politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

6.7.11

ஏழ்மை...


நம் நாட்டில் ஏழ்மை இருப்பதற்கு என்ன காரணம்?
பெரும்பாலான மக்களின் பதில் அநேகமாக வளர்ந்து வரும் ஜனத்தொகையை குறிப்பிடுவார்கள்...
ஒரு வகையில் உண்மை என்றாலும், இது மட்டுமே உண்மை அல்ல...

நம் நாட்டில் ஏப்ரல் 2011 கணக்குப்படி, அலைபேசி உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை, 826,930,916 மொத்த ஜனத்தொகை... 1,210,193,422. இந்த கணக்கு படி குழந்தைகள் தவிர்த்து அனைவரும் அலைபேசி வைத்திருக்கிறார்கள்... என்பது ஒருவர் கருத்து..

விலை வாசி ஏறிவிட்ட பிறகும் நகைகள் வாங்கும் கிராமத்து நபர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர்... என்பது ஒருவர் கருத்து...

அப்படி பார்த்தால் நமது நாட்டில் ஏழ்மை என்பதே இல்லை என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா...

சர்வதேச வறுமை கோடு என்பது ஒரு நாள் வருமானமானது 1.25 டாலர் என்று வரையறை செய்து வைத்துள்ளனர்... ஒரு நாளுக்கு 75 ரூபாய்... (ஆதாரம்: விக்கிபீடியா) அப்படி இருந்தும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 41 % என்று கணக்கு எடுப்பு செய்துள்ளனர்...
ஆனால் 51,000 வருமானம் வாங்கி கொண்டிருந்த கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள், விற்கும் விலை வாசியில் அவர்கள் சம்பளம் கட்டுபடியாகவில்லை என்று 95,000 சம்பள உயர்வை நிர்ணயம் செய்து கொண்டிருக்கிறார்கள் (ஜூன் முதல் வாரத்தில்)
http://www.sify.com/finance/karnataka-mlas-give-themselves-73-salary-hike-news-economy-lgiblpghhhg.html

என்றாவது ஒரு நாள் நகை கடை கூட்டத்தை பார்த்து விட்டு சொல்லாமல் அவன் வாழும் நிலை, சூழ்நிலை அனைத்தும் பார்த்து முடிவுக்கு வாருங்கள்...
இன்னும் எத்தனை பேர் ஒரு ஆயுள் காப்பீடு கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று கணக்கு பாருங்கள்...
எத்தனை பேர் ரோட்டோரமாய் மழைக்கு பயந்து படுத்து உறங்குகிறார்கள் என்று சிந்தித்து பாருங்கள்...

என்று கேள்வி கேட்டால் நம்மிடம் திரும்பி வரும் அனைத்து கேள்விகளும் ஜனத்தொகை குறித்ததாக இருக்கிறது...

செருப்பு விற்க சென்ற ஒருவன், இந்த ஊரில் எவனும் செருப்பு போடவில்லை இங்கு என்னால் செருப்பு விற்க முடியவில்லை என்று திரும்பி விட்டான்..
இதை கேட்டு கொண்டிருந்த இன்னொரு வியாபாரி அதை சந்தர்ப்பமாக கருதி அங்கு சென்று அனைவருக்கும் செருப்பு விற்றான் என்று ஒரு கதை உண்டு...

நம் நாட்டு ஜனத்தொகையை மூலதனமாய் பார்த்து பல பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை சுரண்டி கொழுப்பது இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை...

நுனிப்புல் மேயாதீர்கள், ஆணிவேர் வரை ஊடுருவுங்கள்...