politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

4.1.11

எதிர்ப்பு


நித்யானந்தரின் திருவண்ணாமலை வருகையை ஒற்றி அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடந்தேறியது...
ஆன்மீக போர்வையில் நடந்து வரும் சுரண்டல்களை கேள்வி கேட்க வேண்டிய வாலிபர்கள் வயோதிகர்களின் முதுகை தாண்டி வர முடியாத சூழ்நிலையில் உள்ளது சிறிது வருத்தத்தை அளிக்கிறது...
தொலைக்காட்சியில் பல முறை ஒளி பரப்பப்பட்டதில் தோழர்[?] கருணா அவர்கள் பேசியது, பொது உடமை இயக்கம் என்பது தமிழகத்தில் இன்னும் உயிருடன் உள்ளது என்னும் என் எண்ணத்தில் ஒரு சறுக்கலை ஏற்படுத்தியது...
நீங்கள் நித்யானந்தரை வெறுத்து ஒதுக்குங்கள், என் அவனை போன்ற சாமியார்களின் பின்னால் செல்ல கூடாது என்று பறை சாற்றுங்கள், ஆன்மீகத்தின் ஆணிவேரை அசைத்து பாருங்கள்,
ஆனால்
அதை எல்லாம் விட்டு விட்டு திருவண்ணாமலை கோவிலின் புனித தன்மை கேட்டு விட்டதாக புருடா விடுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை என்பதே உண்மை.
நீங்கள் பெருமையுடன் கூறிக் கொள்ளும் அண்ணாமலையார் திருக்கோயில் உண்மையில் இடைக் காட்டு சித்தரின் சமாதி என்பது பல ஆன்மீகவாதிகளே ஒத்துக் கொள்ளும் விஷயமாக உள்ள பொழுது இன்னும் கோயிலையும் கடவுளையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?
மனிதன் கண்டு பிடித்த மிக சிறந்த விஷயம் என்ன என்றால் அது கடவுள்...
இதை கண்டு பிடித்து கடவுள் இல்லை என்று சொன்ன பகத் சிங்கின் படத்தை முன் வைத்து கொண்டு கடவுள் புனிதம் என்று தயவு செய்து நீங்களும் கிளம்பி விடாதீர்கள்...
அப்படி கிளம்பி கடவுளை நம்பி இருப்பவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டு விடாதீர்கள்... ஆன்மீக தொழிலில் நீங்களும் கலந்து கொள்ளாதீர்கள்...