
இந்த பணம் இருக்கே பணம் அது சுயநலத்தை வளக்க தானப்பா உதவி செய்யுது... அப்புறம் இந்த பணத்தை வச்சிக்கிட்டு சுயநலமா ஏதாவது செய்தா... தப்பு பண்ணிட்டான் தப்பு பண்ணிட்டான்னு கூப்பாடு போடுறது எந்த விதத்தில நியாயம்னு நீங்களே சொல்லுங்கப்பா..
2002 லிருந்து 2006 வரை சுவிஸ் வங்கிகள்ல நம்ம பணக்காரர்கள் போட்டு வச்சிருக்கிற பணம் வருஷத்துக்கு 16 பில்லியன் டாலர் வருகுதுன்னு புதுசா தேவ் கார்னு ஒருத்தர் கண்டுபிடிச்சிருக்கிராராம்... இவ்வளவு துல்லியமா எப்படி கண்டுபிடிச்சார்னு நிறைய பேரு அவர் சட்டை காலரை பிடிக்கிறாங்களாம்... இதுக்கு எல்லாம் காரணம் அரசியல்வாதிங்க தான், அப்படி இருக்கும் போது எப்படி பணக்காரர்களை சொல்லலாம்னு வூடு கட்டிராங்கலாம்... எப்படியோ எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு இவங்களே ஒத்துகிட்டா சரி தான்...
நாங்க என்ன சொல்றோம்னா... எய்தவன் இருக்க அம்பை நோகனும்னு கேட்கிறோம்...
இதை எல்லாம் விட்டு தள்ளுங்க.. எப்பவோ நான் படிச்சது, ஒவ்வொரு வருஷமும் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்காக என்று வாரா கடன் தள்ளுபடி செய்வது மட்டும் 2.5 கோடி ரூபாய் என்று கேள்வி... இதை ஏங்க யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க?
இதை எல்லாம் கேட்கிறவனை கிளம்பிட்டாண்டா கேள்வியின் நாயகன்னு சொல்லி கிண்டல் பண்ணி பதிலை அடக்கம் பண்ணிடறாங்க...
எனக்கு பதில் வேணாம்பா... இந்த மாதிரி எல்லோரும் கேள்வி கேட்டா மட்டும் போதும்...