என் நண்பர் சிவக்குமார் அவர்கள் என் பதிவுகளை படித்து விட்டு, எங்க நீங்க இந்த நெடுஞ்சாலையில் இருக்கும் உணவகங்களை பத்தி எழுதுங்களேன், அப்படின்னு கேட்டுகிட்டார்.
என்னடா இது என்று நிறைய யோசித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான்...
அனைவரும் அந்நியனை தேடி கொண்டிருக்கிறார்கள் என்பதே...
ஏர்டெல் நிறுவனம் மோசடி செய்து விட்டது..
திரை அரங்குகளில் குளிர்பானங்கள் கொள்ளை விலை.
இப்படி சின்ன சின்ன மோசடிகள் சிறு சிறு வணிக நிறுவனங்களில் மலிந்து கிடக்கும்...
இந்த தவறுகளின் ஆணிவேர் எது என்று பார்த்தால் வேகமாக வளர முயற்சி, குறுக்கு வழியில் முன்னேறுதல் என்று பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்த காரணங்களை ஊக்குவிப்பவை பிசினஸ் ல எதுவும் தப்பில்ல என்னும் வேத மந்திரம் தான்...
அந்நியன் படத்தில் நாயகன் இம்மாதிரி தவறுகள் செய்பவர்களை கொல்வார்...
எவனோ ஒருவன் படத்தில் நாயகன் அடித்து நொறுக்குவார்...
உண்மையான வழி எங்கு இருக்கிறது என்றால் புறக்கணிப்பில் உள்ளது...
இம்மாதிரி தவறு செய்பவர்களை அனைவரும் ஒன்று கூடி புறக்கணித்தாலே போதும் இம்மாதிரி சின்ன சின்ன தவறுகள் நடக்கவே நடக்காது...
மலையை ஒரே நாளில் அப்புறப் படுத்த முடியாது, ஒவ்வொரு கல்லாய் பெயர்த்து எடுத்தால் போதும்
பிச்சை காசு ஒரு ருபாய் என்று விட்டு கொடுப்பதால் தான் இவர்கள் தவறு செய்கிறார்கள்...
நீங்கள் ஏமாற்றப் படுகிறீர்கள் என்று தெரிந்தும் நீங்கள் ஏமாந்தால் யார் வந்து அந்த தவறை சரி செய்ய போகிறார்கள்...
வழி நம் அனைவர் கையிலும் உள்ளது...
அதை சமரசம் செய்து கொண்டு மூடி விட வேண்டாம்...