சட்டத்தின் பார்வையில் சிக்கியவர்கள் அதிகார வர்க்கமாக இருந்தால், அதன் ஓட்டைகள் எங்கெங்கு இருக்கிறது என்று அவர்களை விட வேறு யாருக்கும் அழகாய் தெரிவதில்லை...
ஆதர்ஷ் ஊழலில் முக்கியமான ஆவணங்கள் காணாமல் போய் கொண்டே இருப்பது குற்றம் சாட்டப் பட்டவரை காப்பாற்றி கொண்டிருக்கிறது...
அதே போல,
காமன் வெல்த் போட்டிகளில் நடைப் பெற்ற ஊழல்களின் முக்கிய புள்ளியாக உள்ள கல்மாடி சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்த ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது..
டேமேன்சியா (dementia-http://en.wikipedia.org/wiki/Dementia) என்று அழைக்கப் படும் நோய் தாக்கப் பட்ட நபராக அவரை காப்பாற்றும் முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.. மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப் பட்டுள்ளது அவரை காப்பாற்றும் முயற்சி... இந்த நோய் அவருக்கு இன்று நேற்று வரவில்லையாம், கடந்த ஆறு வருடங்களாக இருந்தது அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது..
இந்த சூழ்நிலைக்கு "மணல் கயிறு" படத்தில் வரும் வசனம் ஞாபகம் வருவது தவிர்க்க முடியவில்லை..
மாப்பிள்ளை : காது கேட்காதா? எத்தனை நாளா?
மாமியார்: ஏழு வருஷமா!
மாப்பிள்ளை: ஏழு வருஷமாவா? அப்ப ஒரு காது கேட்காத கிழவன் கிட்டயா என் எட்டாவது கண்டிஷன சொன்னேன்?
இத்தனை காலமாக ஒரு ஞாபக மறதி ஆளையா ஒரு அதிகாரியா போட்டு வைச்சிருந்தாங்க?
இதை பற்றி நம் பிரதம மந்திரியை கேட்டால் அவர் சொல்லப் போகும் ஒரே பதில், "எனக்கு எதுவுமே தெரியாது"
ஒரு வேளை அவருக்கும் டேமேன்சியாவாக இருக்குமோ?