politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

7.12.11

கமாடிடி சந்தை...

நேரடி வர்த்தகம் [spot trade] மற்றும் முன்பேர வர்த்தகம்.. [futures]

நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களில் எப்படி எல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று ஒரு பார்வை. கட்டுரையாக கொடுத்தால் படிக்க சிரமமாக இருக்கும் என்று கேள்வி பதில் மூலம் இங்கு விளக்குகிறேன்...

ஆணிவேர்: நேரடி வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: இணையத்தில் இன்று விற்கும் பொருளை இன்று என்ன விலை என்று பார்த்து இணையத்தில் ஆர்டர் செய்து வீட்டுக்கே டெலிவரி செய்யும் முறை தான் நேரடி வர்த்தகம்.

ஆணிவேர்: முன்பேர வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: ஒரு பொருளை வாங்கிக் கொள்ள, குறிப்பிட்டுள்ள ஊகத்தின் அடிப்படையிலான விலையில் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளப் போடப் படும் ஒப்பந்தமே முன்பேர வர்த்தகம் ஆகும்.

அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 1/1/2012 தேதியில் $.5500/= விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று யூகத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொள்வது..

ஆணிவேர்: அந்த நாளில் குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட அதிகம் இருந்தால்?

நண்பர்: அது லாபம்.

ஆணிவேர்: ஒரு வேளை அது குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட குறைவாக இருந்தால்?

நண்பர்: அது நஷ்டம் என்று எடுத்துக் கொண்டாலும்.. அந்த ஒப்பந்தம் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள ஹெட்ஜிங் என்ற ஒரு வகையை நாங்கள் கை ஆள்வோம்...

ஆணிவேர்: அது என்ன ஹெட்ஜிங்?

நண்பர்: அதாவது இன்னொரு ஒப்பந்தத்தில் வாங்கி, எந்த அளவுக்கு நஷ்டம் அடைந்ததோ அந்தளவு விலை ஏறிய உடன் விற்று விடுவோம்..

ஆணிவேர்: ஒரு நாளைக்கு தடாலடியாக விலை ஏறுமா?

நண்பர்: பங்கு சந்தை போல் இங்கு தடாலடியாக விலை ஏறாது.. ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று சதவிகிதம் விலை ஏற அனுமதிக்கப் படுகிறது.. அந்த குறிப்பிட்ட அளவு வந்தவுடன் விலை ஏற்றம் தடை செய்யப் படும்.

ஆணிவேர்: அப்படி என்றால் பத்து நாளைக்கு முப்பது சதவிகிதம் விலை ஏற முடியும். அப்படி தானே?

நண்பர்: ஏறக் குறைய அப்படி தான்.. ஆனால் முழுமையாக அப்படி நடக்க வாய்ப்பில்லை..

ஆணிவேர்: அப்படி என்றால் ஊக வணிகத்தால் விலை ஏறுகிறது என்று எதை வைத்து போராடுகிறார்கள்?

நண்பர்: ஊக வணிகத்தில் விலை நம் நாட்டு நிலவரம் வைத்து விலை நிர்ணயிக்கப் படுவதில்லை.. சர்வதேச சந்தையின் நிலைமையை வைத்தே உள்நாட்டு பொருட்களின் விலை நிர்ணயிக்கப் படுகிறது.

ஆணிவேர்: தற்காலிக தட்டுப் பாடை உருவாக்கி இங்கு பொருட்களின் விலையை ஏற்ற முடியுமா?

நண்பர்: நான் ஏற்கனவே கூறியது போல் தடாலடியாக உயர்த்த வாய்ப்பில்லை... கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த முடியும். ஆனால் கட்டுப்பாடுகளும் அதிகம். அரிசி வகையாறாக்களில் பாசுமதி அரிசி மட்டுமே இந்த சந்தையில் கிடைக்கும்.. சாதாரண அரிசி கிடைக்காது... அது போல் கட்டுப்பாடுகள் அதிகம்...

ஆணிவேர்: இந்த வணிக முறையில் யார் யார் ஈடுபடலாம்?

நண்பர்: இந்திய நிரந்தர வருமான வரி கணக்கை வைத்து உள்ள யாரும் ஈடுபடலாம். நீங்கள் அடுத்து என்ன கேட்பீர்கள் என்று தெரியும். வெளிநாட்டினரும் ஈடுபடலாம், பாஸ்போர்ட் வைத்து கொண்டு.

ஆக
முட்டை என்பது சைவம் என்றாகிவிட்டது,
பீர் என்பது குளிர்பானம் என்றாகிவிட்டது..
பந்தயம் கட்டி விளையாடும் ரம்மி சூதாட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி விட்டது..
அதே போல் பங்கு சந்தையும் சூதாட்டம் அல்ல என்று காலம் காலமாய் சொல்லி வருவதை, இல்லை என்றே ஆளும் வர்க்கம் சொல்லி வருகிறது.


இதை முழுவதும் புரிந்து கொள்ள நான் இதே துறையில் ஒரு வருடம் இருந்தால் மட்டுமே முடியும் என்று என் நண்பன் கூறி விட்டான்.. ஆகையால் எனக்கு புரிந்த அளவுக்கு நான் இங்கு விளக்கி இருக்கிறேன்..

27.11.11

மால்குடி சித்தன்

நீ ஏழையாக பிறந்தது உன் குற்றமல்ல...
ஆனால் நீ ஏழையாக இறப்பது உன் குற்றமே...


இப்படி ஒரு புது மொழி உண்டு

மால்குடி சித்தனின் சிந்தனை என்ன என்றால்..

இந்த புது மொழி ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால், அவதிப் படும் சோமாலிய மக்களுக்கும் பொருந்துமா?

சோமாலியா பஞ்சத்தால் வாடும் தேசம் என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு இருந்தாலும்.. இன்றைய சோமாலிய மக்களின் ஏழ்மை நிலைக்கு பஞ்சம் ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமானது இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் ஊழலும், தவறான கொள்கைகளும் தான்.. 

உதவி என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் செய்தவை அனைத்தும் உதவி புரிந்த நாடுகள் வளரவே உதவி  புரிந்தன. ஆக மேலும் மேலும் சுரண்டப் பட்ட மக்கள் இன்று வாழ்வாதாரம் இல்லாமல் நொடிந்து போய் உள்ளனர்...


ஒரு வேளை ஏழையாக இருக்க விருப்பம் இல்லாமல் தாய் நாட்டை விட்டு பிற நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ?


மேலும் படிக்க
http://www.cato.org/pubs/pas/pa-205.html

மேற்கண்ட கட்டுரையை படிக்கும் பொழுது இந்தியா மனதில் வந்து சென்றதை மறுக்கவில்லை...

2.11.11

அட போங்கப்பா.

தமிழ் நாடு பொது தேர்வு குழுவின் தலைமை நிர்வாகிகள், தேர்வு ஆணையத்தை லஞ்ச ஒழிப்பு துறையின் கீழ் கொண்டு வந்துள்ள அரசு ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர்..

வேலை கொடுக்க இவர்கள் லஞ்சம் வாங்கியதால் எத்தனையோ இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டத்தை அனுபவித்த கொடுமை, இவர்களுக்கு தெரிய போவதில்லை... 

இத்தனை ஆண்டு காலத்தில் ஒரே நபர் தான் சிக்கி இருக்கிறார், அதற்குள் இவர்களுக்கு சுருக்கென்று குத்தி விட்டது...

உயர் நீதிமன்றமும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது... சட்டத்திற்கு புறம்பாக இந்த அரசு ஆணை உள்ளதாக தெரிவித்து உள்ளனர்... லோக் பால் மசோதா குறித்து விவாதித்து வரும் இந்த வேலையில் அரசு ஆணையே சட்டத்திற்கு புறம்பானது என்று குதித்தால்...

அட போங்கப்பா...

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2590904.ece

 


29.9.11

2G - டூ மச் ஜி

இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரே விஷயம் அலை கற்றை வரிசை ஊழல் [ 2g ஊழல் என்று சொன்னால் நன்றாக புரியும்]. 


காங்கிரஸ் அரசின் அத்தனை தலைகளின் மேலும் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது... 


"நான் இல்லை நீ தான்" 
"ஆட்சிய கவிழ்க்க சதி"
"அரசுக்கு நஷ்டமே இல்லை" 
என்று எத்தனையோ விஷயங்கள் ஓடினாலும் இன்னும் முக்கியமான கேள்விகள் வெளியில் சந்தி சிரிக்க மறுக்கிறது...

இந்த ஊழல் பெருமளவில் பிரபலமடைய காரணமான நிரா ராடியா குறித்தோ அல்லது இந்த ஊழலில் பெருமளவில் சம்பாதித்த பெரும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்தும் இது வரை எந்த ஊடகமும் வாய் திறக்க மறுக்கின்றது...

இதை பற்றி நம் பதிவர் ரெவெரியின் பதிவு பெரும் வெளிச்சத்துக்கு உண்மைகளை கொண்டு வருகிறது...

அந்த பதிவின் இணைப்பு இங்கே...

21.9.11

திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும்...


இது ஒரு மீள்பதிவு 1.4.10

அரசாங்கமும் படத் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு திருட்டு விசிடியை ஒழித்து கட்ட போராடினாலும் பொது மக்கள் திருட்டு விசிடியை வாங்குவதை நிறுத்தா விட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது...
அதே போல போலி மருத்துவர்களால் எண்ணற்ற பிரச்சினைகள் வந்தாலும் பொது மக்களாய் அவர்களிடம் போகாமல் இருக்கும் வரை அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை...
இந்த இரண்டு விஷயங்களையும் மேலோட்டமாய் பார்த்தல் வேறு வேறு விஷயமாய் தெரிந்தாலும் இரண்டுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன என்றால் அது பொது மக்களின் ஆசிர்வாதம் மட்டுமே..
ஆக, பொது மக்கள் இப்படி இருப்பதற்கு என்ன உண்மையான விஷயம்... அது வேறு ஒன்றுமில்லை, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து கொண்டே வருவதும் சிலவற்றை அவர்களால் செலவு செய்யாமல் இருக்க முடியவில்லை என்பதே... 

ஒரு சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நபருக்கு முப்பது முதல் நாற்பது ருபாய் வரை செலவு ஆகிறது, ஒரு குடும்பமே செல்லும் போது அது குறைந்தது நான்கு மடங்கு ஆகிறது, ஆனால் ஒரு திருட்டி சிடியை வாங்கி பார்த்தால் அது முப்பது ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது.... தியேட்டருக்கு போனா பாப் கார்ன் வாங்கி தர வேண்டும் என்னும் செலவும் குறைகிறது,
அதே போல ஒரு மருத்துவரிடம் போனால், குறைந்தது நூறு ரூபாய் வரை செலவு ஆகிறது, போதாதற்கு மருந்து மாத்திரைகள் வேறு...
அரசு மருத்துவமனை என்றால் சிபிஎம் பேரா மற்றும் செப்ட்றான் தவிர வேறு மாத்திரைகள் தருவதில்லை, இதை களைந்து எடுக்க வேண்டிய அரசாங்கம் இலவச காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் ஏற்கனவே சரியாக செயல்படாமல் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா எடுக்கின்றது... இந்த காப்பீட்டு திட்டத்திற்கு செலவு செய்யும் தொகைகளுக்கு பதிலாக, அரசு நம் மருத்துவமனைகளை மேம்படுத்தினாலே போதுமானது,
ஆனால் இதை எல்லாம் செய்யாமல் தவறான கொள்கை முடிவுகளால் திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும் பெரிய தலைவலிகளாய் இருக்கிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு தலைவலிக்கு தைலம் மட்டும் தேய்த்து கொண்டிருக்காமல் ஊழல் என்னும் புற்று நோயை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலே போதுமானது.... 

செய்வார்களா... செய்ய வைப்போமா?

http://thatstamil.oneindia.in/news/2011/09/21/49-quacks-arrested-vellore-tv-malai-tiruvallur-dist-aid0091.ஹ்த்ம்ல்

http://www.maalaisudar.com/newsindex.php?id=36888%20&%20section=19


17.8.11

மந்திரக் கோலை தேடி..

ஊழலை ஒழிக்க மந்திர கோலை தேடி கொண்டிருப்பது, இந்த அரசு ஊழலில் அடக்கி ஒடுக்குவதில் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது...

ஒவ்வொரு முறையும் ஊழல் நடந்ததை கண்டுபிடிக்க அரசு இயந்திரமான உச்ச நீதி மன்றமும் மற்ற அரசு அமைப்புகளும் தான் முயற்சி செய்கின்றது.. அவை கண்டுபிடித்த உடன் அவற்றை விசாரித்து ஊழலை ஒடுக்கி இருந்தால் இப்பொழுது தடுக்கப் போவதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை..

சட்டத்தை நிறைவேற்ற மக்கள் உங்களை அதிகாரத்தில் உட்கார வைத்து விட்டார்கள், யார் தேர்ந்தெடுத்தார்களோ அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்தால் அது ஜனநாயக படுகொலை.. அதை விட்டு விட்டு நீங்கள் செய்யும் தவறுக்கு ஜால்ரா போடாமல் எதிர்த்து கேள்வி கேட்பது ஜனநாயக படுகொலை என்றால் விவரம் தெரியாதவர்கள் கூட எழுச்சி பெற்று விடுவார்கள் என்பது தான் உண்மை... 

எப்படியோ இந்த எழுச்சி நல்ல முறையில் முடிந்தால் சரி.. அதை விட்டு எப்பொழுதும் போல ஒரு திருடனுக்கு பதில் இன்னொரு திருடனிடம் இந்த நாட்டை தூக்கி கொடுத்தால் மீண்டும் எழுவதில் முதுகு வலி தான் வரும்...
எத்தனை தடவை தான் எழுந்து எழுந்து உட்கார்வது என்று கடுப்பு கூட வரலாம்... 

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது... 

போராட்டம் நடத்துவதில் காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கேள்விகள்:

1. போராட்டம் நடத்துவதால் அந்த பகுதிக்கு வரும் மக்களின் உரிமை பாதிக்கப் படும் என்று அக்கறை கொள்ளும் நீங்கள், உங்கள் மந்திரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளும் வாகனத்தில் செல்லும் பொழுது பாதுகாப்பு காரணமாய் சாதாரண மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது கண்ணுக்கு தெரியவில்லையா?

2. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் இருந்த பொழுதே, உங்களுக்கு சாதகமாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முறியடித்த நீங்கள் உங்கள் பலம் நாடாளுமன்றத்தில் அதிகமாக உள்ள பொழுது உங்களுக்கு சாதகமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதா?

3. அண்ணாவுடன் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்று கூறும் நீங்கள் இது வரை நீங்கள் பேசியதின் விளைவு தானே இது என்று தெரியவில்லையா? அவர் ஊழல்வாதி என்று உங்கள் அரசு அவரை குற்றம் சாட்டிய பின் நடவடிக்கை எடுக்காமல் அவருடன் பேச்சு வார்த்தை நடத்த தாயாராவது ஏன்?

4. போராட்டம் நடத்த நிபந்தனைகள் உண்டு என்றால் அது அனைவருக்கும் பொதுவா இல்லை எதிர் கட்சிகளுக்கு மட்டும் பொதுவானதா?

5. கடைசியாக, உத்தர பிரதேசத்தில் தடை உத்தரவு அமலில் இருந்த பொழுது எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு சென்று வந்த, உங்கள் ராகுல் காந்தியை உத்தர பிரதேச அரசு கைது செய்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

ஊழலை ஒழிக்க நீங்கள் சொன்ன மந்திரக் கோல் வேறு எங்கும் இல்லை உங்கள் மனசாட்சி தான் அது... மனசாட்சியை அடகு வைத்தவர்கள் தேடிக் கொண்டு தான் இருப்பார்கள்...

26.7.11

ராக்கெட் ராஜா...

- தொடர் கதையாகி இருப்பதால், முழு விஷயமும் வெளியே வந்த பின்பு...
இப்போதைக்கு இந்த படமே போதும், பல்வேறு கதை சொல்கிறது...
நான் ரசித்து சிரித்த படம்...

29-7-2011
-எல்லோர் தலையும் உருளுகிறது...

24.7.11

கஜினியாகும் கல்மாடி

சட்டத்தின் பார்வையில் சிக்கியவர்கள் அதிகார வர்க்கமாக இருந்தால், அதன் ஓட்டைகள் எங்கெங்கு இருக்கிறது என்று அவர்களை விட வேறு யாருக்கும் அழகாய் தெரிவதில்லை...
ஆதர்ஷ் ஊழலில் முக்கியமான ஆவணங்கள் காணாமல் போய் கொண்டே இருப்பது குற்றம் சாட்டப் பட்டவரை காப்பாற்றி கொண்டிருக்கிறது... 

அதே போல, 
காமன் வெல்த் போட்டிகளில் நடைப் பெற்ற ஊழல்களின் முக்கிய புள்ளியாக உள்ள கல்மாடி சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்த ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது.. 

டேமேன்சியா (dementia-http://en.wikipedia.org/wiki/Dementia) என்று அழைக்கப் படும் நோய் தாக்கப் பட்ட நபராக அவரை காப்பாற்றும் முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.. மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப் பட்டுள்ளது அவரை காப்பாற்றும் முயற்சி... இந்த நோய் அவருக்கு இன்று நேற்று வரவில்லையாம், கடந்த ஆறு வருடங்களாக இருந்தது அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது..

இந்த சூழ்நிலைக்கு "மணல் கயிறு" படத்தில் வரும் வசனம் ஞாபகம் வருவது தவிர்க்க முடியவில்லை..
மாப்பிள்ளை  : காது கேட்காதா? எத்தனை நாளா?
மாமியார்: ஏழு வருஷமா!
மாப்பிள்ளை: ஏழு வருஷமாவா? அப்ப ஒரு காது கேட்காத கிழவன் கிட்டயா என் எட்டாவது கண்டிஷன சொன்னேன்?

இத்தனை காலமாக ஒரு ஞாபக மறதி ஆளையா ஒரு அதிகாரியா போட்டு வைச்சிருந்தாங்க?

இதை பற்றி நம் பிரதம மந்திரியை கேட்டால் அவர் சொல்லப் போகும் ஒரே பதில், "எனக்கு எதுவுமே தெரியாது" 
ஒரு வேளை அவருக்கும் டேமேன்சியாவாக இருக்குமோ?

22.7.11

ஏன்?

மத்திய ஆளும் கட்சியின் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

எனக்கு முன்பு ஆண்ட கட்சியின் கொள்கையை தான் நாங்கள் பின் தொடர்ந்தோம் என்று காங்கிரஸ் பதில்...

பீகார் மாநில முதல்வர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

கர்நாடக மாநில முதல்வர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

கேரளா இடது சாரி தலைவர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

உத்தர பிரதேசத்தில் முதல்வர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

தி.மு.க அமைச்சர்கள் மேல் ஊழல் புகார்..

அ.தி.மு.க தலைவர் மேல் ஊழல் புகாரின் மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை....

ஜகன் மோகன் ரெட்டி மேல் சொத்து குவிப்பு விசாரணை...

எல்லாம் சரி...

இவர்களால் உதவி பெற்ற அனைத்து பெரிய நிறுவனங்களின் பங்கு பற்றியும் இது வரை யாரும் வாயே திறக்கவில்லையே ஏன்?

19.7.11

மூளை சலவை..

ஹிந்து பிசினஸ் லைன் என்னும் நாளிதழில் இந்த வாரம் திரு.கோகுல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்டுரை வரைந்துள்ளார்...

பொருள்களை விளம்பரப் படுத்த கட்டுபாடுகளை தளர்த்தி கொள்ள வேண்டும் என்பது அவர் வாதம்...
பொறுப்பான வாதத்தை முன் வைத்தால் நல்ல விவாதமாக கொண்டு சொல்லலாம், ஆனால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பொழுது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை...

திரைப்படத்திற்கு ஒரு தணிக்கை, தொலைக்காட்சிக்கு என்று ஒரு தணிக்கை குழு, விளம்பரத்திற்கு என்று ஒரு தணிக்கை குழு என்று தனி தனியாக இருப்பது பிரச்சினை என்று கூறியுள்ளார்..

திரைப்பட தணிக்கை குழு சரியான தணிக்கை செய்யாமல், திரைப்படங்களை வெளியிடுவதும், அதை தொலைக்காட்சி துறையினர் அப்படியே  வெளியிட்டு, பாலியல் உணர்ச்சி தூண்டி பார்வையாளர்களை கட்டி போடுவதும், இதை வழிக் கோலாக வைத்து விளம்பர துறையினர் நகைச்சுவை என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பியும், பாலியல் உணர்ச்சிகளை தூண்டி பொருட்களை விற்பனை செய்வதும் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்...

தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் தவறான முன்னுதாரணத்தை கொண்டுள்ளதும், அதை பார்த்து வாய் பொத்தி அமைதியாய் இராமல் எதிர்ப்பை தெரிவித்து போராடாமல் மக்கள் இருப்பதும், விளம்பர நிறுவனங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகி விட்டது...

விளம்பரத்தை தணிக்கை செய்வோம் என்று கிளம்பிய அரசு சாரா நிறுவனம் பல்வேறு தலைவலிகளை உண்டாக்குவதால், அவற்றின் மேல் சேறு பூசும் சங்கதிகளும் நடப்பதை பதிவு செய்துள்ளார்...

தவறு செய்யும் திரை துறையினரையும், தொலைகாட்சி துறையினரையும் விட்டு விட்டு, விளம்பரத்தின் மீது மட்டும் ஏன் கோப படுகிறீர்கள் என்றும், ரொம்ப கிடுக்கி பிடி போட கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்...

திரு. கோகுல் கிருஷ்ணமூர்த்திக்கு கேள்விகள்...

முதலில் மற்றவர்கள் தவறு செய்வதை பொறுத்துக் கொண்டுள்ளோம் என்று கூறியது தவறு... பொறுத்துக் கொள்ளவில்லை; பொருமிக் கொண்டு தான் இருக்கிறோம்...
தொலைக்கட்சிகளில் நடக்கும் கூத்துகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்...
அவர்கள் தவறு செய்வதால் இவர்களும் தவறு செய்யலாமே என்று கூறுவதை என்ன என்று சொல்வது என்று தான் புரியவில்லை..

கடைசியாக

விளம்பரங்கள் பொழுது போக்கும் அம்சங்கள் இல்லை. பொழுது போக்கும் அம்சங்களிலேயே சிறுவர்களின் மனம் கேட்டு போகிறது என்று தான் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் காட்டக் கூடாது என்று தடை செய்திருக்கிறார்கள், அப்படி இருக்கையில் மக்கள் மனதை மூளை சலவை செய்வதற்கு என்றே தயாரிக்கும் விளம்பரங்களில் பொய்கள் கலக்கலாம் என்பது என்ன வாதம்...

திரைத்துறையில் நீங்கள் கேட்கும் பெண்களின் தோலுரித்து பார்க்கும் வேலைகள் நடப்பதால் தான், பாலியல் வக்கிரங்கள் நாடெங்கும் அதிகமாகியிருக்கிறது...

உங்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் அங்கு சென்று ஜால்ரா அடியுங்கள், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, மாறாக பலரின் எண்ணங்களை மூளை சலவை செய்வது போல் பேச வேண்டாம்...

நான் என்று எண்ணாமல் தயவு செய்து நாம் என்று எண்ணுவோமே..
http://www.thehindubusinessline.com/opinion/article2227218.ece?homepage=true

15.7.11

வெளிச்சத்தில் சந்தேகம்...


சுரண்டப் பட்ட உழைப்பே லாபம் என்று சொன்ன அறிஞர் மார்க்ஸ் க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...
ஆனால் அவர் சொன்னது சரி என்று சொல்லும் அளவுக்கு நம் தமிழக முதல் அமைச்சர் முன்பு இரு விதமான வணிகர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்...

செங்கல் ஒரு லோடுக்கு 3000 ரூபாய் குறைப்பதாகவும்,
ஜல்லி கல் ஒரு லோடுக்கு 700 ருபாய் குறைப்பதாகவும் கூறியுள்ளனர்..

எந்த விதமான சலுகைகளும் கிடைக்காமல் இவ்வளவு தொகையை நாட்டின் நலன் கருதி குறைத்து கொள்வதாக கூறுவது பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது...
அப்படியே நாட்டின் நலன் கருதி குறைத்து கொள்வதை ஏற்றுக் கொண்டாலும் இத்தனை நாளாய் அதிக லாபத்திற்கு விற்றுள்ளது வெளிச்சத்திற்கு வருகிறது...

திடீர் என்று ஏன் குறைக்கிறார்கள் என்ற சந்தேகம் அனாதையாய் நிற்கிறது...

http://thatstamil.oneindia.in/news/2011/07/14/brick-jalli-rates-come-down-after-jaya-order-aid0136.html

10.7.11

நன்றாகவே நடந்ததா?


நாட்டு மக்களை காப்பாற்றும் இயந்திரம், மக்களுக்காக உயிரை கொடுக்க தயாராகும் உள்ளங்கள், பணியிலும் மழையிலும் போராடும் வீரர்கள்...
ராணுவத்தை குறித்த நமது சிறு வயது பாட புத்தகங்களில் படித்த பக்கங்கள், கண் முன்னே கரைந்து போகிறது...

ராணுவ ஆயுதங்கள் கள்ள சந்தையில் விற்பனை..
ராணுவ குடியிருப்பு கட்டுவதில் ஊழல் [ ஆதர்ஷ்]
அசாமில் ராணுவ அதிகாரிகள் யாரை வேண்டும் என்றாலும் கற்பழிக்கலாம் என்னும் அரசு சட்டம்...
சாதாரண மக்களை குருவியை போல் சுட்டு தள்ள உரிமை...

கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை அனைத்தும் இல்லாத ஒரு இயந்திரம் எவ்வளவு கொடுமையானது என்பதை கிழக்கு இந்திய மாநிலங்களும், ஜம்மு காஷ்மீரும் ஏற்கனவே கண்டவை தான்...

வேலை வாய்ப்பு அறவே அற்று போகும் பொழுது தீவிரவாதம் முளை விடுகிறது, வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல், பிறர் மேல் நாம் குற்றம் சொல்லி கொண்டிருப்பதால் நமது ஆபத்து நீங்கி விடாது...

ஒரு சிறுவனை சுட்டு கொன்றதை ஏழு நாட்கள் கழித்து ஒத்துக் கொள்ளும் மன நிலையில் உள்ள ராணுவம், சீர்படுத்தப் படவேண்டும்...

http://www.hindustantimes.com/Ex-army-man-confesses-to-killing-Dilshan-CB-CID/Article1-719443.aspx#disqus_thread

இந்தியாவை இந்தியாவாக ஆள வேண்டிய மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் தனி தனியாக பார்ப்பதால் வரும் நிலை இது...

ஒவ்வொரு மாநிலத்தையும் தனி தனியாக பார்க்கும் அரசு, தேசிய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதில் எந்த ஐயப் பாடும் இல்லை...

http://articles.economictimes.indiatimes.com/2011-06-17/news/29669898_1_crpf-personnel-crpf-men-fake-encounter

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கவில்லை
எது நடக்க போகிறதோ அதுவாவது நன்றாக நடக்குமா?

அத்தனைக்கும் ஆசைபடாதே...

ஆசைபடுவதில் ஒன்றும் தப்பில்லை தான், ஆனால் அந்த ஆசை நியாயமானதாக இருந்தால் அது நடப்பதை நாம் எதிர்பார்க்க முடியும்...
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று ஒரு சொலவடை உண்டு...
அது போல் ஆசைபட்டால், கனவு கனவாகவே போய்விடும் என்பது தான் உண்மை...

பெரிய விலை உயர்ந்த மருத்துவமனைகள் வருவது தவறு இல்லை என்றும், ஆனால் ஏழைகளுக்கான அரசு மருத்துவமனை தரமானதாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டிருக்கிறார், பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்.

அரசு மருத்துவமனைகளின் செயல் படாத நிலை தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு துணை போகும்,

அரசு தபால் அலுவலங்களின் செயல் படாத நிலை தனியார் கூரியர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகும்..

அரசு தொலைபேசி நிறுவனங்களின் செயல் படாத நிலை தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகும்...

அரசு விமான சேவையின் செயல் படாத நிலை தனியார் விமான சேவைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறது...

என்று அடுக்கி கொண்டே போகலாம்...

இப்படி பட்ட சூழ்நிலையில், தனியார் நிறுவனங்களின் பங்கும் வேண்டும் மற்றும் அரசு நிறுவனங்களும் சிறப்பாக செயல் பட வேண்டும் என்று கோருவது, எப்படி சாத்தியம்...

சரி, தனியார் நிறுவனங்களின் சேவை தான் சிறப்பாக இருக்கிறதே, அவர்களே பார்த்து கொள்ளட்டும் என்று கூறுவது... தனியார் நிறுவனங்களின் சுரண்டி கொழுக்கும் செயலுக்கு துணை போவதாகும்...

பொது உடமை சிந்தனை உள்ள பொருளாதார நிபுணரே இப்படி கூறுவது, முக்கியமான கேள்விகளை என் மனம் அறுவடை செய்கிறது...

குட்டை குழம்பி போயிருந்தால், மீனுக்கு தான் கேடு...

http://www.thehindu.com/news/national/article2215872.ece?homepage=true

8.7.11

எல்லாமே விளம்பர மயம்...

உலகில் நடக்கும் பல்வேறு அநியாயங்களுக்கு காரணம், கெட்டவர்களின் நடவடிக்கை அல்ல, அதை கண்டும் காணாமல் செல்லும் நல்லவர்களால்...

எனக்கு மிகவும் பிடித்த வாசகம்...

எவ்வளவோ தவறுகள் நடக்கின்றன, அதெல்லாம் தட்டி கேட்க மனம் இருந்தும், வழி தெரியாமல் முழிப்பவர்கள் பலர்... அவற்றில் ஒன்று அநாகரீகமான விளம்பரங்கள்.. தடை செய்யப் பட்ட விளம்பரங்கள்... இவற்றை பற்றி எங்கே புகார் செய்வது என்று தெரியாமல் முழிப்பவரா நீங்கள்...
இன்று ஹிந்து நாளிதழில் வந்த விளம்பரம், என்னை தேடுதலில் செலுத்தி இந்த இணைப்பை கண்டு பிடித்துள்ளேன்...
இன்று முதல் பல்வேறு விளம்பரங்களின் புகார் என் மூலமாக பதியப் படும்...
நீங்களும் வேண்டும் என்றால் கலந்து கொள்ளுங்கள்...

உங்கள் புகாரை பதிவு செய்ய...

http://www.ascionline.org/index.php/complaints

[சில நேரங்களில் server not found என்று வரும்.. திரும்பவும் refresh செய்தால் வந்து விடும்...]

7.7.11

ஈ.சி செய்றவங்களுக்கு கஷ்டம்...


இந்த மாதம் முதல் நாள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் இந்நேரம் அநேகமாக நீர்த்து போய் விட்டது என்று நினைக்கிறேன்...
போராட்டம் செய்யும் அலைபேசி ரீசார்ஜ் வியாபாரிகள் ஒரு அணியாக ஒற்றுமையாய் திரண்டு இல்லாதது முதல் தவறு..
அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலையை செய்யாமலே போராட்டம் என்று அரை கூவல் விடுத்து இயக்கத்தை கொண்டு செல்வது இரண்டாவது தவறு..
இதே பிழைப்பாய் இருக்கும் வியாபாரிகளின் அன்றாட வருமானத்தை பற்றி எண்ணி பார்க்காதது மூன்றாவது தவறு...

தவறுகளை திருத்திக் கொள்ளலாம் என்னும் அடிப்படையில்...
மீண்டும் தவறு இழைக்காமல் இருக்க, தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகாமல், நமது அரசு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை சென்றால் மக்களுக்கும் உதவிகரமாய் இருக்கும், மற்றும் வியாபாரிகளுக்கும் உதவிகரமாய் இருக்கும்...
இதை செயல் படுத்த வியாபாரிகள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், புறப்பட்ட கோப தீயை அனைத்து விடாமல் உடனடியாக ரீசார்ஜ் செய்ய வரும் அனைத்து மக்களிடமும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மாற்றி கொள்ளுமாறு எடுத்து உரையுங்கள்...
உங்கள் முதுகில் குத்தும், குத்தக் காத்திருக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களையும் புறக்கணிப்போம்,
போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=656729&disdate=6/30/2011&advt=2

3.7.11

பதில்கள் எனக்கு வேண்டாம்...


அனைத்தும் தனியார் மயமாக வேண்டும் என்று கருதுபவரா நீங்கள்?
அரசு வசம் எந்த துறையும் இருக்க கூடாது என்று கருதுபவரா நீங்கள்?
தனியார் துறை மட்டுமே சிறந்த சேவையை தர முடியும் என்று கருதுபவரா நீங்கள்?

நல்லது...
பின்வரும் கேள்விகளுக்கு பதில் தேடுங்கள்...

எந்த ஊழலாவது தனியார் துறை சம்பந்தம் இல்லாமல் இந்தியாவில் நடந்திருக்கிறதா?

தனியார் வசம் இருப்பதால் தானே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 40% கச்சா எண்ணைக்கும் வெளிநாட்டு விலை கொடுத்து இந்திய அரசாங்கம் வாங்கி கொண்டிருக்கிறது?

நியாயமான வெளிப்படையான கொள்கை உள்ள ஒரு தனியார் நிறுவனம் என்று ஏதேனும் ஒன்று இருக்கிறதா?

கடைசியாக,

கேபிள் டிவி தொழிலை அரசே ஏற்று நடத்து வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் ஏன் நினைக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடனும் முரண்படாமல் இருந்தால் நீங்கள் உங்கள் முடிவை இந்நேரம் மாற்றியிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...
முரண் பட்டிருந்தால்
மாற்றிக் கொள்ளுங்கள்...

http://thatstamil.oneindia.in/news/2011/07/02/govt-cable-tv-jaya-take-control-aid0128.html

21.6.11

புரிந்தும் புரியாமலும்..


நம்ம மேற்கு வங்க முதலமைச்சர் புரிந்து கொண்டு தான் பேசுறாங்களா, இல்லைனா நம்ம ஊடகங்களுக்கு வங்காள மொழி புரியாமல் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை...
பிரதம மந்திரி ஒருவரை மட்டும் சேர்ப்பதால் ஊழலை ஒழித்து விட முடியாது என்னும் அர்த்தத்தில் பேசியதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது...
பிரதம மந்திரி ஒருவரை மட்டும் சேர்க்காமல் விட்டால் ஊழலை ஒழிக்க முடியாது என்று தான் லோக் பால் மசோதா [அண்ணா] குழுவினர் பேசியுள்ளனர்...
சிங்கூர் கிராமத்தில் மக்களிடம் இருந்து பறிக்கப் பட்ட 400 ஏக்கர் நிலத்தை சொன்ன படியே திரும்ப வாங்கி விட்டீர்கள், அதே மாதிரி டாடா நிறுவனத்திற்கும் இடது சாரி அரசாங்கத்திற்கும் நடுவில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முதல் வேலையாக வெளியே விடுவேன்னு சொன்னீங்க... அதை பத்தி சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்...

http://www.thehindu.com/news/national/article2123510.ece

20.6.11

வழிகளை மூடும் சமரசங்கள்...


என் நண்பர் சிவக்குமார் அவர்கள் என் பதிவுகளை படித்து விட்டு, எங்க நீங்க இந்த நெடுஞ்சாலையில் இருக்கும் உணவகங்களை பத்தி எழுதுங்களேன், அப்படின்னு கேட்டுகிட்டார்.
என்னடா இது என்று நிறைய யோசித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான்...
அனைவரும் அந்நியனை தேடி கொண்டிருக்கிறார்கள் என்பதே...
ஏர்டெல் நிறுவனம் மோசடி செய்து விட்டது..
திரை அரங்குகளில் குளிர்பானங்கள் கொள்ளை விலை.
இப்படி சின்ன சின்ன மோசடிகள் சிறு சிறு வணிக நிறுவனங்களில் மலிந்து கிடக்கும்...
இந்த தவறுகளின் ஆணிவேர் எது என்று பார்த்தால் வேகமாக வளர முயற்சி, குறுக்கு வழியில் முன்னேறுதல் என்று பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்த காரணங்களை ஊக்குவிப்பவை பிசினஸ் ல எதுவும் தப்பில்ல என்னும் வேத மந்திரம் தான்...
அந்நியன் படத்தில் நாயகன் இம்மாதிரி தவறுகள் செய்பவர்களை கொல்வார்...
எவனோ ஒருவன் படத்தில் நாயகன் அடித்து நொறுக்குவார்...
உண்மையான வழி எங்கு இருக்கிறது என்றால் புறக்கணிப்பில் உள்ளது...
இம்மாதிரி தவறு செய்பவர்களை அனைவரும் ஒன்று கூடி புறக்கணித்தாலே போதும் இம்மாதிரி சின்ன சின்ன தவறுகள் நடக்கவே நடக்காது...
மலையை ஒரே நாளில் அப்புறப் படுத்த முடியாது, ஒவ்வொரு கல்லாய் பெயர்த்து எடுத்தால் போதும்
பிச்சை காசு ஒரு ருபாய் என்று விட்டு கொடுப்பதால் தான் இவர்கள் தவறு செய்கிறார்கள்...
நீங்கள் ஏமாற்றப் படுகிறீர்கள் என்று தெரிந்தும் நீங்கள் ஏமாந்தால் யார் வந்து அந்த தவறை சரி செய்ய போகிறார்கள்...
வழி நம் அனைவர் கையிலும் உள்ளது...
அதை சமரசம் செய்து கொண்டு மூடி விட வேண்டாம்...

17.6.11

முழு பூசணிக்காய்..

[நன்றி- போட்டோ ஆதாரம் தி ஹிந்து நாளிதழ்]


ராம்தேவ்
அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் என்று இந்திய முழுவதுக்கும் தெரிந்திருக்கிறது.. ஆனால் டெல்லி காவல் துறைக்கு தெரியவில்லை...
ஒரு லட்சம் பேருக்கு மேல் கூட போகிறார்கள் என்று ராம்தேவ் பல ஊடகங்களில் சவால் விட்டார்... இந்தியாவுக்கு தெரிந்த இந்த ரகசியம் டெல்லி காவல் துறைக்கு தெரியவே தெரியாதாம்...
சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் இப்படி கூடியிருப்பது, காலையில் இருந்து தெரியாமல் இரவு தான் தெரிந்ததாம், ஆகையால் கலைந்து செல்லுமாறு ஒரு மணிக்கு காவல் துறை ராம்தேவுக்கு கோரிக்கை வைத்ததாம்.. ஆனால் அதை மறுத்து விட்டாராம்...
வேறு வழியில்லாமல் யாரையும் அடிக்காமல் அன்பாக பேசி தான் கலைந்து செல்ல வைத்தார்களாம்...
கூட்டத்தில் இருந்த சிலர் தாக்குதலில் இறங்கியதால் வேறு வழியில்லாமல் எட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க வேண்டியதாக போய்விட்டதாம்... அதுவும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்ததாம்...

அப்படி என்றால்,
ராம்தேவின் சீடர்களை காவல்துறையினர் அடித்தது புகைப்படமாக பல நாளிதழ்களில் வெளியானது யார் செய்த வேலை?
டெல்லி மருத்துவமனையில் ராஜ் பாலா என்ற அம்மையார் முதுகில் பட்ட அடியாள் மூச்சு பேச்சில்லாமல் 17 நாட்களாக இருக்கிறாரே அது யார் செய்த சதி...?

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-15/delhi/29661152_1_critical-condition-ventilator-support-baba-ramdev

அப்படி என்றால், டெல்லி காவல்துறைக்கு எதிராக எதோ சதி ஒன்று நடத்தப் படுகிறது... அதை கண்டுபிடிக்க ராணுவத்தை வரவைங்கப்பா...

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5216039

பொறுப்பாளி...


நம் நாட்டில் அனைத்து இயக்கங்களிலும், யார் தவறு செய்தாலும் அதற்கு தலைவர் அல்லது செயலாளர், இவர்களுக்கு யாருக்கு அதிகாரம் அதிகமோ அவர்கள் தான் பொறுப்பு..

அதே போல் தான் விளையாட்டிலும், அணித்தலைவர் அல்லது அணிப்பயிர்ச்சியாளர் தான் பொறுப்பு...

அது என்னவோ நாட்டை ஆள்பவர்களுக்கு இந்த விதி பொருந்த கூடாதாம்...
அனைத்து ஊழல்களுக்கும், நாட்டை ஆளும் பிரதமர் தான் பொறுப்பாக முடியும். ஆனா அவரோ எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்க முடியும்...

திக் விஜய் சிங்க் அவர்கள் அண்ணாவை கேட்டிருக்கும் கேள்விக்கு பதில்...
உங்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் தான் புத்திசாலி மற்றவர்கள் அனைவரும் முட்டாளா?
யார் சொன்னது, அண்ணா வின் குழுவில் இருப்பவர்களை விட அவர்கள் அதி புத்திசாலியாய் இருக்கிறார்கள். கழுவும் மீனில் நழுவும் மீனாய், நழுவிக் கொண்டே போவதால் அவர்களை அடக்க மிரட்டுகிறார்கள்.

பிரதமரை லோக் பால் வளையத்திற்குள் கொண்டு வரலாமா வேண்டாமா என்று நாடே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, நாட்டை ஆட்சி செய்யும் காங்கிரஸ் இதை பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை என்பது இவர்கள் ஆட்சி செய்யும் லட்சணத்தை விளக்குகிறது.

இன்னும் யாருடைய கட்டளைக்காக காத்திருக்கிறார்களோ?

http://www.indianexpress.com/news/are-your-five-wise-and-the-rest-fools-cong-asks-anna/805044/