politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

31.7.11

சீரியசான சமாச்சாரம்

இந்திய காப்புரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்க முன்வரவில்லை...

சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் போலி மருத்துவர்களை ஒழிக்க ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை...

போலி மருந்துகளின் புழக்கத்தை கட்டுபடுத்த எந்த முயற்சியும் செய்ததில்லை...

இப்படி எவ்வளவோ அடுக்கி கொண்டே போகலாம்,

ஆனால் மிகவும் கவனமாக பரிந்துரைக்கப் பட வேண்டிய நுண்ணுயிர் கொல்லி [அண்டிபயோடிக்] மருந்துகளை கை ஆளுவதில் விதி முறைகள் வகுக்கப் படும் பொழுது எதற்கு இந்த மருந்து கடைக்கார்கள் பொங்க வேண்டும் என்று தான் தெரியவில்லை...

பேக்டேரியக்களால் [Bacteria ] உருவாகும் நோய்களை ஒடுக்க கொடுக்கப் படும் மருந்துகள் இவ்வளவு நாட்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற வரைமுறையை யாரும் கடை பிடிப்பதில்லை... இதனால் இந்த கிருமிகள் எந்த மருந்துகளுக்கும் தாக்கு பிடிக்கும் தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன...

இதை தடுக்க புறப்பட்ட இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து நாளை கடைகள் அடைத்து போராட போகிறார்களாம் டெல்லியில்.. 

அண்ணா ஹஜாறேவுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, இது போன்ற போராட்டத்திற்கு எல்லாம் அனுமதி கொடுப்பதை மறுப்பதில்லை...

இது போன்ற சட்டங்கள் நாட்டுக்கு தேவை, அதே சமயத்தில் இதை கண்காணிக்கும் அதிகாரிகளும் தேவை... 

மேலும் முறையாக படித்த மருத்துவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து சீட்டின் நகலையும் இணைத்து கொடுத்தால் மருந்து கடைக்காரர்கள் நகலெடுக்க ஓட வேண்டியதாக  இருக்காது.. 

வேலை வாய்ப்பை உருவாக்கும் இது போன்ற சட்ட முன்வடிவுகள் முடிந்த  வரை பலரின் ஒத்துழைப்பையும் நல்கி அமுல்படுத்தினால் அனைவருக்கும் ஆனந்தமே...

மருந்து ஆய்வாளர்களின் பஞ்சம் இந்த சட்டம் அமுலுக்கு வந்தாலும் நீர்த்து போக செய்து விடும்.. என்றாவது ஒரு நாள், கிளம்பி சென்று கைப்பற்றி விட்டோம் என்று கூக்குரல் இடுவதை விட்டு விட்டு காலியாக உள்ள இந்த துறையின் வேலைகளுக்கு ஆட்களை உடனே நிறுவ வேண்டும்...

அதற்கு முதலில் மருந்து துறையை, ரசாயனம் மற்றும் உரத்தொழிற்சாலை அமைச்சகத்தில் இருந்து மாற்றி அதை சுகாதார துறையில் இணைக்க வேண்டும்...

அரசிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்...
சீரியசா அணுக வேண்டிய சமாச்சாரம் சார், வழக்கம் போல சின்ன புள்ள தனமா அணுகிடாதீங்க...