politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

5.9.11

மருந்து மட்டுமா கசக்குது?

மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்து பல்வேறு வகையான விவாதங்கள் நம் நாட்டில் ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை எழுந்து பின்பு அடங்கும்... இதை பற்றி பெரிய அளவில் எந்த ஊடகமும் கண்டு கொள்வதில்லை...

சமீபத்தில் கூட பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தாமாகவே தடுப்பூசிகளின் விலைகளை குறைத்தது குறித்து புகழ்ந்து தள்ளிய ஊடகங்கள் அப்படி பட்ட நடவடிக்கையின் பின்னால் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை இருந்தது என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார்கள்..

புதிய பொருளாதார கொள்கை படி நூறு % வெளிநாட்டு மூலதனம் மருந்து துறையில் அனுமதிக்கப் பட்டதால் பல்வேறு வகையான இந்திய மருந்து நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களால் வாங்கப் படுவதை கவலையுடன் கவனிக்கிறது இந்திய சுகாதார துறை...

நிறுவனங்கள் தாமாகவே நேர்மையுடன் விலை கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கவலைபட்டாலும், எந்த வித சிரமமும் இல்லாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நம் நாட்டு பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு நிதர்சன உண்மை விளங்க போவதில்லை...

ciprofloxacin எனப்படும் மருந்தை 500 mg ஒரு மாத்திரை, ஆறு ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்று விலை கட்டுபாட்டு திட்டம் செயல் பாட்டில் இருந்த பொழுதே பத்து ரூபாய்க்கு குறையாமல் விற்று லாபம் சம்பாதித்து, சட்டத்திற்கு அடி பணியாமல் நடந்து கொண்டன சிப்லா மற்றும் ரான்பாக்சி நிறுவனங்கள்.. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் உபரியாக சம்பாதித்த லாபத்தை திருப்பி செலுத்துமாறு கூறிய பின்பும் தடை உத்தரவு வாங்கி நம் நாட்டு சட்டங்களின் சந்து பொந்துகளில் நுழைந்து ஓடி கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த நேர்மையான நிறுவனங்கள்..

generic வகை மருந்துகளும் 200 சதவிகித அளவுக்கு மேல் லாபத்தை மருந்து கடைகளுக்கு குடுப்பதை தடுத்து நிறுத்த கிளம்பிய முன்னாள் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் திட்டம் தேர்தலில் தோல்வி அடைந்ததால் காணாமல் போனது... அதை பற்றி கவலைப்பட கூட அடுத்த வந்த அமைச்சர் தயாரில்லை என்பது தெளிவாகிறது...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது எல்லாம் உண்மை தான்.. ஆனால் பகல் கொள்ளை, கண்ணெதிரே நடக்கும் திருட்டை ஒழிக்க அரசு முயற்சி எடுத்தால் மட்டுமே முடியும் என்பதும் உண்மை..

[இதில் எங்கு ராம் விலாஸ் பஸ்வான் வந்தார் என்று குழம்புபவர்களுக்கு, நம் நாட்டு மருந்து துறை நீங்கள் நினைப்பது போல் சுகாதார துறையின் கீழ் வருவது இல்லை, அது நம் நாட்டு உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது இன்னும் ஒரு கசப்பான உண்மை..]

http://thatstamil.oneindia.in/news/2011/09/05/the-cost-medicines-must-come-down-president-aid0180.html

http://www.thehindu.com/news/national/article2421520.ece