய் விலை, நேற்று 97 டாலர்
அதாவது 4365 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 27.35 ரூபாய்..
அதில் 500 ml பெட்ரோல் மட்டுமே எடுக்கப் படுவதால் அதன் விலை 14 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் பெட்ரோல் 28 ரூபாய்...
அதனுடன் சுத்திகரிப்பு செலவு, போக்குவரத்து செலவையும் இணைத்தால் இப்பொழுது எண்ணெய் நிறுவனங்கள் வாங்குவதை விட குறைவாக வாங்குவதில்லை...

ஆதாரம்:
http://www.eia.doe.gov/neic/infosheets/crudeproduction.htm

http://knopok.net/prices-chart/oil

3. அரசு: டீஸல் கு அரசு தரும் மானியம் ஒரு லிட்டருக்கு 6.13 ரூபாய்...
ஆணிவேர்: ஒரு லிட்டருக்கு நீங்க வசூலிக்கும் வரி எவ்வளவு நைனா?
நீ அரிசி எடுத்துகிட்டு வா, நான் உமி எடுத்துகிட்டு வரேன், ரெண்டு பெரும் ஊதி ஊதி தின்போம்...

4. அரசு: மற்ற அண்டை நாடுகளை விடவும் நம் நாட்டில் விலை கம்மி...
ஆணிவேர்: நான் பத்தாவது வகுப்பில் வாங்கிய மதிப்பெண், என் அண்டை வீட்டு ஒன்னாம் வகுப்பு படிக்கும் மாணவன் வாங்கிய மதிப்பெண்ணை விட அதிகம்... அக்காம்பா...

5. அரசு: டீஸல் விலையை மூன்று ரூபாய் ஏற்றிய பிறகும் 66,000 கோடி ருபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு..
ஆணிவேர்: இந்த ஆண்டு 2.5 லட்சம் கோடி வசூலிக்கப் படாத வரிகளை வசூலிச்சிட்டீங்களா?

ஆமாங்க, நீங்க குடுத்திருக்கிற விளம்பரத்துக்கு ஆன செலவு என்ன?

25.6.11

பூனைக்கு மணி...


பெட்ரோல் விலை வாசி உயர்வை பற்றி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா? என்று கேட்டேன்...
அவர் சர்வ சாதாரணமாய் சொன்னார், பாகிஸ்தான் முஸ்லிம் நாடு அதனால் அவங்களுக்கு பெட்ரோல் விலை கம்மிய கிடைக்குது அப்படின்னார்...
இதுக்கு மேல அவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல...
பெட்ரோல் விலை வாசி உயர்விலேயும் மத வெறுப்பை தூண்ட முடியும்னு தெரிஞ்சிகிட்டேன்..
பெட்ரோல் விலையில் நாம் எவ்வளவு வரி கட்டுகிரோம்னு எத்தனை ஊடகங்கள் எழுதுகின்றன என்று தெரியவில்லை...
ஆனால் பல இனைய தள பதிவர்கள், எழுதி இருக்கிறார்கள்...

மத்திய அரசுக்கு அறிவு இல்லேன்னா, எனக்கு என்ன என்று நம் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்...
நீ விலை எத்தனது தப்பு என்று சொல்லும் அம்மையார், இவர்கள் விதிக்கும் 30% வரியை குறைத்துக் கொள்ள மறுக்கிறார்... இதுல மத்திய அரசுக்கு செல்லும் வரி 50% என்பது தனி கதை...

"Andhra Pradesh levies the highest sales tax of 33 per cent on petrol in the country, followed by Tamil Nadu, where it is 30 per cent. Kerala, which levies 29.01 per cent VAT on petrol, has the highest sales tax rate for diesel at 24.69 per cent."

மேலும் படிக்க: http://www.simpletaxindia.org/2011/05/petrol-up-r5-litre.html

சிறு வயதில் படித்த ஒட்டக கதை தான் ஞாபகம் வருகிறது,
ஒவ்வொரு மயில் தொகையாய் ஒட்டக முதுகில் ஏற்றிக் கொண்டே வந்ததால்,
ஒரு கட்டத்தில் ஒட்டகம் முதுகு ஒடிந்து இறந்தது என்று முடியும்...

மனிதன் முதுகு ஒடிந்து இறக்க மாட்டான், பொங்கி எழுந்து விடுவான்...

http://www.thehindu.com/news/national/article2132634.ece

23.6.11

வெயில் கொஞ்சம் ஜாஸ்தியோ?


இன்று டெல்லியில் வெயில் [36 degree C] ஒன்றும் அதிகமில்லை தான், இருந்தாலும் நமது மத்திய நிதி அமைச்சர் கொஞ்சம் குழம்பி தான் பேசியிருக்கிறார்...
உணவு விலை வாசி அதிகமானதை ஏற்றுக் கொள்ள முடியாதாம்...
இப்படி விலை வாசி ஏறிக் கொண்டே போவதை தாங்கி கொள்ள முடியாதாம்...
கேட்கப் போகும் கேள்வியை முன்பே தெரிந்து கொண்டு இவரே அந்த கேள்வியை கேட்டு விட்டதால் கேள்வி கேட்க போன ஊடக நிருபர்கள் இவரை விட அதிகமாய் குழம்பி போய் விட்டார்கள்...
ஒரு வேலை உள்கட்சி பூசல் என்பது இது தானோ...
விலை வாசி உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை மக்களாகிய நாங்கள் சொல்லுகிறோம், அதே கேள்வியை நீங்கள் கேட்டு பதில் சொல்லாமல் தப்பித்து விடாதீர்கள்...
எனக்கு கேக்க மட்டும் தான் தெரியும் என்னும் தருமி வசனம் தான் ஞாபகம் வருகிறது...

http://economictimes.indiatimes.com/news/economy/indicators/high-inflationary-regime-not-acceptable-pranab-mukherjee/articleshow/8962242.cms

18.6.11

இட்லி செய்வது எப்படி?


அரிசி உளுந்து இரண்டையும் ஊற வைத்து மாவாக அரைத்து, மாவை தட்டில் ஊத்தி அந்த இட்லி பானையை நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து அதை சூரிய ஒளியில் வேக வைக்க வேண்டும். அதை தவிர இட்லி செய்வதற்கு வேறு எந்த மாயமும் மந்திரமும் இல்லை என்று சொன்னால், நாம் சொன்னவர்களை கண்டிப்பாக கீழ்பாக்கத்திலோ, பாகாயத்திலோ, பிடிக்காதவர்கள் என்றால் ஏர்வாடியில் சேர்த்து விடுவோம்...
ஆனால் சொல்வது ரிசர்வ் வங்கி என்பதாலும், சொல்லப்படுவது இட்லி சமாச்சாரம் இல்லை என்பதாலும் கேட்டு கொண்டு சும்மா இருக்கிறோம்...
பெட்ரோல் விலையை குறைத்தாலே நம் விலைவாசி உயர்ச்சி அதல பாதாளத்தில் விழுந்து விடும்.. அதை விட்டு விட்டு விலை வாசி உயர்வை [பண வீக்கத்தை] குறைக்க எந்தவிதமான மந்திர கோலும் இல்லை என்று சொல்லி கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்....
பெட்ரோல் விலை உயர்வை கட்டுபடுத்த முடியாது என்று சொல்லி மறுபடியும் கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்...
என்னங்க நான் சொல்றது...

http://www.rediff.com/business/slide-show/slide-show-1-infla-theres-no-magic-wand-to-bring-down-inflation-rbi/20110617.htm

12.6.11

என்ன கொடுமை சார் இது?


நாம் இங்கு கிட்ட தட்ட 70 ரூபாய் கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு வண்டி ஓட்டும் பொழுது...
உள்ளூர் விமானங்கள் ஒரு லிட்டருக்கு 61 ரூபாய் கொடுக்கின்றனர்...
சரி வெளிநாட்டு விமானங்களுக்கு பெட்ரோல் விலை அதிகமாய் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்தால்,
அவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 44 ரூபாய் கொடுக்கின்றனர்...

நம்ம அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால் பெட்ரோல் நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறதாம்...
ஏன் நஷ்டம் வராது?

http://www.iocl.com/Products/AviationTurbineFuel.aspx

விமான பெட்ரோலின் விலையை தெரிந்து கொள்ள மேலே உள்ள இணைப்பில் உள்ள பக்கத்தில், கொடுக்கப் பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்..

பயங்கர நஷ்டத்தில் இயங்குவதால் டீஸல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்...

http://www.hindustantimes.com/Worried-Reddy-meets-FM-on-bleeding-oil-PSUs/Article1-707997.aspx

25.5.11

உண்டு முடித்தவுடன்,


பெட்ரோல் விலை உயர்வுக்கு நமது அமைச்சர் கூறியிருக்கும் பதில் சூப்பர் ரகம்... இந்த மாதிரி பதில் அளிப்பதற்கு காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தால் மட்டுமே முடியும் போலிருக்கிறது...
பெட்ரோல் விலை ஏறி இருப்பதற்கு அரசு காரணம் இல்லை என்றும், சர்வதேச விலை உயர்ச்சியே காரணம் என்று யாருக்கும் தெரியாத முக்கியமான செய்தியை வெளியிட்டிருக்கிறார்...
இவர் இப்படி கூறிவிட்டதால்,
அடுத்து வருங்காலத்தில் எப்படி எல்லாம் பதில் வரும்...
ஒரு சின்ன கற்பனை...
வெங்காயம் விலை ஏற்றத்திற்கு அரசு காரணம் இல்லை, விவசாயிகள் தான் காரணம்...
பால் விலை ஏற்றத்திற்கு மாடுகள் தான் காரணம்,
நீர் விலை ஏற்றத்திற்கு மழை இல்லாதது தான் காரணம்...
ஆஹா ஆஹா...

http://ibnlive.in.com/news/no-government-role-in-petrol-price-hike-pranab/152515-37.html

16.5.11

ஆகாயத்தில் விலை..


பெட்ரோல் விலை ஏற்றம், கொஞ்சம் கொஞ்சமாக லிட்டருக்கு நூறு ரூபாயை தொட்டு விடும் போலிருக்கிறது...
என்ன தான் விலை ஏறினாலும், விலை ஏற்றத்திற்கு முதல் நாளே பத்து லிட்டர் பெட்ரோல் போட்டு ஐம்பது ரூபாயை சேமித்து விட்டேன் என்று கூப்பாடு போடுகிறான் நம் தமிழன்...
நமது பெட்ரோல் ஐந்து ரூபாய் ஏறி விட்டது..
flight petrol 1.70 பைசா லிட்டருக்கு குறைந்து விட்டது...
ஏற்கனவே கூறியது போல் வானத்தில் பறப்பவர்கள் ஏழைகளே...
ஏனென்றால் விண்ணை முட்டும் விலை ஏற்றத்தை அவர்களால் எப்படி தொட முடியும்...

http://www.iocl.com/Products/AviationTurbineFuel.aspx

11.5.11

ஆகாயத்தில் பறப்போம்...


1997 லிருந்து இன்று வரை பொருளாதார அறிவுரை கமிட்டியில் இருப்பதால், இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் என்ற கனவு போலும்...
தூக்கத்தில் இருந்து அவரை யாராவது எழுப்பினால் நன்றாக இருக்கும்...
காஸ் சிலின்டர் பயன்படுத்துவது பெரும்பாலும் பணக்காரர்களே என்று திருவாய் மலர்ந்து அறுளி உள்ளார்...
ஆனால் இவர் மறந்து விட்டது என்னவோ ஒன்றே ஒன்று தான், விமானத்தில் பறப்பவர்களை பற்றி, இல்லை என்றால் ஆகாயத்தில் பறப்பவர்கள் அனைவரையும் இவர் ஏழையாக கருதுகிறாரோ என்னவோ, அதுவும் நமக்கு தெரியவில்லை..
விமானத்திற்கான பெட்ரோல் விலை ஏற்றத்தை பற்றி மட்டும் என் எந்த கர்மம் புடிச்சவனும் பேச மாட்டேன்கிறார்கள் என்பது தான் என் புத்தியை உதைத்து கொண்டே இருக்கிறது...

http://www.moneycontrol.com/news/business/sporadic-price-hikepetrol-likely-kirit-parekh_541854.html

ஒரு கிலோ லிட்டர் ஜெட் பெட்ரோல் விலை சென்னையில் 65201 ரூபாய். அதாவது ஒரு லிட்டருக்கு 65.201 ரூபாய் மட்டுமே...
போனால் போகட்டும் ஆகாயத்தில் பறப்பவர்கள் ஏழைகள் தானே...

http://www.iocl.com/Products/AviationTurbineFuel.aspx

1.4.10

திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும்...


அரசாங்கமும் படத் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டி போட்டுக் கொண்டு திருட்டு விசிடியை ஒழித்து கட்ட போராடினாலும் பொது மக்கள் திருட்டு விசிடியை வாங்குவதை நிறுத்தா விட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது...
அதே போல போலி மருத்துவர்களால் எண்ணற்ற பிரச்சினைகள் வந்தாலும் பொது மக்களாய் அவர்களிடம் போகாமல் இருக்கும் வரை அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை...
இந்த இரண்டு விஷயங்களையும் மேலோட்டமாய் பார்த்தல் வேறு வேறு விஷயமாய் தெரிந்தாலும் இரண்டுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன என்றால் அது பொது மக்களின் ஆசிர்வாதம் மட்டுமே..
ஆகா, பொது மக்கள் இப்படி இருப்பதற்கு என்ன உண்மையான விஷயம்... அது வேறு ஒன்றுமில்லை, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து கொண்டே வருவதும் சிலவற்றை அவர்களால் செலவு செய்யாமல் இருக்க முடியவில்லை
என்பதே... ஒரு சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நபருக்கு முப்பது முதல் நாற்பது ருபாய் வரை செலவு ஆகிறது, ஒரு குடும்பமே செல்லும் போது அது குறைந்தது நான்கு மடங்கு ஆகிறது, ஆனால் ஒரு திருட்டி சிடியை வாங்கி பார்த்தால் அது முப்பது ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது.... தியேட்டருக்கு போனாலே பாப் கார்ன் வாங்கி தர வேண்டும் என்னும் செலவும் குறைகிறது,
அதே போல ஒரு மருத்துவரிடம் போனால், குறைந்தது நூறு ரூபாய் வரை செலவு ஆகிறது, போதாதற்கு மருந்து மாத்திரைகள் வேறு...
அரசு மருத்துவமனை என்றால் சிபிஎம் பேரா மற்றும் செப்ட்றான் தவிர வேறு மாத்திரைகள் தருவதில்லை, இதை களைந்து எடுக்க வேண்டிய அரசாங்கம் இலவச காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் ஏற்கனவே சரியாக செயல்படாமல் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா எடுக்கின்றது... இந்த காப்பீட்டு திட்டத்திற்கு செலவு செய்யும் தொகைகளுக்கு பதிலாக, அரசு நம் மருத்துவமனைகளை மேம்படுத்தினாலே போதுமானது,
ஆனால் இதை எல்லாம் செய்யாமல் தவறான கொள்கை முடிவுகளால் திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும் பெரிய தலைவளிகளாய் இருக்கிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு தலைவலிக்கு தைலம் மட்டும் தேய்த்து கொண்டிருக்காமல் ஊழல் என்னும் புற்று நோயை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலே போதுமானது.... செய்வார்களா... செய்ய வைப்போமா?

29.3.10

சொகுசு பொருளாம் பெட்ரோல்..


நம் நாட்டை ஆண்டு வரும் ஏழை பங்காளர்களுக்கு நாட்டை ஆழ காசு வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் ஒரே காரியம் பெட்ரோலின் மீது வரியை உயர்த்துவது மட்டுமே... வரும் ஏப்ரல் முதல் நாளில் இருந்து நமது நாட்டில் நமக்கு மிகவும் பழகி போய் விட்ட பெட்ரோல் விலை ஏற்றம் அமுலுக்கு வருகிறது... பெட்ரோலின் விலை சர்வதேச சந்தையில் உயருவது என்னவோ உண்மை தான், ஆனால் சில பதில் வராத கேள்விகள் இந்த நாட்டில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது... அவற்றில் சில இதோ...
*நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பெட்ரோலை என்ன விலை கொடுத்து வாங்குகிறார்கள்?
*அரசு எரிவாயு நிறுவனங்கள் விளம்பரத்திற்காக என் செலவு செய்கிறார்கள்?
*கிரிக்கெட் போட்டி நடத்துவதால் இவர்கள் என்ன லாபத்தை எதிர் பார்க்கிறார்கள்?
*நம் அண்டை தேசமான பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை என்ன?
*பாகிஸ்தானில் நாம் வாங்குவதை விட குறைந்த விளைக்கா வாங்குகிறார்கள்?
*அவர்கள் நாட்டு என்னை நிறுவனங்களக்கு நம்மை விட அதிக நஷ்டம் வருகிறதா?
*கடைசியாய், பெட்ரோலின் மீது இவ்வளவு அதிகமான வரி விதிப்பதற்கு காரணம் அது என்ன சொகுசு பொருளா?