வழிகளை மூடும் சமரசங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வரைந்த பொழுது இதற்கு நண்பர் சிவக்குமார் அவர்கள் பதில் அனுப்புவார் என்று தெரியாமல் போய் விட்டது..
பதில் அனுப்பியதால் அந்த பதிவுக்கு தொடர் எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு, பதிவை படிக்க வேண்டிய கஷ்டம் உங்களுக்கு..
தினகரனில் வெளியான தலையங்கத்தை எனக்கு அனுப்பி வைத்தார் நண்பர்..
அதிகப் படியான விலை கேட்பதை கண்டிப்பதை விட்டு விட்டு நேர்மையாக வியாபாரம் செய்யும் சில சிறு முதலாளிகளின் பிழைப்பிலும் மண் போடுவது போல் எழுதியுள்ளனர் தினகரனில்...
ஒவ்வொரு பொருளுக்கும் 10 முதல் 40 % வரை லாபம் இருப்பது போல் தலையங்கத்தை தீட்டி உள்ளனர்.. [பெரிய அங்காடிகளில் தரும் தள்ளுபடி அவர்கள் மொத்தமாக வாங்குவதால் வரும் schemes மூலமாக இருக்கிறதே தவிர வரும் லாபத்தில் இருந்து தள்ளுபடி அல்ல] படிக்கும் சாதாரண மக்களுக்கு உண்மையான நிலை தெரியாமல், பல நேர்மையான கடை காரர்கள் தங்கள் வாடிக்கையாளரை இழக்க போவது என்னவோ உறுதி.. மேலும் இப்படி பட்ட கட்டுரையால் போலிகள் சர்வ சாதாரணமாய் புழங்கும் அபாய நிலையும் அதிகரிக்க வாய்ப்புண்டு.. [ஒரிஜினல் சோனி குறுந்தகடுகளை விட அதே போல் உள்ள போலி குறுந்தகடுகள் விலை குறைவு, ஆனால் தரம் குறைவு]
உண்மையில் மளிகை கடைகளுக்கு வரும் பொருட்களில் mrp அச்சிடப்பட்ட அனைத்திலும் எட்டு சதவிகிதத்திற்கும் மேல் லாபம் இருப்பதில்லை... வேண்டுமானால் வாட் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லாத மிகவும் சிறு கடைகளுக்கு அதனுடன் சேர்ந்த 5 % வரியோ அல்லது 15 % வரியோ லாபமாக இனைய வாய்ப்புண்டு.. தினகரன் கூறியது போல் லாபம் வருவது ஏலேக்ட்ரோனிக் பொருட்கள் விற்கும் கடைகள் போன்றவையாக இருக்கலாம் என்ற ஊகம் தான் மனதில் அடிக்கிறது.. அது எந்த அளவுக்கு உண்மை என்பது அந்த துறையில் இருப்பவர்கள் தவிர பிறர்க்கு தெரிய போவதில்லை.. சில புத்தகங்கள் அச்சகங்களும் தங்கள் புத்தகத்தில் 30 சதவிகித வரை லாபம் தருகின்றன...
இப்பொழுது சமீப காலங்களில் அலைபேசி நிறுவனங்களின் ரீசார்ஜ் அட்டைகள் மேல் குறிப்பிட்டுள்ள தொகையை விட ஒரு ரூபாய் அதிகமாக வாங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.. அதை விட முக்கியமாக என் நண்பர் கூறியது.. ஆன்லைன் பாங்கிங் மூலமாக இணையத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு வெளியில் ரீசார்ஜ் செய்வதை விட நான்கு ரூபாய் அதிக டாக் டைம் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.. எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை..
அதிக விலை வாங்கும் கடைகள் ரசீதும் குடுக்காததால் சட்டப் படி நடவடிக்கை எடுக்கவும் வழி இல்லை
ஆக அதிக பட்ச விலை என்ன என்று குறிக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு மேல் கேட்கும் கடைகளை ஏற்கனவே முந்தய பதிவில் குறிப்பிட்டுள்ளபடி புறக்கணிப்பதை தவிர வேறு வழி இல்லை... .. சமரசங்கள் நாம் செய்துக் கொள்ளும் வரை இது போல் பகல் கொள்ளை நடை பெற்றுக் கொண்டே தான் இருக்கும்.. புறக்கணிப்பதின் மூலம் வழிகளை திறக்க போராடுவோம்..