[படத்தில் உள்ளது லஞ்சம் வாங்குபவர்களின் எண்ணிக்கையே, மற்றபடி எவ்வளவு என்று கணக்கு பார்த்தால் அது அப்படியே தலைகீழாக இருக்கும் என்பதே உண்மை...]
நேற்று இரவு நீயா நானா நிகழ்ச்சி நன்றாக சென்றது... ஊழல் இருந்தால் நம் நாடு வல்லரசாக முடியுமா? என்னடா சோதனை இது என்று இன்று காலை செய்தி தாளை திறந்தாள் ராஜாவின் ராஜினாமா கண்ணை பறிக்கிறது...
விஜய் டிவியில் பேசியவர்கள் அனைவரும் தாங்கள் என்னவோ உத்தமர் போலவும், லஞ்சமே மற்றவரிடம் மட்டுமே பெருகி போய் இருப்பதாகவும் பினாத்திக் கொண்டார்கள்.. போதாக் குறைக்கு வல்லரசாக வேண்டுமாம்..
வல்லரசு ஆக ஒரு நாடு ஆக வேண்டும் என்றால் அது மற்ற நாட்டை சுரண்டி தின்று கொழுக்க வேண்டும்...
காலனி ஆதிக்க பிரிட்டன் போலவும், உலகமயமாக்கல் கால அமேரிக்கா போலவும் பல நாட்டை சுரண்டினால் மட்டுமே வல்லரசாக முடியும்... ஆக நீ ஊழலை அந்த நாட்டில் விதைக்க வேண்டும்.. நமது நாட்டில் ஊழலை விதைப்பது இது போன்ற ஏகாதிபத்திய நாடுகளே...
அய்யா உத்தமர்களே, நீங்கள் யாருமே நிலம் வாங்கியது இல்லையா, வண்டி வாங்கியது இல்லையா, நிலம் வாங்கும் போது பத்திரப் பதிவு குறைவாக போட்டு தான் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். அது லஞ்சம் இல்லையா?
வண்டி வாங்கும் போது, வண்டி ஆர் சி புத்தகத்திற்கு மூன்றாம் மனிதர் மூலமாக லஞ்சம் குடுக்கவில்லையா?
திருப்பதி கோயிலில் ஸ்பெஷல் தரிசனம் என்ற பெயரில் பெருமாளுக்கே லஞ்சம் குடுக்கவில்லையா?
பிச்சை எடுக்கும் மக்கள் எங்கே புரட்சி செய்து விடப் போகிறார்கள் என்று ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ லஞ்சமாக குடுப்பதில்லையா?
ஊழல் செய்யும் பிரதிநிதியை தேர்ந்து எடுத்து சட்ட மன்றத்திர்க்கோ, நாடாளுமன்றத்திர்க்கோ அனுப்பவில்லையா?
நான் வோட்டு போடவில்லை என்று ஜபர்த்தார் காட்டும் மக்களே, நீங்கள் போடாத வோட்டினால் அவன் தேர்தலில் ஜெயிக்கவில்லையா?
அடுத்த தேர்தலில் 49 ஒ வை தேர்ந்தெடுத்து தேர்தலில் வெற்றி பெரும் வாக்காளரை விட அதிக வோட்டு எண்ணிக்கையில் 49 ஒ வை ஜெயிக்க வையுங்கள், காரணம் கேட்க்கும் இடத்தில் ஊழலை எதிர்க்க என்று எழுதி வையுங்கள்...
நம் நாடு வல்லரசாக வேண்டாம்... நம் நாட்டு அனைத்து மக்களும் பசி பட்டினி இல்லாமல் வாழ வையுங்கள்...
கனவு காணும் உரிமை எனக்கு உள்ளது... நனவாக்கும் பெருமை நம் அனைவர் கையிலும் உள்ளது...