politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

26.11.11

இறந்தும் மிரட்டுகிறார்

இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த பகத் சிங்கை கண்டு இன்றும் நம் ஆட்சியாளர்கள் நடுங்கி கொண்டிருப்பது இன்று வெளிவந்த ஒரு செய்தி குறிப்பில் வெட்ட வெளிச்சமாகிறது...

சிறு வயதிலே இறந்த ஒரு தீப் பிழம்பு பகத் சிங் என்றால் அது மிகையல்ல..

அந்த வரலாற்று நாயகன் குறித்து பல திரைப் படங்கள் வந்தாலும்.. அவற்றில் உண்மை கலக்கவில்லை என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய திரைப்பட சான்றிதழ் குழு இன்கிலாப் என்ற குறும்படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது.

காரணம், அந்த படத்தில் தேசிய எதிர்ப்பு உணர்வுகள் உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் 42வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ஒருமித்த மனதாக அனைத்து தேர்வாளர்களால்  தேர்வு செய்யப் பட்ட இந்த திரைப்படம் திரை இடப் படப் போவதில்லையாம்..
http://www.thehindu.com/arts/cinema/article2660359.ece

பகத் சிங் 1928  ஜூன் மாத கீர்த்தி இதழில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகளை பார்க்கலாம்..

"மதக் கலவரங்கள் அனைத்திற்குமான நிரந்தர தீர்வு என்பது இந்தியாவின் [இந்திய மக்களின்] பொருளாதார வளர்ச்சியிலேயே உள்ளது.. ஏனென்றால் பொதுமக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இங்கே ஒருவருக்கு வெறும் நாலணாவைக் கொடுத்து மற்றொருவரை தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினியில் கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளை பின்பற்ற முடியாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பது உண்மையே.

ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். ஏனென்றால் நாம் ஆங்கிலேய பேரரசால் ஆளப் படுகிறோம். நாம் வளர்வதற்கு அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எரியும் வரை நமக்கு ஓய்வு உறக்கமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்."

மற்றொரு கட்டுரையில்..

"அதிகார வர்கத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள். அது உங்களுக்கு ஒரு நாளும் உதவி செய்யாது. மாறாக அது உங்களை பகடைக் காயை போல் பயன்படுத்தும். நீங்கள் சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கும் உங்களது வறுமைக்கும் மூல காரணம் இந்த அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமே. எனவே அவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்."

கேளாத செவிகள் கேட்கட்டும்
தொகுப்பும் தமிழும் த.சிவக்குமார்.
நெம்புகோல் பதிப்பகம்.
http://ieyakkam.blogspot.com

விடுதலைப் பாதையில் பகத் சிங்
தொகுப்பு சிவவர்மா
பாரதி புத்தகாலயம் வெளியீடு.

இந்த புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்று தான், அது பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும் சரி, இன்றைய _______ ஆட்சியாக இருந்தாலும் சரி... பகத் சிங்கை புரிந்து உள்வாங்கிக் கொண்டு நாம் முன்னேறுவதில் தான் நம் விடியல் உள்ளது.