Pages
politics, critics of medias, and update of hot news
இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...
19.12.10
இந்திய கூரை ஒழுகுமா?
விக்கி லீக்ஸ், கடந்த ஒரு மாதமாக ஊடகங்களுக்கு தீனி போட்டு கொண்டிருக்கும் ஒரு அமைப்பு..
அமெரிக்காவின் ரகசியங்களே இப்படி நாறுகிறதே...
நம்ம நாட்டு ரகசியங்கள்....?
இப்படி தான் பலர் மனக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்...
எல்லா நாட்டு அரசாங்கங்களும் பீதியில் இருக்க நம்ம நாட்டு ஆட்சியாளர்கள் மட்டும் தப்பு தாளங்கள் ரஜினி போல் இதுக்கு போய் அலட்டிக்கலாமா என்று விசில் ஊதி திரிந்து கொண்டிருக்கிறார்கள்...
இவர்கள் இப்படி இருக்க காரணம்..
1. நம்ம நாட்டு மக்களக்கு மறதி ஜாஸ்த்தி..
2. ஒரு ஓட்டுக்கு 500 ருபாய் சேர்த்து கொடுத்தால் மன்னித்து விடுவார்கள்...
3. நம்ம நாட்டுல டாகுமென்ட் எங்கப்பா இருக்கு.. எடுக்க?
ஆதர்ஷ் ஊழலில் முக்கியமான ஆவணங்களை காணவில்லை என்று சிபிஐ முடியை பிய்த்து கொண்டு திரிகிறார்கள்..
பல ஆண்டுகள் நிலப் பதிவு ஆவணங்கள் தரமில்லாத cd யில் பதிவு செய்ததால் இப்பொழுது கர்நாடக அரசாங்கம் முழி பிதுங்கி திரிகிறார்கள்..
அடிக்கடி எரிந்து போகும் கோப்புகள்..
central server இல்லாத அரசாங்கம்
என்று ரகசியங்கள் வெளியே போகாமல் காப்பாற்ற எங்களுக்கு தெரியும் என்று மார் தட்டி கொள்கிறார்கள் 1947 லிருந்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள்..
அட
இதுக்கு போய் அலட்டிக்கலாமா?
Labels:
ஊழல்
14.12.10
வா வாத்தியாரே...
நேற்று deccan chronicle செய்தி தாளில் ஒரு செய்தியை பார்த்தேன்.. RTE சட்டம் அமுலுக்கு வந்தால் தனியாக TUITION எடுப்பது தடை செய்ய படும் என்றும், இதனால் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள் என்றும் பெரிதும் கவலை பட்டிருந்தனர்.. அதில் ஒரு ஆசிரியர் பட்ட கவலை தான் என்னை இந்த தலைப்பில் எழுத வைத்துள்ளது..
அவரது வகுப்பில் 40 மாணவர்கள் உள்ளனராம், ஆகையால் தனி தனியாக கவனம் செலுத்த முடிவதில்லையாம், ஒரு வகுப்பில் செய்ய முடியாததை அவர் பள்ளி முடிந்ததும் இன்னோரு வகுப்பு எடுத்து சரி செய்து விடுகிறாராம், இப்படி கூறிய இவர் தன்னை அறியாமல் ஒரு உண்மையையும் உடைத்து விட்டார், பள்ளியில் வாங்கும் சம்பளம் போதவில்லை என்றும் இப்படி தனியாக வகுப்பு எடுப்பதில் தான் இவர் குடும்பம் நடத்துகிறார் என்றும் பட்டவர்த்தனமாக கூறி உள்ளார்...
முதலில் ஆசிரியர்கள், தங்களது அறிவு திறனை பெருக்கி கொள்ள வேண்டும்...
இன்னும் பல தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் எங்கள் தெரிவதில்லை..
அது அவர்கள் தவறில்லை..
நம் சமூகம் அப்படி..
இன்னும் பகத் சிங்கை தீவிரவாதி என்று எண்ணிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆசிரியர்கள் உள்ளனர்...
ஆகையால் ஆசிரியர்கள் அவர்கள் எடுக்கும் பாடம் குறித்து ஆதி முதல் அந்தம் வரை தெரிந்திருந்தாலே அவர்கள் எடுக்கும் வகுப்பிலேயே கற்றுக் கொடுக்கலாம்..
ஆனால் இங்கு நடப்பதோ, இவர்கள் மாணவர்களை படிக்க வைக்கிறார்களே தவிர, கற்று கொள்ள வைப்பதில்லை...
ஒரு மாணவன் கற்று கொண்டால் அவன் அதை மறக்க போவதில்லை,
மாறாக படிக்கும் பொழுது அவன் மறந்து விடுகிறான்...
ஆகவே ஆசிரியர்களே,
நீங்கள் படித்து முன்னேறாததால் வருங்கால மாணவர்களையும் கற்று கொள்ள வைக்காமல் பழி வாங்காதீர்கள்,,
கற்றுக் கொள்ள வையுங்கள்...
வாழுங்கள், வாழ விடுங்கள்...
Labels:
ஊழல்
11.12.10
இரு உலகம்
இந்த உலகம் ஆனது இரண்டு பக்கங்களை உடையது... உலகம் என்று நான் கூறுவது மனிதர்களை..
இந்த மனிதர்கள் இரு வகை படுகிறார்கள்...
ஒன்று மற்றவர்களை சுரண்டி கொழுப்பது...
அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து போராடுவது...
சுரண்டி கொழுப்பது நல்லது என்று பெருவாரியான மக்களின் மனதில் தவறாகவே படுவதில்லை...
எப்படி லஞ்சம் கொடுப்பது என்பது ஒரு தவறான விஷயமாக பல பேருக்கு தெரிவதில்லையோ அது போலவே நாம் எப்படி மற்றவர்களை சுரண்டி கொழுக்கிறோம் என்பதும் தெரிவதில்லை....
போராடும் மனிதர்களும் ஒரு கட்டத்தில் இந்த சுரண்டி கொழுக்கும் கூட்டத்தின் பண்புகளை எடுத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக ஒன்றி விடுகிறார்கள்...
சுரண்டும் கூட்டத்தின் ஒலிபெருக்கியாகவே பெரும்பாலான ஊடகம் உள்ளது என்பது தான் வியப்புக்குரிய உண்மை...
இதில் வேடிக்கை என்ன என்றால் இப்படி சுரண்டி கொழுக்கும் ஊடகங்களின் நடுவே நடக்கும் பனிப்போர் தான்.. சில சமயம் தங்களையும் அறியாமல் உண்மைகளை வெளி விட வேண்டி இருக்கிறது...
இப்படி தான் NDTV யில் வெளியான பர்க்கா தத் அவர்களின் தன்னிலை விளக்கம் குறித்த ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது...
இதை பற்றி விளக்கி கூறும் அளவுக்கு அதில் ரகசியம் இல்லை... மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்...
http://www.youtube.com/watch?v=8mH0uae4DFo
http://www.youtube.com/watch?v=EbXQeF85sIc&feature=related
http://www.youtube.com/watch?v=Sp-zIMLROFQ&feature=related
http://www.youtube.com/watch?v=AWqc_3sLzGE&feature=related
Labels:
ஊழல்
6.12.10
மக்கள் கணினி மையம்...
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் கிராமத்து மக்களுக்கு கணினி பற்றிய ஒரு புரிதலை கொண்டு வருவதற்கும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்களின் உதவிக்கு அரசு சேவைகளை கொண்டு போய் சேர்ப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்ட சேவை இது என்றால் அது மிகை அல்ல...
ஆனால் இங்கு நடப்பது என்ன?
சஹாஜ் என்னும் நிறுவனத்தை பற்றி மட்டும் வரும் புகார்களை எடுத்து கொண்டாலே இது எப்படி கிராமங்களில் ஆரம்பிக்கப் படும் கணினி மையங்களை சுரண்டி கொழுக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது...
ஒரு irctc ரயில்வே டிக்கெட் பதிவு செய்வதற்கு ஒரு vle கு கிடைக்கும் தொகை ஆனது 5 ரூபாய் மட்டுமே...
இதில் அவர் புக் செய்ய பயன்படுத்தும் கணினியின் மின்சார செலவும், இனைய செலவும், ஒரு டிக்கெட் பிரிண்ட் செலவும் அடங்கும்... ஆக இந்த வருமானத்தில் தான் ஒரு vle ஆகப்பட்டவர் குடும்பம் நடத்துகிறார்...
இதில் எந்த செலவும் இல்லாமலேயே irctc 10 ரூபாய் எடுத்துக் கொள்கிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை...
இதில் வருமானம் இல்லை என்றால் கல்வி சேவைகளை கொண்டு போய் சேர்க்கலாமே என்று கூறுகிறார்கள் அந்த நிறுவனத்தின் மேலாளர்கள்...
ஒரு hardware & networking கல்விக்கு அவர்கள் விதித்து உள்ள தொகை 1500 அதில் 750 sahaj கும் 750 vle கும் கிடைக்கும்..
இந்த கல்வி திட்டமானது நாள்களை உள்ளடக்கியது..
ஆக ஒரு நாள் வருமானமானது 8.33 ரூபாய் மட்டுமே...
இந்த வருமானத்தில் தான் அவர் ஒரு மணி நேர இனைய செலவையும், கணினியின் மின்சார செலவையும் பார்த்து கொள்ள வேண்டும்...
ஆக இதில் என்ன வருமானம் வரும் என்று கூட்டி கழித்து பார்த்தால் அது எட்டு சுரைக்காயாகவே உள்ளது என்பது வெளிச்சமாகிறது...
ஆக பணம் போடும் vle கு இவர்கள் போடுவது????????????????????????????????
Labels:
ஊழல்
27.11.10
23.11.10
மறுபக்கம்...
ஊழலின் மறுபக்கம் என்ன என்றால் அது முதலாளித்துவத்தின் கோரப் பிடியில் சிக்கி இருப்பதே.. இப்போதைக்கு கீழ் காணும் லிங்கை படித்துக் கொள்ளவும்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. http://economictimes.indiatimes.com/news/politics/nation/CVC-head-Thomas-on-shaky-ground-after-SC-rap/articleshow/6973436.cms
Labels:
ஊழல்
21.11.10
அறிவு தனி நபர் சொத்தா...?
உலகத்தில் பணம் செய்ய பல வழிகள் உள்ளது... அவற்றில் மிகவும் சுலபமான வழிகளை முதலாளித்துவம் எடுத்துக் கொண்டு சுரண்டி கொழுக்கிறது...
http://www.pcworld.in/news/microsoft-indians-against-piracy-will-pay-genuine-software-41212010 மேலே குறிக்கப்பட்டுள்ள லின்கானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய விற்பனை உத்தி குறித்தானது..
உபுண்டு லினக்ஸ் சின் வளர்ச்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிப்பதால், அந்த நிறுவனம் சுலப தவணை திட்டத்தில் தனது மென்பொருளை விற்பனைக்கு கொண்டு வருகிறது...
அதற்க்கு முன்னோடியாக மக்களின் மனதில் வாங்கும் எண்ணம் வர வைப்பதற்கு சர்வே எடுக்கிறேன் என்ற பெயரில் தனக்கு தேவையான என்னத்தை வெளியிட்டு மக்களின் மனதை குழப்பிக் கொண்டிருக்கிறது...
உபுண்டு லினக்ஸ் மிக பெரிய அளவில் முன்னேறாததற்கு காரணமே, அதை பற்றிய சரியான புரிதல் மக்களிடம் இல்லாதது தான்... இதை தெளிவாக்க வேண்டிய அரசாங்கமோ வாங்கிய காசுக்காக கை கட்டி வாய் பொத்தி நிற்கிறது...
திரு பில் கேட்ஸ் அவர்கள், இந்திய மக்களுக்காக பணம் வாரி வழங்கிய போது எனக்கு ஏற்பட்ட சந்தேகம் மேற்கூறிய செய்தியால் ஊர்ஜிதமாகிறது..
ஒரு முதலாளி பணத்தை வாரி இறைக்கிறான் என்றால் அது அவன் கண்ணோட்டத்தில் மூலதனமே...
அத்தகைய மூலதனம் குறைந்த பட்சம் 20% சதவிகித லாபத்தை தந்தால் மட்டுமே அவன் மனம் ஆறுதல் அடையும்...
இல்லையேல் அவனுக்கு தூக்கம் வருவதில்லை...
ஆக பில் கேட்ஸ் விதைத்தது மொத்தம் மூலதனமே... தான தர்மம் அல்ல என்பது தெள்ள தெளிவாக புலனாகிறது...
Labels:
ஊழல்
19.11.10
தலை (வர்) லாமா...
2010 ஆம் ஆண்டு மிகவும் வன்முறை மிகுந்து இருந்தது எனவும், வரும் ஆண்டு 2011 பேச்சு வார்த்தை மிக்க ஆண்டாக அமைய வேண்டும் என்று அவருடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்...
இத்தனை நாளை திபெத்தில் இல்லாமல் வெளி உலகில் சுற்றி வரும் போதே வெளி உலகம் பற்றி தெரியவில்லை என்றால் இவர் திபெத்திற்கு சென்றால் இன்னும் எதுவுமே தெரியாத வெகுளியாகவே இருப்பார் என்று தெரிகிறது...
நக்சலிசம் மாவோயிசம் ஆகிய பழமையான கோட்பாடுகளை தூக்கி தூர எரிய வேண்டும் என்று முதலாளித்துவத்திற்கு ஓ போடுகிறார்...
அப்படி பார்த்தால் மேலே சொன்ன இரண்டு தத்துவங்களை விடவும் அரத பழசான மத கோட்ப்படுகளை தான் முதலில் தூக்கி எரிய வேண்டும்...
அது இருக்கட்டும் இந்த உலகில் உள்ள மக்கள் உன்ன உணவில்லாமல், தங்க இடமில்லாமல் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அது வன்முறை என்றால், முதலில் மனு கொடுக்கும் போதே அதை கிழித்து போட்டு விட்டு இவர்களின் பிரச்சினைகளை எதையும் தீர்க்காமல் விட்டதை வன்முறை என்று கூற முடியாதா...
ஆக பணம் இருப்பவர்களுக்கு மட்டும் ஜால்ரா அடிக்கும் பழக்கத்தை திபெத்தின் மன்னர் என்ற முறையில் முடி போனாலும் மறக்க வில்லை போலும்....
Labels:
மதம்
18.11.10
ச்வித்சர்லாண்டை வளமாக்குவோம்...
இந்த பணம் இருக்கே பணம் அது சுயநலத்தை வளக்க தானப்பா உதவி செய்யுது... அப்புறம் இந்த பணத்தை வச்சிக்கிட்டு சுயநலமா ஏதாவது செய்தா... தப்பு பண்ணிட்டான் தப்பு பண்ணிட்டான்னு கூப்பாடு போடுறது எந்த விதத்தில நியாயம்னு நீங்களே சொல்லுங்கப்பா..
2002 லிருந்து 2006 வரை சுவிஸ் வங்கிகள்ல நம்ம பணக்காரர்கள் போட்டு வச்சிருக்கிற பணம் வருஷத்துக்கு 16 பில்லியன் டாலர் வருகுதுன்னு புதுசா தேவ் கார்னு ஒருத்தர் கண்டுபிடிச்சிருக்கிராராம்... இவ்வளவு துல்லியமா எப்படி கண்டுபிடிச்சார்னு நிறைய பேரு அவர் சட்டை காலரை பிடிக்கிறாங்களாம்... இதுக்கு எல்லாம் காரணம் அரசியல்வாதிங்க தான், அப்படி இருக்கும் போது எப்படி பணக்காரர்களை சொல்லலாம்னு வூடு கட்டிராங்கலாம்... எப்படியோ எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு இவங்களே ஒத்துகிட்டா சரி தான்...
நாங்க என்ன சொல்றோம்னா... எய்தவன் இருக்க அம்பை நோகனும்னு கேட்கிறோம்...
இதை எல்லாம் விட்டு தள்ளுங்க.. எப்பவோ நான் படிச்சது, ஒவ்வொரு வருஷமும் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்காக என்று வாரா கடன் தள்ளுபடி செய்வது மட்டும் 2.5 கோடி ரூபாய் என்று கேள்வி... இதை ஏங்க யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க?
இதை எல்லாம் கேட்கிறவனை கிளம்பிட்டாண்டா கேள்வியின் நாயகன்னு சொல்லி கிண்டல் பண்ணி பதிலை அடக்கம் பண்ணிடறாங்க...
எனக்கு பதில் வேணாம்பா... இந்த மாதிரி எல்லோரும் கேள்வி கேட்டா மட்டும் போதும்...
Labels:
ஊழல்
15.11.10
2 மச் G
[படத்தில் உள்ளது லஞ்சம் வாங்குபவர்களின் எண்ணிக்கையே, மற்றபடி எவ்வளவு என்று கணக்கு பார்த்தால் அது அப்படியே தலைகீழாக இருக்கும் என்பதே உண்மை...]
நேற்று இரவு நீயா நானா நிகழ்ச்சி நன்றாக சென்றது... ஊழல் இருந்தால் நம் நாடு வல்லரசாக முடியுமா? என்னடா சோதனை இது என்று இன்று காலை செய்தி தாளை திறந்தாள் ராஜாவின் ராஜினாமா கண்ணை பறிக்கிறது...
விஜய் டிவியில் பேசியவர்கள் அனைவரும் தாங்கள் என்னவோ உத்தமர் போலவும், லஞ்சமே மற்றவரிடம் மட்டுமே பெருகி போய் இருப்பதாகவும் பினாத்திக் கொண்டார்கள்.. போதாக் குறைக்கு வல்லரசாக வேண்டுமாம்..
வல்லரசு ஆக ஒரு நாடு ஆக வேண்டும் என்றால் அது மற்ற நாட்டை சுரண்டி தின்று கொழுக்க வேண்டும்...
காலனி ஆதிக்க பிரிட்டன் போலவும், உலகமயமாக்கல் கால அமேரிக்கா போலவும் பல நாட்டை சுரண்டினால் மட்டுமே வல்லரசாக முடியும்... ஆக நீ ஊழலை அந்த நாட்டில் விதைக்க வேண்டும்.. நமது நாட்டில் ஊழலை விதைப்பது இது போன்ற ஏகாதிபத்திய நாடுகளே...
அய்யா உத்தமர்களே, நீங்கள் யாருமே நிலம் வாங்கியது இல்லையா, வண்டி வாங்கியது இல்லையா, நிலம் வாங்கும் போது பத்திரப் பதிவு குறைவாக போட்டு தான் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். அது லஞ்சம் இல்லையா?
வண்டி வாங்கும் போது, வண்டி ஆர் சி புத்தகத்திற்கு மூன்றாம் மனிதர் மூலமாக லஞ்சம் குடுக்கவில்லையா?
திருப்பதி கோயிலில் ஸ்பெஷல் தரிசனம் என்ற பெயரில் பெருமாளுக்கே லஞ்சம் குடுக்கவில்லையா?
பிச்சை எடுக்கும் மக்கள் எங்கே புரட்சி செய்து விடப் போகிறார்கள் என்று ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ லஞ்சமாக குடுப்பதில்லையா?
ஊழல் செய்யும் பிரதிநிதியை தேர்ந்து எடுத்து சட்ட மன்றத்திர்க்கோ, நாடாளுமன்றத்திர்க்கோ அனுப்பவில்லையா?
நான் வோட்டு போடவில்லை என்று ஜபர்த்தார் காட்டும் மக்களே, நீங்கள் போடாத வோட்டினால் அவன் தேர்தலில் ஜெயிக்கவில்லையா?
அடுத்த தேர்தலில் 49 ஒ வை தேர்ந்தெடுத்து தேர்தலில் வெற்றி பெரும் வாக்காளரை விட அதிக வோட்டு எண்ணிக்கையில் 49 ஒ வை ஜெயிக்க வையுங்கள், காரணம் கேட்க்கும் இடத்தில் ஊழலை எதிர்க்க என்று எழுதி வையுங்கள்...
நம் நாடு வல்லரசாக வேண்டாம்... நம் நாட்டு அனைத்து மக்களும் பசி பட்டினி இல்லாமல் வாழ வையுங்கள்...
கனவு காணும் உரிமை எனக்கு உள்ளது... நனவாக்கும் பெருமை நம் அனைவர் கையிலும் உள்ளது...
நேற்று இரவு நீயா நானா நிகழ்ச்சி நன்றாக சென்றது... ஊழல் இருந்தால் நம் நாடு வல்லரசாக முடியுமா? என்னடா சோதனை இது என்று இன்று காலை செய்தி தாளை திறந்தாள் ராஜாவின் ராஜினாமா கண்ணை பறிக்கிறது...
விஜய் டிவியில் பேசியவர்கள் அனைவரும் தாங்கள் என்னவோ உத்தமர் போலவும், லஞ்சமே மற்றவரிடம் மட்டுமே பெருகி போய் இருப்பதாகவும் பினாத்திக் கொண்டார்கள்.. போதாக் குறைக்கு வல்லரசாக வேண்டுமாம்..
வல்லரசு ஆக ஒரு நாடு ஆக வேண்டும் என்றால் அது மற்ற நாட்டை சுரண்டி தின்று கொழுக்க வேண்டும்...
காலனி ஆதிக்க பிரிட்டன் போலவும், உலகமயமாக்கல் கால அமேரிக்கா போலவும் பல நாட்டை சுரண்டினால் மட்டுமே வல்லரசாக முடியும்... ஆக நீ ஊழலை அந்த நாட்டில் விதைக்க வேண்டும்.. நமது நாட்டில் ஊழலை விதைப்பது இது போன்ற ஏகாதிபத்திய நாடுகளே...
அய்யா உத்தமர்களே, நீங்கள் யாருமே நிலம் வாங்கியது இல்லையா, வண்டி வாங்கியது இல்லையா, நிலம் வாங்கும் போது பத்திரப் பதிவு குறைவாக போட்டு தான் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். அது லஞ்சம் இல்லையா?
வண்டி வாங்கும் போது, வண்டி ஆர் சி புத்தகத்திற்கு மூன்றாம் மனிதர் மூலமாக லஞ்சம் குடுக்கவில்லையா?
திருப்பதி கோயிலில் ஸ்பெஷல் தரிசனம் என்ற பெயரில் பெருமாளுக்கே லஞ்சம் குடுக்கவில்லையா?
பிச்சை எடுக்கும் மக்கள் எங்கே புரட்சி செய்து விடப் போகிறார்கள் என்று ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ லஞ்சமாக குடுப்பதில்லையா?
ஊழல் செய்யும் பிரதிநிதியை தேர்ந்து எடுத்து சட்ட மன்றத்திர்க்கோ, நாடாளுமன்றத்திர்க்கோ அனுப்பவில்லையா?
நான் வோட்டு போடவில்லை என்று ஜபர்த்தார் காட்டும் மக்களே, நீங்கள் போடாத வோட்டினால் அவன் தேர்தலில் ஜெயிக்கவில்லையா?
அடுத்த தேர்தலில் 49 ஒ வை தேர்ந்தெடுத்து தேர்தலில் வெற்றி பெரும் வாக்காளரை விட அதிக வோட்டு எண்ணிக்கையில் 49 ஒ வை ஜெயிக்க வையுங்கள், காரணம் கேட்க்கும் இடத்தில் ஊழலை எதிர்க்க என்று எழுதி வையுங்கள்...
நம் நாடு வல்லரசாக வேண்டாம்... நம் நாட்டு அனைத்து மக்களும் பசி பட்டினி இல்லாமல் வாழ வையுங்கள்...
கனவு காணும் உரிமை எனக்கு உள்ளது... நனவாக்கும் பெருமை நம் அனைவர் கையிலும் உள்ளது...
Labels:
ஊழல்
14.11.10
உயிர் எங்கு உள்ளது?
இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக இருக்கலாம்.. ஆனால் இந்த கேள்விக்கு விடை தேடுவது என்பது கடினமான ஒன்றாகவே உள்ளது...
நமது புராணங்களும் ஆன்மீகமும் உயிர் என்பது நம் உடலில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருப்பது போலவும் அந்த உயிரானது இறந்த உடன் அடுத்த உடலில் புகுந்து கொண்டு அடுத்த ஜென்மம் எடுப்பது போலவும், ஒரு கற்பனை கதையா புகுத்தி உள்ளனர்.
ஒரு விவாதத்தின் போது என்னிடம் ஒருவர் உங்கள் உடலில் உயிர் எங்கு உள்ளது என்று கேட்டார்... என் முழு உடலிலும் பல உயிர்கள் உள்ளது என்றேன், நீங்கள் எந்த உயிரை கேட்கிறீர்கள் என்று கேட்டேன்? அதற்கு அவர் எதனால் இத்தனை உயிர்களும் இயங்குகிறது என்று திருப்பி கேட்டார்...
என் உடல் இயங்குவதற்கு அனைத்து உறுப்புகளும் அனைத்து அணுக்களின் உயிரும் அவசியமே.. தனி ஒரு அணு இதை சாதிப்பதில்லை என்று கூறினேன்...
வாதம் பன்றவரிடம் பேசலாம் விதண்டாவாதம் செய்பவரிடம் பேச முடியாது என்று கூறி நழுவினார்... நானும் அதையே சொல்கிறேன் என்று அந்த விவாதத்திற்கு தொடரும் குறி போட்டு வைத்தேன்...
நான் கேட்பது என்ன என்றால்
ஒரு காரோ பஸ்சோ இல்லை எந்த வாகனம் ஓடுவதற்கும் எது அவசியம்?
என்ஜினா
டயரா
ட்யுபா
இல்லை அதற்கு உள்ளிருக்கும் காற்றா
பெட்ரோலா
டிரைவரா
ச்டீரிங்கா
ஆக
ஒரு வாகனம் இயங்குவதற்கு எப்படி அதில் பூட்டபட்டிருக்கும் அனைத்து பொருள்களும் அவசியமோ அது போலவே நம் உடல் இயங்குவதற்கு அனைத்து உயிர்களும் அவசியம்
இதயமா
மூளையா
நுரையீரலா
ஈரலா
கனயமா என்று கேள்வி கேட்காமல் உண்மையை ஒத்துக் கொள்வோமே..
ஏங்க, நம் உடம்பு இயங்குரதுக்கு ஒரு உயிர் தான் அவசியம்னா, இந்த செடி கொடிக்கு எல்லாம் உயிர் எங்கங்க இருக்குது? கொஞ்சம் சொல்லுங்களேன் வாதிகளே.. விதண்டாவாதி கேக்கிறேன்?
Labels:
மதம்
20.9.10
நீயா நானா?
நீயா நானா என்னும் நிகழ்ச்சியில் இன்று நம் செயல்களை தீர்மானிப்பது விதியா? அல்லது இயற்கையா என்னும் அரத பழசான ஒரு கேள்வியை கேட்டு நோகடித்தார்கள். அதில் ஒருவர் மட்டும் தெளிவாக ஆன்மீகத்தையும் விதியையும் தனி தனியாக பார்க்கிறேன் என்று விதி என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சாதித்து விவாதத்தில் வென்றார்.
ஆனால் அவர் பார்க்க மறுத்த மறு பக்கம் என்ன வென்றால் விதி என்ற ஒன்று இல்லை என்றால் கடவுள் என்ற ஒன்று இல்லை என்று தான் அர்த்தம்.
அது போகட்டும் ஒரு நாள் இதை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு அவர் மேலும் இவ்வுலகத்தில் மண்டி கிடக்கும் இது போன்ற பல மூட நம்பிக்கைகளை ஒழிப்பார் என்று நம்புவோமாக...
ஆனால் அவர் பார்க்க மறுத்த மறு பக்கம் என்ன வென்றால் விதி என்ற ஒன்று இல்லை என்றால் கடவுள் என்ற ஒன்று இல்லை என்று தான் அர்த்தம்.
அது போகட்டும் ஒரு நாள் இதை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு அவர் மேலும் இவ்வுலகத்தில் மண்டி கிடக்கும் இது போன்ற பல மூட நம்பிக்கைகளை ஒழிப்பார் என்று நம்புவோமாக...
Labels:
மதம்
19.9.10
புரட்சிக்கு வழி காட்டுமா பள்ளிக்கூடங்கள்?
வெள்ளிக் கிழமை காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கும் போதே, போச்சம்பள்ளி பள்ளியை எரித்ததை கண்டித்து தனியார் பள்ளி நிறுவனங்கள் தங்கள் பள்ளிக்கு விடுமுறை என்று கூறி தங்கள் எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்தனர். அரசாங்கம் இந்த நடத்தையை கண்டித்து அறிக்கை விட்டும், காரணம் கோரி மனு அனுப்பியும், சரியான பதில் அளிக்க மறுத்தால் நடவடிக்கை என்று கூறியும், லெனின் அரசை பற்றி என்ன எழுதி இருக்கிறாரோ அதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இங்கு நம் முன் இருக்கும் கேள்வி என்ன என்றால், நடந்த சம்பவம் குறித்து அல்ல, திரை மறைவில் என்ன நடக்கிறது என்பதே... ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு, read between lines... ஆக அரசின் கவனம் முழுவதும் புரட்சி என்பது எந்த உருவத்திலும் மாணவர்களுக்கு தெரிய கூடாதென்பதே... நம் வரலாறுகளில் பல வகையான உண்மைகள் மறைத்தும் திரித்தும் எழுதி வைத்துள்ளார்கள் என்பது ஒழுங்காக வரலாறு படிப்பவர்களுக்கு தெரிந்த விஷயம்... ஆனால் இப்படி தெரிந்து கொண்டவர்கள் மொத்தமாக 15 சதவிகிதம் கூட கிடையாதென்பது தான் உண்மையான நிலவரமாகும். பகத் சிங்கை ஒரு தீவிரவாதியாக உருவகம் படுத்தும் இந்த அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு முறை அவரது குரலை பதிவு செய்கிறேன்.. இன்குலாப் ஜிந்தாபாத்... (புரட்சி வாழ்க)
Labels:
இன்குலாப்
11.9.10
கொழுகட்டைக்கு என்று ஒரு நாள்...
கொழுகட்டயோ கொழுகொட்டயோ, பிள்ளையார் பெற சொல்லி அவர் போல தொப்பை வளப்பதற்கு இன்னும் ஒரு நாள்... என் பொண்ணுகிட்ட ரம்ஜான் ஏன் கொண்டாடறாங்க என்று கேட்டேன்? 8 வயசு பொண்ணு ஜாலிய இருக்க தான் என்று பதில் சொன்னாள். சரி தான் நமக்கு தப்பாம நம்ம பொன்னும் பிறந்திருக்கிராள்னு நினைச்சிகிட்டேன்.. அடுத்த நாளே விநாயகர் பிறந்த நாள்... இந்த பிள்ளையார் என்ன தப்பு செஞ்சார்னு தெரியலப்பா, போலீஸ் காவல் போட்டு ஒரு மேடையிலே அரெஸ்ட் பண்ணி, மூணு நாள் கழிச்சு ஊர்வலமா கூட்டிகிட்டு போய் அடி அடின்னு அடிச்சு கைய காலை உடைச்சு, தண்ணியில போட்டு மூழ்கடிக்கிரானுங்க பாருங்க... மனசு ஈரமா இருக்கிறவனுக்கு கண்ணுல தண்ணி வந்துடும்... ஆனா இவனுங்களோ கொஞ்சம் கூட கவலை படாம பிள்ளையார் மட்டுமா சாகடிக்கிரானுங்க, குளம் கடல்ல இருக்கிற உயிரினங்களையும் சாகடிக்கிரானுங்க... சாமி மட்டும் எழுந்து வந்து என்னடா கூத்து இதுன்னு கேட்டிடுச்சுன்ன, ஊருக்குள்ள போலீஸ் தேவை இல்ல, ராணுவம் தேவை இல்ல, கோயில் குளம் எதுவுமே தேவை இல்ல... அது வரைக்கும் இவனுங்களும் ஓய போறதில்ல, இதை பத்தி எழுதாம நானும் ஓய போறதில்ல....
Labels:
மதம்
15.8.10
august 15 1947
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள், என்னிடம் இப்படி நேற்று ஒருவர் கூறிய பொழுது எனக்கு எப்படி பதில் வாழ்த்துக்கள் சொல்வது என்று புரியாமல்... என்ன புடலங்காய் சுதந்திரம்... ஒருத்தர் கிட்ட இருந்து அடிச்சு புடிச்சு வாங்கி அதை நம்ம நாட்டுக்காரன் கிட்ட அடகு வச்சிட்டு, சோத்துக்கு லாட்டரி அடிச்சுக்கிட்டு இருக்கோம்... கொஞ்சம் அதிகமா பணம் வச்சிருக்கிறவன் ஒன்னு அதை குடிச்சு மூத்திரமா விட்டுகிட்டிருக்கான், இல்லைனா படுக்கையில விட்டுகிட்டு இருக்கான், இல்லேன்னா சினிமா தியேட்டர்ல பெருமூச்சாய் விட்டு கிட்டு இருக்கான்... எப்படியோ இதை எல்லாம் பண்ண முடியாதவன் ஒரு 5 ரூபாயோ பத்து ரூபாயோ கோயில் உண்டியல்ல போட்டு பூஜாரியோட தொப்பைய வளத்துகிட்டு இருக்கான்... என்ன புடலங்காய் சுதந்திரம்... என்னிக்கு இந்த நாட்டில எல்லாரும் மூணு வேலை சோறு(சாம்பார், கூட்டு போரியல் அப்பளத்தோட) சாப்பிடரமோ அன்னிக்கு தான் உண்மையான சுதந்திர தினம்.. அந்த நாளை எதிர்பார்த்து இன்றே சொல்கிறேன் இன்குலாப் ஜிந்தாபாத்... ஜெய் ஹிந்த்...
Labels:
ஊழல்
3.8.10
இலக்கு அறியா கீற்று...
கீற்றுவில் எழுதும் அனைவரும் ஒரு விதமான மிதவாதிகளாகவே உள்ளதாக தெரிகிறது... உண்மை அறிந்தவர்கள் ஒரு பக்கம், உண்மையை புரிந்து கொல்லாமல அதை தேடிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம், உண்மையை மறைத்து பொய்யை மட்டுமே உண்மையை உரைப்பவர்கள் ஒரு பக்கம்.... ஆகா இந்த பட்டியலில் நடுவில் இருப்பவர்கள் அறிந்தவர்கள் பக்கமோ அல்லது உரைப்பவர்கள் பக்கமோ சேர்ந்துவிடுகிறார்கள்... சேர்வதும் மட்டும் அல்லாமல் அதை கண்மூடித்தனமாக நம்பவும் செய்கிறார்கள்... அனால் அப்படி பட்டவர்களுக்கு வெளிச்சத்தை காட்ட வேண்டிய அறிந்தவர்கள், இவர்களையும் சேர்த்து தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்... ஜெயந்திரர் கைது செய்யப் பட்ட அன்று, அந்த கைதை எதிர்த்து அழைக்கப்பட்ட தர்ணா போராட்டத்திற்கு மொத்த காஞ்சிபுரத்திலும் கூடியது வெறும் நான்கே பேர்கள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. ஆக ஜெயந்திரர் பிராமணராக இருந்தாலும் அனைத்து பிராமணர்களும் இவர் பின்னால் சென்று விடவில்லை, அனைத்து பிராமணர்களும் கெட்டவர்கள் அல்ல, அனைத்து தி மு க தொண்டர்களும் அயோக்கியர்கள் அல்ல, அனைத்து தி க தொண்டர்களும் பகுத்தறிவாளிகள் அல்ல, அனைத்து அ தி மு க தொண்டர்களும் ஜேவின் விசுவாசிகள் அல்ல.. இப்படி அனைத்து விஷயங்களையும் கண்மூடித் தனமாக எதிர்க்காமல் தயவு செய்து உளவியல் ரீதியாக பிரசினைகளை எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டால் நாம் சீக்கிரமே மக்கள் ஜனநாயகத்தை சென்று அடைவோம் என்பது மட்டுமே நிஜமாக உள்ளது...
Labels:
இன்குலாப்
17.7.10
ஒரே நகைச்சுவை தான் போங்கள்...
முத்தமிழ் வித்தகர், சொல் வேந்தர், ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் அமைதி காத்த கணவான் திரு மன்மோகன் அவர்கள், பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டார், நாள் தோறும் இவர் எழுதிய எந்த கடித்தத்துக்கு பதில் அனுப்பி உள்ளார் என்பது தான் தங்க மலை ரகசியமாக உள்ளது... இலங்கையில் நடக்கும் இனப் பிரச்சினைக்கு இணக்கமான பதிலை, ஆலோசனையை தாங்கள் தான் தந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று தனது அறிவாற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.
அய்யா உங்கள் இருவர் கடிதப் போரையும் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வந்து தான் தமிழர்களை காப்பாற்ற போகிறீர்கள் என்று எந்த மடையனும் உங்களை நம்பி இருக்கவில்லை.
நீங்கள் இலங்கைக்கு எல்லாம் சென்று எதுவும் புடுங்க வேண்டாம். தமிழ் நாட்டில் தமிழக மக்களை காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள். அது போதும். ஆனால் ஒன்று எங்களின் இறுக்கமான சூழ்நிலையை, தங்களது நகைச்சுவை கடிதங்களால் கொஞ்சம் வாழ்க்கையை மகிழ்ச்சி கரமாக ஆக்கி கொண்டிருக்கீர்கள் என்பது மட்டும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது...
Labels:
அரசு
29.6.10
உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்...
சமீப காலமாக நான் படிக்கும் ஏனைய விஷயங்கள், பொது உடமை சிந்தனைவாதிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது... சரி, விஷயத்திற்கு வருவோம்... முதலாளித்துவமும் ஆன்மீகமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டிருந்தாலும் இரண்டும் என்றும் அடித்துக் கொள்வதே இல்லை.. சமரசமாகவே போய்க் கொண்டிருக்கின்றன... அதனால் தான் இன்றும் முதலாளித்துவம் அசைக்க முடியாத ஆணிவேருடன் உள்ளது..
ஆனால் இந்த ஆணிவேரை அசைக்க வேண்டிய பொது உடமை ஆணிவேராக பாய்ந்து செல்லாமல் பல்வேறு திக்குகளுக்கு இலக்கு இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றன...
பொது உடமை வாதிகளே தயவு செய்து ஒன்றை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு பொது உடமை கட்சியின் தலைவர்கள் வேண்டும் ஆனால் முதலாளித்துவ வாதிகளாக இருக்கலாம் ஆனால் அந்த தலைவர்களின் போலியான வார்த்தையை நம்பி இருக்கும் பல தொண்டர்கள் உண்மையான ஒரு பொது உடமை வாதிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆகையால், ஒவ்வொரு கட்சியின் உண்மையான தொண்டர்களை துரோகி என்று முத்திரை குத்தாமல் முடிந்த வரை ஒன்று பட்டு போராடுவோம்...
நீங்கள் மார்க்சிச்டாகவோ, லேநிநிச்டாகவோ, பெரியாரிஸ்டாகவோ இன்னும் என்ன என்னவாக இருக்க முடிந்தாலும் இருந்து விட்டு போங்கள் ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நாளைய உலகத்தின் வாரிசுகள் சமுதாய சமதர்மத்திர்காக நம்மை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்...
கடற்கரை அலை அடிக்கும் ஓசையில் அருகில் இருப்பவர்களுக்கே பேசுவது காதில் விழாது, அது போல என் பேச்சும் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இல்லை... என்றாவது ஒரு நாள் இந்த பேச்சுகள் உண்மையாய் நேரிடையாக என்னால் பொது மக்களிடம் எடுத்து செல்லப் படும் என்று கண்டிப்பான உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.. கடைசியாக அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்...
சே கூறியது போல இந்த உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதை கண்டு உன் உள்ளம் கொதித்து எழுந்தால் நீ என் தோழனே...
இந்த சிந்தனையுடன் உலக தொழிலாளர்களே ஒன்று படுவோம், புது உலகை வென்றெடுப்போம்...
Labels:
இன்குலாப்
1.4.10
திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும்...
அரசாங்கமும் படத் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டி போட்டுக் கொண்டு திருட்டு விசிடியை ஒழித்து கட்ட போராடினாலும் பொது மக்கள் திருட்டு விசிடியை வாங்குவதை நிறுத்தா விட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியாது...
அதே போல போலி மருத்துவர்களால் எண்ணற்ற பிரச்சினைகள் வந்தாலும் பொது மக்களாய் அவர்களிடம் போகாமல் இருக்கும் வரை அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை...
இந்த இரண்டு விஷயங்களையும் மேலோட்டமாய் பார்த்தல் வேறு வேறு விஷயமாய் தெரிந்தாலும் இரண்டுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன என்றால் அது பொது மக்களின் ஆசிர்வாதம் மட்டுமே..
ஆகா, பொது மக்கள் இப்படி இருப்பதற்கு என்ன உண்மையான விஷயம்... அது வேறு ஒன்றுமில்லை, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து கொண்டே வருவதும் சிலவற்றை அவர்களால் செலவு செய்யாமல் இருக்க முடியவில்லை
என்பதே... ஒரு சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நபருக்கு முப்பது முதல் நாற்பது ருபாய் வரை செலவு ஆகிறது, ஒரு குடும்பமே செல்லும் போது அது குறைந்தது நான்கு மடங்கு ஆகிறது, ஆனால் ஒரு திருட்டி சிடியை வாங்கி பார்த்தால் அது முப்பது ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது.... தியேட்டருக்கு போனாலே பாப் கார்ன் வாங்கி தர வேண்டும் என்னும் செலவும் குறைகிறது,
அதே போல ஒரு மருத்துவரிடம் போனால், குறைந்தது நூறு ரூபாய் வரை செலவு ஆகிறது, போதாதற்கு மருந்து மாத்திரைகள் வேறு...
அரசு மருத்துவமனை என்றால் சிபிஎம் பேரா மற்றும் செப்ட்றான் தவிர வேறு மாத்திரைகள் தருவதில்லை, இதை களைந்து எடுக்க வேண்டிய அரசாங்கம் இலவச காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் ஏற்கனவே சரியாக செயல்படாமல் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா எடுக்கின்றது... இந்த காப்பீட்டு திட்டத்திற்கு செலவு செய்யும் தொகைகளுக்கு பதிலாக, அரசு நம் மருத்துவமனைகளை மேம்படுத்தினாலே போதுமானது,
ஆனால் இதை எல்லாம் செய்யாமல் தவறான கொள்கை முடிவுகளால் திருட்டு விசிடியும், போலி மருத்துவர்களும் பெரிய தலைவளிகளாய் இருக்கிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு தலைவலிக்கு தைலம் மட்டும் தேய்த்து கொண்டிருக்காமல் ஊழல் என்னும் புற்று நோயை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலே போதுமானது.... செய்வார்களா... செய்ய வைப்போமா?
Labels:
விலை வாசி
29.3.10
சொகுசு பொருளாம் பெட்ரோல்..
நம் நாட்டை ஆண்டு வரும் ஏழை பங்காளர்களுக்கு நாட்டை ஆழ காசு வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் ஒரே காரியம் பெட்ரோலின் மீது வரியை உயர்த்துவது மட்டுமே... வரும் ஏப்ரல் முதல் நாளில் இருந்து நமது நாட்டில் நமக்கு மிகவும் பழகி போய் விட்ட பெட்ரோல் விலை ஏற்றம் அமுலுக்கு வருகிறது... பெட்ரோலின் விலை சர்வதேச சந்தையில் உயருவது என்னவோ உண்மை தான், ஆனால் சில பதில் வராத கேள்விகள் இந்த நாட்டில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது... அவற்றில் சில இதோ...
*நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பெட்ரோலை என்ன விலை கொடுத்து வாங்குகிறார்கள்?
*அரசு எரிவாயு நிறுவனங்கள் விளம்பரத்திற்காக என் செலவு செய்கிறார்கள்?
*கிரிக்கெட் போட்டி நடத்துவதால் இவர்கள் என்ன லாபத்தை எதிர் பார்க்கிறார்கள்?
*நம் அண்டை தேசமான பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை என்ன?
*பாகிஸ்தானில் நாம் வாங்குவதை விட குறைந்த விளைக்கா வாங்குகிறார்கள்?
*அவர்கள் நாட்டு என்னை நிறுவனங்களக்கு நம்மை விட அதிக நஷ்டம் வருகிறதா?
*கடைசியாய், பெட்ரோலின் மீது இவ்வளவு அதிகமான வரி விதிப்பதற்கு காரணம் அது என்ன சொகுசு பொருளா?
Labels:
விலை வாசி
28.3.10
மோடி வித்தை
ஒரு இந்திய குடிமகன் எப்படி வாழக் கூடாது என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாய் இருக்கும் குஜராத் முதல்வர் மோடிக்கு, சிலர் வக்காலத்து வாங்குவது நெஞ்சை உறுத்துகிறது... ஒரு வேளை இவர்களின் தாய் வயிற்றில் இருந்து இவர்களையும் வெட்டி எடுத்து எரித்திருந்தால் இன்று வக்காலத்து வாங்க வந்திருக்க முடியாது அல்லவா....
அவர்கள் செய்ததற்கு நாங்கள் பழி வாங்கினோம் என்று சொல்வதினால் மட்டுமே, நீதி நிலை நாட்டப் படுவதில்லை... பழிக்கு பழி என்பது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சருக்கு தோன்றி இருக்க கூடாது...
அதே எண்ணம் அவரால் கொல்லப் பட்டவர்களுக்கு இருந்திருந்தால் இன்று அவர் சட்டத்தின் முன்னாள் நின்றிருக்க வேண்டியதில்லையே...
Labels:
மதம்
27.3.10
பென்னாகரம், மல்லையாவும் மற்றும் அரசும்
கொஞ்சம் உற்று பார்த்தால் தலைப்பே கதை சொல்லும்... இதோ இன்னுமொரு ஜனநாயக படுகொலை நடக்க போகிறது... பென்னாகரம் இடை தேர்தல் சொல்லும் சேதி என்ன? மக்கள் பணத்திற்காக தங்கள் ஓட்டு உரிமையையும் விற்கும் நிலைக்கு வந்து விட்டார்கள், ஆக இந்த அரசாங்கம் ஆனது லெனின் கூறுவது போல பணக்காரர்களை மட்டுமே காப்பாற்ற உருவாக்க பட்டது என்பது மறுபடியும் மறுபடியும் வெட்ட வெளிச்சம் ஆகி கொண்டிருக்கிறது... மல்லய்யா இதற்க்கு முன் எந்த தவறுமே செய்யாதவர் போலவும், அவசரத்திற்காக மட்டுமே விதிமுறைகளை மீறினார் என்றும் பரப்ப படுவது போலவே, நாளை பென்னாகரம் மக்கள் தங்களை விரும்பி தேர்ந்தெடுத்ததாக கதை விட போகிறார்கள்..
பணம் படைத்தவர்கள் செய்யும் தவறுகள் ஆதாரம் இருந்தும் அவர்கள் இறந்த பிறகே அவர்களுக்கு தண்டனை பிறப்பிக்க படும், ஆனால் சாதாரண மனிதன் ஆதாரம் இல்லை என்றாலும், நிரபராதியாகவே இருந்தாலும் சட்டத்தால் தண்டிக்க படுவான்... ஆக பழைய தமிழ் சினிமா டயலாக் படி, " இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" என்று விட்டு விட முடியாது, மாற்றத்தை நோக்கி ஆணிவேர் ஊடுருவிக் கொண்டே இருக்கும் என்று இந்த பக்கத்தில் தெரிவித்து கொள்கிறேன்...
Labels:
அரசு
26.3.10
வெளிச்சத்திற்கு வந்த போலி மருந்துகள்
காலம் காலமாய் நம் நாட்டில் உலவி வந்துள்ள போலி மருந்துகளின் ஒரே ஒரு துளியை மட்டுமே பிடித்து இருக்கிறார்கள். நம் நாட்டில் உலவும் மருந்துகளில் ௪0% போலி மருந்துகள் தான் என்று அப்பொழுது ஜனாதிபதியை இருந்த அப்துல் கலாம் அவர்கள் தனது உரையிலே பதிவு செய்து இருக்கிறார். சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து அதன் ஒரு நுனியை மட்டும் இப்பொழுது வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் இதன் ஒரு பகுதியை இயங்கி வரும் மருந்து நிறுவனங்களையும் சோதனை செய்வதன் மூலமே இந்த போலி மருந்துகளின் நடமாட்டத்தை குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
மொத்தத்தில் நம் நாட்டில் மருந்து துறையானது சுகாதார துறையின் கீழ் வராமல், எதோ ஒரு பெட்ரோல் மற்றும் ரசாயன துறையின் கீழ் வருவதினாலேயே இந்த அளவுக்கு ஊழல் மலிந்திருக்கிறது... இவை அனைத்தும் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இத்தனை ஆண்டுகளாய் நடந்து வந்திருக்கிறது என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும்... இந்த நிலையை மாற்ற மக்கள் அனைவரும்
௪௯ ஓ வை பதிவு செய்வதை தவிர வேறு வழி என்பது இல்லை....
Labels:
மருத்துவம்
25.3.10
ஆராய்ச்சி செய்த நித்யானந்தம்.
குழந்தை தனம் மாறாத சிறுவர்களின் மனதில் கடவுள், இறைவன் என்ற பெரிய பெரிய சித்தாந்தங்களை மூளையில் திணிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை நித்தியானந்தன் என்னும் ராஜசேகரன் உலகத்துக்கு காட்டி விட்டான். கடவுள் என்ற ஒரு சிந்தனை எவ்வளவு பெரிய மாயை என்பதை கீதையின் வழியே புரிந்து கொண்டு ஒரு உண்மையான நாத்திகனாய் மாறியதை, எவ்வளவு நாளைக்கு தான் அவனால் பொய்யும் புரட்டாலும் ஊரை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியும். பொய் என்பது குடத்தில் இட்ட விளக்கு போல, எவ்வளவு தான் மூடி வைத்தாலும் அதன் வெளிச்சம் வெளியே வந்தே தீரும் என்பது மறுபடியும் உண்மையாய் மாறியிருக்கிறது. எத்தனை ஆனந்தாக்களும், சங்கராச்சாரியார்களும், தேவநாதன்களும், கல்கி பகவான்களும், மாட்டிக் கொண்டு முழித்தாலும் நம் தமிழ் மக்கள் வேறு ஒரு சாமியாரிடம் கண்டிப்பாய் சரண் அடைவதை தவிர வேறு வழி அற்றவர்களாக உள்ளனர். ஒரு பொய்யை பல முறை சொன்னால் உண்மையாகும் என்ற கோயபல்ஸ் தத்துவத்துடன் கண்டிப்பாய் ஒரு பொய்யை பல பேர் சொன்னால் உண்மையாகும் என்ற ஒன்றையும் இணைத்து கொள்ளவேண்டும்...
Labels:
மதம்
Subscribe to:
Posts (Atom)