
வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், ipl ஏலமும் தமிழக மக்களின் மற்ற எல்லா கவலைகளையும் மறக்க அடிக்கும் மருந்தை மாறியுள்ளது...
போதாக் குறைக்கு தே. மு. தி. கவினரின் கவலையும் பலரின் முக்கிய பிரச்சினையை கண்டுக் கொள்ளாமல் விட செய்திருக்கிறது...
திரு. விஜய காந்த் அவர்களின் துணிச்சல் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது, 2000 ரூபாய் அதிகம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வாக்குரிமையை அடகு வைக்கும் தமிழக மக்களை நம்பி எப்படி தான் இவர் தனியாக நிற்கிறாரோ என்று தெரியவில்லை...
108 அவசர சிகிச்சை ஊர்தி என்பது உண்மையாகவே நல்ல ஒரு திட்டம் ஆனால் அதை தவிடு பொடியாக்கும் முயற்சியில் ஒவ்வொரு அரசு மறுத்தவரும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் போது எங்களால் 2000 ரூபாய் கொடுத்து தான் வோட்டு வாங்க முடிகிறது என்றால் அது மிகை அல்ல...
மொத்தத்தில் விளையாட்டு வீரர்கள் அடிக்கும் நகைச்சுவையும், அரசியல்வாதிகள் அடிக்கும் நகைச்சுவையும் என் கோபத்தையும் மீறி சிரிப்பை வர வைத்து எனக்கு high bp வராமல் பார்த்து கொள்கிறார்கள்...
வாழ்க இம்மக்கள் வாழ்க இந்நாடு...