politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

14.9.11

இரு கோடுகள்

இரு கோடுகள் தத்துவத்தை தூக்கி உடைத்த நிகழ்வு அண்ணா ஹஜாரே போராட்டமும், தூக்கு தண்டனை எதிர்ப்பு போராட்டமும் என்பதை பெருமையுடன் இங்கே நினைவு கோருகிறேன்.. நாடு தழுவிய அண்ணா ஹஜாரே போராட்ட சத்தத்தில், தமிழகத்தில் மட்டும் எழுந்த தூக்கு தண்டனை சத்தம் அமுங்கி விடும் என்று பயந்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது தமிழகத்தில் உரக்க எழுந்த ஓசை எனக்கு நினைவு படுத்தியது..

அதே போன்ற சந்தர்ப்பம் இன்று மீண்டும் தமிழகத்தில்..
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட சொல்லி நடக்கும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் முன்பே பரமக்குடி கலவரம் எழுந்து அடங்கியுள்ளது... பரமக்குடி விஷயத்தில் சீமானின் உறுமும் குரலை எதிர்பார்த்து காத்திருந்த நான் இரண்டு நாட்கள் கழித்து நேற்று சீமானின் மியாவ் என்ற குரலை கேட்ட பொழுது தமிழர்களின் காவலர் என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர் என்று தோன்றியது.. ஏற்கனவே இருந்த காவலர்களுக்கு வயதாகி விட்டதால் நடிகர் விஜயும் இயக்குனர் சீமானும் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ள தகுதியானவர்களே என்று தோன்றியது...

தமிழக மின்சார தேவையை பூர்த்தி செய்ய கூடங்குளம் செயல்பாட்டை எதிர்நோக்கி இருக்கும் தமிழக அரசு இந்த கூடங்குளம் போராட்டத்திற்கு கண்மூடி கொள்ளும் என்பது திண்ணம்.. அந்த மூடி இருக்கும் கண்ணை தமிழக முதலமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் விஜயும் சீமானும் திறக்க முயற்சிப்பார்களா  அல்லது தமிழர் காவலர் என்ற பட்டத்தை தக்க வைத்து கொள்வார்களா என்பது இன்று இரவுக்குள் தெரிந்து விடும் என்று நினைக்கிறேன்...

கோகுல் மனதில் என்ற வலை பூவில் கோகுல் எழுதிய கட்டுரைக்கு ஒரு அநாமதேயர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில்கள் நமக்கு தெரிந்த அளவில்..

எந்த மண்ணால் கட்டினாலும், இல்லை உலக தரம் வாய்ந்த சிமெண்டால் கட்டினாலும் ஒரு பூகம்பம் வந்து ஆட்டினால் ஆடாத வகையில் கூடங்குளம் கட்டப் பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு நீங்கள் பதில் தேடுங்கள்..

பிரான்ஸ் நாட்டில் அணு உலையில் விபத்து நிகழவில்லை என்று கூறியிருக்கிறீர்கள், அது அணுக கழிவுகளை பாதுகாக்குமிடம்.. அதற்கே சர்வதேச அணு ஆராய்ச்சி கழகம் மிரண்டு போய் உள்ளதாக தான் உலக செய்திகள் தெரிவிக்கின்றன.. நீங்கள் ஜப்பானில் நடந்ததை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதும், ஜெர்மனியின் அணு மின்சார கொள்கையையும் ஏன் கவனிக்கவில்லை என்பதும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்..

மேலும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க அணு சக்தி தான் சிறந்தது என்று தாங்கள் கூறுவது அணு உலைகளுக்கு ஆபத்து ஏற்படாத பொழுது தான், சுனாமி தாக்கிய பொழுது கல்பாக்க அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியேறியது என்று பல ஆண்டுகள் கழித்து அரசு ஒத்துக் கொண்டுள்ளதை உங்களுக்கு நினைவு கூறுகிறேன்.. மேலும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இருவரும் கொள்கை அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறி கொள்கிறேன்...

இன்றைய சர்வதேச சூழ்நிலையை கணக்கில் கொண்டு இந்த போராட்டம் நடத்தப் 
படுகிறது, இதற்கு நீங்கள் ஆதரவு தரவில்லை என்றாலும் குழப்பத்தை உண்டு பண்ணாமல் இருந்தாலே போதும்.. நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்து தான்.. 

நீங்களும் எங்களுடன் இனைய வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கை வசம் உள்ள ஊடகமான குறுஞ்செய்தி, வலைபூ, facebook , twitterஆகிய தளங்களில் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்... 
போராடும் உள்ளங்களுக்கு ஊக்கமளிப்போம்..