politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

20.9.10

நீயா நானா?

நீயா நானா என்னும் நிகழ்ச்சியில் இன்று நம் செயல்களை தீர்மானிப்பது விதியா? அல்லது இயற்கையா என்னும் அரத பழசான ஒரு கேள்வியை கேட்டு நோகடித்தார்கள். அதில் ஒருவர் மட்டும் தெளிவாக ஆன்மீகத்தையும் விதியையும் தனி தனியாக பார்க்கிறேன் என்று விதி என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சாதித்து விவாதத்தில் வென்றார்.
ஆனால் அவர் பார்க்க மறுத்த மறு பக்கம் என்ன வென்றால் விதி என்ற ஒன்று இல்லை என்றால் கடவுள் என்ற ஒன்று இல்லை என்று தான் அர்த்தம்.
அது போகட்டும் ஒரு நாள் இதை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு அவர் மேலும் இவ்வுலகத்தில் மண்டி கிடக்கும் இது போன்ற பல மூட நம்பிக்கைகளை ஒழிப்பார் என்று நம்புவோமாக...

19.9.10

புரட்சிக்கு வழி காட்டுமா பள்ளிக்கூடங்கள்?


வெள்ளிக் கிழமை காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கும் போதே, போச்சம்பள்ளி பள்ளியை எரித்ததை கண்டித்து தனியார் பள்ளி நிறுவனங்கள் தங்கள் பள்ளிக்கு விடுமுறை என்று கூறி தங்கள் எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்தனர். அரசாங்கம் இந்த நடத்தையை கண்டித்து அறிக்கை விட்டும், காரணம் கோரி மனு அனுப்பியும், சரியான பதில் அளிக்க மறுத்தால் நடவடிக்கை என்று கூறியும், லெனின் அரசை பற்றி என்ன எழுதி இருக்கிறாரோ அதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இங்கு நம் முன் இருக்கும் கேள்வி என்ன என்றால், நடந்த சம்பவம் குறித்து அல்ல, திரை மறைவில் என்ன நடக்கிறது என்பதே... ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு, read between lines... ஆக அரசின் கவனம் முழுவதும் புரட்சி என்பது எந்த உருவத்திலும் மாணவர்களுக்கு தெரிய கூடாதென்பதே... நம் வரலாறுகளில் பல வகையான உண்மைகள் மறைத்தும் திரித்தும் எழுதி வைத்துள்ளார்கள் என்பது ஒழுங்காக வரலாறு படிப்பவர்களுக்கு தெரிந்த விஷயம்... ஆனால் இப்படி தெரிந்து கொண்டவர்கள் மொத்தமாக 15 சதவிகிதம் கூட கிடையாதென்பது தான் உண்மையான நிலவரமாகும். பகத் சிங்கை ஒரு தீவிரவாதியாக உருவகம் படுத்தும் இந்த அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு முறை அவரது குரலை பதிவு செய்கிறேன்.. இன்குலாப் ஜிந்தாபாத்... (புரட்சி வாழ்க)

11.9.10

கொழுகட்டைக்கு என்று ஒரு நாள்...


கொழுகட்டயோ கொழுகொட்டயோ, பிள்ளையார் பெற சொல்லி அவர் போல தொப்பை வளப்பதற்கு இன்னும் ஒரு நாள்... என் பொண்ணுகிட்ட ரம்ஜான் ஏன் கொண்டாடறாங்க என்று கேட்டேன்? 8 வயசு பொண்ணு ஜாலிய இருக்க தான் என்று பதில் சொன்னாள். சரி தான் நமக்கு தப்பாம நம்ம பொன்னும் பிறந்திருக்கிராள்னு நினைச்சிகிட்டேன்.. அடுத்த நாளே விநாயகர் பிறந்த நாள்... இந்த பிள்ளையார் என்ன தப்பு செஞ்சார்னு தெரியலப்பா, போலீஸ் காவல் போட்டு ஒரு மேடையிலே அரெஸ்ட் பண்ணி, மூணு நாள் கழிச்சு ஊர்வலமா கூட்டிகிட்டு போய் அடி அடின்னு அடிச்சு கைய காலை உடைச்சு, தண்ணியில போட்டு மூழ்கடிக்கிரானுங்க பாருங்க... மனசு ஈரமா இருக்கிறவனுக்கு கண்ணுல தண்ணி வந்துடும்... ஆனா இவனுங்களோ கொஞ்சம் கூட கவலை படாம பிள்ளையார் மட்டுமா சாகடிக்கிரானுங்க, குளம் கடல்ல இருக்கிற உயிரினங்களையும் சாகடிக்கிரானுங்க... சாமி மட்டும் எழுந்து வந்து என்னடா கூத்து இதுன்னு கேட்டிடுச்சுன்ன, ஊருக்குள்ள போலீஸ் தேவை இல்ல, ராணுவம் தேவை இல்ல, கோயில் குளம் எதுவுமே தேவை இல்ல... அது வரைக்கும் இவனுங்களும் ஓய போறதில்ல, இதை பத்தி எழுதாம நானும் ஓய போறதில்ல....