politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.11.11

சில்லறை வணிகத்தில்....?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்து பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... அந்நியர்கள் உள்ளே வரக் கூடாது என்று ஒரு தரப்பினரும், உள்ளே வரலாம் என்று ஒரு தரப்பினரும் பேசிக் கொண்டு உள்ளனர். இருவருமே ஒரு முக்கியமான பார்வையை பார்க்காமல் பேசுவது போன்று எனக்கு தெரிந்ததால், என் அறிவுக்கு எட்டிய வரை ஆணிவேர் பார்வையில் இந்த பதிவை பகிர்கிறேன்...

கமாடிட்டி மார்கெட் என்று அழைக்கப் படும் ஊக வணிகம் குறித்து முழு புரிதல் இல்லை என்றாலும், எனக்கு புரிந்த வரையில் இங்கு என் வாதத்தை முன் வைக்கிறேன்... தவறான கருத்து எனில் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்..

ஒன்று:

ஏற்கனவே இந்தியாவில் ஊக வணிகத்தில் அந்நியர்கள் முதலீடு செய்ய முழு கதவையும் திறந்து விட்டு உள்ளனர்.

அந்நியர்கள் மளிகை கடைகளையும் திறக்கும் பட்சத்தில் இது எப்படி அவர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்ற மாற்று சிந்தனை இது.
உதாரணமாக...

ஒரு கிலோ அரிசி 40 ரூபாய் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஊக வணிகத்தில் வெறும் காகிதம் தான் என்பதால் எவ்வளவு கிலோ அரிசி வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அடிப்படையில், நான் என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு வாங்கி கொள்கிறேன்.

பின்பு வெளி சந்தையில், என் மளிகை கடைக்கு தேவையான அரிசி என்று பல்லாயிரக்கணக்கான மூட்டை அரிசி வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறேன்.. ஆனால் விநியோகம் செய்யாமல் செயற்கையான தட்டுப்படை உருவாக்குவதின் மூலம் அரிசியின் விலையை இரு மடங்காக ஆகும் வரை காத்திருந்து, ஒரே நேரத்தில் ஊக வணிகத்தில் வந்த விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விட்டு, வெளி சந்தையில் விற்பதை விட ஐந்து ரூபாய் குறைவாக விற்று லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல் வாடிக்கயாளர்களையும் சம்பாதித்து கொள்கிறேன்..

அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்பவர்களுக்கு, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இரண்டாவது:

மொத்தமாக விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி விரயம் இல்லாமல் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்ப்பார்கள் என்ற பார்வையும் உள்ளது என்பதால்,
மேலே கூறிய காரணம் இங்கும் பொருந்துகிறது...

விவசாயிகளை இந்த பொருள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதின் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்க எதுவாக இருக்கும்...

மூன்றாவது:

முப்பது சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திகளை வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த உள்விதி உள்ளது என்கிறது ஒரு அமைப்பு. ஆகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப் படாது என்றும் கூறுகின்றனர்.

அது ஏன் வெறும் முப்பது சதவிகிதம் என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.

பொருளாதாரம் குறித்த புரிதல் கொஞ்சம் தலை சுற்றும் விஷயமாக உள்ளதால், சரியாக தான் புரிந்து கொண்டேனா என்ற குழப்பம் உள்ளது... ஆகையால் நண்பர்கள் என் பார்வை சரியாக இருக்குமா என்று தெளிவு படுத்தினால் உற்சாகமாக பொருளாதார பார்வையிலும் இறங்குவேன் என்று கூறிக் கொள்கிறேன்

27.11.11

மால்குடி சித்தன்

நீ ஏழையாக பிறந்தது உன் குற்றமல்ல...
ஆனால் நீ ஏழையாக இறப்பது உன் குற்றமே...


இப்படி ஒரு புது மொழி உண்டு

மால்குடி சித்தனின் சிந்தனை என்ன என்றால்..

இந்த புது மொழி ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால், அவதிப் படும் சோமாலிய மக்களுக்கும் பொருந்துமா?

சோமாலியா பஞ்சத்தால் வாடும் தேசம் என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு இருந்தாலும்.. இன்றைய சோமாலிய மக்களின் ஏழ்மை நிலைக்கு பஞ்சம் ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமானது இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் ஊழலும், தவறான கொள்கைகளும் தான்.. 

உதவி என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் செய்தவை அனைத்தும் உதவி புரிந்த நாடுகள் வளரவே உதவி  புரிந்தன. ஆக மேலும் மேலும் சுரண்டப் பட்ட மக்கள் இன்று வாழ்வாதாரம் இல்லாமல் நொடிந்து போய் உள்ளனர்...


ஒரு வேளை ஏழையாக இருக்க விருப்பம் இல்லாமல் தாய் நாட்டை விட்டு பிற நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ?


மேலும் படிக்க
http://www.cato.org/pubs/pas/pa-205.html

மேற்கண்ட கட்டுரையை படிக்கும் பொழுது இந்தியா மனதில் வந்து சென்றதை மறுக்கவில்லை...

26.11.11

இறந்தும் மிரட்டுகிறார்

இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த பகத் சிங்கை கண்டு இன்றும் நம் ஆட்சியாளர்கள் நடுங்கி கொண்டிருப்பது இன்று வெளிவந்த ஒரு செய்தி குறிப்பில் வெட்ட வெளிச்சமாகிறது...

சிறு வயதிலே இறந்த ஒரு தீப் பிழம்பு பகத் சிங் என்றால் அது மிகையல்ல..

அந்த வரலாற்று நாயகன் குறித்து பல திரைப் படங்கள் வந்தாலும்.. அவற்றில் உண்மை கலக்கவில்லை என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய திரைப்பட சான்றிதழ் குழு இன்கிலாப் என்ற குறும்படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது.

காரணம், அந்த படத்தில் தேசிய எதிர்ப்பு உணர்வுகள் உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் 42வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ஒருமித்த மனதாக அனைத்து தேர்வாளர்களால்  தேர்வு செய்யப் பட்ட இந்த திரைப்படம் திரை இடப் படப் போவதில்லையாம்..
http://www.thehindu.com/arts/cinema/article2660359.ece

பகத் சிங் 1928  ஜூன் மாத கீர்த்தி இதழில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகளை பார்க்கலாம்..

"மதக் கலவரங்கள் அனைத்திற்குமான நிரந்தர தீர்வு என்பது இந்தியாவின் [இந்திய மக்களின்] பொருளாதார வளர்ச்சியிலேயே உள்ளது.. ஏனென்றால் பொதுமக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இங்கே ஒருவருக்கு வெறும் நாலணாவைக் கொடுத்து மற்றொருவரை தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினியில் கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளை பின்பற்ற முடியாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பது உண்மையே.

ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். ஏனென்றால் நாம் ஆங்கிலேய பேரரசால் ஆளப் படுகிறோம். நாம் வளர்வதற்கு அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எரியும் வரை நமக்கு ஓய்வு உறக்கமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்."

மற்றொரு கட்டுரையில்..

"அதிகார வர்கத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள். அது உங்களுக்கு ஒரு நாளும் உதவி செய்யாது. மாறாக அது உங்களை பகடைக் காயை போல் பயன்படுத்தும். நீங்கள் சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கும் உங்களது வறுமைக்கும் மூல காரணம் இந்த அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமே. எனவே அவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்."

கேளாத செவிகள் கேட்கட்டும்
தொகுப்பும் தமிழும் த.சிவக்குமார்.
நெம்புகோல் பதிப்பகம்.
http://ieyakkam.blogspot.com

விடுதலைப் பாதையில் பகத் சிங்
தொகுப்பு சிவவர்மா
பாரதி புத்தகாலயம் வெளியீடு.

இந்த புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்று தான், அது பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும் சரி, இன்றைய _______ ஆட்சியாக இருந்தாலும் சரி... பகத் சிங்கை புரிந்து உள்வாங்கிக் கொண்டு நாம் முன்னேறுவதில் தான் நம் விடியல் உள்ளது.

23.11.11

Uranium

Uranium Mining: அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமமான யுரேனியத்தால் பாதிக்கப்பட்ட ஜடுகோடா (ஜாட்கண்ட்) பொதுமக்கள்

இதயம் பலகீனமானவர்கள் மேலே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் 

எனது தோழர். கதிரேசன் எனக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு 
 
 
Uranium-poisoned villagers point to Irresponsible India













In pictures: Living by India's uranium mine

 
Why are people affected?

 

'Cannot speak or walk'

 

Guria and her father

 

23 years on a bed


Problems through life



Ore



Washing spinach

 

'Deplorable' situation

 

NUCLEAR POWER - URANIUM CRISIS

 

Eyewitness: Radioactivity doesn't stop at the mines in Jaduguda

 

The most affected Durku village that falls within the Jaduguda site . People living in this belt are affected by serious illnesses like thalassemia , cancer , retardation and many incurable skin diseases 

due to Uranium radiation since many years . March 11 , 2007

 

Boy suffering the reward of radiation.....

 

Road to jaduguda

 


A deformed existence

 

Indian Tribes Dig In to Fight Uranium Mine

 

Photos of radiation affected children in Jadugodda in Jharkhand, India.



Toxic Mining in Tribal India


Muthamizh
Chennai

22.11.11

கழுகு பார்த்த பார்வை

ஆபத்தான உணவா இந்த பரோட்டா????? ஒரு திடுக் பகிர்வு என்ற தலைப்பில் ஒரு பதிவை கழுகு வலை தளத்தில் பார்த்ததும்... நானும் வழக்கமான ஒரு விழிப்புணர்வு பதிவு என்று தான் நினைத்தேன்...


சிந்தனைகளில் சுழல சுழல, என் புத்திக்கு மிகவும் மெதுவாக உரைத்தது ஒரு விஷயம்.. பரோட்டா மட்டுமா மைதாவில் செய்கிறார்கள்...

குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும்..
பிஸ்கட்
கேக்
நூடுல்ஸ்
மற்றும் அனைத்து பேகரி தின்பண்டங்களும் மைதாவில் தான் செய்கிறார்கள்.

சரி, என்னடா விஷயம் என்று என் நண்பனை அழைத்தேன்...
ராமு என்னும் என் நண்பன் முனைவர் ஆக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்..
அவனை அணுகினேன்...

இருவருக்கும் இது புது விஷயமாக இருக்கிறது என்று ஆராய்ந்தோம்.. விளைவு யூக அடிப்படையில், லாஜிக் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.. இதற்க்கு மேல் என்ன செய்வது, எப்படி செய்வது, என்பதை விவாதத்துக்கு விடுவோம் என்ற அடிப்படையில் இங்கு நாங்கள் அறிந்ததை ஒப்படைக்கிறோம்...

கழுகு வலைதளத்தில் கூறியது போலவே வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மைதாவை வெண்மையாக்க benzyl  peroxide அல்லது அதற்க்கு ஈடான எதோ ஒரு ரசாயனத்தை வைத்து  வென்மையாக்குகிறார்கள்.
http://www.healthy-eating-politics.com/white-flour.html

இதனால் அந்த மைதாவில் உருவாகும் உப பொருள் தான் alloxan . என்ற  வேதியியல் பொருள். இது எலி மற்றும் பிற மிருகங்களின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீடா அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது...

ஆனால் இது மனிதன் மீது எந்த வித குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்பது சரியான முறையில் கணிக்கப் படவில்லை என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். ஆனால் ஒரு முடிவு குறிப்பிடுவது சுவாரசியமான பதிலை தருகிறது. அதாவது மனிதனுக்கு alloxan  கொடுக்கப் படும் அந்த தருணத்தில் மட்டும் இன்சுலின் சுரப்பது இல்லை என்றும் மீண்டும் சில நேரங்களில் சுரப்பது தொடர்கிறது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7716136

பீடா அணுக்களின் ஆயுள் காலம் மூன்று முதல் ஆறு நாட்கள், சிறு குழந்தைகளுக்கு ஆறு முதல் பன்னிரண்டு நாட்களாக இருக்கும். எவ்வளவு அணுக்கள் இறக்கிறதோ அவ்வளவு அணுக்கள் மீண்டும் உற்பத்தி ஆகி விடும்.. ஆனால் உற்பத்தி திறன் குறைய ஆரம்பிக்கும். இன்சுலின் சரியாக உடலில் எடுத்துக் கொள்ளப் படவில்லை என்றாலும் இந்த புது பீடா அணுக்கள் பிறக்கும்..

நாளடைவில் இந்த இளம் வயதில் உற்பத்தி அதிகரிப்பு, பிற்கால நாட்களின் உற்பத்திக்கு உலை வைக்கும்.. அதாவது சாதாரணமாக 60  வயதில் எதிர்பார்க்கப் படும் நீரிழிவு நோய்.. 30 வயதில் உருவாகும் என்பது தான் எங்கள் முடிவு.. மேலும் இப்பொழுது இந்த வயதிலேயே நீரிழிவு நோய் வருகிறது என்றும் பல முன்னணி மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..

1919  ஆம் வருடம் வெளி வந்த இந்த விஷயம் இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த வித ஆராய்ச்சிக்கும் என் உட்படுத்தப் படவில்லை என்று தான் யோசனையாய் இருக்கிறது...

வேர்கடலை எண்ணெய் மூலம் புற்று நோய் வரும் காரணிகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் என் மற்றொரு நண்பர் ஆனந்த் ராஜ் அவர்களிடமும் இந்த செய்தியை கூறி ஆராய சொல்லி இருக்கிறேன்...

குழந்தைகள் விரும்பி உண்ணும் அனைத்து பொருட்களும் மைதாவில் செய்யப் படுகிறதே என்று தான் உறுத்துகிறது...

உங்கள் சிந்தனைகளையும்,  உங்கள் கருத்துக்களையும், என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்களேன்...

20.11.11

இந்த வாரம்

இந்த வாரம் நடந்த அரசியல் விவாதங்களில் சில, சுவையாக இருந்தது...
ஆனால் பெரும்பாலானோர் தவறான பார்வையில் இருப்பதாக எனக்கு படுகிறது...

ஒன்று:

மல்லய்யா, அரசின் தவறான கொள்கைகளால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும்.. அதனால் அரசு அவருக்கு உதவி புரிவது தப்பில்லை என்றும்... மிகவும் விலை குறைவாக விமான சேவை நடத்துவது நடுத்தர மக்களுக்கு உதவி புரியவே என்றும்.. ஆகையால் அவருக்கு அரசு கை தூக்கி விட வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்... இங்கு பலர் அவரின் ஆடம்பரமான வாழ்வை பார்க்காமல் பெட்ரோல் விலை வாசி மட்டுமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டு பிடித்துள்ளனர்...

ஆணிவேர் பார்வை:

உங்கள் வீட்டருகே இருக்கும் ஆட்டோ காரர்கள் மக்கள் நலன் கருதி மிகவும் சிறிய தொகையை கட்டணமாக வாங்கி நொடித்து போய், அரசு தான் காரணம் என்றால் என்ன சொல்வீர்கள்?
ஆட்டோ காரர்கள் என்றால் சண்டைக்கு செல்லும் இவர்கள் விமான நிறுவனம் என்றால் இரக்கப் படுவது எதனால்?

இரண்டு:

பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், ஆனால் தவிர்த்திருக்கலாம் என்றும், தனியார் மயமாக்கி இருந்தால் சேவை தரமாக இருந்திருக்கும் என்றும் பலர் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் எதோ ஒரு மாற்றத்தை தேடி அம்மையாருக்கு ஓட்டு போட்டவர்கள் என்பது இவர்களின் ஆதங்கமும், கோபமும், உணர்ச்சி வயப் பட்ட நிலையும் காட்டி கொடுக்கிறது..

ஆணிவேர் பார்வை:

பேருந்து கட்டண உயர்வு கண்டிப்பாக வேண்டும் என்று பல்வேறு தனியார் பேருந்து முதலாளிகள் பல ஆண்டுகளாய் கேட்டுக் கொண்டு இருந்ததை பல்வேறு தரப்பினரும் மறந்து விட்டார்கள். மேலும் தனியார் பால் நிறுவனங்களும்  பால் விலையை ஏற்றினால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்திருக்கிறார்கள் என்பது தனியார் பால்களின் விலையை விட ஆவின் விலை ஏற்றியதை வைத்து கணக்கு போட்டுக் கொள்ளலாம்..

தனியார் முதலாளிகளின் சுயநலமே இந்த தேவை இல்லாத விலை ஏற்றம்.

மூன்று:

அணு உலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதால் , பதிலுக்கு அணு உலை அமைத்தால் தான் மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல சிறு முதலாளிகள் அணு உலை அமைய வேண்டும் என்று போராட்டம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்..
அணு உலை அமைய வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் வைத்திருக்கும் banner  ஐ பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது...

ஆணிவேர் பார்வை:

கண் தெரியாதவன் யானை பார்ப்பது போல் உருவகப் படுத்தி வரையப் பட்ட கார்டூனை துணைக்கு அழைத்து அணு உலை எதிர்ப்பாளர்களை கிண்டல் செய்யும் அவர்கள். அதில் பொதிந்திருக்கும் மர்மத்தை கண்டு பிடிக்காமல் விட்டது வேதனையை தருகிறது...


கூடங்குளம் அணு உலை என்பது ஒரு யானை போல் என்றும் மதம் பிடிக்கும் வரை எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றும், மதம் பிடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தால் கட்டுக் கடங்காத சேதம் இருக்கும் என்றும் புனையப் பட்ட கார்டூன்..

18.11.11

முதுகில் குத்துவது எப்படி?

PFRDA [Pension Fund Regulatory and Development Authority] மசோதா

பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் பென்ஷன் பணத்தை, பங்கு சந்தையில் முதலீடு செய்ய உருவாக்கப் படும் மசோதா, வரும் குளிர் கால கூட்டத் தொடரில் சட்டமாக இயற்றப் படும் என்றும்...

இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் 26 % முதலீடு செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ள போதிலும், இந்த வரிகள் அந்த சட்டத்தில் இருக்காது என்றும் கூறி உள்ளார்கள். இதற்க்கு முதன்மையான காரணம் பிற்காலத்தில் எந்த வித சட்டமும் இயற்றாமல் அதன் அளவை கூட்டிக் கொள்ளவே என்றும் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன...

மேலும் இதன் மூலம் உத்தரவாதமான தொகை சம்பந்தப் பட்ட தொழிலாளிக்கு கிடைக்காது என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது...
http://articles.economictimes.indiatimes.com/2011-11-16/news/30405824_1_fdi-cap-insurance-sector-pension-sector

இந்த திட்டத்தில் உள்ள தொழிலாளிகள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக இடது சாரிகள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளனர்...

இதில் கொடுமை என்ன என்றால் இந்த திட்டத்தில் பல கிராமத்து மக்களும் இணைந்திருக்கிறார்கள் என்பதே.. வருங்கால கனவுகளுடன் விவசாய வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் மூலம் சேர்ந்துள்ளனர்... அவர்களுக்கு இந்த மாதிரி சட்டம் நிறைவேற்றப் படப் போகிறது என்று தெரிந்திருக்குமா என்ற கேள்வி இன்று என் தூக்கத்தை கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
http://en.wikipedia.org/wiki/New_Pension_Scheme_%28India%29
http://pfrda.org.in/writereaddata/eventimages/Aggregato20List8968663130.pdf

நீர் வீதி

வெனிஸ் நகர நீர் வீதி, பல படங்கள் இங்கு எடுக்கப் பட்டு நம்மை ஆ என்று வாய் பிளக்க வைத்துள்ளது...


என்னங்க பெரிய வெளிநாடு, நம் நாட்டுக்கு ஈடு வருமா?


நம்ம சிங்கார சென்னை தான் இது...

முக்கிய செய்திகள்

இன்றைய மிக மிக முக்கிய செய்திகள்:

சுகப் பிரசவம் ஆக ஒருவர் உடல் உழைப்பு உள்ளவராகவோ, அல்லது இளைமையானவராகவோ  இருக்க வேண்டிய அவசியம் இல்லை..

-ஐஸ்வர்யா ராய் பச்சன் 

அவள் எனக்குத் தான்: காதலால் ஏற்பட்ட மோதல்: சக மாணவனை குத்திக் கொன்ற +2 மாணவன் கைது
 http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=65366  

மேற்கு இந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா வென்றது..
http://www.thinaboomi.com/2011/11/17/8120.html 

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்... -அண்ணா ஹஜாரே கோரிக்கை
http://www.dailythanthi.com/article.asp?NewsID=688591&disdate=11/18/2011

தாஜ் மகாலை பாதுகாப்பது எங்கள் கடமை - சுப்ரீம் கோர்ட்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=350302

அவ்வளவு முக்கியம் இல்லாத செய்திகள்:

கூடங்குளம் மக்கள் போராட்டம்..

பால் விலை வாசி உயர்வு..

பெட்ரோல் விலை வாசி உயர்வு..

பேருந்து கட்டண உயர்வு..

தமிழக மீனவர்கள் பிரச்சினை..

குஜராத் மீனவர்கள் பிரச்சினை..

பாகிஸ்தான் மீனவர்கள் பிரச்சினை...

மக்கள் நலப் பணியாளர் போராட்டம்..

மின்சார கட்டண  உயர்வுக்கு அச்சாணி...

முக்கிய செய்திகளை விட முக்கியமில்லா செய்திகள் அதிகமா இருக்கும் போலிருக்கே..


15.11.11

ஓ போடு

சென்னை மாநகரம் உருவாக்கும் குப்பைகளை கொண்டு அருமையாக சென்னை, மின்சார தன்னிறைவை அடையலாம் என்று தமிழ் நாட்டை சார்ந்த 81  வயதை எட்டியுள்ள ஒரு பொறியியல் வல்லுனரான திரு.சிவப்பிரசாத் குறித்து இன்று வெளியான டெக்கான் குரோனிகள் நாளிதழில் இரண்டாம் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து துறைகளின் கதவுகளையும் தட்டி, எந்த விடையும் கிடைக்க வில்லை என்றாலும் விடாமல் தன முயற்ச்சியை தொடர்ந்த படி உள்ளார்.

இவரது தொழில் நுட்பப் படி மலேசியா அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி எழுநூறு டன் எடையுள்ள குப்பைகளை கொண்டு எட்டு மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறதாம்...

இதற்க்கு ஆகும் செலவுகள் குறித்து எந்த விதமான தகவல்களும் இல்லை.
1995  இல் நடைப் பெற்ற ஐ.நா ஆசிய பசிபிக் பகுதியின் சுற்றுச்சூழல் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமர்க்களமான வரவேற்ப்பு கிடைத்தாக அந்த செய்தி குறிப்பு சொல்கிறது.
http://panchabuta.com/tag/k-s-sivaprasad/

சென்னையின் ஒரு நாள் குப்பையின் எடை 3200  டன் என்று  சென்னை மாநகராட்சியின் வலை தளம் அறிவிக்கிறது.
http://www.chennaicorporation.gov.in/departments/solid-waste-management/index.htm


13.11.11

அருகி வரும் இனம் எது?

வழக்கமாய் அமெரிக்காவில் மட்டுமே வெளிப்படையாய், பெரும் பணக்காரர்களுக்கு பல சலுகைகள் அளித்து காப்பாற்றி வந்தனர்.

அதன் எதிரொலி தான் இன்று வால் தெரு முற்றுகை போராட்டம் என்பதை காண முடிகிறது..

இத்தனை ஆண்டுகளாய் இந்தியாவில் திரை மறைவில் நடந்த இந்த கூத்துக்கள், இன்று வெட்ட வெளிச்சமாய் அரங்கேறுமா என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எழுந்துள்ளது.

விஜய் மல்லய்யா என்ற மாபெரும் சக்தி இன்று தவறான பொருளாதார அணுகுமுறையால் பல கோடி ரூபாய்கள் கடனில் தத்தளிப்பதாகவும், அவர் அரசின் தவறான அணுகுமுறையால் தான் நஷ்டம் அடைந்தேன் என்று கூறி அரசின் கையை எதிர்பார்த்தும் காத்திருப்பதாக இந்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் குறிப்பிடுகிறது...

சுரண்டி கொழுத்ததால் வந்த ஆடம்பரம் இன்று மல்லய்யாவை ஆட்டம் காண வைத்தாலும், அரசு என்றும் போல் அவரை காப்பாற்றும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...

அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர், என் ஊழியர்கள் கட்டும் வரியை விட, நான் குறைவாக கட்டுகிறேன் என்று கூறி...

பணக்காரர்கள் என்பவர்கள் அழிந்து வரும் இனமல்ல[Rich are not an endangered species], ஆகையால் அவர்களுக்கு உதவி தேவை இல்லை என்று வெளிப்படையாக கூறியதை நம் ஆட்சியாளர்கள் நினைத்து பார்ப்பார்களா என்பது கேள்விக் குறியே...

http://www.thehindu.com/news/national/article2622215.ece

12.11.11

நிபுணர்

இன்று இணையத்தில் மிகப் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறார், நமது முன்னாள் ஜனாதிபதி...

அவர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பொய்யை ஏற்கனவே ஒரு பதிவில் ஆணிவேர் அம்பலப் படுத்தி உள்ள நிலையில் இன்று வெளி வந்துள்ள ஒரு செய்தி இன்னும் ஒரு பொய்யை அம்பலப் படுத்தி உள்ளது அணு ஆற்றல் கட்டுப்பாட்டு குழு [Atomic Energy Regulatory Board].

அதாவது ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு திட்டங்களுடன், நடமாடும் தன்மை உள்ள மின்சார உற்பத்தி கருவியும், நீர் நிலையமும் இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளுக்கும் அமைக்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளனர்...

இது கூடங்குளத்திர்க்கும்  பொருந்தும் என்பதால் நூறு சதவிகித பாதுகாப்பு உள்ளதாக நம் முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு கூறினார் என்று சாதாரணமாகவே கேள்வி எழும்புவதை, மேலும் பாதுகாப்பு இருப்பதில் தவறில்லையே என்று பதில் அளித்திருக்கிறார் நம் முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர்.

மேலும் இங்கு தோய்வில்லாமல் நடக்கும் போராட்டத்திற்கு எங்கிருந்து பொருளுதவி வருகிறது என்று மத்திய அரசு விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றனர்...

விஞ்ஞானி என்றால் தான் ஒரு விஞ்ஞானியை விமர்சிக்க வேண்டும் என்றால்,
பொருளாதார நிபுணர் என்றால் தான் ஒரு பொருளாதார நிபுணரை விமர்சிக்க முடியுமா என்று கேள்வி எழும்புகிறது...

விலைவாசியை கட்டுப் படுத்த முடியாது என்றும், பணம் மரத்திலா காய்க்கிறது என்றும் கேட்ட நம் பிரதமர், பொருளாதார மேதை தானே...

http://ibnlive.in.com/news/kudankulam-protesters-demand-white-paper/201771-3.html

11.11.11

மால்குடி சித்தன்

நாடி ஜோதிடம், பழங்கால ரிஷிகள் எழுதிய ஓலை சுவடிகள் வைத்து எதிர்காலத்தை சொல்வார்கள். இவை பிரபலமான இடங்கள் வைத்தீஸ்வரன் கோவிலும் மற்றும் காஞ்சிபுரம்... இது மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களில் கிளைகள் என்று வைத்து வியாபாரமும் காண கச்சிதமாய் நடந்து கொண்டிருக்கிறது...

சித்தனின் சிந்தனை என்ன என்றால்,

இவ்வளவு பழமை வாய்ந்த ஓலை சுவடிகளை ஏன் இன்னும் அரசாங்கத்தின் அங்கமான தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ளவில்லை?

தொல்பொருள் துறை இவ்விஷயத்தில் ஏதாவது முயற்சி எடுத்து இருக்கிறார்களா?

என் நண்பர் ஒருவர், பூகம்பம் போன்ற நிகழ்ச்சிகளை கூட கணித்து வைத்திருப்பார்கள் தானே என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறாராம்...

நாடி ஜோதிடம் என்ற இந்த வித்தையை நான் நம்பவில்லை என்றாலும் இந்த கேள்விகள் என் மனதை துளைத்து கொண்டு இருக்கின்றன...

பதில்கள், பின்னூட்டம் இடுபவர்களுக்கு தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில்...

திருக்குறள் போன்ற பல பழம்பெரும் நூல்களின் மூல ஓலை சுவடிகள் அந்த ஓலை சுவடிகளின் கூட்டத்தில் இருக்கலாம் என்று யாருக்கும் இது வரை சந்தேகம் எழவில்லையா?

நண்பரின் கடிதம்

மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான என் தோழர் அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு.. 

-------------------------------

சாதரண மக்களின் உயிர்களையும் உண(ர்)வுகளையும் ஒடுக்க / அழிக்கத் துடிக்கின்ற பிரதிபலனுக்காய் இயங்குகின்ற பிரதிநிதித்துவ சனநாயகம், பார் உயிர்கள் அனைத்தும் என்றென்றும் வளமாய் வாழ வழித்தேடி போராட்டக் களத்தில் இருக்கும் மக்கள் சனநாயகத்தின் முன் மண்டியிடும் நாள் வெகுதொலைவில் இல்லை!

மத்திய அரசே! மாற்றான் கைகூலியே!

அணுவிற்கு எதிரான எங்கள் போராட்டம்
அணுகுண்டு போட்டு ஒடுக்க நேர்ந்தாலும்
அனுதினமும் களமாடி உங்கள் கடைசிசிசி....
அணுகுண்டை உண்டாவது எம்மவர்க்கும்

அடுத்த தலைமுறைக்கும் ஆவன செய்யாது அயரமாட்டோம்!
அணு உலையை மாய்க்கும்வரை ஓயமாட்டோம்! 

அஞ்சினால் வரலாறு படைக்க முடியாதாம்... ஆம்
அகிலத்திற்கே ஆபத்தை விளைவிக்கும்

அணு உலைகளை அழித்தொழிக்க 
அதிகார மையங்களுக்கு பயந்து ஒதுங்கினால்

அருந்தமிழர்க்கு மட்டுமல்ல அகில உயிர்களுக்கும் 
அச்சமில்லா வாழ்வை உறுதிசெய்யும் வரலாறு நிகழ்ந்திடுமா?

அணு உலையை மூடாமல் 
கூடங்குளத்திலிருந்து கூட்டத்தை 
களையமாட்டோம் என அறைகூவலிடும்
அஞ்சா நெஞ்சர்களுக்கு 
உயிர்க்கருணை உள்ளங்களுக்கு 
தலைவணங்குகிறோம்!

சகப்போராளியாக

கன். மோகன்
91500 40096

தற்காலிகமாக தேச இறையாண்மை என்ற பெயரில் அவர்களை அடக்கி ஒடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. அது கனன்று கொண்டு இருக்கும் தீப்பொறியை பரவ செய்யும் என்பதை தவிர வேறு எதுவும் செய்யப் போவதில்லை என்பது என் எண்ணம்...

9.11.11

யாரை பழிவாங்குகிறார்கள்?

மக்கள் விரோத திட்டங்களை கட்டவிழ்த்து விடுவதை தமிழகத்தில் ஆளும் கட்சிகள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பது தெரிந்ததே...

இன்று பதவி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் குறித்து விரிவான கட்டுரை கீழ்காணும் சுட்டியில் வெளியாகி உள்ளது.. உங்கள் பார்வைக்கு...


இதை ஒட்டி முகநூல் பக்கங்களில் பரவும் புகைப்படம் உங்கள் பார்வைக்கு...
பெரிதாக பார்க்க படத்தை சுட்டவும் 

8.11.11

முடியுமா? முடியாதா?

"முடியும் என்று நினைப்பவனால் தான் வரலாறு படைக்க முடியும்..."

இது யாருக்கு சொல்லப் பட்ட அறிவுரை என்று தெரியாது...

திரு. அப்துல் கலாம் அவர்களே...

எங்களால் அணு உலை வராமல் தடுக்க முடியும் என்று நினைத்தால் வரலாறு படைக்க முடியும் அல்லவா...

போராடும் மக்களுக்கு சொல்லும் பதிலை...
முடியாது, தெரியாது என்று சொல்லும் ஆட்சியாளர்களிடம் சொல்லுங்களேன்...

விலைவாசியை உடனடியாக கட்டுப் படுத்த முடியாது... கட்டுப் படுத்த எந்த மந்திர கோலும் இல்லை.
-பிரணாப் முகெர்ஜி.

பெட்ரோல் விலை ஏற்றாமல் இருக்க முடியாது... ஏனெனில் பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.
-முரளி தியோரா.

ஏழ்மை கோடு என்பது ரூபாய் 26 மற்றும் 32 என்று முடிவெடுத்ததை திருப்பி பெற முடியாது.
- மோன்டேக்

டக்லஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. ஏனெனில் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும்.
- இந்திய அரசு.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தை தகவல் உரிமை சட்டத்தில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- பரூக் அப்துல்லா, சரத் பவார்.


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்...
முடியும் என்று நினைத்து முயற்சி செய்தாலும் சரி,
இந்த வழியில் முடியாது என்று நினைத்து வேறு வழியில் முயற்சி செய்தாலும் சரி.
வரலாறு படைக்க முடியும்...

அணு உலை மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்யும், பிற மின்சாரங்கள் பூர்த்தி செய்யாது என்று அதை பற்றி ஆராய கூட முடியாது என்றால் வரலாற்றில் உங்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும், எதிர்மறை எண்ணத்துடன்.

பாலைவனத்தில் சூரிய ஒளி மூலமாகவும், கடலில் நிறுவும்  காற்றாலை மூலமாகவும், கடலலை மூலமாகவும் கண்டிப்பாய் மின்சார தன்னிறைவை அடைய முடியும் என்று நினைக்கிறோம் அணு மின்சாரம் வேண்டாம் என்று போராடும் நாங்கள்..

முடியாது என்கிறீர்களா நீங்கள்?

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2608482.ece

6.11.11

யார் பொறுப்பு?

பத்து நாட்கள் கழித்து பேசுவேன் என்று கூறிவிட்டு, 
இன்று கூடங்குளத்தை ஆய்வு  செய்வதாக கூறி விட்டு,
ஆய்வுக்கு புறப்படும் முன்பே அணு சக்தி தான் சிறந்தது என்று கட்டுரை வரைவது, எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை...

பிறக்கப் போகும் சந்ததியினரை கதிர்வீச்சு என்பது எந்த விதத்திலும் பாதிக்காது என்று உத்தரவாதம் அளித்துள்ளார். கதிர்வீச்சு பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுவது கற்பனாவாதமானது என்று கூறியுள்ளார். அதற்கு அவர் காட்டும் உதாரணம், நாகாசாகியும் ஹிரோஷிமாவும்...

செர்நோபில் விபத்துக்கு பிறகு சுமார் 83,000 குழந்தைகள் குறைகளுடன் பிறந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

அணுசக்தி தான் சிறந்தது என்று கூறும் நம் முன்னாள் ஜனாதிபதி அவரது கனவு திட்டமான புறா [ PURA ] வில், சூரிய ஒளி சக்தி மூலமே ஒரு கிராமம் முழுவதும் மின்சார தேவையில் தன்னிறைவு அடைய முடியும் என்று திட்டம் வகுத்துள்ளார்.

அவரை பற்றி பலருக்கு மரியாதை இருப்பதால் இதற்கு மேல் வேறு எதுவும் பேசாமல் ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்...

நாளை இந்த திட்டம் நிறைவேறி கல்பாக்கம் மக்கள் போல், கூடங்குளம் மக்கள் பாதிக்கப் பட்டால், அதற்கு முழு பொறுப்பாளியாக இந்த திட்டத்தை ஆதரித்த அனைவருக்கும் சாரும் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்...

நூலகம் தரும் செய்தி

நூலகத்தை மாற்றப் போகிறார் முதல்வர் என்றதும் அனைவரும் கொதித்து போய் விட்டனர்... இதில் அதிகம் கொதித்தது பல எழுத்தாளர்கள்... 

ஒன்று மட்டும் தெரிந்தது, எழுத்தாளர்களுக்கு மக்களை விட புத்தகம் பெரியதாக தெரிகிறது என்று...

சாதாரண மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால், அது அவன் தவறில்லை... போராட்டம் குறித்த பார்வையும், வர்க்கப் பிரிவினைகளையும் அவன் தெரிந்து கொள்ளாததும் ஒரு காரணம்.. அதையும் மீறி இன்று எத்தனையோ போராட்டங்களை, நையாண்டி செய்த பொதுமக்கள் போராட்ட களத்தில், ஏதேதோ காரணங்களுக்காக வீதியில் கை கோர்ப்பதை காண முடியும் நேரத்தில்.. அன்னியப் பட்டு நிற்கிறார்கள் எழுத்தாளர்கள்... குறைந்த பட்சம் இந்த போராட்டங்கள் குறித்து எழுத்துக்கள் கூட அவர்களிடம் இருந்து வருவதில்லை...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் ச.தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்ட காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக கண்டிப்பாக ஒவ்வொரு எழுத்தாளர்களும் போராட வேண்டும் ஒரு விதி உருவாக்கப் பட்டது... அப்பொழுது இதை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டார்கள் எழுத்தாளர்கள்...

அந்த ஆண்டு நடந்த பல எழுத்தாளர் போராட்டங்களில், முறை சாரா தொழிலாளர்களே எழுத்தாளர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டு எண்ணிக்கையை அதிகப் படுத்தி காட்டினார்கள்... [நான் அப்பொழுது காஞ்சிபுரம் மாவட்ட கமிட்டி உறுப்பினர்]

நீங்கள் நூலகத்துக்காக போராடும் களத்தில்,  எழுத்துக்களை நேசிப்பதால் இந்த போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம்.. ஆனால் சாதாரண மனிதனின் பிரச்சினைகளுக்கு நீங்கள் குரல் கொடுக்கப் போவது எப்பொழுது? போராட போவது எப்பொழுது?

சேலம் மருத்துவமனை திறக்க சொல்லி போராடிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் மண்டையில் ரத்தம் சொட்ட அடி வாங்கி நின்ற பொழுது சக மனிதனாக எனக்கு வலித்தது.... 

நீங்கள் அவர்களின் போராட்டத்திர்க்காக என்ன செய்தீர்கள்? என்று யோசித்துப் பாருங்கள்...

சமூக அவலங்களை துவைத்து வெளுப்பாக்கும் தொழிலை நீங்கள் தாங்கி இருக்கிறீர்கள்... உங்கள் மீது அழுக்குப் படும் என்று ஒதுங்கி இருந்தால்...

4.11.11

சூரியன் ஜீவன்

தியாகு என்ற வலைப் பதிவர்

அணு உலை எதிர்ப்பாளர்களிடம் கேட்கும் கேள்வி இது..
அவர் கேட்டு விட்டார், கேட்காதவர்களும் இருப்பார்கள்..

ஒரு வகையில் இந்த கேள்விகள் இன்னும் உண்மைகளை வெளிக் கொணர்வதால் அவரை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை.

இனி கேள்விகள்...

1.இந்தியாவின் மொத்த கரண்டு தேவை எவ்வளவு ?
2.சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் மின்சாரம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு ?
3.எத்தனை சதுர கிலோ மீட்டர்கள் வெற்றிடம் உள்ளது ?
4.இருக்கிற இடத்தில் மேக்சிம எவ்வளவு பெற முடியும் ?
5.அடுத்து அதற்காகும் செலவு எவ்வளவு ?

1.மேஜர் தெர்மல் பவர் அதுக்கு நிலக்கரி வேண்டும் அதன் கையிருப்பு குறைந்து விட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டு இருந்தேன் பதில் இல்லை ?

2.முற்றிலும் சூரிய ஒளி அல்லது காற்றாலையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நாடு எது அப்படி இல்லைன்னா ஏன் இல்லை ?

3.சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மொத்த இடம் எவ்வளவு அதாவது நமது மொத்த மின்சார தேவையின் அடிப்படையில் அதற்கான செலவு எவ்வளவு ?

இந்த கேள்விகளுக்கான பதில்கள்.

அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது படி பார்த்தால் 1,03,000 mega watt மின்சாரம் தேவை படும்.
இதில் 11.5% பற்றாக்குறையுடன் 90,000 mega watt மின்சாரம் தயாரிக்கப் படுவதாக எழுதி இருந்தார்.

ஆனால் உண்மையில் இந்தியாவுக்கு 9,50,000 mega watt மின்சாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் தேவை ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது...

இந்தியா பெறும் சூரிய ஒளியில் இருந்து ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 200 mega watt மின்சாரம் எடுக்க முடியும்.

ராஜஸ்தானிலும் குஜராத்திலும் உள்ள பாலைவனங்களின் பரப்பளவு 2,08,110 சதுர கிலோ மீட்டர்கள்.

அதில் வெறும் 15,000 சதுர கிலோ மீட்டர்களை மட்டும் உபயோகப் படுத்தினாலே 3,00,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற நிதர்சன உண்மை உள்ளது.

http://en.wikipedia.org/wiki/Electricity_sector_in_India

இப்பொழுது இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டதால், இவர்கள் அடுத்த கேட்கப் போகும் கேள்வி, மூலதனம்..
ஒரு அணு உலை அமைக்க மட்டுமே 2500 கோடி செலவு செய்யும் அரசு, இதற்க்கு மூலதனம் இட முடியாதா...

ஏற்கனவே நான் பல பதிவுகளில் சொல்லியது போல் ஒரு கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கவும், சோலார் பானேல்களை பராமரிக்கவும் சேர்த்து மூன்று ரூபாய் மட்டுமே செலவாகும். இது தனியார் நிறுவனங்கள் விற்கும் பொருட்களை வைத்து கணக்கிட்டு உள்ளேன். இன்னும் அரசு முனைப்பு எடுத்து அவர்களை இந்த பானேல்களை தயாரித்தால் செலவு குறைய பெரும் வாய்ப்பு உள்ளது.

1 kilo watt = 1 unit = 3.00 rupees

இதற்கு ஆதாரம் என் முந்தய பதிவில் உள்ளது...
http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_04.html

கடைசியாக அவருடைய ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
ஏன் எந்த நாடும் முற்றிலும் சூரிய ஒளி  மூலமாகவும், காற்றாலை மூலமாகவும் மின்சாரம் தயாரிக்கவில்லை என்று கேட்டிருந்தார்...
அதற்கான பதில் அவர் பதிவின் தலைப்பு தான்..

விஞ்ஞானத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறோம் –பிற்போக்கு தனத்தையா?

ஆக்கப் பூர்வ அறிவியலை எதிர்ப்பதை விட்டு விட்டு, அழிவு அறிவியலை எதிர்ப்பதை கொள்கையாக்குவோம்..

வாழ்வோம், நம் சந்ததிகளை வாழ விடுவோம்...

பின் குறிப்பு: கல்பாக்கம் அணு உலை குறித்தும் கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டது, மகிழ்ச்சியாக இருக்கிறது. பூவுலக நண்பர்களின் ஒரு கட்டுரையின் சுட்டியை நமக்கு அளித்து உள்ளார் தோழர். ராஜா MVS

3.11.11

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம்- ஓர் வரலாற்று நிகழ்வு


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம்- ஓர் வரலாற்று நிகழ்வு

மேலே உள்ள சுட்டியில், பூவுலகின் நண்பர்கள் வலை பூவில் கூடங்குளம் குறித்த பார்வை, உங்கள் பார்வைக்கு  

அருகில் ப்ளாக் லிஸ்ட்டிலும் இணைத்துள்ளேன்..

விழிக்கும் வரை கொட்டு முரசே...

வளர்ந்த உலக நாடுகள் பெரும்பான்மை, அணு உலைகள் குறித்து மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்து விட்டதாக ஐரோப்பிய ஆற்றல் மற்றும் பாதுகாப்பு மைய இயக்குனர் சென்னையில் நேற்று நடை பெற்ற கருத்தரங்கில் பேசி உள்ளார்... 

பெரும்பாலான நாடுகள் புகுஷிமாவுக்கு பிறகு தங்கள் அணு மின்சாரம் குறித்த பார்வையை சுய பரிசோதனை செய்ய ஆரம்பித்த விட்டதாக கூறுகிறார் இவர்.

ஜப்பான் தன நாட்டில் இனி மேல் அணு உலைகளை அமைக்கவே அமைக்காது என்று கூறி விட்டு, ஆனால் பிற நாடுகளில் அணு உலைகளை அமைக்க உதவும் என்று கூறுவது, எந்த விதத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை...

கூடங்குளம் மக்கள், அனைத்து அணு உலைகளையும் எதிர்த்து போராட வேண்டும் என்று கூறுகிறார் ஒரு பதிவர்... கண்டிப்பாக போராடுவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனக்கு... 

ஏதேதோ சாயம் பூசி, மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாததால்.. ஏன் அவர்கள் கல்பாக்கம் எதிர்த்து போராட வில்லை என்ற கேள்வி கேட்டு அந்த மக்களின் உணர்வை கொச்சை படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்...

ஜைதாபூர் மக்கள், கேரளா மக்கள், மேற்கு வங்க மக்கள், ஜப்பான் மக்கள் என்று எங்கெங்கோ இருந்து கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீள்வதை நீர்த்து போக வைப்பதில் உள்ளது பலர் நோக்கம்...

அது நடக்காது...
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் அறிவார்கள், ஒரு வேளை இந்த மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மின்சாரம் தயாரித்தாலும் இனி இந்நாட்டில் வேறு எங்கும் அணு உலைகள் அமையாது என்பது மட்டும் உறுதி...

மாற்று வழி என்ன என்று கூறாமல் போராடுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, நாங்கள் எவ்வளவு கூறினாலும் நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்..[சூரிய சக்தி, கடலில் காற்றாலை] மாறுதலுக்கு மாற்று வழி என்ன என்று நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், இந்த மக்கள் போராட்டத்தின் உண்மை புரியும்..

2.11.11

அட போங்கப்பா.

தமிழ் நாடு பொது தேர்வு குழுவின் தலைமை நிர்வாகிகள், தேர்வு ஆணையத்தை லஞ்ச ஒழிப்பு துறையின் கீழ் கொண்டு வந்துள்ள அரசு ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர்..

வேலை கொடுக்க இவர்கள் லஞ்சம் வாங்கியதால் எத்தனையோ இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டத்தை அனுபவித்த கொடுமை, இவர்களுக்கு தெரிய போவதில்லை... 

இத்தனை ஆண்டு காலத்தில் ஒரே நபர் தான் சிக்கி இருக்கிறார், அதற்குள் இவர்களுக்கு சுருக்கென்று குத்தி விட்டது...

உயர் நீதிமன்றமும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது... சட்டத்திற்கு புறம்பாக இந்த அரசு ஆணை உள்ளதாக தெரிவித்து உள்ளனர்... லோக் பால் மசோதா குறித்து விவாதித்து வரும் இந்த வேலையில் அரசு ஆணையே சட்டத்திற்கு புறம்பானது என்று குதித்தால்...

அட போங்கப்பா...

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2590904.ece

 


1.11.11

மக்கள் போராட்டம் வெல்லும்...

கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு, ஆதரவு கரம் நீண்டு கொண்டே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

வழக்கமாய் தமிழக தமிழனுக்காக போராடாத சீமான் அவர்களும், உணர்ச்சி பிழம்பான வை.கோ அவர்களும் இந்த போராட்டத்தில் இணைத்து கொண்டுள்ளார்கள்...

தூக்கு தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் மூவரை காப்பாற்றும் முயற்சியில் உள்ளவர்கள், இந்த போராட்டத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூடங்குளம் மக்களின் மன நிலையை படம் பிடித்து காட்டும் செயலாக உள்ளது.. 

இந்த போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசாமல் இது வரை மக்கள் ஒன்று பட்டு போராடிக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி..

எத்தனையோ போராட்டங்களை இந்த நாடு கண்டுள்ளது...

இது இடது சாரிகளின் போராட்டம்..

இது வலது சாரிகளின் போராட்டம்...

இது தீவிரவாதிகளின் போராட்டம்..

என்று எத்தனையோ போராட்டங்கள் நீர்த்து போயிருக்கிறது...

மக்களின் போராட்டம் என்று சுதந்திர போராட்டத்திற்கு பிறகு, இந்த போராட்டத்தையும், மணிப்பூர் இரோம் ஷர்மிளா போராட்டத்தையும் கூறியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பாதிக்கப் பட்டவர்களின் போராட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களின் பங்களிப்பு உணர்ச்சி பூர்வமானது.. ஆனால் இங்கு யார் பாதிக்கப் படுவோம் என்று தெரியாமல், யாருமே பாதிக்காமல் இருக்கலாமே என்று போராடுவது இந்த போராட்டத்தை தனித்து காட்டுகிறது...

இந்த மக்களின் வெற்றியில் தான் நம் நாட்டின் அணு உலை திட்டத்திற்கு ஆப்பு அடிக்கும் அதிகாரம் இருக்கிறது...