ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உள்ளது. அது என்ன கடமை என்பது சிலருக்கு தெரிவது உண்டு, சிலருக்கு தெரிவதில்லை... இது தான் தன் கடமை, என்று செல்பவனுக்கு பல்வேறு இன்னல்கள் நேருவது உண்டு.. அப்படி அவதி படுபவர்களில் பல நல்ல மனிதர்கள் உண்டு...
நான் மருந்து விற்பனை பிரதிநிதியாய் பணியாற்றிய பொழுது எனது மேலாளர் ஒருவர், தனது கடமை என்ன என்று தெரியாததால் மிகவும் அவதிப்பட நேர்ந்தது...
மேலாளரின் கடமை தன் கீழ் பணியில் இருக்கும் ஒருவருக்கு உதவி புரிவது என்று புரிந்து கொண்டார், ஆனால் உண்மையில் அவரின் கடமை தன் கீழ் பணி புரியும் ஒருவனை நிர்வாகத்திற்கு எதிராக போகாமல் தடுப்பதே ஆகும்... நிர்வாகம் எது செய்தாலும் தட்டி கேட்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்க வைப்பதே மேலாளரின் உண்மையான பணி...
அது போல், அரசு நிர்வாகத்தின் அங்கமாக இருப்பவர் பெரும்பான்மையினரின் நலனை பற்றி யோசிக்காமல் சிறுபான்மையினரின் நலனை பற்றி கவலை படுவதே ஆகும்.. இங்கு நான் சிறுபான்மை என்று கூறுவது பணம் படைத்த சுரண்டி தின்னும் கூட்டமே ஆகும்.. அப்படி பட்டவரின் நலனை என்னாமல் செயல் படும் பொழுது, நீங்கள் நல்ல மனிதராக இருந்தாலும் கடமையில் இருந்து தவறுபவராகவே கருதப் படுவீர்கள்.. அப்படி தவறும் பட்சத்தில் உங்கள் நல்ல என்னத்திற்கு என்றும் களங்கம் உண்டாக்கப் படும்...
உங்களை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம்...
வரலாற்றில் உங்கள் பெயரை பொறித்தாகி விட்டது... உங்கள் வேலையை உதறி விட்டு ஒரு நல்ல கால்நடை மருத்துவராய் உங்கள் பிழைப்பை ஓட்ட உங்களால் முடியும்...
முதலாளித்துவ அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்து கொண்டு நல்லதை செய்ய முடியாது என்று புரிந்து கொள்ளுங்கள்...
மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதும் மக்களுக்கு செய்யும் நல்ல காரியம் தான்..
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276241