நூலகத்தை மாற்றப் போகிறார் முதல்வர் என்றதும் அனைவரும் கொதித்து போய் விட்டனர்... இதில் அதிகம் கொதித்தது பல எழுத்தாளர்கள்...
ஒன்று மட்டும் தெரிந்தது, எழுத்தாளர்களுக்கு மக்களை விட புத்தகம் பெரியதாக தெரிகிறது என்று...
சாதாரண மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால், அது அவன் தவறில்லை... போராட்டம் குறித்த பார்வையும், வர்க்கப் பிரிவினைகளையும் அவன் தெரிந்து கொள்ளாததும் ஒரு காரணம்.. அதையும் மீறி இன்று எத்தனையோ போராட்டங்களை, நையாண்டி செய்த பொதுமக்கள் போராட்ட களத்தில், ஏதேதோ காரணங்களுக்காக வீதியில் கை கோர்ப்பதை காண முடியும் நேரத்தில்.. அன்னியப் பட்டு நிற்கிறார்கள் எழுத்தாளர்கள்... குறைந்த பட்சம் இந்த போராட்டங்கள் குறித்து எழுத்துக்கள் கூட அவர்களிடம் இருந்து வருவதில்லை...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் ச.தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்ட காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக கண்டிப்பாக ஒவ்வொரு எழுத்தாளர்களும் போராட வேண்டும் ஒரு விதி உருவாக்கப் பட்டது... அப்பொழுது இதை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டார்கள் எழுத்தாளர்கள்...
அந்த ஆண்டு நடந்த பல எழுத்தாளர் போராட்டங்களில், முறை சாரா தொழிலாளர்களே எழுத்தாளர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டு எண்ணிக்கையை அதிகப் படுத்தி காட்டினார்கள்... [நான் அப்பொழுது காஞ்சிபுரம் மாவட்ட கமிட்டி உறுப்பினர்]
நீங்கள் நூலகத்துக்காக போராடும் களத்தில், எழுத்துக்களை நேசிப்பதால் இந்த போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம்.. ஆனால் சாதாரண மனிதனின் பிரச்சினைகளுக்கு நீங்கள் குரல் கொடுக்கப் போவது எப்பொழுது? போராட போவது எப்பொழுது?
சேலம் மருத்துவமனை திறக்க சொல்லி போராடிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் மண்டையில் ரத்தம் சொட்ட அடி வாங்கி நின்ற பொழுது சக மனிதனாக எனக்கு வலித்தது....
நீங்கள் அவர்களின் போராட்டத்திர்க்காக என்ன செய்தீர்கள்? என்று யோசித்துப் பாருங்கள்...
சமூக அவலங்களை துவைத்து வெளுப்பாக்கும் தொழிலை நீங்கள் தாங்கி இருக்கிறீர்கள்... உங்கள் மீது அழுக்குப் படும் என்று ஒதுங்கி இருந்தால்...