politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.11.11

சில்லறை வணிகத்தில்....?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்து பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... அந்நியர்கள் உள்ளே வரக் கூடாது என்று ஒரு தரப்பினரும், உள்ளே வரலாம் என்று ஒரு தரப்பினரும் பேசிக் கொண்டு உள்ளனர். இருவருமே ஒரு முக்கியமான பார்வையை பார்க்காமல் பேசுவது போன்று எனக்கு தெரிந்ததால், என் அறிவுக்கு எட்டிய வரை ஆணிவேர் பார்வையில் இந்த பதிவை பகிர்கிறேன்...

கமாடிட்டி மார்கெட் என்று அழைக்கப் படும் ஊக வணிகம் குறித்து முழு புரிதல் இல்லை என்றாலும், எனக்கு புரிந்த வரையில் இங்கு என் வாதத்தை முன் வைக்கிறேன்... தவறான கருத்து எனில் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்..

ஒன்று:

ஏற்கனவே இந்தியாவில் ஊக வணிகத்தில் அந்நியர்கள் முதலீடு செய்ய முழு கதவையும் திறந்து விட்டு உள்ளனர்.

அந்நியர்கள் மளிகை கடைகளையும் திறக்கும் பட்சத்தில் இது எப்படி அவர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்ற மாற்று சிந்தனை இது.
உதாரணமாக...

ஒரு கிலோ அரிசி 40 ரூபாய் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஊக வணிகத்தில் வெறும் காகிதம் தான் என்பதால் எவ்வளவு கிலோ அரிசி வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அடிப்படையில், நான் என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு வாங்கி கொள்கிறேன்.

பின்பு வெளி சந்தையில், என் மளிகை கடைக்கு தேவையான அரிசி என்று பல்லாயிரக்கணக்கான மூட்டை அரிசி வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறேன்.. ஆனால் விநியோகம் செய்யாமல் செயற்கையான தட்டுப்படை உருவாக்குவதின் மூலம் அரிசியின் விலையை இரு மடங்காக ஆகும் வரை காத்திருந்து, ஒரே நேரத்தில் ஊக வணிகத்தில் வந்த விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விட்டு, வெளி சந்தையில் விற்பதை விட ஐந்து ரூபாய் குறைவாக விற்று லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல் வாடிக்கயாளர்களையும் சம்பாதித்து கொள்கிறேன்..

அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்பவர்களுக்கு, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இரண்டாவது:

மொத்தமாக விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி விரயம் இல்லாமல் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்ப்பார்கள் என்ற பார்வையும் உள்ளது என்பதால்,
மேலே கூறிய காரணம் இங்கும் பொருந்துகிறது...

விவசாயிகளை இந்த பொருள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதின் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்க எதுவாக இருக்கும்...

மூன்றாவது:

முப்பது சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திகளை வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த உள்விதி உள்ளது என்கிறது ஒரு அமைப்பு. ஆகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப் படாது என்றும் கூறுகின்றனர்.

அது ஏன் வெறும் முப்பது சதவிகிதம் என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.

பொருளாதாரம் குறித்த புரிதல் கொஞ்சம் தலை சுற்றும் விஷயமாக உள்ளதால், சரியாக தான் புரிந்து கொண்டேனா என்ற குழப்பம் உள்ளது... ஆகையால் நண்பர்கள் என் பார்வை சரியாக இருக்குமா என்று தெளிவு படுத்தினால் உற்சாகமாக பொருளாதார பார்வையிலும் இறங்குவேன் என்று கூறிக் கொள்கிறேன்