politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

7.7.11

ஊக்கம்... அது கைவிடேல்...

நமது நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் பிடி படும் பொழுது நமக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம்... நமது கலாச்சாரம் எதிரிகளை முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் நின்று போர் புரிவதை ஆதரிப்பதால் இப்படி பட்ட அவமானகர எண்ணங்கள் நம் மனதில் உதிப்பதை தடுக்க முடிவதில்லை...
உண்மையில் தவறு எங்கு நேருகிறது என்று ஆராய்வது, நான் எப்பொழுதும் சொல்வது போல் அடி வரை பாய்வதில்லை...

தன்னம்பிக்கை...

இந்தியர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் குறைவு...
தன்னடக்கம் என்று கருதி கொண்டு தன்னம்பிக்கை அற்று பல பேர் தங்கள் திறமையை காற்றில் வீணாய் பறக்க விடுவதை இந்தியாவில் பொதுவாக பார்க்க முடிகிறது...

நான் ஒரு மருந்து கடையில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு தமிழர் என்னிடம் வந்து... ஸ்டீராய்டு மருந்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்...
"வைத்திருக்கிறோம்."
"எவ்வளவு?"
"முதல்ல டாக்டர் சீட்டை குடுங்களேன்"
"இல்லை சார், மிலிடரி செலேக்சனுக்கு போறேன். அதுக்கு தான்"
"ஊக்க மருந்து மாதிரி யூஸ் பண்ணலாம்னு பார்க்கறீங்கள?"
"ஆமாங்க"
"மருத்துவர் சீட்டு இல்லாமல் குடுக்கறது இல்லீங்க..."
"வட நாட்டு காரன் மொத்த பெரும், இதை போட்டுகிட்டு தான் கலந்துக்கிறாங்க. அவங்க ஜெயிச்சு வேலை வாங்கிடுறாங்க, எங்களால் ஜெயிக்க முடியல.."
"கண்டுபிடிக்க மாட்டாங்களா?"

அப்படி என்றால் இத்தனை காலமாய் ராணுவத்தில் இப்படி பட்ட ஆட்களை தான் தேர்ந்தெடுக்கிறார்களா?
ராணுவ ஆளேடுப்புக்கு வருவோரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப் படுவது உண்டா?
இது பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..
ஒரு செயலில் வெற்றி பெற, ஊக்க மருந்து தேவை இல்லை, ஊக்கம் மட்டும் போதும்...

http://www.thehindu.com/sport/other-sports/article2201600.ece