politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

31.7.11

சீரியசான சமாச்சாரம்

இந்திய காப்புரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்க முன்வரவில்லை...

சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் போலி மருத்துவர்களை ஒழிக்க ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை...

போலி மருந்துகளின் புழக்கத்தை கட்டுபடுத்த எந்த முயற்சியும் செய்ததில்லை...

இப்படி எவ்வளவோ அடுக்கி கொண்டே போகலாம்,

ஆனால் மிகவும் கவனமாக பரிந்துரைக்கப் பட வேண்டிய நுண்ணுயிர் கொல்லி [அண்டிபயோடிக்] மருந்துகளை கை ஆளுவதில் விதி முறைகள் வகுக்கப் படும் பொழுது எதற்கு இந்த மருந்து கடைக்கார்கள் பொங்க வேண்டும் என்று தான் தெரியவில்லை...

பேக்டேரியக்களால் [Bacteria ] உருவாகும் நோய்களை ஒடுக்க கொடுக்கப் படும் மருந்துகள் இவ்வளவு நாட்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற வரைமுறையை யாரும் கடை பிடிப்பதில்லை... இதனால் இந்த கிருமிகள் எந்த மருந்துகளுக்கும் தாக்கு பிடிக்கும் தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன...

இதை தடுக்க புறப்பட்ட இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து நாளை கடைகள் அடைத்து போராட போகிறார்களாம் டெல்லியில்.. 

அண்ணா ஹஜாறேவுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, இது போன்ற போராட்டத்திற்கு எல்லாம் அனுமதி கொடுப்பதை மறுப்பதில்லை...

இது போன்ற சட்டங்கள் நாட்டுக்கு தேவை, அதே சமயத்தில் இதை கண்காணிக்கும் அதிகாரிகளும் தேவை... 

மேலும் முறையாக படித்த மருத்துவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து சீட்டின் நகலையும் இணைத்து கொடுத்தால் மருந்து கடைக்காரர்கள் நகலெடுக்க ஓட வேண்டியதாக  இருக்காது.. 

வேலை வாய்ப்பை உருவாக்கும் இது போன்ற சட்ட முன்வடிவுகள் முடிந்த  வரை பலரின் ஒத்துழைப்பையும் நல்கி அமுல்படுத்தினால் அனைவருக்கும் ஆனந்தமே...

மருந்து ஆய்வாளர்களின் பஞ்சம் இந்த சட்டம் அமுலுக்கு வந்தாலும் நீர்த்து போக செய்து விடும்.. என்றாவது ஒரு நாள், கிளம்பி சென்று கைப்பற்றி விட்டோம் என்று கூக்குரல் இடுவதை விட்டு விட்டு காலியாக உள்ள இந்த துறையின் வேலைகளுக்கு ஆட்களை உடனே நிறுவ வேண்டும்...

அதற்கு முதலில் மருந்து துறையை, ரசாயனம் மற்றும் உரத்தொழிற்சாலை அமைச்சகத்தில் இருந்து மாற்றி அதை சுகாதார துறையில் இணைக்க வேண்டும்...

அரசிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்...
சீரியசா அணுக வேண்டிய சமாச்சாரம் சார், வழக்கம் போல சின்ன புள்ள தனமா அணுகிடாதீங்க...



30.7.11

தாவல்





தாவுவதில் சிறந்தவர்.

.யார் என்று போட்டி...

  




எப்புடி?





இது எப்புடி?




அட போங்கப்பா...

நீங்க யாருமே கிட்டவே வரமாட்டேங்கறீங்க..



இவங்க தாவுவாங்க பாரு ஒரு தாவல்... 
அடா அடா அடா 














படங்கள் உதவி:
ujiladevi.blogspot.com
tamilmakkalkural.blogspot.com 

 இதுக்கு செய்திகளோட இணைப்பு தேவை இல்லைன்னு நினைக்கிறேன்...

29.7.11

ஆடுவோமில்ல... ஓடுவோமில்ல...

பாபா ராம்தேவ் தொடங்கிய கண்ணாமூச்சி ஆட்டம் அவரை சார்ந்தவர்களுக்கும் தொடர்கிறது...
 
காவல் துறையினர் கைது செய்ய வந்துள்ளார்கள் என்று தெரிந்த உடனே, தன்னை நம்பி வந்திருந்த அத்தனை மக்களின் நிலையையும் சிந்திக்காமல் சுடிதார் போட்டு கொண்டு ஓடியதால், அவரின் சிஷ்யனும் அவரது வழியை கடை பிடிக்கிறார்... இவர் ஓடி போனதால், அடி வாங்காமல் இவர் தப்பித்தார், ஆனால் அப்பாவி மக்கள் மிருகத் தனமான அடக்கு முறையை சந்திக்க நேர்ந்தது..

இவரது சிஷ்யனான பாலகிருஷ்ணாவும் காவல் துறையினர் தேடுவதை தெரிந்து கொண்டு தலை மறைவாகி கண்ணாமூச்சி ஆடி விட்டு, இப்பொழுது முன் ஜாமீன் கிடைத்ததால் வெளியில் வந்துள்ளார்..

கடவுளை நம்பும் அனைத்து சாமியார்களும் மாட்டி கொள்ளும் பொழுது, கடவுளை நம்பாமல் ஏன் ஜாமீன் வாங்குகிறார்கள் என்று தான் தெரியவில்லை...
கோவிலுக்கு சென்று காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டால் கடவுள் காப்பாற்ற மாட்டாரா?

நான் சிறைச்சாலைக்கு செல்ல நேரிட்டால், கடவுள் என்னுடன் சிறைச்சாலைக்கே வந்து விடுவார்.. கடவுளை சிறையில் அடைத்த பாவம் எனக்கு நேரக் கூடாது என்று தான் நீதிமன்றத்தை அணுகினேன் என்று கூறினாலும் கூறுவார்கள்...

எது நடக்கிறதோ, அது நன்றாக நடக்கிறதோ?

28.7.11

பெற்றோர்களே, நீங்கள் தயாரா?

தாமதமாக வழங்கப் பட்ட நீதி, அநீதியாகும்...

உச்ச நீதிமன்றத்தின் வழ வழ கொள்கை, புத்தகம் கொடுக்கும் தேதியை ஐந்தாம் தேதிக்கு தள்ளி போட்டு இருக்கிறது...

மீண்டும் இரண்டாம் தேதி தொடரப் போகும் விசாரணையில் மூன்று நாட்கள் இடைவெளியில் புத்தகங்கள் வழங்க இயலாது என்றும், மீண்டும் கால அவகாசம் கேட்டு போராட போகிறார் தமிழக வழக்கறிஞர்..

விசாரணை இரண்டாம் தேதியே முடிந்து விடுமா இல்லை அனைத்து சிவில் வழக்குகள் போல இதுவும் பத்து வருடங்கள் இழு படுமா என்று தெரியவில்லை...

மஞ்சள் வேன்,
உதிக்கும் சூரியன்
சிவப்பு ஆப்பிள் 
செம்மொழி வள்ளுவர்
என்று புத்தகத்தில் எங்கு திருப்பினாலும் கலைஞர் வாடை அடிப்பதை கண்டு பிடித்து விட்டார் புத்திசாலி முதல்வர்..

அந்த கோபத்தில் நாளை அனைவரையும் வேலைக்கு போக வேண்டாம் என்றும், பள்ளி கூடம் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் கலைஞர்....

தமிழக மக்களுக்கு சூடு சுரணை ஏதாவது இருக்கிறதா, இல்லை எவனாவது போராடட்டும் நாம் குளிர் காய்வோம் என்று வேடிக்கை பார்க்க போகிறார்களா என்று நாளைக்கு தான் தெரியும்...

எனக்கு தெரிந்து தி.மு.க நிர்வாகிகளின் கல்வி நிலையங்களிலேயே விடுமுறை அறிவிக்கவில்லை என்று கேள்வி...  

போராட மாணவர்கள் தயார், பெற்றோர்களே நீங்கள்  தயாரா?

27.7.11

கல்லூரிகளாகும் பள்ளிகூடங்கள்...


இந்த அரசு வலைதளத்தில் நுழைந்தால் நம்மை முகத்தில் அடிப்பது ஒரு அறிவிப்பு..

சமச்சீர் கல்வியின் பாடத்திட்டப்படி, வகுப்பு வாரியாக, எந்தெந்த தனியார் பாட நூல் நிறுவனங்களின் புத்தகத்தை படிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்...

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஒரு வகுப்புக்கு பல புத்தகங்களை பார்த்து குறிப்பு எடுத்து படித்து தேர்வு எழுதுவது அனைவருக்கும் தெரிந்ததே.. அதே முறை பள்ளி கூடங்களில் அமுலுக்கு கொண்டு வருகிறார்கள் போல் தெரிகிறது...

எது எப்படியோ நம்ம கேப்டன் ஆசைப்பட்ட குதிரை கிடைச்சிடும் போல் இருக்கிறது.. 

உணவகங்களில் முதலில் போய் சாப்பிடுபவர்களுக்கு கெட்டி சட்னி கிடைக்கும், அதுவே கட்ட கடைசி ஆளாய் இருந்தால் தண்ணி தான் சட்னியாய் கிடைக்கும்... அது போல் நாளாக நாளாக சமச்சீர் கல்வி, நீர்த்து போன கல்வியாய் ஆகியிருக்கும் போல் இருக்கு...

என்ன ஆனாலும் நம்ம தமிழக அரசு  வழக்கறிஞரின் வாதம், பலரை குழப்பி இருப்பது நிச்சயம்... இவர் நமக்கு வாதாடுகிறாரா இல்லை, எதிர் கட்சிக்கு வாதாடுகிறாரா என்று தெரியாத அளவுக்கு ஒரு சிறந்த வாதத்தை வைத்துள்ளார்..

மார்க்கெட்டிங் செய்பவர்களின் தாரக மந்திரமான, புரிய வை இல்லை என்றால் குழப்பு [convince  or  confuse ] என்ற நிலைபாட்டை எடுத்து விட்டார் போலும்...

கொஞ்சம் மனசாட்சி உள்ளவர் என்றால், ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்று மொத்த தமிழனையும் குறை கூறாமல்.. ஆலோசனைகளை ஏற்று கொள்ளும் மன நிலையில் ஒருவர் இல்லை என்று கூறி தமிழக மக்களின் எரியும் வயிறை அணைத்திருக்கலாம்.. 


26.7.11

ராக்கெட் ராஜா...

- தொடர் கதையாகி இருப்பதால், முழு விஷயமும் வெளியே வந்த பின்பு...
இப்போதைக்கு இந்த படமே போதும், பல்வேறு கதை சொல்கிறது...
நான் ரசித்து சிரித்த படம்...

29-7-2011
-எல்லோர் தலையும் உருளுகிறது...

24.7.11

கஜினியாகும் கல்மாடி

சட்டத்தின் பார்வையில் சிக்கியவர்கள் அதிகார வர்க்கமாக இருந்தால், அதன் ஓட்டைகள் எங்கெங்கு இருக்கிறது என்று அவர்களை விட வேறு யாருக்கும் அழகாய் தெரிவதில்லை...
ஆதர்ஷ் ஊழலில் முக்கியமான ஆவணங்கள் காணாமல் போய் கொண்டே இருப்பது குற்றம் சாட்டப் பட்டவரை காப்பாற்றி கொண்டிருக்கிறது... 

அதே போல, 
காமன் வெல்த் போட்டிகளில் நடைப் பெற்ற ஊழல்களின் முக்கிய புள்ளியாக உள்ள கல்மாடி சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்த ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது.. 

டேமேன்சியா (dementia-http://en.wikipedia.org/wiki/Dementia) என்று அழைக்கப் படும் நோய் தாக்கப் பட்ட நபராக அவரை காப்பாற்றும் முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.. மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப் பட்டுள்ளது அவரை காப்பாற்றும் முயற்சி... இந்த நோய் அவருக்கு இன்று நேற்று வரவில்லையாம், கடந்த ஆறு வருடங்களாக இருந்தது அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது..

இந்த சூழ்நிலைக்கு "மணல் கயிறு" படத்தில் வரும் வசனம் ஞாபகம் வருவது தவிர்க்க முடியவில்லை..
மாப்பிள்ளை  : காது கேட்காதா? எத்தனை நாளா?
மாமியார்: ஏழு வருஷமா!
மாப்பிள்ளை: ஏழு வருஷமாவா? அப்ப ஒரு காது கேட்காத கிழவன் கிட்டயா என் எட்டாவது கண்டிஷன சொன்னேன்?

இத்தனை காலமாக ஒரு ஞாபக மறதி ஆளையா ஒரு அதிகாரியா போட்டு வைச்சிருந்தாங்க?

இதை பற்றி நம் பிரதம மந்திரியை கேட்டால் அவர் சொல்லப் போகும் ஒரே பதில், "எனக்கு எதுவுமே தெரியாது" 
ஒரு வேளை அவருக்கும் டேமேன்சியாவாக இருக்குமோ?

இருள் விலகும் நேரம்..

 வள்ளுவனின் திருக்குறளை பெருமையாக பேசும் யாவரும் மறந்து விடும் ஒரே குறள், கற்க கசடற... 
 
எதையாவது படிக்கும் போது அதை சந்தேகத்தோடு அணுகி, அனைத்து சந்தேகங்களையும் களைந்து கொண்ட பின்பு அதை வாழ்க்கை நடைமுறையில் பயன் படுத்த வேண்டும் என்ற அருமையான தத்துவம் கொண்டது இந்த குறள்.. அந்த குறள் படி தான் நான் நடக்கிறேன் என்று மனசாட்சியுடன் பதில் அளிப்பவர்கள் ஆயிரம் பேரில் ஒருவராக தான் இருக்க முடியும் என்பது என் எண்ணம்...

கர்நாடக மாநிலத்தில் பகவத் கீதையை அனைவரும் படிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியிருப்பதற்கு எதிர்ப்பு  கிளம்பி இருக்கிறது.. பகவத் கீதையோ, அல்லது மற்ற எந்த மதம் சார்ந்த நூல்களையும் படிக்கும் எவருக்கும் பல்லாயிரக் கணக்கான சந்தேகங்கள் எழுவது உறுதி... அந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காமல் இருப்பதும் உண்மை.. சந்தேகங்களுக்கான பதில் பெரும்பாலும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று தான் வருகிறது...

ஆகையால் மாணவர்கள் அனைவரும் மதம் சார்ந்த அனைத்து புத்தகங்களையும் படித்து சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், கேள்வி கேளுங்கள், கண்டிப்பாக கேள்விக்கு பதில் கிடைக்காது...

உங்கள் மதம் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை பெற பகத் சிங்கின் புத்தகங்களை படியுங்கள், அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்... 

ஒரு திரைப்படத்தில் வரும் வசனம், 
"மக்களின் பிரச்சினைகள் ஒழிந்து, மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் மிஞ்சி இருக்கும் என்ற நிலை வரும் பொழுது கடவுள் தானாகவே காணாமல் போய் விடுவார், அதனால் கடவுள் இல்லை என்று கூவுவதை விட, பிரச்சினைகளுக்கு பதில் தேடுங்கள்' என்று இயக்குனர் கூறியிருப்பார்...

அவருக்கு நம் பதில்,

கடவுள் என்று ஒருவர் பின்னால் ஓடுவதால் தான் இவ்வளவு பிரச்சினைகளும், பிரச்சினைகள் உச்ச கட்டத்தை நெருங்கும் பொழுது, மக்களே தானாக கடவுளை புறக்கணிப்பார்கள்...

எத்தனையோ புதிய கோவில்களில் கூட்டம் அதிகரிக்கிறது,
பழைய கூட்டம் நிறைந்த கோவில்களில் கூட்டம் நிரந்தரமாகி உள்ளது...
இது மக்கள் பழைய கடவுளின் மேல் நம்பிக்கை இழந்து புதிய கடவுள் மேல் நம்பிக்கை வைப்பதையே காட்டுகிறது...

மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாதது ஒன்றே ஒன்று தான், ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்கள்  தான் மாறிக் கொண்டிருக்கிறார்கள், காட்சிகள் அல்ல என்பதை தான்...

புரிந்து கொள்ளும் பொழுது விடிந்து இருக்கும்...

23.7.11

சாயம் போகும் சிகப்பு சிந்தனைகள்..

நில அபகரிப்பு என்பது கடந்த தி.மு.க ஆட்சியில் தான் அதிகம் நடந்தது என்றும், ஆகையால் அதை பற்றி விசாரிப்பது பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என்பது தோழர்(?). ராம கிருஷ்ணனின் அறிக்கை...

தொடரும் நம் கேள்விகள்...

-பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என்றால் ஏன் 2006 - 2011 கால வரையில் உள்ள மோசடிகளை பற்றி மட்டும் விசாரிக்க வேண்டும்...

-ஒரு ஆளும் கட்சி அமைச்சர் மேலேயே சொந்த கட்சியினரே புகார் தெரிவித்து மேலிட சமரசத்திற்கு பின்பு, புகார் திரும்ப பெறப் பட்டது.. அது பொய் புகார் என்றால் புகார் கொடுத்தவரின் மேல் நடவடிக்கை என்ன? அது உண்மை என்றால் அமைச்சர் மீதான நடவடிக்கை என்ன? 

-அதிகார போதை தலைக்கு ஏறியவர்கள் இது போன்ற சமயங்களில் இப்படி தான் சட்டத்தை கையிலே எடுப்பார்கள் என்பது அரசு என்னும் புத்தகத்தை படித்த உங்களுக்கு தெரியாதா?

-அப்படி இருந்தும் பொதுவுடைமை தத்துவங்களை, லாப நோக்கத்திற்காக மட்டும் முதலாளித்துவ கொள்கைகளிடம் அடகு வைப்பது நியாயமா?

நில அபகரிப்பு குறித்து கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும், ஆனால் அது ஒரு தலை பட்சமாக இருக்க கூடாது என்பது தான் எங்கள் கவலை... தகர டப்பாவில் உண்டியல் செய்து காசு வசூலிப்பது நம் இயக்கத்தின் பெருமை, அதை விட்டு அந்த சத்தத்தை ஜால்ரா சத்தமாக மாற்றாமல் இருந்தால் நாங்கள் உற்சாகமாக இருப்போம்...

தூக்கத்தில் கூட பொதுவுடைமை தத்துவங்களை கனவு கண்டு உறங்கும் தொண்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,
கட்சிக்கு செலவு வைக்க கூடாது என்று சுவரொட்டிகளை தூக்கம் கெடுத்து ஒட்டி விட்டு வரும் தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள்...

பேசுவதற்கு முன்பு அவர்களையும் சிறிது நேரம் சிந்தியுங்கள்...


22.7.11

ஏன்?

மத்திய ஆளும் கட்சியின் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

எனக்கு முன்பு ஆண்ட கட்சியின் கொள்கையை தான் நாங்கள் பின் தொடர்ந்தோம் என்று காங்கிரஸ் பதில்...

பீகார் மாநில முதல்வர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

கர்நாடக மாநில முதல்வர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

கேரளா இடது சாரி தலைவர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

உத்தர பிரதேசத்தில் முதல்வர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மேல் ஊழல் குற்றச்சாட்டு...

தி.மு.க அமைச்சர்கள் மேல் ஊழல் புகார்..

அ.தி.மு.க தலைவர் மேல் ஊழல் புகாரின் மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை....

ஜகன் மோகன் ரெட்டி மேல் சொத்து குவிப்பு விசாரணை...

எல்லாம் சரி...

இவர்களால் உதவி பெற்ற அனைத்து பெரிய நிறுவனங்களின் பங்கு பற்றியும் இது வரை யாரும் வாயே திறக்கவில்லையே ஏன்?

அலட்சியம் - சாமர்த்தியம் - சதி

சிங்கூர்... 

இடது சாரிகளின் அலட்சியம்..
மம்தாவின் சாமர்த்தியம்...
வலது சாரி ஊடகங்களின் சதி...

இடது சாரிகளின் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிங்கூர் எப்படி திரிணமுல் கட்சிக்கு கல்லறை ஆகியிருக்கிறது என்று பல்வேறு ஊடகங்கள் கட்டுரை வரைய தொடங்கி விட்டன..
இரட்டை வேடம் போட எடுத்த நாடகம், வெற்றியில் முடிந்து விட அடுத்து எப்படி வேஷம் கட்டுவது என்பதில் குழப்பம்...
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை... 
இப்படி பட்ட விஷயம் என்றுமே குழப்பம் தான்...

இதில் குழம்ப ஒன்றுமே கிடையாது,
உங்களை நம்பி மக்கள் வாக்களித்து உள்ளனர், 
ஆகையால் அவர்களின் நலன் எதுவோ அதை செய்யுங்கள்...
மக்களின் ஏழ்மையை ஒழித்துக் காட்டுங்கள், பொதுவுடைமை சிந்தனைகளை நீங்கள் கையில் எடுத்து ஆட்சி செய்தாலும் தவறில்லை...
அப்படி மக்கள் நலன் மேல் அக்கறை இல்லாமல், மற்ற அரசுகள் போல் பணம் சம்பாதிக்க இறங்கினால், உங்கள் கனவுகள் கனவுகளாகவே இருக்கும்...


21.7.11

சமமும் இல்லை... சமாதானமும் இல்லை...

 இருபது மணி நேரம் சாப்பிடும் குதிரை போல் இல்லாமல் சிறிது நேரம் மட்டுமே நன்றாக உண்டுவிட்டு அசைபோடும் கழுதை...

குதிரைகள் போல் எளிதில் பயந்து கண்மூடித்தனமாக ஓடாமல், சிறிது தூரம் ஓடிய பின் எது தன்னை பயமுறுத்தியது என்று ஆராயும் தன்மை கொண்டது கழுதை...

குதிரைகள் போல் அல்லாமல் கழுதைகள் சிந்திக்கும் குணம் கொண்டவை... ஆகையால் தான் அவற்றை அடக்கி ஆளவோ மிரட்டி வேலை வாங்கவோ முடியாது... எதையாவது கற்றுக்கொடுத்தால் அவற்றால் தனக்கு ஆபத்து இல்லை என்று தெரிந்துக் கொண்ட பின்பே அவற்றை கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவை கழுதைகள்...

கழுதைகளுக்கு நாம் ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் நாம் அதன் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதும் முக்கியம்..

வேகமாக பயணிப்பது முக்கியம் அல்ல, சரியான பாதையில் பயணிக்கிறோமா என்பது தான் முக்கியம்..
சரியான பாதையில் பயணம் செய்ய மேற்கூறிய கழுதை குணம் கொண்ட இயந்திரமே போதுமானது...

எதையாவது பேச வேண்டும் என்று பேசும்  எதிர்க்கட்சி தலைவர் ..
ஏதாவது தீர்ப்பு சொல்லலாம் என்று வழ வழ கொழ கொழ என்று தீர்பளிக்கும் நீதிமன்றம்..
ஏதாவது நடக்க கூடாது, நான் நினைத்ததே நடக்க வேண்டும் என்ற மன நிலையில் முதல்வர்...
ஏதாவது நடக்காதா என்ற ஏக்கத்தில் தமிழக மக்கள்...

வோட்டு போட்ட பிறகு யோசிக்க கூடாது என்று தான் அறிவு முதிர்ச்சி அடைந்தவர்கள் ஓட்டு போட வேண்டும் என்று வரை அறுத்து வைத்துள்ளார்கள் சட்ட மேதைகள்...

ஆளும் கட்சிக்கு வோட்டு போடாதவர்களையும் சோதித்து பார்க்கும் ஜனநாயகம்...

பெற்றோர்களின் கரங்களில் தங்கள் எதிர் காலத்தை கொடுத்து விட்டு கவலையில் மாணவர்கள்...

தமிழகமே என்ன செய்யப் போகிறோம்...

குதிரை கேட்டோம் கிடைக்கவில்லை, கழுதை கிடைக்கிறது... குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயன்படுத்திக் கொள்ளலாமே - கேப்டன்

கழுதையை விட குதிரை மேம்பட்டதா  என்பதை அறிய...
http://www.longhopes.org/donkeysvshorses.html

20.7.11

திருந்தவே மாட்டீங்களா?

1 2 3 ஒப்பந்தத்தால் நடந்த கூத்துக்கள், பல்வேறு ஊழல்களால் பின்னுக்கு தள்ளப் பட்ட பொழுது உச்ச நீதிமன்ற உத்தரவால், அதன் அசிங்கமான முகம் அமர் சிங்கை விசாரிக்க போகும் தருணமாக வெளிச்சத்திற்கு வரும் தருணத்தில்...

இரண்டு செய்திகள்...

ஒன்று
அணு உலையினால் ஏதாவது விபத்து நேரிடும் தருணம், அதன் பாகங்களை விற்ற நிறுவனங்களும் பொறுப்பாளி ஆக்கப் படும் என்னும் விதியில் சில ஓட்டைகளை போட நினைக்கிறது அமெரிக்க அரசு...

இரண்டு
ஆந்திரா மாநிலத்தில் சமீபத்தில் உரேனியம் தாது ஒன்றரை லட்சம் டன் அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

இனி பிற நாட்டினரை உரேனியம் சார்பாக சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று எண்ணி பூரிப் படையும் பொழுது இந்த செய்தியை வெளியிட்ட அமைச்சர், இந்த கண்டுபிடிப்பால் நம் நாட்டின் மொத்த தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்றும்... வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது தடை படாது என்றும் நமக்கு சொல்வது போல் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு உறுதி மொழி அளித்துள்ளார்..

விக்கிபீடியா வில் வெளிவந்துள்ள கட்டுரைப்படி நமது நாட்டின் ஆண்டு தேவை 2000 டன் கள் மட்டுமே... [1 tonne = 1000 kilo]
ஆக இந்த கண்டுபிடிப்பு படி நம் நாட்டுக்கு குறைந்த பட்சம் ஐம்பது ஆண்டுகளுக்கு வெளி நாட்டு உரேனியம் தேவை இல்லை என்று தான் அர்த்தம்...

ஆக காங்கிரஸ் அரசுக்கு நமது கேள்வி என்ன என்றால்,
திருந்தவே மாட்டீங்களா?

http://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_India#Nuclear_Power_Growth_in_India

http://www.thehindu.com/news/national/article2248407.ece

19.7.11

மூளை சலவை..

ஹிந்து பிசினஸ் லைன் என்னும் நாளிதழில் இந்த வாரம் திரு.கோகுல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்டுரை வரைந்துள்ளார்...

பொருள்களை விளம்பரப் படுத்த கட்டுபாடுகளை தளர்த்தி கொள்ள வேண்டும் என்பது அவர் வாதம்...
பொறுப்பான வாதத்தை முன் வைத்தால் நல்ல விவாதமாக கொண்டு சொல்லலாம், ஆனால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பொழுது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை...

திரைப்படத்திற்கு ஒரு தணிக்கை, தொலைக்காட்சிக்கு என்று ஒரு தணிக்கை குழு, விளம்பரத்திற்கு என்று ஒரு தணிக்கை குழு என்று தனி தனியாக இருப்பது பிரச்சினை என்று கூறியுள்ளார்..

திரைப்பட தணிக்கை குழு சரியான தணிக்கை செய்யாமல், திரைப்படங்களை வெளியிடுவதும், அதை தொலைக்காட்சி துறையினர் அப்படியே  வெளியிட்டு, பாலியல் உணர்ச்சி தூண்டி பார்வையாளர்களை கட்டி போடுவதும், இதை வழிக் கோலாக வைத்து விளம்பர துறையினர் நகைச்சுவை என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பியும், பாலியல் உணர்ச்சிகளை தூண்டி பொருட்களை விற்பனை செய்வதும் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்...

தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் தவறான முன்னுதாரணத்தை கொண்டுள்ளதும், அதை பார்த்து வாய் பொத்தி அமைதியாய் இராமல் எதிர்ப்பை தெரிவித்து போராடாமல் மக்கள் இருப்பதும், விளம்பர நிறுவனங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகி விட்டது...

விளம்பரத்தை தணிக்கை செய்வோம் என்று கிளம்பிய அரசு சாரா நிறுவனம் பல்வேறு தலைவலிகளை உண்டாக்குவதால், அவற்றின் மேல் சேறு பூசும் சங்கதிகளும் நடப்பதை பதிவு செய்துள்ளார்...

தவறு செய்யும் திரை துறையினரையும், தொலைகாட்சி துறையினரையும் விட்டு விட்டு, விளம்பரத்தின் மீது மட்டும் ஏன் கோப படுகிறீர்கள் என்றும், ரொம்ப கிடுக்கி பிடி போட கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்...

திரு. கோகுல் கிருஷ்ணமூர்த்திக்கு கேள்விகள்...

முதலில் மற்றவர்கள் தவறு செய்வதை பொறுத்துக் கொண்டுள்ளோம் என்று கூறியது தவறு... பொறுத்துக் கொள்ளவில்லை; பொருமிக் கொண்டு தான் இருக்கிறோம்...
தொலைக்கட்சிகளில் நடக்கும் கூத்துகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்...
அவர்கள் தவறு செய்வதால் இவர்களும் தவறு செய்யலாமே என்று கூறுவதை என்ன என்று சொல்வது என்று தான் புரியவில்லை..

கடைசியாக

விளம்பரங்கள் பொழுது போக்கும் அம்சங்கள் இல்லை. பொழுது போக்கும் அம்சங்களிலேயே சிறுவர்களின் மனம் கேட்டு போகிறது என்று தான் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் காட்டக் கூடாது என்று தடை செய்திருக்கிறார்கள், அப்படி இருக்கையில் மக்கள் மனதை மூளை சலவை செய்வதற்கு என்றே தயாரிக்கும் விளம்பரங்களில் பொய்கள் கலக்கலாம் என்பது என்ன வாதம்...

திரைத்துறையில் நீங்கள் கேட்கும் பெண்களின் தோலுரித்து பார்க்கும் வேலைகள் நடப்பதால் தான், பாலியல் வக்கிரங்கள் நாடெங்கும் அதிகமாகியிருக்கிறது...

உங்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் அங்கு சென்று ஜால்ரா அடியுங்கள், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, மாறாக பலரின் எண்ணங்களை மூளை சலவை செய்வது போல் பேச வேண்டாம்...

நான் என்று எண்ணாமல் தயவு செய்து நாம் என்று எண்ணுவோமே..
http://www.thehindubusinessline.com/opinion/article2227218.ece?homepage=true

18.7.11

இந்திய முதலாளித்துவ கட்சி...


நமது மத்திய அரசாங்கத்தின் கடன் தொகை, 34 லட்சம் கோடி,

http://www.rediff.com/money/2009/feb/17bud-every-indian-to-have-debt.htm

தமிழக அரசின் கடன் தொகை 1 .5 லட்சம் கோடி...

தமிழக அரசுக்கு கடன் தொகை இருப்பதால், வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறும் தா. பா..
தனக்கே உண்டான பாணியில் மத்திய அரசின் வரி உயர்வை எதிர்த்து போராட்டம் ஆரம்பிக்க போவதாக கர்ஜித்துள்ளார்...

தமிழக அரசின் வரி உயர்வால் விவசாயிகள் பாதிப்படைவார்களா என்று ஆராய்ந்து கூறுவார்களாம், வரி உயர்வு அறிவித்து சில நாட்கள் ஆகியும் இன்னும் ஆராயாமல் அப்படி என்ன முக்கியமான வேலையில் இருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை...

நீங்கள் பிரணாப் முகேர்ஜியிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,
அவர் உங்களை விட அருமையாக சப்பை கட்டு கட்டுவார்...

கட்சியின் பெயரை capitalist party of india(cpi) என்று மாற்றி விடுங்கள்...

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/18/1110718005_1.htm

உண்மையான பொதுவுடைமை தோழர்கள் என் கருத்தை ஆமோதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...

17.7.11

கடமையும் கட்டுப்பாடும்..

ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உள்ளது. அது என்ன கடமை என்பது சிலருக்கு தெரிவது உண்டு, சிலருக்கு தெரிவதில்லை... இது தான் தன் கடமை, என்று செல்பவனுக்கு பல்வேறு இன்னல்கள் நேருவது உண்டு.. அப்படி அவதி படுபவர்களில் பல நல்ல மனிதர்கள் உண்டு...

நான் மருந்து விற்பனை பிரதிநிதியாய் பணியாற்றிய பொழுது எனது மேலாளர் ஒருவர், தனது கடமை என்ன என்று தெரியாததால் மிகவும் அவதிப்பட நேர்ந்தது...
மேலாளரின் கடமை தன் கீழ் பணியில் இருக்கும் ஒருவருக்கு உதவி புரிவது என்று புரிந்து கொண்டார், ஆனால் உண்மையில் அவரின் கடமை தன் கீழ் பணி புரியும் ஒருவனை நிர்வாகத்திற்கு எதிராக போகாமல் தடுப்பதே ஆகும்... நிர்வாகம் எது செய்தாலும் தட்டி கேட்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்க வைப்பதே மேலாளரின் உண்மையான பணி...

அது போல், அரசு நிர்வாகத்தின் அங்கமாக இருப்பவர் பெரும்பான்மையினரின் நலனை பற்றி யோசிக்காமல் சிறுபான்மையினரின் நலனை பற்றி கவலை படுவதே ஆகும்.. இங்கு நான் சிறுபான்மை என்று கூறுவது பணம் படைத்த சுரண்டி தின்னும் கூட்டமே ஆகும்.. அப்படி பட்டவரின் நலனை என்னாமல் செயல் படும் பொழுது, நீங்கள் நல்ல மனிதராக இருந்தாலும் கடமையில் இருந்து தவறுபவராகவே கருதப் படுவீர்கள்.. அப்படி தவறும் பட்சத்தில் உங்கள் நல்ல என்னத்திற்கு என்றும் களங்கம் உண்டாக்கப் படும்...

உங்களை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம்...
வரலாற்றில் உங்கள் பெயரை பொறித்தாகி விட்டது... உங்கள் வேலையை உதறி விட்டு ஒரு நல்ல கால்நடை மருத்துவராய் உங்கள் பிழைப்பை ஓட்ட உங்களால் முடியும்...

முதலாளித்துவ அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்து கொண்டு நல்லதை செய்ய முடியாது என்று புரிந்து கொள்ளுங்கள்...

மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதும் மக்களுக்கு செய்யும் நல்ல காரியம் தான்..

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276241

16.7.11

பச்சை நிறமே, பச்சை நிறமே..


காங்கிரஸ் கொடியில் இருக்கும் பச்சை நிறம் தவிர மற்ற எந்த நிறமும் நம் தலைவர் கண்ணுக்கு தெரிவதில்லை...
இவரே ஒரு நல்ல கேள்வியை கேட்டு விட்டு அதற்க்கு தவறான பதிலை கொடுத்திருப்பது அன்றாட நிகழ்வுகளின் கவலைகளை மறந்து சிரிக்க வைத்தது...
காமராஜரின் பிறந்த நாளை இந்த ஆண்டு கல்வி எழுச்சி நாளாய் கொண்டாடவில்லையாம். அதற்கு காரணம் இந்நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் நிதி ஒதுக்கவில்லையாம்.. இந்த தவறுக்கு காரணம் அதிகாரிகள் தான் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகளான அமைச்சர்கள் அல்ல என்ற இவரின் கருத்தை சரி என்று ஒத்துக் கொள்ளும் அளவுக்கு தற்குறிகளாய் தமிழக மக்கள் இல்லை...
சமச்சீர் கல்வி குளறுபடி,
அமைச்சர்கள் அதிகாரிகளின் பந்தாடுதல்,
வரி உயர்வு,
என்பது தான், தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என்பதின் அறிகுறியாம்...
இதே போல் செய்த தவறுகளை பொறுத்து கொண்டு சென்ற ரபி பெர்னடுக்கு கிடைத்த மாநிலங்களவை யோகம் இவருக்கும் அடிக்காதா என்ற நப்பாசையா என்று தெரியவில்லை...
சார், நீங்க இருக்கிறது காங்கிரஸ் ல அ.தி.மு.க வில் இல்லை...

http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:+%E0%AE%88.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&artid=447204&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

15.7.11

வெளிச்சத்தில் சந்தேகம்...


சுரண்டப் பட்ட உழைப்பே லாபம் என்று சொன்ன அறிஞர் மார்க்ஸ் க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...
ஆனால் அவர் சொன்னது சரி என்று சொல்லும் அளவுக்கு நம் தமிழக முதல் அமைச்சர் முன்பு இரு விதமான வணிகர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்...

செங்கல் ஒரு லோடுக்கு 3000 ரூபாய் குறைப்பதாகவும்,
ஜல்லி கல் ஒரு லோடுக்கு 700 ருபாய் குறைப்பதாகவும் கூறியுள்ளனர்..

எந்த விதமான சலுகைகளும் கிடைக்காமல் இவ்வளவு தொகையை நாட்டின் நலன் கருதி குறைத்து கொள்வதாக கூறுவது பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது...
அப்படியே நாட்டின் நலன் கருதி குறைத்து கொள்வதை ஏற்றுக் கொண்டாலும் இத்தனை நாளாய் அதிக லாபத்திற்கு விற்றுள்ளது வெளிச்சத்திற்கு வருகிறது...

திடீர் என்று ஏன் குறைக்கிறார்கள் என்ற சந்தேகம் அனாதையாய் நிற்கிறது...

http://thatstamil.oneindia.in/news/2011/07/14/brick-jalli-rates-come-down-after-jaya-order-aid0136.html

14.7.11

தீர்வாகாது...

பிரதம மந்திரி ஆகும் அளவுக்கு வளர்ந்து விட்டார் என்று ஒருவர் பிதற்றியது, பிதற்றல் தான் என்று ஒத்துக் கொள்ளும் அளவுக்கு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.. ராகுல்...

தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அவர் கொடுத்திருக்கும் அறிக்கையில், இந்திய அரசின் செயல்பாட்டால், 99 % தாக்குதல் முறியடிக்கப் பட்டு 1 % தாக்குதல் மட்டுமே நடந்தேறி விட்டதாக கூறியுள்ளார்... இனி வரும் காலங்களில் இந்த 1 % தாக்குதலும் முறியடிக்கப் படும் என்று கூறியுள்ளார்... ஒரு பிரச்சினையை மேல் மட்டத்தில் பார்ப்பதால் உண்டாகும் பதில் இது... யாராவது இவருக்கு பேச கற்று கொடுத்தால் நன்றாக இருக்கும்...

தீவிரவாதத்தின் ஆணிவேர் மத வெறுப்போ, சாதி வெறுப்போ அல்ல, மாறாக வேலை வாய்ப்பின்மையும், வர்க்கப் பிரிவினயுமே ஆகும்... வாழ வழி அற்று போகும் நிலையில் உள்ளவர்களை சிலர் தங்கள் சுயநலத்திற்காக இது போல் காரியங்களில் ஈடுபட வைக்கிறார்கள்... இது போல் நிலையை உருவாக்குவதில் அரசின் பங்கு முழு முதல் காரணம் ஆகும்.. இது போன்ற செயல்களுக்கு மற்ற நாடுகளையோ, மத அமைப்புகளையோ குற்றம் சாட்டும் முன்பு இதை தடுக்க அரசு என்ன செய்தது என்று கேட்டுக் கொண்டால் நன்றாக் இருக்கும்...

சுரண்டல்கள் இருக்கும் வரை சமுதாயத்தில் வெடிகள் வெடித்து கொண்டே தான் இருக்கும்... வெடித்து முடித்த பின் வேடிக்கை பார்ப்பதை விட்டு விட்டு வேலை வாய்ப்பை உருவாக்கி வர்க்க பிரிவினையை உருவாக்கினால் 100 % அமைதி உலகம் எங்கும் பரவி நிற்கும்...
அதுவே இப்பிரச்சினையை அணுக சரியான முறை...

தீவிரவாத செயல்பாடு ஒரு பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகாது, அதே போல அடக்கு முறையும் தீவிர வாத பிரச்சினைக்கு தீர்வு ஆகாது...

http://ibnlive.in.com/generalnewsfeed/news/difficult-to-stop-all-terrorist-attacks-rahul/756532.html

13.7.11

பாதுகாப்பில் இருந்து, வளர்ச்சிக்கு...


நில ஆர்ஜிதம்..

மேற்கு வங்க அரசை தூக்கி அடித்தது...

உத்தர பிரதேசத்தை ஆட்டம் காண செய்து கொண்டிருக்கிறது...

ஒரு தனியார் துறை அசுர வளர்ச்சி அடையும் பொழுது, மேலும் வளர்ச்சி அடையும் நோக்கில் மூன்று கால் பாய்ச்சலில் சுரண்டி கொழுக்க புறப்பட்டு விடுகிறார்கள்... அவர்களே நேரடியாக நிலம் கொள்முதல் செய்யும் பொழுது, இடை தரகர்கள் தான் மிகவும் பயன் அடைகிறார்கள்... இது பிடிக்காத தனியார் துறை தாங்கள் வளர்ச்சி அடையும் நோக்கில் அரசிடம் பேசி அரசு விலைக்கு நிலத்தை வாங்கி லாபம் அடைகிறார்கள்...

இதை தடுக்க புறப்பட்ட, தேசிய ஆலோசனை குழு அரசு விலையை விட 60 மடங்கு அதிக விலைக்கு நிலத்தை வாங்கி தர ஒவ்வொரு மாநில அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வெளியிட்டது...

எதையோ பிடிக்க போய் எதோ ஆகிறதே என்று பயந்த தனியார் துறை, திட்டம் போட்டு புதிய நில சட்டத்தை தயாரிக்க அரசின் யோசனையை கேட்டது... அதன்படி அரசு வெளியிட்ட புதிய நில சட்டம் மேற்கூறிய ஆலோசனையை நிராகரித்து, ஒரு மாதிரி குழப்பி வெளியிட்டது...[ முப்பது சதவிகிதம் மட்டுமே மாநில அரசு வாங்கி தர வேண்டும் என்றும், அரசு விலையை விட 60 % அதிகம் வாங்கலாம் என்றும் தயாரித்தனர்].

இப்பொழுது அமைச்சரவை மாற்றத்தில் பல தனியார் நிறுவனங்களுக்கும் சுற்று புற சூழல் அமைச்சகத்தில் தண்ணி காட்டி கொண்டிருந்த ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு மாற்றப் பட்ட பின் தனது முத்திரையை பதிக்க ஆரம்பித்து விட்டார்...

இதற்கு முன் தயாரித்த சட்டத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு தேசிய ஆலோசனை குழுவின் பரிந்துரையை அமுல்படுத்த தயாராகி விட்டார்...
அதன் படி அடுத்த வார இறுதிக்குள், சட்டத்தின் நகல் இணையத்தில் வெளியிடப் பட்டு மக்களின் கருத்து கேட்கப் படும்... ஆலோசனைகள் வரவேற்கப் படும்... வரும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு சட்டம் பாராளுமன்றத்தில் இந்த மழை கால கூட்டத் தொடரில் விவாதித்து அமுலுக்கு கொண்டு வரப்படும்...
உங்கள் ஆலோசனைகளை பதிவு செய்ய ஆவலுடன் எதிர்பாருங்கள்...

http://economictimes.indiatimes.com/news/politics/nation/land-bill-draft-will-go-online-for-debate-jairam/articleshow/9211822.cms

அரசியல் விளையாட்டு செய்திகள்...


செய்தி: நான்கு ஆண்டுகளுக்குள் வறுமை ஒழிக்க படும்... -செல்வி.ஜெயலலிதா..
ஆணிவேர்: ஏழைகளை ஒழிச்சு கட்டிட்டா எங்கிருந்து வறுமை இருக்கும்...

http://www.dinamani.com/edition/story.aspx?Title=4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88,+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&artid=442100&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu


செய்தி: கத்காரி ஆர்.எஸ்.எஸ்ஸின் கை பொம்மை -காங்கிரஸ்
ஆணிவேர்: தீனிக்கு தானி சரியா போச்சா,

http://www.ndtv.com/article/india/gadkari-is-a-puppet-of-the-rss-charges-congress-112741

செய்தி: முப்பது கிலோ தங்கத்தி சாய் பாபா சமாதி அலங்காரம்..
ஆணிவேர்: அவர் வாந்தி எடுத்த தங்கம் அத்தனை கிலோ தானா?

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=bc3afba3-08e6-46ca-9074-6f19a94ba025&CATEGORYNAME=TNATL

செய்தி: வனம் என்பதற்கு விளக்கம் இன்னும் இறுதி செய்யப் படவில்லை..
ஆணிவேர்: பேசிட்டு ஏன் யோசிக்கணும்னு, யோசிச்சு பேசியிருக்காங்க...

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=439128&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%22%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

செய்தி: ராஜபக்ஷே ஒரு பொய்யர்...
ஆணிவேர்: பாம்பின் கால் பாம்பு அறியும்னு சும்மாவா சொன்னாங்க...

http://www.newindianews.com/view.php?22AOlv2bcK40Ce4e4oMMc02aKmD2dd2RDmc3036CAY2e4604U0cb3lOSd2

செய்தி: கலைஞர் மகள் அவரின் நலனுக்காக, காளஹஸ்தியில் பூஜை...
ஆணிவேர்: ஐயோ ஐயோ

http://thatstamil.oneindia.in/news/2011/06/29/selvi-conducts-special-parikara-poojai-for-karunanidhi-aid0091.html

செய்தி: தி.மு.க ஒத்துழைக்காதளால் தேர்தலில் தோல்வி.. -இளைஞர் காங்கிரஸ்
ஆணிவேர்: மக்கள் ஒத்துழைக்காதளால்னு சொல்லுங்க..

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=269330

செய்தி: மின்னஞ்சலில் வந்த கேள்விகளுக்கு கேப்டன் பதில்...
ஆணிவேர்: ஆமா எத்தனை கேள்விக்கு பதில் சொல்லாம விட்டீங்கன்னு புள்ளி விவரம் தர முடியுமா...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=659052&disdate=7/11/2011

செய்தி: அந்த வீடியோ காட்சியில் இருப்பது நான் இல்லை -ரஞ்சிதா..
ஆணிவேர்: முதல்ல நிது மேல கேஸ் குடுங்க. அவர், அது நாங்க தான்னு சொல்லிக்கிட்டு திரியறார்...

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=1136

செய்தி: அனுமதியின்றி துப்பாக்கி விற்ற 27 ராணுவ அதிகாரிகள் மேல் விசாரணை..
ஆணிவேர்: கடமையை செய்தார்கள் என்று அரசு சொல்லுமா?

[அனுமதியின்றி துப்பாக்கி செய்தி]
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=814

[கடமையை செய்தார்கள் என்று அரசு செய்தி]
http://articles.economictimes.indiatimes.com/2011-06-17/news/29669898_1_crpf-personnel-crpf-men-fake-encounter

12.7.11

வெடி குண்டு..


இந்த வெடி குண்டை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்...
என் கருத்து 1 :
ஏழைகளை[ஏழ்மையை] ஒழித்து கட்ட அரசு எடுக்கும் நடவடிக்கை...

http://articles.timesofindia.indiatimes.com/2011-07-09/india/29754874_1_cylinders-cooking-gas-kerosene

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...


ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவன் புலம்பி கொண்டிருந்தான், தன் பாக்கெட்டில் வைத்ததிருந்த பணத்தை யாரோ களவாடி விட்டதாக அழுது புலம்பி கொண்டிருந்தான்...
சுற்றி இருந்த அனைவரும் பரிதாபத்துடன் பார்த்தபடி அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்...
ஊருக்கு திரும்பி கூட போக முடியவில்லை என்று அழுது கொண்டிருந்தவனை நமது கதையின் கதாநாயகன் நெருங்கினான்... பேச்சு கொடுத்தான்.. சாப்பிட்டியா என்று கேட்டான்... இல்லை என்று பதில் வந்தவுடன் அருகில் இருந்த உணவகத்தில் சாப்பாடு வாங்கி கொடுத்து பேருந்து ஏற்றி விட்டு, கை செலவுக்கு நூறு ரூபாயும் கொடுத்து விட்டான்... பணத்தை பறி கொடுத்தவன் நன்றியுடன் கண்ணில் நீர் வடிய அவனை கை கூப்பி தொழுதான்... வாழ் நாள் முழுவதும் நம் கதாநாயகனை மறக்க மாட்டேன் என்று கூறினான்...
அதெல்லாம் பரவாயில்லை என்று கூறி விட்டு பிரிந்து சென்ற கதாநாயகன், புதர் மறைவில் உட்கார்ந்து பர்சில் இருந்த மீதி பணத்தை எண்ணி விட்டு, காலி பர்சை தூக்கி எரிந்து விட்டு தன் வழியில் சென்றான்...

அது போல், தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற வழி தெரியாமல், நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் மேல் வரிகளை உயர்த்தி 4200 கோடி ரூபாய் எக்ஸ்ட்ரா வருமானத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்...

ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு வகையில் விலை வாசியை உயர்த்தி நம் முதுகை உடைத்து கொண்டிருக்கும் பொழுது, மாநில அரசும் உடைக்க ஆரம்பித்தால்...

எனக்கென்னவோ புரட்சி சீக்கிரம் வந்து விடுமோ என்று தான் தோன்றுகிறது...

http://thatstamil.oneindia.in/news/2011/07/12/tn-govt-hikes-value-added-taxes-aid0136.html

10.7.11

நன்றாகவே நடந்ததா?


நாட்டு மக்களை காப்பாற்றும் இயந்திரம், மக்களுக்காக உயிரை கொடுக்க தயாராகும் உள்ளங்கள், பணியிலும் மழையிலும் போராடும் வீரர்கள்...
ராணுவத்தை குறித்த நமது சிறு வயது பாட புத்தகங்களில் படித்த பக்கங்கள், கண் முன்னே கரைந்து போகிறது...

ராணுவ ஆயுதங்கள் கள்ள சந்தையில் விற்பனை..
ராணுவ குடியிருப்பு கட்டுவதில் ஊழல் [ ஆதர்ஷ்]
அசாமில் ராணுவ அதிகாரிகள் யாரை வேண்டும் என்றாலும் கற்பழிக்கலாம் என்னும் அரசு சட்டம்...
சாதாரண மக்களை குருவியை போல் சுட்டு தள்ள உரிமை...

கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை அனைத்தும் இல்லாத ஒரு இயந்திரம் எவ்வளவு கொடுமையானது என்பதை கிழக்கு இந்திய மாநிலங்களும், ஜம்மு காஷ்மீரும் ஏற்கனவே கண்டவை தான்...

வேலை வாய்ப்பு அறவே அற்று போகும் பொழுது தீவிரவாதம் முளை விடுகிறது, வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல், பிறர் மேல் நாம் குற்றம் சொல்லி கொண்டிருப்பதால் நமது ஆபத்து நீங்கி விடாது...

ஒரு சிறுவனை சுட்டு கொன்றதை ஏழு நாட்கள் கழித்து ஒத்துக் கொள்ளும் மன நிலையில் உள்ள ராணுவம், சீர்படுத்தப் படவேண்டும்...

http://www.hindustantimes.com/Ex-army-man-confesses-to-killing-Dilshan-CB-CID/Article1-719443.aspx#disqus_thread

இந்தியாவை இந்தியாவாக ஆள வேண்டிய மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் தனி தனியாக பார்ப்பதால் வரும் நிலை இது...

ஒவ்வொரு மாநிலத்தையும் தனி தனியாக பார்க்கும் அரசு, தேசிய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதில் எந்த ஐயப் பாடும் இல்லை...

http://articles.economictimes.indiatimes.com/2011-06-17/news/29669898_1_crpf-personnel-crpf-men-fake-encounter

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கவில்லை
எது நடக்க போகிறதோ அதுவாவது நன்றாக நடக்குமா?

அத்தனைக்கும் ஆசைபடாதே...

ஆசைபடுவதில் ஒன்றும் தப்பில்லை தான், ஆனால் அந்த ஆசை நியாயமானதாக இருந்தால் அது நடப்பதை நாம் எதிர்பார்க்க முடியும்...
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று ஒரு சொலவடை உண்டு...
அது போல் ஆசைபட்டால், கனவு கனவாகவே போய்விடும் என்பது தான் உண்மை...

பெரிய விலை உயர்ந்த மருத்துவமனைகள் வருவது தவறு இல்லை என்றும், ஆனால் ஏழைகளுக்கான அரசு மருத்துவமனை தரமானதாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டிருக்கிறார், பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்.

அரசு மருத்துவமனைகளின் செயல் படாத நிலை தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு துணை போகும்,

அரசு தபால் அலுவலங்களின் செயல் படாத நிலை தனியார் கூரியர் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகும்..

அரசு தொலைபேசி நிறுவனங்களின் செயல் படாத நிலை தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகும்...

அரசு விமான சேவையின் செயல் படாத நிலை தனியார் விமான சேவைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறது...

என்று அடுக்கி கொண்டே போகலாம்...

இப்படி பட்ட சூழ்நிலையில், தனியார் நிறுவனங்களின் பங்கும் வேண்டும் மற்றும் அரசு நிறுவனங்களும் சிறப்பாக செயல் பட வேண்டும் என்று கோருவது, எப்படி சாத்தியம்...

சரி, தனியார் நிறுவனங்களின் சேவை தான் சிறப்பாக இருக்கிறதே, அவர்களே பார்த்து கொள்ளட்டும் என்று கூறுவது... தனியார் நிறுவனங்களின் சுரண்டி கொழுக்கும் செயலுக்கு துணை போவதாகும்...

பொது உடமை சிந்தனை உள்ள பொருளாதார நிபுணரே இப்படி கூறுவது, முக்கியமான கேள்விகளை என் மனம் அறுவடை செய்கிறது...

குட்டை குழம்பி போயிருந்தால், மீனுக்கு தான் கேடு...

http://www.thehindu.com/news/national/article2215872.ece?homepage=true

8.7.11

நான்காவது தூண்...


அலை கற்றை ஊழல், எண்ணெய் படுக்கை ஊழல், இன்னும் இன்ன பிற ஊழலிலும், சம்பந்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களை நோக்கி யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை...
உச்ச நீதி மன்றமும், உளவுத்துறையும் அவர்கள் மேல் எந்த தவறையும் கண்டுபிடிக்க வில்லை...
ஊடகங்கள் எப்பொழுதாவது தான் அவர்களை பற்றி வரும் புகார்களை கூறுகிறார்கள்...
அதை தவிர வேறு எதையும் கண்டு பிடிக்க மறுக்கிறார்கள்...
பண முதலைகளின் தூண்டுதல் பேரில் அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளை கிழித்து தொங்க விடும் ஊடகங்கள், இந்த தனியார் நிறுவனங்களின் மேல் ஏனோ பாராமுகமாகவே உள்ளது...
அரசியல் வாதிகளை கண்ட மேனிக்கு திட்டி தீர்க்கும் அண்ணா ஹஜாரே கூட அவர்களை பற்றி வாய் திறக்க மாட்டேன் என்கிறார்...
அதனால் தாத்தாவுக்கு வந்த கோபத்தில் ஊடகத்தின் மேல் பாய்ந்து விட்டார்...
தப்பு செய்ததாக இவர் ஒத்து கொள்ள முடியாத நிலை...
தப்பு செய்ய தூண்டியவர்களை காட்டி கொடுக்க முடியாத பண்பு... [தமிழன் பண்பு????]
என்ன செய்வது என்று தெரியாமல், ஊடகங்கள் மேல் பாய்ந்து விட்டார்?
என்ன இவர் செய்த தவறு ஒன்றே ஒன்று தான், தமிழகத்தில் இருக்கும் ஊடகங்களில் கால் பங்குக்கு மேல் இவர் கையிலேயே இருக்கும் பொழுது இவர் ஏன் மற்றவர்கள் மேல் எரிந்து விழுகிறார் என்று தான் தெரியவில்லை...

துப்பறியும் ஊடகங்களே, குறைந்த பட்சம் நக்கீரனாவது இந்த ஊழல்களின் பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகளை பற்றி அவிழ்த்து விட கூடாதா?

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF&artid=443220&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

முதல் தூணின் அஸ்திவாரமே இந்த பெரிய புள்ளிகள் என்பதால், இந்த குழப்பம்...
ஆதாரம்: தோ.லெனின்.

எல்லாமே விளம்பர மயம்...

உலகில் நடக்கும் பல்வேறு அநியாயங்களுக்கு காரணம், கெட்டவர்களின் நடவடிக்கை அல்ல, அதை கண்டும் காணாமல் செல்லும் நல்லவர்களால்...

எனக்கு மிகவும் பிடித்த வாசகம்...

எவ்வளவோ தவறுகள் நடக்கின்றன, அதெல்லாம் தட்டி கேட்க மனம் இருந்தும், வழி தெரியாமல் முழிப்பவர்கள் பலர்... அவற்றில் ஒன்று அநாகரீகமான விளம்பரங்கள்.. தடை செய்யப் பட்ட விளம்பரங்கள்... இவற்றை பற்றி எங்கே புகார் செய்வது என்று தெரியாமல் முழிப்பவரா நீங்கள்...
இன்று ஹிந்து நாளிதழில் வந்த விளம்பரம், என்னை தேடுதலில் செலுத்தி இந்த இணைப்பை கண்டு பிடித்துள்ளேன்...
இன்று முதல் பல்வேறு விளம்பரங்களின் புகார் என் மூலமாக பதியப் படும்...
நீங்களும் வேண்டும் என்றால் கலந்து கொள்ளுங்கள்...

உங்கள் புகாரை பதிவு செய்ய...

http://www.ascionline.org/index.php/complaints

[சில நேரங்களில் server not found என்று வரும்.. திரும்பவும் refresh செய்தால் வந்து விடும்...]

7.7.11

ஈ.சி செய்றவங்களுக்கு கஷ்டம்...


இந்த மாதம் முதல் நாள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் இந்நேரம் அநேகமாக நீர்த்து போய் விட்டது என்று நினைக்கிறேன்...
போராட்டம் செய்யும் அலைபேசி ரீசார்ஜ் வியாபாரிகள் ஒரு அணியாக ஒற்றுமையாய் திரண்டு இல்லாதது முதல் தவறு..
அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலையை செய்யாமலே போராட்டம் என்று அரை கூவல் விடுத்து இயக்கத்தை கொண்டு செல்வது இரண்டாவது தவறு..
இதே பிழைப்பாய் இருக்கும் வியாபாரிகளின் அன்றாட வருமானத்தை பற்றி எண்ணி பார்க்காதது மூன்றாவது தவறு...

தவறுகளை திருத்திக் கொள்ளலாம் என்னும் அடிப்படையில்...
மீண்டும் தவறு இழைக்காமல் இருக்க, தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகாமல், நமது அரசு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை சென்றால் மக்களுக்கும் உதவிகரமாய் இருக்கும், மற்றும் வியாபாரிகளுக்கும் உதவிகரமாய் இருக்கும்...
இதை செயல் படுத்த வியாபாரிகள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், புறப்பட்ட கோப தீயை அனைத்து விடாமல் உடனடியாக ரீசார்ஜ் செய்ய வரும் அனைத்து மக்களிடமும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மாற்றி கொள்ளுமாறு எடுத்து உரையுங்கள்...
உங்கள் முதுகில் குத்தும், குத்தக் காத்திருக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களையும் புறக்கணிப்போம்,
போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=656729&disdate=6/30/2011&advt=2

ஊக்கம்... அது கைவிடேல்...

நமது நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் பிடி படும் பொழுது நமக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம்... நமது கலாச்சாரம் எதிரிகளை முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் நின்று போர் புரிவதை ஆதரிப்பதால் இப்படி பட்ட அவமானகர எண்ணங்கள் நம் மனதில் உதிப்பதை தடுக்க முடிவதில்லை...
உண்மையில் தவறு எங்கு நேருகிறது என்று ஆராய்வது, நான் எப்பொழுதும் சொல்வது போல் அடி வரை பாய்வதில்லை...

தன்னம்பிக்கை...

இந்தியர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் குறைவு...
தன்னடக்கம் என்று கருதி கொண்டு தன்னம்பிக்கை அற்று பல பேர் தங்கள் திறமையை காற்றில் வீணாய் பறக்க விடுவதை இந்தியாவில் பொதுவாக பார்க்க முடிகிறது...

நான் ஒரு மருந்து கடையில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு தமிழர் என்னிடம் வந்து... ஸ்டீராய்டு மருந்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்...
"வைத்திருக்கிறோம்."
"எவ்வளவு?"
"முதல்ல டாக்டர் சீட்டை குடுங்களேன்"
"இல்லை சார், மிலிடரி செலேக்சனுக்கு போறேன். அதுக்கு தான்"
"ஊக்க மருந்து மாதிரி யூஸ் பண்ணலாம்னு பார்க்கறீங்கள?"
"ஆமாங்க"
"மருத்துவர் சீட்டு இல்லாமல் குடுக்கறது இல்லீங்க..."
"வட நாட்டு காரன் மொத்த பெரும், இதை போட்டுகிட்டு தான் கலந்துக்கிறாங்க. அவங்க ஜெயிச்சு வேலை வாங்கிடுறாங்க, எங்களால் ஜெயிக்க முடியல.."
"கண்டுபிடிக்க மாட்டாங்களா?"

அப்படி என்றால் இத்தனை காலமாய் ராணுவத்தில் இப்படி பட்ட ஆட்களை தான் தேர்ந்தெடுக்கிறார்களா?
ராணுவ ஆளேடுப்புக்கு வருவோரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப் படுவது உண்டா?
இது பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..
ஒரு செயலில் வெற்றி பெற, ஊக்க மருந்து தேவை இல்லை, ஊக்கம் மட்டும் போதும்...

http://www.thehindu.com/sport/other-sports/article2201600.ece

6.7.11

ஏழ்மை...


நம் நாட்டில் ஏழ்மை இருப்பதற்கு என்ன காரணம்?
பெரும்பாலான மக்களின் பதில் அநேகமாக வளர்ந்து வரும் ஜனத்தொகையை குறிப்பிடுவார்கள்...
ஒரு வகையில் உண்மை என்றாலும், இது மட்டுமே உண்மை அல்ல...

நம் நாட்டில் ஏப்ரல் 2011 கணக்குப்படி, அலைபேசி உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை, 826,930,916 மொத்த ஜனத்தொகை... 1,210,193,422. இந்த கணக்கு படி குழந்தைகள் தவிர்த்து அனைவரும் அலைபேசி வைத்திருக்கிறார்கள்... என்பது ஒருவர் கருத்து..

விலை வாசி ஏறிவிட்ட பிறகும் நகைகள் வாங்கும் கிராமத்து நபர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர்... என்பது ஒருவர் கருத்து...

அப்படி பார்த்தால் நமது நாட்டில் ஏழ்மை என்பதே இல்லை என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா...

சர்வதேச வறுமை கோடு என்பது ஒரு நாள் வருமானமானது 1.25 டாலர் என்று வரையறை செய்து வைத்துள்ளனர்... ஒரு நாளுக்கு 75 ரூபாய்... (ஆதாரம்: விக்கிபீடியா) அப்படி இருந்தும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 41 % என்று கணக்கு எடுப்பு செய்துள்ளனர்...
ஆனால் 51,000 வருமானம் வாங்கி கொண்டிருந்த கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள், விற்கும் விலை வாசியில் அவர்கள் சம்பளம் கட்டுபடியாகவில்லை என்று 95,000 சம்பள உயர்வை நிர்ணயம் செய்து கொண்டிருக்கிறார்கள் (ஜூன் முதல் வாரத்தில்)
http://www.sify.com/finance/karnataka-mlas-give-themselves-73-salary-hike-news-economy-lgiblpghhhg.html

என்றாவது ஒரு நாள் நகை கடை கூட்டத்தை பார்த்து விட்டு சொல்லாமல் அவன் வாழும் நிலை, சூழ்நிலை அனைத்தும் பார்த்து முடிவுக்கு வாருங்கள்...
இன்னும் எத்தனை பேர் ஒரு ஆயுள் காப்பீடு கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று கணக்கு பாருங்கள்...
எத்தனை பேர் ரோட்டோரமாய் மழைக்கு பயந்து படுத்து உறங்குகிறார்கள் என்று சிந்தித்து பாருங்கள்...

என்று கேள்வி கேட்டால் நம்மிடம் திரும்பி வரும் அனைத்து கேள்விகளும் ஜனத்தொகை குறித்ததாக இருக்கிறது...

செருப்பு விற்க சென்ற ஒருவன், இந்த ஊரில் எவனும் செருப்பு போடவில்லை இங்கு என்னால் செருப்பு விற்க முடியவில்லை என்று திரும்பி விட்டான்..
இதை கேட்டு கொண்டிருந்த இன்னொரு வியாபாரி அதை சந்தர்ப்பமாக கருதி அங்கு சென்று அனைவருக்கும் செருப்பு விற்றான் என்று ஒரு கதை உண்டு...

நம் நாட்டு ஜனத்தொகையை மூலதனமாய் பார்த்து பல பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை சுரண்டி கொழுப்பது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை...

நுனிப்புல் மேயாதீர்கள், ஆணிவேர் வரை ஊடுருவுங்கள்...

5.7.11

நேர் எதிர்...


positive thinking நேர்மறை சிந்தனை ...
negative thinking எதிர்மறை சிந்தனை ...

பள்ளி படிப்பை முடித்து இறகு முளைத்து பறக்க துடிக்கும் ஓவ்வொருவரிடமும் கூறப்படும் ஆலோசனை பெரும்பாலும் மேற்கூறிய இரு பண்புகளை கொண்டதாக இருக்கும்...

கல்லூரியில் விரிவுரையாளர்கள்..
பணியிடத்தில் மேலாளர்கள்...
பெரும்பாலும் நண்பர்கள்...

சரி...
எது நேர்மறை சிந்தனை?
யாரும் இதை பற்றி கேள்வியே கேட்பதில்லை...
பொதுவான கருத்து என்ன என்றால் நல்ல சிந்தனை, முடியும் என்னும் சிந்தனை, என்று பொருள்படும்படி எடுத்துக் கொள்கிறார்கள்...

உண்மையில், எதுவும் என்னால் முடியும் என்பது எதிர்மறை சிந்தனை ஆகும்... பல செயல்கள் தனி மனித முயற்சியில் நடந்தேறுவது இல்லை... பல முகம் தெரியாத நபர்களின் மறைமுக ஒத்துழைப்பும் ஒரு செயல் நடப்பதற்கு துணை போகிறது...
மனிதனால் எல்லாவற்றையும் செய்ய முடியாது...
செய்ய முடியாததை என்னால் செய்ய முடியாது என்று ஒத்துக் கொள்வது எதிர் மறை சிந்தனை அல்ல அது அப்பட்டமான நேர்மறை சிந்தனை...

ஊடகங்களில் வரும் அனைத்து செய்திகளும் எதிர்மறை சிந்தனை என்பதும் தவறு..
தவறுகளை தட்டி கேட்பதும் நேர்மறை சிந்தனை...
உண்மையில் நடக்கும் தவறுகளை கண்டும் காணாமல் இருந்து விடுவது எதிர்மறை சிந்தனை தான்...

எனக்கு மிகவும் பிடித்த வாசகம்:
"இந்த உலகில் நடக்கும் பல்வேறு கொடுமைகளுக்கு காரணம் தீயவர்களின் செய்கை அல்ல, வாய் மூடி ஒன்றும் செய்யாமல் இருக்கும் நல்லவர்களின் செய்கையால் ஆகும்."

நீங்கள் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து அது தான் நிலவு என்ற முடிவுக்கு வராதீர்கள், அது எதிர்மறை...
நிலவின் இன்னும் ஒரு பக்கம் நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளுங்கள் அது நேர்மறை...

நான் நேர்மறையாளன்... நீங்க?

4.7.11

டும் டும்... ...தன் வாயால் கெடும்...


குப்புற விழுந்த பிறகு மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை, நிரூபிக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்து விடுவது தற்செயலானதா இல்லை முன்னெச்செரிக்கை இல்லாததாலா என்று தெரியவில்லை...

விலை வாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசு காரணம் அல்ல என்று பிரச்சாரம் செய்யும் படி காங்கிரஸ் கட்சியில் கட்டளை போட பட்டிருக்கிறது, விலை வாசியை கட்டு படுத்துவதிலும் காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என்பது தான் மக்களின் கவலை... ஆனால், இன்றைய விவாதம் இது அல்ல...

சில நாட்கள் முன்பு நமது ப.சி., அரசை காப்பாற்ற தந்த பிரத்யேகமான பேட்டியில், போகிற போக்கில் நமது பிரதமர் பேச வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று கொளுத்தி விட்டு விட்டு சென்று விட்டார்...

என்னடா இது என்று வேண்டா வெறுப்பாய் உள்ளுக்குள் இருந்தாலும், முகத்தில் சிரிப்பு திரை போட்டு கொண்டு கொடுத்த பேட்டியில் எரிகிற கொள்ளிக் கட்டையை எடுத்து சொரிந்து கொண்டார்...

மனதில் பட்டதை பட்ட வர்த்தனமாய் பேசும் மணி ஷங்கர் ஐயர் தமக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றும் முக்கியமான விஷயம் இல்லை என்று கூறி, அடுத்த நாள் செய்தி தாள்களை பார்த்தால், விளையாட்டு துறை மந்திரிகளாய் இருந்த மொத்தம் மூன்று அமைச்சர்களின் கடிதங்கள் வெளிவந்து சந்தி சிரிக்கிறது...

பிளான் பண்ணி செய்யணும், பிளான் பண்ணாம செஞ்சா இப்படிதான்....

http://www.thehindu.com/news/national/article2155792.ece

3.7.11

ஓடி விளையாடு...


கால் பந்தாட்டம் என்ற தலைப்பில் ஒரு பதிவை போட்டு இன்னும் சரியாக ஆறு நாட்கள் கூட முடியவில்லை, அதற்குள் இன்னுமொரு மாற்றத்தை தமிழகத்தில் காண முடிந்தது...
கடைசி வரை ஒரு நிரந்தரமான அமைச்சரவை இல்லாமல், பந்தாடுவது ஏன் என்பது தான் புதிராகவே உள்ளது...
ஒரு அமைச்சரை மாற்றுவது உங்கள் கொள்கை முடிவாக இருக்கலாம், ஆனால் ஒரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்ற உறுப்பினர் என்ன காரணத்திற்காக மாற்றப் படுகிறார் என்பது தேர்ந்தெடுத்த மக்களுக்கு தெரிந்தால், இனி வரும் காலங்களில் மாற்ற வேண்டிய காரணம் தேவை படாது என்பது என் கருத்து...
ஒரு வேளை எந்த துறையை பற்றி எந்த அமைச்சரிடம் கேட்பது என்று பத்திரிக்கயாளர்கள் குழம்பட்டும் என்பது ஏற்பாடோ?
அநேகமாக அமைச்சராகியிருக்கும் அனைவருக்கும் மனதில் தோன்றியிருக்கும்...
அடுத்த ஆட்டம் எப்பன்னு தெரியலையே?

இது தொடர்பான முந்தய பதிவை படிக்காதவர்களுக்கு கீழே உள்ளது இணைப்பு..
http://suryajeeva.blogspot.com/2011/06/blog-post_27.html

செய்திக்கு
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=440899&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

பதில்கள் எனக்கு வேண்டாம்...


அனைத்தும் தனியார் மயமாக வேண்டும் என்று கருதுபவரா நீங்கள்?
அரசு வசம் எந்த துறையும் இருக்க கூடாது என்று கருதுபவரா நீங்கள்?
தனியார் துறை மட்டுமே சிறந்த சேவையை தர முடியும் என்று கருதுபவரா நீங்கள்?

நல்லது...
பின்வரும் கேள்விகளுக்கு பதில் தேடுங்கள்...

எந்த ஊழலாவது தனியார் துறை சம்பந்தம் இல்லாமல் இந்தியாவில் நடந்திருக்கிறதா?

தனியார் வசம் இருப்பதால் தானே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 40% கச்சா எண்ணைக்கும் வெளிநாட்டு விலை கொடுத்து இந்திய அரசாங்கம் வாங்கி கொண்டிருக்கிறது?

நியாயமான வெளிப்படையான கொள்கை உள்ள ஒரு தனியார் நிறுவனம் என்று ஏதேனும் ஒன்று இருக்கிறதா?

கடைசியாக,

கேபிள் டிவி தொழிலை அரசே ஏற்று நடத்து வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் ஏன் நினைக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடனும் முரண்படாமல் இருந்தால் நீங்கள் உங்கள் முடிவை இந்நேரம் மாற்றியிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...
முரண் பட்டிருந்தால்
மாற்றிக் கொள்ளுங்கள்...

http://thatstamil.oneindia.in/news/2011/07/02/govt-cable-tv-jaya-take-control-aid0128.html

2.7.11

ஆன்மீக வியாபாரம்...


மாரியம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்துறேன்?
இது சின்ன அளவு ஆன்மீக வியாபாரம்...
ஜரகண்டி ஜரகண்டி...
இது பெரிய அளவு ஆன்மீக வியாபாரம்...

எந்த வியாபாரமும் மக்களை கொள்ளை அடிப்பது என்ற கொள்கையில் இறங்கி விட்ட பொழுது, பத்மநாபா சாமி கோயிலை மட்டும் குறை சொல்வது கொஞ்சம் அதிகம் தான்..
என்னவோ மற்ற கோயில்களில் கொள்ளையே அடிக்காதது போல் இவர் எழுதி இருக்கிறார்...
அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்ட பொழுதும் இன்னும் கடவுளை தேடும் சுயநலவாதிகளின் கூட்டம் குறைவதில்லை தான், சுயனலவாதிகளிடம் கொள்ளை அடிப்பது தவறு என்று நீங்கள் கருதினால், நீங்கள் பெரிதாக நினைக்கும் அந்த கடவுளிடமே முறையிட வேண்டியது தானே...
கோயில் நிர்வாகத்திர்க்கே கடவுளிடம் நம்பிக்கை இல்லாத பொழுது ஏன் இன்னும் நீங்கள் மட்டும் கடவுளின் வேஷ்டியை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள்?
ஆன்மிகம் குறித்த பார்வைகளை படிக்க பகத் சிங் என்னும் பக்கத்திற்கு செல்லவும்...

http://ibnlive.in.com/news/no-free-darshan-at-padmanabha-temple/164437-60-123.html

1.7.11

தி.மு.க வில் இணைந்தாரா திருவள்ளுவர்?


சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் அச்சடிக்கப் பட்ட புத்தகங்கள் தரமானவை அல்ல என்று அநேகமாக அம்மா அமைத்த குழு தீர்மானத்திற்கு வந்திருப்பார்கள்.
இதனிடையே பல்வேறு மேல்தட்டு பெற்றோர்கள், அம்மா எடுத்த முடிவு சரி என்றும் தவறு என்றும் சரி நிகர் சமானமாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்...

சமச்சீர்
கல்வி வருவதால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால், பெரும்பாலான கல்வி புத்தக அச்சகத்தாருக்கும்,அந்த புத்தகங்களை கொள்ளை விலைக்கு விற்கும் பள்ளிகளுக்கும் தான் நஷ்டம் என்று பொருளாதார ரீதியாக வரும்...

அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததால், பாடங்களில் உள்ள சில சமரசம் செய்து கொள்ள கூடிய குறைகள், மாணவனின் எண்ணத்தில் சின்ன கேள்வி குறிகளை எழுப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், தரமில்லாத பாடங்களை இத்தனை காலமாக படித்து வந்த மாநில பாட திட்ட மாணவர்கள் நீங்கள் சொல்வது போல் தரமான பாடத்திட்டங்களுக்கு மாற்றுவது கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டிய விஷயம் என்பதால் கல்வியாளர்கள், சமச்சீர் கல்வி திட்டத்தை உருவாக்குவதில் குழம்பி போய் தான் இருக்கிறார்கள்...

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அதை பற்றி கேட்பதற்கு அவர்கள் அண்டி இருக்கும் கட்சியே காத்து குடுத்துக் கேட்க முடியாத அளவில் சர்வதேச பிரச்சினைகளில் சிக்கி உள்ளது...
சமச்சீர் கல்வி வேண்டுமா வேண்டாமா என்பதை விட்டு விட்டு, அம்மா அவர்கள் புதிதாக செயல் வழி கல்வி முறையை இந்த மூன்று வாரங்கள் அமுல் படுத்தி இருப்பது போல் அமுல் படுத்தினால், பின்னால் வரும் சந்ததியினர் கேட்டு பூரிப்படைவார்கள்...
நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் கேட்ட கேள்வி?
அண்ணா, திருவள்ளுவர் தி.மு.க கட்சியாமே, அதனால தான் அம்மா அதை மறைக்க சொல்லிடுச்சாமே, உண்மையா?
இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88&artid=439133&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu