politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

8.9.11

மனிதனா? மதம் பிடித்தவனா?

தொடர் நிகழ்வாகியிருக்கிறது குண்டு வெடிப்புகள், வழக்கம் போல திரைப்படத்தில் காட்டுவது போலவே, தாமதமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள் காவல் துறையினர்..
மார்க்கெட்டில் குண்டு வெடித்த பின் ஒரு மாத காலத்திற்கு பலத்த பாதுகாப்பு இருக்கும் பல மார்க்கேட்டுகளுக்கு..
இப்பொழுது நீதிமன்றத்தில் குண்டு வெடித்த பின் அனைத்து நீதி மன்றங்களுக்கும் பாதுகாப்பு போட்டுள்ளனர்..
எனக்கு ரொம்ப நாளாகவே இந்த லாஜிக் புரிய மாட்டேங்குது.. 
இன்று நீதிமன்றத்தில் குண்டு வைப்பவன் திரும்பவும் நீதிமன்றத்திலேவா குண்டு வைக்க போகிறான்...

அதை விட கொடுமை என்ன என்றால், இதற்கு யாரை பொறுப்பாளி ஆக்கலாம் என்று ஊடகங்கள் தேடுவது தான்..
இந்து தீவிரவாதிகள் தான் செய்தார்கள் என்றும்
முஸ்லிம் தீவிர வாதிகள் தான் செய்தார்கள் என்றும்
புறப்பட்டு விட்டார்கள்...
ஏன்யா தீவிரவாதியில கூடவா சாதி மதம் லாம் பார்ப்பீங்க..
மிருகத்தில என்னய்யா மதம் வேண்டி கிடக்குது..

செத்தவங்கள்ள எல்லா மதத்த சார்ந்தவனும் தான் இருக்க போகிறான்..

அப்ப யாரு இதுக்கு காரணம் நு அரசு கேட்குதுன்னா ஏன்னு யோசிங்கப்பு..
படிச்சவனுக்கு வேலை இல்ல,
நிறைய பேர் கிட்ட ஒரு வேளை சொத்துக்கு கூட பணம் இல்ல..
தன் குடும்பத்த காப்பாத்த நாதி இல்ல..
ஏதாவது செஞ்சு குடும்பத்த காப்பாத்துனும்னு திரியரவனை சில சுயநலவாதிகள் இப்படி இழுத்து விட்டுடுரானுங்க..
ஒரு வாட்டி சுலபமா பணம் பாத்தவன் மனசு சும்மா இருக்குமா? 
நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவும் தப்பில்ல நு சொல்லி குடுத்து தப்பை செய்ய வைச்சுடுவானுங்க?

புதிய பொருளாதார கொள்கை, 
சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள்,
பேராசை.. பணம்.. பதவி.. சுரண்டல்கள்..
கண்டும் காணாமல் செல்லும் அரசு...

அதை விட கொடுமை இந்து என்றும் முஸ்லிம் என்றும் பாதிக்கப் பட்ட நாமே ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வது... 
நாம் நம்மை மனிதன் என்று அடையாளப் படுத்திக் கொள்ளும் வரை, புல்லுருவிகள் நம் ரத்தத்தை உறிஞ்சி கொழுத்துக் கொண்டு தான் போவார்கள்..