
வெள்ளிக் கிழமை காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கும் போதே, போச்சம்பள்ளி பள்ளியை எரித்ததை கண்டித்து தனியார் பள்ளி நிறுவனங்கள் தங்கள் பள்ளிக்கு விடுமுறை என்று கூறி தங்கள் எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்தனர். அரசாங்கம் இந்த நடத்தையை கண்டித்து அறிக்கை விட்டும், காரணம் கோரி மனு அனுப்பியும், சரியான பதில் அளிக்க மறுத்தால் நடவடிக்கை என்று கூறியும், லெனின் அரசை பற்றி என்ன எழுதி இருக்கிறாரோ அதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இங்கு நம் முன் இருக்கும் கேள்வி என்ன என்றால், நடந்த சம்பவம் குறித்து அல்ல, திரை மறைவில் என்ன நடக்கிறது என்பதே... ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு, read between lines... ஆக அரசின் கவனம் முழுவதும் புரட்சி என்பது எந்த உருவத்திலும் மாணவர்களுக்கு தெரிய கூடாதென்பதே... நம் வரலாறுகளில் பல வகையான உண்மைகள் மறைத்தும் திரித்தும் எழுதி வைத்துள்ளார்கள் என்பது ஒழுங்காக வரலாறு படிப்பவர்களுக்கு தெரிந்த விஷயம்... ஆனால் இப்படி தெரிந்து கொண்டவர்கள் மொத்தமாக 15 சதவிகிதம் கூட கிடையாதென்பது தான் உண்மையான நிலவரமாகும். பகத் சிங்கை ஒரு தீவிரவாதியாக உருவகம் படுத்தும் இந்த அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு முறை அவரது குரலை பதிவு செய்கிறேன்.. இன்குலாப் ஜிந்தாபாத்... (புரட்சி வாழ்க)