politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
Showing posts with label இன்குலாப். Show all posts
Showing posts with label இன்குலாப். Show all posts

26.11.11

இறந்தும் மிரட்டுகிறார்

இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த பகத் சிங்கை கண்டு இன்றும் நம் ஆட்சியாளர்கள் நடுங்கி கொண்டிருப்பது இன்று வெளிவந்த ஒரு செய்தி குறிப்பில் வெட்ட வெளிச்சமாகிறது...

சிறு வயதிலே இறந்த ஒரு தீப் பிழம்பு பகத் சிங் என்றால் அது மிகையல்ல..

அந்த வரலாற்று நாயகன் குறித்து பல திரைப் படங்கள் வந்தாலும்.. அவற்றில் உண்மை கலக்கவில்லை என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய திரைப்பட சான்றிதழ் குழு இன்கிலாப் என்ற குறும்படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது.

காரணம், அந்த படத்தில் தேசிய எதிர்ப்பு உணர்வுகள் உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் 42வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ஒருமித்த மனதாக அனைத்து தேர்வாளர்களால்  தேர்வு செய்யப் பட்ட இந்த திரைப்படம் திரை இடப் படப் போவதில்லையாம்..
http://www.thehindu.com/arts/cinema/article2660359.ece

பகத் சிங் 1928  ஜூன் மாத கீர்த்தி இதழில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகளை பார்க்கலாம்..

"மதக் கலவரங்கள் அனைத்திற்குமான நிரந்தர தீர்வு என்பது இந்தியாவின் [இந்திய மக்களின்] பொருளாதார வளர்ச்சியிலேயே உள்ளது.. ஏனென்றால் பொதுமக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இங்கே ஒருவருக்கு வெறும் நாலணாவைக் கொடுத்து மற்றொருவரை தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினியில் கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளை பின்பற்ற முடியாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பது உண்மையே.

ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். ஏனென்றால் நாம் ஆங்கிலேய பேரரசால் ஆளப் படுகிறோம். நாம் வளர்வதற்கு அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எரியும் வரை நமக்கு ஓய்வு உறக்கமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்."

மற்றொரு கட்டுரையில்..

"அதிகார வர்கத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள். அது உங்களுக்கு ஒரு நாளும் உதவி செய்யாது. மாறாக அது உங்களை பகடைக் காயை போல் பயன்படுத்தும். நீங்கள் சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கும் உங்களது வறுமைக்கும் மூல காரணம் இந்த அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமே. எனவே அவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்."

கேளாத செவிகள் கேட்கட்டும்
தொகுப்பும் தமிழும் த.சிவக்குமார்.
நெம்புகோல் பதிப்பகம்.
http://ieyakkam.blogspot.com

விடுதலைப் பாதையில் பகத் சிங்
தொகுப்பு சிவவர்மா
பாரதி புத்தகாலயம் வெளியீடு.

இந்த புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்று தான், அது பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும் சரி, இன்றைய _______ ஆட்சியாக இருந்தாலும் சரி... பகத் சிங்கை புரிந்து உள்வாங்கிக் கொண்டு நாம் முன்னேறுவதில் தான் நம் விடியல் உள்ளது.

24.10.11

ஜைதாபூருக்கு வெண்ணெய், கூடங்குளத்திற்கு சுண்ணாம்பா?

ஜைதாபூர் அணு மின் நிலையத்திற்கு பொதுமக்களின் எதிர்ப்பு கூடுகிறது..

நாட்டின் முக்கியமான இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவியலாளர்களும், சமூக அக்கறை உள்ளவர்களும் கொண்ட பதினைந்து நபர் குழு அமைக்கப் படுவதாக செய்திகள் இன்று காலை தினசரிகளில் வெளியானது.[the hindu]
அது குறித்து இணையத்தில் சரியான தகவல் இல்லை என்றாலும், முக்கியமான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் இணைந்து ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக போராட போவதாக இணைய செய்திகள் உறுதிபடுத்துகிறது...

பிரான்ஸ் நாட்டு அணு உலை என்றும், ரஷ்ய நாட்டு அணு உலை என்றும் பிரித்து பார்க்காமல், எந்த அணு உலை என்றாலும் அது மக்களுக்கு ஆபத்தானதே என்று உணர்ந்து கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உள்ளங்களுக்கும் இவர்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்...

இல்லையேல் ரெட்டை வேடம் போடுகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பது அங்கு உள்ள மக்களுக்கும் வெட்ட வெளிச்சமாகும்... 

கூடங்குளம் குறித்து ராஜா MVS கூறுவது குறிப்பிடத்தக்கது, மனித கழிவுகளையே நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்னும் பொழுது அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற விவாதம் எதற்கு? என்கிறார்...

இனி விவாதங்கள் வேண்டாம், 
அச்சத்தை போக்கும் செயல்கள் தேவை இல்லை, 
இன்றைய தேவை கூடங்குளம் மூடப் படவேண்டும் என்பதே...

12.10.11

தொடர் விளைவு...

27  வருடங்கள் கழித்து முதல் முறையாக போபால் விஷ வாயுவால் தாக்கப் பட்ட மக்கள் முழு கடையடைப்பை நேற்று கோரியிருக்கிறார்கள்... 
கோரிக்கை ரொம்ப சாதாரணமானது..

உண்மையாகவே அந்த விபத்தில் பாதிக்கப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கொஞ்சம் ஆணித்தரமாக அரசு சொல்ல வேண்டும் என்பதே, ஒரு நாள் 5000  என்பதும் மறுநாள் 15,000 என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று முழு கடையடைப்பை கோரியிருக்கிறார்கள்.. 
பாதிக்கப் பட்ட நம் நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் அந்த நிறுவனத்தின் முதலாளியை பத்திரமாக தாய் மண்ணுக்கு அனுப்பி வைக்க கவலைப்பட்டு கொண்டிருந்த அரசு, நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது..

பிரான்ஸ் நாட்டில் அணுக கழிவுகளை நிலத்தடி நீருக்குள் செலுத்தியதை கண்டுபிடித்து 40,000 யுரோக்களை அபராதமாக கட்ட சொல்லியிருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.. சாதாரணமாய் எழும்பும் கேள்வி என்ன என்றால் இதனால் பதிக்கப் பட்டவர்களுக்கு இந்த அபராதத்தால் எப்படி நீதி கிடைக்கும் என்பதே?http://www.thehindu.com/opinion/op-ed/article2526288.ece

இப்படி மக்கள் பற்றி சிந்திக்காத அரசுகள் தான் இன்று கூடங்குளத்திலும் வாழ்வுக்கு [அணு]உலை வைக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்பதால் சாதாரணமாகவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது... சாதி மதம் பாராமல் இணைந்திருக்கும் ஒற்றுமை கண்ணை உறுத்த ஊடகங்கள் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கின்றனர்.. 

என்ன இருந்தாலும் காங்கிரஸ் வெள்ளைக்காரன், அமைத்து விட்டு சென்ற கட்சி தானே...

அரசு, பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் செய்வதை விட, வரும் காலங்களில் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்வது தானே நியாயம்..

சும்மாவா சொன்னாங்க, வருமுன் காப்பது நலம் என்று...

பிற்சேர்க்கை: பின்னூட்டங்களில் ஒரு அனானி தவறான தகவல்களை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்... இணையத்தில் வரும் தகவல்களை வைத்தே நான் இங்கு பதிவு அமைப்பேன்... அப்படி அவர் கேள்வி கேட்க விரும்பினால் tehelka  இனைய இதழை கேள்வி கேட்கலாம்... சுமார் 20,000 மக்களை வெளியேற்ற கூறி விட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன், அது தவறு 30,000 மக்களை வெளியேற்ற கூறி விட்டார்கள் என்று tehelka  இனைய தளம் வெளியிட்டுள்ளது... இங்கே உள்ள சுட்டியில் கடைசி பத்திக்கு முன் படிக்கவும்... http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp

10.10.11

வெள்ளை மாளிகைக்கு மனு...

அவர்கள் உண்மைகள்  பதிவில் எது எதுக்கோ ஓட்டு போடுறீங்க இதுக்கும் ஓட்டு போடுங்களேன் என்று அறிவித்துள்ளார்...

ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க பெரியண்ணனை கேட்டுக் கொள்ளும் ஒரு மனு, அதற்க்கு நான் ஓட்டு போட்ட பொழுது இன்னும் 1733  ஓட்டுகள் அக்டோபர் 29  ஆம் தேதிக்குள் தேவை என்று குறிப்பிட்டிருந்தது... 

சென்று பார்த்தேன்...

நீங்களும் பாருங்க..
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
பிடிக்கலேன்னா பின்னூட்டம் போடுங்க...

9.10.11

மீண்டும்...

கூடங்குளம் மீண்டும் விவாத பொருளாகி இருக்கிறது...
இன்று உண்ணாவிரத அறிவிப்புடன் தொடங்கி இருக்கிறது சில நாட்கள் விடுப்பு எடுத்த போராட்டம்...

கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்க பல்வேறு முயற்சிகள் திரை மறைவில் எடுத்த வண்ணம் உள்ளனர், அவற்றில் ஒன்று ஊடகம் மூலம் இந்த அணு மின் நிலையம் அமைந்தால் மின்வெட்டே இருக்காது என்று தம்பட்டம் அடிப்பது... மேலும் சூரிய ஒளி மின்சாரம் ஒரு அலகு 20 ரூபாய் வரும் என்று திரும்ப திரும்ப பழைய பஞ்சாங்கம் பாடுவதே... இன்றைய சூழ்நிலையில் சூரிய ஒளி மின்சாரம் ஒரு அலகு 3 ரூபாய்க்கு மேல் வராது என்று முந்தய சுடாத சூரியன் என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளதை நினைவு கோருகிறேன்... http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_04.html

மேலும் இவர்கள் கூறுவது கல்பாக்கம் இயக்கத்தில் ஏதாவது தவறு நிகழ்ந்துள்ளதா என்று கேட்பதே, முறையான ஆதாரம் இல்லாமல் கசியும் செய்திகளை வெளியிடுவது ஊடகங்களுக்கு தற்கொலைக்கு சமம் என்பதால் வதந்திகள் வதந்திகளாகவே உள்ளன... ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்று தெஹெல்கா ஊடகம் கல்பாக்கம் குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது 

மேலும் கூறும் பொழுது புகுஷிமா அளவுக்கு நிலநடுக்கத்தை இந்தியா இதுவரை சந்தித்ததில்லை என்று கூறுகிறார்கள்...

உண்மையில் சமீப காலமாய் இந்தியாவில் நிலநடுக்கம் அதிகமாகி இருக்கிறது என்கிறது புள்ளி விவரங்கள்...
புகுஷிமா - 6.6 ரிக்க்ட்டர் அளவுகோல் 
சிக்கிம் - 6.9 ரிக்டர் அளவுகோல் 

தமிழகத்திலும் நிலைமை மாறி வருகிறது என்று எச்சரிக்கிறது 
http://earthquake-report.com/2011/08/11/earthquakes-list-august-12-2011/

அரசுக்கு நாம் கேட்பது ஒரே ஒரு கேள்வி தான் எங்கள் சார்பாய் முடிவெடுக்க தான் உங்களை நாங்கள் ஆட்சி செய்ய அனுப்பி இருக்கிறோம்... வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகள் வாழ்வை முடிவெடுக்க அதிகாரம் நமக்கு இல்லை, நாளை பிறக்க போகும் சந்ததியினர் ஏன் இந்த முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபட்டு அணு உலை அமைத்து எங்கள் வாழ்வில் உலை வைத்தீர்கள் என்று கேட்டால் அதற்க்கு பதில் உங்களிடம் இருக்கிறதா? நிச்சயமாக எங்களிடம் இல்லை.... 


6.10.11

டாஸ்மாக்கை ஒழித்து கட்டுவோம்

தமிழ் தெரு வலை பூவில்  கொள்ளி என்று பதிவு போட்டு வருத்தப் பட்டுள்ளார் த.ஜார்ஜ்... அவருக்கு கை கொடுக்க, தனி மனித ஒழுக்கம் மட்டும் கெடவில்லை குடிப்பதால், உங்கள் உடல்நலனும் கெடுகிறது என்று உறைக்கவே இந்த பதிவு...

மெத்த படித்தவர்களுக்கு பீர் குடிப்பதால் எந்த உடல் நலன் கெடும் வருவதில்லை என்று ஒரு நினைப்பு உண்டு... பீர் குடிப்பது வோட்கா குடிப்பதை விட ஆபத்தானது ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம்...

மேலும் பீர் குடிப்பதால் வரும் பிரச்சினைகள் குறித்து கீழே படிக்கவும்

பீர் குடிப்பது ரத்த கொதிப்பை அதிகரிக்கும்
http://en.wikipedia.org/wiki/Long-term_effects_of_alcohol

பீர் அருந்தும் ஒரு சில மணி துளிகளில் ரத்த அடர்த்தி குறைவதால் bleeding stroke வந்து மக்கள் இறக்க வாய்ப்பு உள்ளது என்கிறார் ஒருவர்... மேலும் குடித்த பல நேரம் கழித்து ரத்தத்தின் அடர்த்தி குறைந்து நீர் அளவு குறைந்து ரத்த கொதிப்பு அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.medicalnewstoday.com/releases/32037.ப்ப்
http://answers.yahoo.com/question/index?qid=௨௦௦௬௦௯௨௨௦௬௫௯௨௩ஆஆ௯ர்வ

மிக அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் மூளை பாதிக்கப் படும்
http://pubs.niaaa.nih.gov/publications/aa63/aa63.ஹதம்

பீர் குடிப்பது பித்தக் கற்களையும் சிறுநீரக கற்களையும் உண்டாக்குவதோடு கீழ்முடக்கு வாதத்தையும் உண்டாக்கும் என்று தெரிகிறது
http://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=80834&page=௨

நாமெல்லாம் போராளிகள்,
நம் போராட்டத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்... இனி வரும் காலங்கள் நம் வாழ்க்கை சூறாவளி புயல் சூழ்ந்த காலமாக இருக்கும்... அப்பொழுது நாம் தெளிவாக ஆரோக்கியமாக இருந்தால் தான் வெற்றி நிச்சயம்... 

3.10.11

உறுதி


ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானாவை பிரித்து கொடுக்க சொல்லி போராட்டம் உச்ச கட்டத்தை தொட்டு இருக்கிறது...

தென் தமிழகத்தில் கூடங்குளம் எதிர்ப்பு அலை வலுக்கிறது...

கேரளாவில் அண்மையில் உயர்த்திய பெட்ரோல் விலையை எதிர்த்து நடத்திய முழு அடைப்பு முழு வெற்றி...

மகாராஷ்ட்ராவில் நடந்த போராட்டம் துப்பாக்கி சூடு நடத்தி அணைக்கப் பட்டு இருக்கிறது..

வங்காளம், பீகார், ஓடிஸா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் 
மாவோயிஸ்ட் ஆதிக்கம் போராட்டத்தை கொண்டு செல்கிறது...

உத்தர் பிரதேசத்தில் நொய்டா நில சமாச்சார போராட்டம் ராகுல் காந்தியால் பெரிய 
பெயர் பெற்றது...

குஜராத்தில் போராட்டம் என்ற எண்ணமே வரக் கூடாது என்று முளையிலேயே கில்லி எறிகிறார்கள்...

மற்ற மாநிலத்தில் போராட்டங்கள் நடக்கவில்லை என்று கூற முடியாது...

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு போராட்டங்கள்..

இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் போராட்டமாக ஊடகங்களில் பெரிதும் வெளிவராத ஒரு போராட்டம் இன்று வெளிச்சத்தில் வந்து இருக்கிறது...

இந்திய ராணுவம் எது வேண்டுமானாலும்  செய்யலாம் தவறில்லை என்ற ரீதியில் படைக்கப்பட்ட சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இரோம் ஷர்மிளா...

அவரை irom sharmila என்பதற்கு பதில் iron sharmila என்று கூறலாம் என்னும் அளவுக்கு மன உறுதி...

இவரின் போராட்டம் சற்றே விரிவடைந்து இப்பொழுது ஒவ்வொரு இந்திய மாநிலமாக விரிவடைந்து வருவதை பார்த்தால்... இந்தியர்கள் புரட்சியின் பாதைக்கு வந்து கொண்டிருக்கிறார்களா என்று எண்ண தோன்றுகிறது...

எது எப்படியோ ஆள்பவர்கள் காதில் இவர்களின் சத்தம் விழும் என்ற நம்பிக்கையில் ...

இன்குலாப் ஜிந்தாபாத்...



27.9.11

கண்ணீர் அஞ்சலி

அரசின் கோர முகம் பார்க்க சகிக்காது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது...

பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தில் நடந்த தடியடியில் கோமாவுக்கு தள்ளப் பட்ட திருமதி ராஜ்பாலா என்ற முதிய பெண்மணி நேற்று காலமானார்...

நடுத்தர வர்க்க மக்கள் இனியாவது பயத்தை விட்டொழித்து அவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட வேண்டும்...

அவரது மரணத்துக்கு கிடைக்கும் நீதி தான் உண்மையான கண்ணீர் அஞ்சலியாக இருக்க முடியும்...

49 'O'


49  ஓ போடு என்று பதிவு போட்டவுடன் முக்கால்வாசி பதிவர்கள் சொன்ன பதில் 49 ஓ விர்க்கு ஆதரவாக இல்லை... 

வேட்பாளர்கள் பரிச்சயமானவர்கள், 
இருப்பதில் நல்லவருக்கு ஓட்டு போடலாமே, 
கட்சிகளை விட ஆட்களுக்கு முக்கியத்துவம் தரும் தேர்தல், 
தைரியமா போட்டு விட முடியுமா? 
எந்த நபர் நல்லவரோ அவருக்கு வாக்களிக்கலாம்..

இவர்களுக்கு பதில்களை பின்னூட்டம் இட்டாலும், ஏன் இதற்கான பதிலை தனியே ஒரு பதிவை போட கூடாது என்ற யோசனையை அமுல்படுத்தி இருக்கிறேன்...

ஒரு தேர்தலை சந்திப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு வாக்காளருக்கு இரண்டு லட்சம் செலவாகும் என்பது என் எண்ணம்? இல்லை அவர் பத்தாயிரம் ரூபாய் தான் செலவு பண்ணுவார் என்று சொன்னால் அதுவும் பணம் தானே என்பது என் பதில்...

அதனால் தான் தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்றுக் கொள்ளும் பொதுவுடைமை கட்சிகள் தனித்து நிற்பதற்கு அவ்வளவு யோசிக்கின்றன... 

இவ்வளவு செலவு செய்த தேர்தலில் வெற்றி பெரும் ஒருவர் அந்த பணத்தை கிணற்றில் போட்ட கல் என்று எடுத்துக் கொள்வாரா அல்லது திரும்ப எடுக்க முயற்சி செய்வாரா? 

திரும்ப எடுக்க முயற்சி செய்யும் நபர் எங்கிருந்து திரும்பி எடுப்பார், நமது வரி பணத்தில் தானே கை வைப்பார்...

அப்படி கிணற்றில் போட்ட கல் என்று எடுத்துக் கொள்ளும் வேட்பாளர் யாராவது இருந்தால் அவர் காலடி தொழுகிறேன்.. அவருக்கே உங்கள் ஓட்டுக்களை போடுங்கள்... 

2006 உள்ளாட்சி தேர்தல் நிலவரத்தை தெரிந்து கொள்ள

24.9.11

49 ' ஓ ' போடு

உள்ளாட்சி தேர்தல்,
எப்ப அறிவிச்சாங்க, எப்படி அறிவிச்சாங்க என்று திரும்பி பார்ப்பதற்குள் எவ்வளவோ நடந்து விட்டது...

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி என்ற நிலைமைக்கு தள்ளப் பட்டது தான் அருமை.. இதில் மதில் மேல் பூனையாக என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருப்பது இரு இந்திய முதலாளித்துவ கட்சிகள்.. [capitalist party of india ]  

தலைமை சிந்திக்காது என்று தெரிந்து கொண்டு தன்மான சிங்கங்கள் தென் தமிழக பொது உடமை வாதிகள் தனித்து போட்டி என்று ஒரு மாவட்ட செயலாளர் பேட்டி கொடுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார்கள்....

சரி; இந்த விஷயம் தீக்கதிர் பத்திரிக்கையில் வந்திருக்கிறதா என்று பார்த்தால், உள்ளாட்சி தேர்தல் குறித்து தனி ஆவர்த்தனமே நடத்தி இருக்கிறார்கள் செய்திகள் என்ற பிரிவில்... இன்று மாநில குழு கூடி விவாதிக்க போகிறார்களாம்... இது மார்க்சிஸ்ட் தகராறு... 

ஆனால் பாண்டியன் குழுவினர் தான், எப்ப கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு.க வில் இணைந்து விடலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது... அப்படி ஒரு மௌனம் சாதிக்கிறார் தா.பா... அட போங்கப்பா...

இதில் இன்னும் கொடுமை என்ன என்றால் அனைத்து கட்சிகள் மீதும் பொது மக்கள் கடுப்பில் இருப்பது தான்...
அ.தி.மு.க செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்ததால் அந்த அணியில் இருந்த பிற கட்சியினர் மீது கோபமும், தி.மு.க வின் கொள்ளைகள் வெளிச்சத்தில் சந்தி சிரிப்பதால் அந்த அணியில் இருந்த கட்சிகள் மீதும் ஆத்திரமும் கொண்டுள்ளனர் பொதுமக்கள்.. [கவனிக்க பொது மக்கள் ]

அனைத்து கட்சிகளும் தனித்தும் மற்றும் பல சுயேட்சைகள் களம் காணும் உள்ளாட்சி தேர்தலில் அத்தனை சின்னங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு 49  வை சேர்த்து வையுங்கப்பா என்று கூறினால் கடுப்பாக போகிறார்கள் தேர்தல் ஆணையாளர்கள்...

ஓட்டு போடும் நாளில் மறுபடியும் நோட்டு புத்தகமா என்று கடுப்பாக தான் போகிறேன் நான்....

இருந்தாலும் ...
மறக்காமல் அனைவரும் 49 ஓ வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..

21.9.11

தற்காலிக வெற்றி


உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு தென் தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்பிக்க பிடிவாதத்தின் மறு பெயரான தமிழக அரசு போராட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கியதை அடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததாக போராட்ட குழுவின் பேச்சு வார்த்தை குழுவினர் கூறியுள்ளனர்.. 

பல்வேறு செய்திகள் தென் தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தை பின்னுக்கு தள்ளினாலும், ஓங்கி ஒலித்த போராட்ட குரலால் அனைத்து செய்திகளும் பின்னுக்கு சென்றுள்ளதை இந்த போராட்டம் நினைவூட்டுகிறது..

உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர்கள் போராட்ட குழுவினரின் முடிவுக்கு இணங்கி இன்றைக்குள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்து கொள்வார்கள் என்று தெரிகிறது... கூடல் பாலாவிடம் பேசிய பொழுது, நல்ல தகவல் வந்திருப்பதாகவும், உண்ணாவிரதம் வாபஸ் ஆகுமா என்ற தகவலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்..

ஏழு கிலோ உடல் எடை குறைந்ததே தவிர வேறு எதுவும் குறையில்லை என்றார்... உடல் எடை குறைந்தது கவலை அளித்தாலும் உள்ளத்தின் எழுச்சி குறையவில்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது... போராடிய அத்தனை உள்ளங்களுக்கும் நான் கூறி கொள்வது இன்குலாப் ஜிந்தாபாத்..


20.9.11

குறுஞ் செய்தி

போராட்ட குரலை எப்படியாவது ஒடுக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு திரிகிறது அரசு... 
ஏற்கனவே புது தகவல் தொழில் நுட்ப சட்டப் படி வலைகளில் திரியும் ஆட்சேபகரமான கருத்துக்களை நீக்க அரசுக்கு முழு அதிகாரம் ஏற்படுத்தி கொண்டு இப்பொழுது, அடுத்து ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் ஊடகமான குறுஞ் செய்தியின் மீது கண் வைத்துள்ளது அரசு..

தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடப் போகும் கட்டுபாட்டில் ஒருவர் நூறு குறுஞ் செய்திகளுக்கு மேல் அனுப்ப கூடாது என்று முடிவெடுக்கப் போகிறதாம்..


ஏன் இந்த கட்டுபாடாம்?

பொருட்களை விற்கும் நிறுவனங்கள் அதிக அளவில் குறுஞ் செய்தி அனுப்புவதில் இருந்து மக்களுக்கு விடுதலை தரவே இந்த திட்டமாம்..

பல்வேறு நிறுவனங்களின் கை வண்ணங்களால் ஏற்கனவே இந்த தேவை இல்லாத விளம்பர குறுஞ் செய்திகளை ஒழித்து கட்ட எடுத்து வந்த நடவடிக்கை எல்லாம் கிடப்பில் கிடக்கும் பொழுது, அவர்களை காரணம் காட்டி போராட்ட குரலை ஒடுக்கும் நடவடிக்கையாகவே ஆணிவேர் இதை பார்க்கிறது.. eg: DND 1909 service...

விளம்பரத்தை குறுஞ் செய்தியாக அனுப்ப நினைக்கும் நிறுவனம் நூறு அல்லது ஆயிரம் சிம் அட்டைகளை வைத்து கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை குறுஞ் செய்திகளாகவும் அனுப்ப முடியும் என்பதை தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சிந்திக்காமலா இந்த திட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள் என்ற சந்தேகமே, நம் முடிவுக்கு ஆணித்தரமாய் முத்திரை குத்துகிறது..

அண்ணா வின் உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக இருக்கட்டும் குறுஞ் செய்திகளின் பங்கு என்ன என்பது அலை பேசி வைத்திருக்கும் அனைவரும் அறிந்ததே...
போராட்ட குரலை ஒடுக்க நினைக்கும் எந்த அரசும் நிலைத்திருந்ததாக வரலாறு இல்லை...

நூறு குறுஞ் செய்திகள் என்ற வரை முறைக்குள் வரும் முன்னர் ஒரு முறையாவது கூடங்குளம் போராட்டம் குறித்து ஆதரவு தெரிவித்து குறுஞ் செய்தி அனுப்பலாமே 


19.9.11

தொட்டு விடும் தூரம் தான்

வலைபதிவர்களின் ஆதரவை பெற்ற கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் அநேகமாக வெற்றி அடைந்து விட்டது என்றே கருதுகிறேன்.. 


போராட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தமிழக அரசு மத்திய அரசுக்கு இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கடிதம் அனுப்புவதோடு மட்டுமல்லாமல் அமைச்சர் குழுவையும் பிரதமரை சந்திக்க அனுப்பவதாகவும் உறுதி கூறியுள்ளது.. 


பல்வேறு தரப்பினரும் போராடிய இந்த போராட்டம் அனைவரின் நெஞ்சுருதியின் காரணமாக அநேகமாக வெற்றி கோட்டை நெருங்கி விட்டது என்றே கருதுகிறேன்... 

அங்கே போராட்டத்தில் நேரடியாக உண்ணாவிரதம் இருந்து வரும் கூடல் பாலாவை அலை பேசியில் [9940771407] அழைத்து பேசிய பொழுது, தற்பொழுது மேதா பட்கரும் போராட்ட மேடையில் ஆதரவு தெரிவித்து கருத்துக்கள் தெரிவித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.. மேலும் போராட்ட பாதையை எப்படி கொண்டு செல்வது என்று போராட்ட குழு இன்று மாலை கூடி முடிவெடுக்கும் என்று அறிவித்தார்... 

இணைந்த கரங்களுடன் போராடினால் நடக்காது என்பது எதுவும் இல்லை என்பதை இந்த செய்தி நமக்கு சுட்டுகிறது... போராட்டத்தில் இணைத்துக் கொண்ட அனைவருக்கும், உள்ளுக்குள் வருத்தப் பட்ட அனைவருக்கும் உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத் 


18.9.11

சேலமும் கூடன்குளமும்

யார் பேச்சையும் கேட்காத, கேட்க விரும்பாத அரசு என்பதை கூடங்குளம் போராட்டமும், சேலம் போராட்டமும் வரலாற்றில் பதிவு செய்து சென்றுள்ளது...

தன் தோழர்கள் மறியல் செய்ததற்காக காவலர்களிடம் அடி வாங்கி மண்டை உடைந்து காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது ஆட்சியாளர்களை கண்டிக்க விரும்பாத பொதுவுடைமை கட்சிகள், நான்கு சீட்டுக்கு நாக்கை தொங்க போட்டு கொண்டு காத்திருந்தது, மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுத்து சென்றது...

உத்தமர்கள், பொய் சொல்ல மாட்டார்கள், ஊழல் செய்ய விரும்ப மாட்டார்கள் என்று எத்தனை பெயர் வேண்டுமானாலும் வாங்குங்கள், ஆனால் தேர்தல் களத்தில் நம்பியவர்களை கை விடும் கட்சி என்று பெயர் வாங்குவதால் மண்ணை தான் கவ்வுவீர்கள்... 

உங்கள் தொண்டர்களும், கொஞ்சம் மக்களும் நிஜமாகவே உங்கள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், அது என்று அரசு ஊழியர்களை கூட்டம் கூட்டமாக வீட்டுக்கு அனுப்பிய ஆத்தாவை ஆதரித்த அன்றே சிதைந்து போனது... 
அடித்த காவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதாக தயவு செய்து சொல்லாதீர்கள்... ஆட்சியாளர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் காவலர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்..

அதே போல் தான் நடந்து கொண்டிருக்கிறார் கேப்டன் , கூடங்குளம் போராட்டத்தில் நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் உண்ணாவிரதத்தில் உட்கார வையுங்கள், ஏன் நீங்களே கூட உட்காருங்கள், ஆனால் இதை சட்டமன்றத்தில் பேசுவது என்ற அரசியலை நான் செய்ய மாட்டேன் என்று ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் என்பதை ரசிக்க முடியல கேப்டன்..

16.9.11

கூடங்குளம் கீச்சுக்கள்


 தமிழன்பன் 
அண்ணா ஹசாரேவுக்கும் சொம்பு தூக்கிய தமிழக கண்மணிகளும் , பெண்மணிகளும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது வியப்பளிக்கிறது 

 G.K. Thas 
சிங் தாத்தா வுக்கும் சோனியா பாட்டீக்கும் ரெண்டு அணு உலை பக்கத்துல ரூம் போட்டு குடுத்தா இருப்பாங்களா 

 Sriraam 
வருங்காலம் என்று ஒன்று இருந்தால் தானே அதற்கு மின்சாரம் வேண்டும்? சிந்தியுங்கள்  மக்கள் பற்றி!

 Srivas 
இறந்த மனிதனை எரியூட்ட, இருக்கும் மின்சார சுடுகாடுகள் போதாதென, பிறந்த மனிதனையும் எரிக்க புதிதாய், பெரிதாய் , தேவையா நமக்கு! 

 பிரிமசு அந்தோனி 
அமெரிக்க உலை என்றால் எதிர்ப்பதும் ரசியா என்றால் அமைதி காப்பது கம்யுனிஸ்ட்களின் பணிசெவப்புசட்ட போட்டவன் பொய்சொல்ல மாட்டானாம் 

 விஜய் 
சத்தியமூர்த்தி பவனை கூடங்குளத்துக்கு மாற்றினால்கூட வேண்டாம்  ஏன்னா மொத்தமா வரமாட்டாங்களே கோஷ்டிங்க ஒரே நேரத்துல

 Thamizh K Senthil 
15 தமிழ் குடும்பங்கள்னு பிலிம் காட்டும் இளங்கோவன்&co'வே கூடன்குளத்தில் இருப்பது தமிழர்கள் இல்லையா? 

 கனியன் 
அணு உலைகளுக்கு பக்கத்தில் அமைச்சர்களுக்கு அப்பார்ட்மென்ட் கட்ட அனுமதி கொடுக்கிறோம் அப்பாவி மக்களாகிய நாங்கள்! 

 Se.Senthilkumar 
அணு உலை = அத்தனை பேர் உயிருக்கும் உலை 

 Pradeep muniandi 
எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வல்லமை தமிழனுக்கு உண்டுதான், அதற்காக உயிரோடு கொன்றே விடுவதா தமிழனை! 

மேலும் படிக்க 

15.9.11

வலை பதிவுகளில் நீளும் ஆதரவு கரம்..

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி பல்வேறு ஊடகங்களும் பல்வேறு தலைவர்களும் தங்கள் ஆதரவு கரத்தை வழங்கிய வண்ணம் உள்ளனர்... 
கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டத்தில் ஆதரவாக நமது வலை பதிவர் கூடல் பாலாவும் கலந்து கொண்டு சோர்ந்து போயுள்ளார் என்று வைரை சதீஷ் தன நேரடியாக கண்ட பதிவை பகிர்ந்துள்ளார்.. மேலும் இது குறித்து பல்வேறு வலை பூவில் வெளி வந்த ஆதரவு கரங்கள் இங்கே.. 

ரெவெரி இன் வலைப்பூவில் கூடங்குளம் மூட சொல்லி பாட்ஜ் படம் போட்டுள்ளார்..

http://reverienreality.blogspot.com/2011/09/blog-post_15.html


http://pamaran.wordpress.com/2011/09/16/

http://savetnfishermen.com/2011/09/18/

http://chennaipithan.blogspot.com/2011/09/blog-post_18.html

http://kousalya2010.blogspot.com/2011/09/blog-post.html


http://adrasaka.blogspot.com/2011/09/blog-post_4647.html


http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_17.html


http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post_17.html

http://vairaisathish.blogspot.com/2011/09/6.html


http://nanduonorandu.blogspot.com/2011/09/blog-post_18.html

http://maayaulagam-4u.blogspot.com/2011/09/blog-post_17.html


http://tamilvaasi.blogspot.com/2011/09/blog-post_16.html

http://tamilvaasi.blogspot.com/2011/09/blog-post_17.html


http://blog.krishvaidy.in/?p=194 


http://thulithuliyaai.blogspot.com/2011/09/blog-post_7078.html


http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html


http://ilavenirkaalam.blogspot.com/2011/09/blog-post_15.html


http://nanjilmano.blogspot.com/2011/09/15000.html






விடுபட்ட பதிவர்கள் மன்னிக்கவும்... உங்கள் பதிவுகள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் இட்டு விடவும்..