politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
Showing posts with label விளையாட்டு அரசியல். Show all posts
Showing posts with label விளையாட்டு அரசியல். Show all posts

16.8.11

விளையாட்டா போச்சு

கூலி வேலை செய்யும் தொழிலாளி குறைந்த பட்சம் உடல் உழைப்பை ஆறு மணி நேரங்கள் பயன்படுத்தி வேலை செய்தால் 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஒரு நாள் சம்பளமாய் கிடைக்கும்.. 
கணினி முன் அமர்ந்து மூளையை கசக்கி வேலை செய்யும் தொழிலாளி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு முதல் 14 மணி நேரம் உழைத்து அவன் படும் சிரமத்திர்க்கேற்ப நாற்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மாத சம்பளம் வாங்குகிறான்.. 


சம்பள ஏற்றத்தாழ்வுகள் முதலாளித்துவ உலகில் ஏற்புடையது என்பதால் என் கேள்வி அதை பற்றி அல்ல.. 

மேற்கூறிய சம்பவங்களை நம் இந்திய மட்டை பந்து அணியின் செயல்பாடுகளுடன்  ஒத்துப் பார்ப்பது ஆகும்... 

முன்பெல்லாம் தோல்வி அடைந்தால் மிகவும் சாதாரணமாக வெற்றி பெற்ற எதிர் அணியினர் சிறந்த முறையில் விளையாடினார்கள் என்று ஒத்துக் கொள்ளும் மனப் பாங்கும் காணாமல் போய் கொண்டிருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது... விளையாடும் வீரர்களுக்கு ஓய்வில்லை, காயம் அடைந்த வீரர்கள் ஓய்வெடுக்க விட வேண்டும் என்று கூறுவது நம் உழைக்கும் வர்க்கத்தை ஒரு நிமிடம் மனக்கண்ணில் நினைத்து பார்க்க வைக்கிறது... உடல் நிலை சரி இல்லை என்றாலே ஒரு நாள் லீவு கேட்டால் நம்மை கொலை குற்றம் செய்தவன் போல் பார்க்கும் உலகம் இது என்பது மனக் கண்ணில் அகல மறுக்கிறது. 

அணில் கும்ப்ளே மூக்கில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்தியது இன்னும் மனக் கண்ணில் இருந்து அகல மறுக்கிறது... 
இவர்கள் விளையாட இவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், பணம், உயர்தர சிகிச்சை மற்றும் உல்லாச வாழ்க்கை என்பவற்றை கணக்கில் கொண்டால் ஓய்வில்லை என்று சொல்வது சப்பை கட்டு கட்டுவதாக தெரிகிறது.. மேற்கிந்திய தீவுகளிடம் சென்ற இரண்டாம் நிலை வீரர்களிடம் இருந்த உற்சாகம் இங்கிலாந்துக்கு சென்ற வீரர்களிடம் இல்லை என்பதே உண்மை... 

ஆயிரம் பத்தாயிரம் என்று கஷ்டப் பட்டு சம்பாதித்த காசை தான் விளையாட்டரங்கில் செலவிடுகிறான்.. அந்த காசு வீணாய் போனது என்ற துக்கத்தில் ஒரு ரசிகன் பேசியதை கூட தாங்கி கொள்ளும் மன நிலையில் வீரர்கள் இல்லை என்பது கசப்பான உண்மை... 

ஆக அந்த மன நிலைக்கு வருவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது... விளையாட்டு என்பதையும் மீறி வியாபாரம் புகுந்து விளையாடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது... 

விலை வாசி உயர்வில் ஊக வணிகத்தின் பங்கு என்ன என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு தெரியும் அது போல் மட்டை பந்து, மல்யுத்த விளையாட்டை போல் ஊக விளையாட்டுக்கு தன்னை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது உண்மையோ என்று என்ன தோன்றுகிறது... 
அனைத்து மதங்களும் போலியானது என்ற உண்மை அனைத்து மதங்களின் கொள்கைகளை படித்தவர்களுக்குன் நன்கு புரியும், அது போல் நம் இந்திய தேசத்தில் மட்டை பந்து விளையாட்டும் ஒரு மதமாய் உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஊடகங்கள்.. 

சச்சினை கடவுளாக சித்தரிக்கும் வேலையும் நடக்கிறது... எந்த மது பான விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று தன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததாக மார் தாட்டி கொள்ளும் சச்சினை ஏமாற்றி கிங்க்பிஷேர் விளம்பர படத்தில் முன்னணியில் நிறுத்தி உள்ளார் விஜய் மல்லையா... தான் நடித்து கொடுத்தது சோடா விளம்பரத்திற்கு தான் என்று சச்சின் நம்பினால் அவரை நம்புவதற்கு விஷயம் தெரிந்தவர்கள் தயாராய் இருக்கப் போவதில்லை...

இங்கிலாந்து அரசை காக்க இந்திய அணி விட்டுக் கொடுத்ததா?
சூதாட்டத்தின் தலை நகரான இங்கிலாந்து, நம் வீரர்களை காவு வாங்கியதா?
இந்தியாவில் நடக்கும் குழப்பங்களை நீர்த்துப் போக இவை அரங்கேற்றப் பட்டதா?
என்று எண்ணற்ற கேள்வி எழுந்தாலும் என் மனதில் ஒரே கேள்வி...
என்று நம் மக்கள் முக்கியமான பிரச்சினைகள் மேல் கவனம் செலுத்தாமல் இது போன்ற மட்டை பந்து விளையாட்டை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது தான்?

[விளையாட்டை பற்றியும் திரை உலகை பற்றியும் எழுதக் கூடாது என்று நினைப்பதை, அதனுள் ஒளிந்திருக்கும் அரசியல் என்னை விடுவதில்லை... இதன் மீது உள்ள என் மௌனத்தை கலைக்க விக்கிரமாதித்யனின் வேதாளம் போல் அடிக்கடி வந்து கேள்வி கேட்டு பதில் வரவைக்கின்றன][எழுதியுள்ள கட்டுரைக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்தால் ஆணிவேர் பொறுப்பல்ல]

7.7.11

ஊக்கம்... அது கைவிடேல்...

நமது நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் பிடி படும் பொழுது நமக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம்... நமது கலாச்சாரம் எதிரிகளை முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் நின்று போர் புரிவதை ஆதரிப்பதால் இப்படி பட்ட அவமானகர எண்ணங்கள் நம் மனதில் உதிப்பதை தடுக்க முடிவதில்லை...
உண்மையில் தவறு எங்கு நேருகிறது என்று ஆராய்வது, நான் எப்பொழுதும் சொல்வது போல் அடி வரை பாய்வதில்லை...

தன்னம்பிக்கை...

இந்தியர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் குறைவு...
தன்னடக்கம் என்று கருதி கொண்டு தன்னம்பிக்கை அற்று பல பேர் தங்கள் திறமையை காற்றில் வீணாய் பறக்க விடுவதை இந்தியாவில் பொதுவாக பார்க்க முடிகிறது...

நான் ஒரு மருந்து கடையில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு தமிழர் என்னிடம் வந்து... ஸ்டீராய்டு மருந்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்...
"வைத்திருக்கிறோம்."
"எவ்வளவு?"
"முதல்ல டாக்டர் சீட்டை குடுங்களேன்"
"இல்லை சார், மிலிடரி செலேக்சனுக்கு போறேன். அதுக்கு தான்"
"ஊக்க மருந்து மாதிரி யூஸ் பண்ணலாம்னு பார்க்கறீங்கள?"
"ஆமாங்க"
"மருத்துவர் சீட்டு இல்லாமல் குடுக்கறது இல்லீங்க..."
"வட நாட்டு காரன் மொத்த பெரும், இதை போட்டுகிட்டு தான் கலந்துக்கிறாங்க. அவங்க ஜெயிச்சு வேலை வாங்கிடுறாங்க, எங்களால் ஜெயிக்க முடியல.."
"கண்டுபிடிக்க மாட்டாங்களா?"

அப்படி என்றால் இத்தனை காலமாய் ராணுவத்தில் இப்படி பட்ட ஆட்களை தான் தேர்ந்தெடுக்கிறார்களா?
ராணுவ ஆளேடுப்புக்கு வருவோரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப் படுவது உண்டா?
இது பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..
ஒரு செயலில் வெற்றி பெற, ஊக்க மருந்து தேவை இல்லை, ஊக்கம் மட்டும் போதும்...

http://www.thehindu.com/sport/other-sports/article2201600.ece

31.5.11

அடிமை..


அனைத்து தொழிலாளிகளையும், உழைப்பை மூலதனமாக போடும் ஒரு மனிதனாக பார்க்காமல், அடிமையாக தான் ஒவ்வொரு முதலாளிகளும் பார்த்து கொண்டு இருக்கின்றனர்... இந்த சங்கதி இல்லை மறை காய் மறையாக இருந்து வந்தாலும், பணம் கொழிக்கும் ipl என்னும் விளையாட்டு வியாபாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது... இங்கு இரண்டு முதலாளிகள், bcci மற்றும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு முதலாளி...
இந்த அடிமை தத்துவம், kkr எனப்படும் ஷா ருக் கான் முதலாளியாக உள்ள ஒரு அணியில் வெளிப்பட்டுள்ளது... ஒவ்வொரு ipl போட்டிகளிலும் இந்த அணி எதோ ஒரு சர்ச்சையில் சிக்கி கொண்டே தான் இருக்கின்றது...
இந்த முறை ஒரு வீரரின் காயத்தையும் பொருட் படுத்தாமல் அவரிடம் இருந்து உண்மையை மறைத்து, அவரை பலி கடாவாக்கி அவரை அடிமையை விட மோசமாக நடத்தி இருக்கிறார்கள்...
மேலும் இந்த பிரச்சினை பெரிதாகும, அல்லது குழி தோண்டி புதைக்கப் படுமா என்பது போக போக தெரியும்...
எப்படியோ, தர்மம் ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் தான் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறான் மனிதன்..
அது கனவு தான் என்று தெரியும் போதும் விழித்துக் கொள்வான அல்லது நிரந்தரமாக தூங்கி விடுவானா என்பது தான் என் கவலை...

http://www.timesnow.tv/Gautam-Gambhir-continues-to-blame-KKR/articleshow/4374327.cms

[the picture contains a slave market in atlanta georgia in 1864] http://www.sonofthesouth.net/slavery/slave-trader.htm

27.4.11

விடை போச்சே...


இது நியூஸ்...
http://www.indianexpress.com/news/cwg-scam-vigilance-officers-pc-tampered-with-data-erased/782107/1

அவங்களுக்கு ப்ரீயா ஒரு யோசனை:
சார், ப்ரீயா ஒரு சாப்ட்வேர் இருக்கு..
undelete plus நு அதை இன்ஸ்டால் பண்ணி
எல்லா அழிக்கப் பட்ட எல்லா ஆவணங்களையும் கணினியில் இருந்து எடுத்தடலாம்..
அதுக்கான லிங்க் கீழே..

http://www.hiren.info/downloads/freeware-tools/8

கேட்டுச்சா....?

3.4.11

செத்த பாம்பை அடித்து விட்டு...


கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு இலங்கை வென்றால் யாருக்கு லாபம் என்பதையும், இந்தியா வென்றால் யாருக்கு லாபம் என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டும் ஒரு அலசல்...

http://www.medindia.net/news/indiaspecial/World-Cup-Cricket-Finals-Psychology-of-Betting-83102-1.htm

அதற்க்கு ஒரு படி மேல் போய் இலங்கை அதிபர் நகைச்சுவையாக பேசியிருக்கும் வார்த்தைகள் ஏன்டா இன்னும் பைத்தியமா இருக்கீங்க என்று நம்மை நக்கலடிப்பது போல் உள்ளது...

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A&artid=401564&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

செத்த பாம்பை அடித்து விட்டு மார் தட்டிக் கொள்ளும் bcci அணியும், அந்த நகைச்சுவைக்கு அஸ்திவாரம் இடும் சர்வதேச மட்டை பந்து வாரியமும், அடித்திருக்கும் அடுத்த நகைச்சுவை இந்த கோப்பை உண்மையானதா அல்லது போலியானதா...
போலியை கொடுத்து மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்று குமுறிய ஊடகங்களுக்கு பதில் கொடுத்திருக்கும் திரு லோர்காட் அவர்கள், நாங்கள் ஏமாற்றியது இந்திய மக்களை அல்ல, சுங்கத் துறையை தான் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார்... ஆக கோப்பை வாங்கியதும் இதன் பின்னணியில் நடந்த அனைத்து விஷயங்களும் அற்புதமாக இருந்தது...
வரும் எட்டாம் தேதி சென்னையில் ஆரம்பிக்கும் ipl போட்டிகளுக்கு, இவர்கள் குடுத்திருக்கும் விளம்பரம், நாட்டை மறந்து, பிரச்சினைகளை மறந்து, cricket இல் மூழ்கி போய்விடுங்கள்...
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே?

1.4.11

வரி வரியாய்! பக்கம் பக்கமாய்!


வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு பத்து ரூபாய் சம்பாதித்தாலும், நீ இந்தியனாக இருந்தாலும் வரி கண்டிப்பாய் கட்ட வேண்டும்...
ஆனால் வியர்வை சிந்தாமல் நோகாமல் நோம்பு கும்பிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தால் நீ வெளிநாட்டு பிரஜையாக இருந்தாலும், உனக்கு வரி விலக்கு உண்டு...
நீ வீடு ஒன்று கட்டி குடியிருப்பவர்களின் ரத்தத்தை உறிஞ்சி பணம் சம்பாதித்தால் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை...
அதே போல நீ ICC என்ற பெயரில் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நீ வரி கட்ட வேண்டியதில்லை...
ஏனென்றால் நீ சம்பாதிக்கும் பணத்தில் குளிர்சாதனத்திர்க்கு பணம் தர வேண்டும், உயர்தர உணவிற்கு பணம் தர வேண்டும், roaming இல் உள்ள அலைபேசிக்கு பணம் கட்ட வேண்டும், குடிக்கும் தண்ணீர்க்கு பணம் தர வேண்டும்... என்று எத்தனையோ கையை கடிக்கும் செலவுகள்... ஆகையால் அத்தனை செலவுகளும் வருமானத்தையும் மீறி கரை கடப்பதால் எங்களுக்கு வரி விலக்கு வேண்டும்... இன்னும் எத்தனை ஊழல்கள் வெளி வந்தாலும், எத்தனை தடவை குற்றங்கள் நடந்தாலும், திரு மன்மோகன் ஒரே பதிலை தான் திரும்ப திரும்ப சொல்ல போகிறார்...
சத்தியமா, எனக்கு தெரியாம நடந்திடுச்சிங்கோ!
[ஏப்ரல் பூல் செய்தியாக இருக்காது என்ற நம்பிக்கையுடன்]

http://www.indianexpress.com/news/With-Pawar-batting--Cabinet-clears-tax-breaks-for-ICC/770097/

23.3.11

உல்டா கோப்பை


cricket என்று அழைக்கப்படும் மட்டை பந்து விளையாட்டை ரசிப்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது, ipl என்னும் பணம் செய்யும் எந்திரத்தை bcci கண்டுபிடித்த பிறகு போட்டிகளின் முடிவை ஏற்பாட்டாளர்கள் முன்னதாகவே முடிவு செய்து விடுகிறார்களோ என்று ஒரு சந்தேகம் என் நெஞ்சத்தை உறுத்தியதை அடுத்து இந்த போட்டிகளை ரசிப்பதை நிறுத்தி கொண்டேன்.
என் சந்தேகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பல நிகழ்வுகள் இந்த உலக கோப்பையில் நடந்தேறி உள்ளது, இந்த போட்டிகளை கண்ட அனைவருக்கும் தெரியும்... கிலேடியேடோர் படத்தில் நடப்பது போல மக்களின் மறக்கும் தன்மையை ஊர்ஜிதப் படுத்த ஆட்சியாளர்களே நடந்து கொள்கிறார்களோ என்று சந்தேகமும் எழுந்துள்ளது...
போட்டி ஆரம்பிக்கும் முன் bcci அணியின் காப்டனிடம் விலை உயர்வை பற்றி கேட்டதற்கு அவர் அளித்த பொறுப்பான பதில், "விலை ஏற்றம் என்றால் என்ன?"
ஆக விலை ஏற்றம் பற்றி தெரியாதவர்கள் இந்த நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் போட்டிகளில் வென்று யாருடைய மானத்தை காப்பாற்ற போகிறார்கள்?
இந்திய நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று மார் தட்டி கொள்ளாமல் இனிமேலாவது இவர்கள் அனைவரும் நாங்கள் இந்தியாவுக்காக விளையாடவில்லை, இந்திய மக்களுக்காக விளையாடவில்லை மாறாக தங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே விளையாடுகிறோம் என்று உண்மையை ஒத்துக் கொள்ள போவதில்லை... ஏன் என்றால் அந்த உண்மை வெளி வந்த பிறகு அவர்களுக்கு பிழைப்பு இருக்க போவதில்லை, ஆகையால் திருடன் உண்மையை ஒத்துக் கொள்வான் என்று நம்பிக் கொண்டிருக்காமல் நாமாகவே திருடனை இனங்கண்டு பத்திரமாக இருப்போம்...

இந்திய அணி உல்டா கோப்பையை வென்றதும் இது போல் தான் என்பது போல் நம் இலங்கை அதிபர் தன் வாயால் ஒத்துக் கொண்டுள்ளது நம் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்துகிறது...

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A&artid=401564&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest