
குழந்தை தனம் மாறாத சிறுவர்களின் மனதில் கடவுள், இறைவன் என்ற பெரிய பெரிய சித்தாந்தங்களை மூளையில் திணிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை நித்தியானந்தன் என்னும் ராஜசேகரன் உலகத்துக்கு காட்டி விட்டான். கடவுள் என்ற ஒரு சிந்தனை எவ்வளவு பெரிய மாயை என்பதை கீதையின் வழியே புரிந்து கொண்டு ஒரு உண்மையான நாத்திகனாய் மாறியதை, எவ்வளவு நாளைக்கு தான் அவனால் பொய்யும் புரட்டாலும் ஊரை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியும். பொய் என்பது குடத்தில் இட்ட விளக்கு போல, எவ்வளவு தான் மூடி வைத்தாலும் அதன் வெளிச்சம் வெளியே வந்தே தீரும் என்பது மறுபடியும் உண்மையாய் மாறியிருக்கிறது. எத்தனை ஆனந்தாக்களும், சங்கராச்சாரியார்களும், தேவநாதன்களும், கல்கி பகவான்களும், மாட்டிக் கொண்டு முழித்தாலும் நம் தமிழ் மக்கள் வேறு ஒரு சாமியாரிடம் கண்டிப்பாய் சரண் அடைவதை தவிர வேறு வழி அற்றவர்களாக உள்ளனர். ஒரு பொய்யை பல முறை சொன்னால் உண்மையாகும் என்ற கோயபல்ஸ் தத்துவத்துடன் கண்டிப்பாய் ஒரு பொய்யை பல பேர் சொன்னால் உண்மையாகும் என்ற ஒன்றையும் இணைத்து கொள்ளவேண்டும்...