politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

22.11.11

கழுகு பார்த்த பார்வை

ஆபத்தான உணவா இந்த பரோட்டா????? ஒரு திடுக் பகிர்வு என்ற தலைப்பில் ஒரு பதிவை கழுகு வலை தளத்தில் பார்த்ததும்... நானும் வழக்கமான ஒரு விழிப்புணர்வு பதிவு என்று தான் நினைத்தேன்...


சிந்தனைகளில் சுழல சுழல, என் புத்திக்கு மிகவும் மெதுவாக உரைத்தது ஒரு விஷயம்.. பரோட்டா மட்டுமா மைதாவில் செய்கிறார்கள்...

குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும்..
பிஸ்கட்
கேக்
நூடுல்ஸ்
மற்றும் அனைத்து பேகரி தின்பண்டங்களும் மைதாவில் தான் செய்கிறார்கள்.

சரி, என்னடா விஷயம் என்று என் நண்பனை அழைத்தேன்...
ராமு என்னும் என் நண்பன் முனைவர் ஆக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்..
அவனை அணுகினேன்...

இருவருக்கும் இது புது விஷயமாக இருக்கிறது என்று ஆராய்ந்தோம்.. விளைவு யூக அடிப்படையில், லாஜிக் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.. இதற்க்கு மேல் என்ன செய்வது, எப்படி செய்வது, என்பதை விவாதத்துக்கு விடுவோம் என்ற அடிப்படையில் இங்கு நாங்கள் அறிந்ததை ஒப்படைக்கிறோம்...

கழுகு வலைதளத்தில் கூறியது போலவே வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மைதாவை வெண்மையாக்க benzyl  peroxide அல்லது அதற்க்கு ஈடான எதோ ஒரு ரசாயனத்தை வைத்து  வென்மையாக்குகிறார்கள்.
http://www.healthy-eating-politics.com/white-flour.html

இதனால் அந்த மைதாவில் உருவாகும் உப பொருள் தான் alloxan . என்ற  வேதியியல் பொருள். இது எலி மற்றும் பிற மிருகங்களின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீடா அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது...

ஆனால் இது மனிதன் மீது எந்த வித குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்பது சரியான முறையில் கணிக்கப் படவில்லை என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். ஆனால் ஒரு முடிவு குறிப்பிடுவது சுவாரசியமான பதிலை தருகிறது. அதாவது மனிதனுக்கு alloxan  கொடுக்கப் படும் அந்த தருணத்தில் மட்டும் இன்சுலின் சுரப்பது இல்லை என்றும் மீண்டும் சில நேரங்களில் சுரப்பது தொடர்கிறது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7716136

பீடா அணுக்களின் ஆயுள் காலம் மூன்று முதல் ஆறு நாட்கள், சிறு குழந்தைகளுக்கு ஆறு முதல் பன்னிரண்டு நாட்களாக இருக்கும். எவ்வளவு அணுக்கள் இறக்கிறதோ அவ்வளவு அணுக்கள் மீண்டும் உற்பத்தி ஆகி விடும்.. ஆனால் உற்பத்தி திறன் குறைய ஆரம்பிக்கும். இன்சுலின் சரியாக உடலில் எடுத்துக் கொள்ளப் படவில்லை என்றாலும் இந்த புது பீடா அணுக்கள் பிறக்கும்..

நாளடைவில் இந்த இளம் வயதில் உற்பத்தி அதிகரிப்பு, பிற்கால நாட்களின் உற்பத்திக்கு உலை வைக்கும்.. அதாவது சாதாரணமாக 60  வயதில் எதிர்பார்க்கப் படும் நீரிழிவு நோய்.. 30 வயதில் உருவாகும் என்பது தான் எங்கள் முடிவு.. மேலும் இப்பொழுது இந்த வயதிலேயே நீரிழிவு நோய் வருகிறது என்றும் பல முன்னணி மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..

1919  ஆம் வருடம் வெளி வந்த இந்த விஷயம் இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த வித ஆராய்ச்சிக்கும் என் உட்படுத்தப் படவில்லை என்று தான் யோசனையாய் இருக்கிறது...

வேர்கடலை எண்ணெய் மூலம் புற்று நோய் வரும் காரணிகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் என் மற்றொரு நண்பர் ஆனந்த் ராஜ் அவர்களிடமும் இந்த செய்தியை கூறி ஆராய சொல்லி இருக்கிறேன்...

குழந்தைகள் விரும்பி உண்ணும் அனைத்து பொருட்களும் மைதாவில் செய்யப் படுகிறதே என்று தான் உறுத்துகிறது...

உங்கள் சிந்தனைகளையும்,  உங்கள் கருத்துக்களையும், என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்களேன்...