நம் நாட்டில் நாம் கூறுபவர்களின் நிபுணத்துவத்தை வைத்து, அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தில் உள்ளோம்....
அவர்கள் கூறுவது பொய்யா இல்லையா என்று கூட ஆராய்வது இல்லை...
நம் நாட்டை தற்பொழுது ஆட்சி செய்பவர் ஒரு மிகப் பெரிய பொருளாதார நிபுணர்...
ஆகையால் அவர் பொருளாதாரம் குறித்து என்ன கூறினாலும் கண் மூடி கேட்டுக் கொள்கிறோம்...
இன்று இந்து நாளிதழில் வெளியாகி உள்ள அரசு விளம்பரம், உண்மையை குழிதோண்டி புதைப்பதாக உள்ளது...
1. அரசு: நமது நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 16 % தான்...
ஆணிவேர்: நம் நாட்டு ஒரு நாள் உற்பத்தி 8,80,000 பேரல்கள்
இறக்குமதி 21,00,000 பேரல்கள்.
கூட்டி கழித்து பார்த்தால் 30% உள்நாட்டு உற்பத்தி என்று வரும்
ஆதாரம்: http://www.eia.gov/countries/country-data.cfm?fips=IN
2. ஒரு பேரல் [158 லிட்டர்] கச்சா எண்ணெய் விலை, நேற்று 97 டாலர்
அதாவது 4365 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 27.35 ரூபாய்..
அதில் 500 ml பெட்ரோல் மட்டுமே எடுக்கப் படுவதால் அதன் விலை 14 ரூபாய்..
ஆக ஒரு லிட்டர் பெட்ரோல் 28 ரூபாய்...
அதனுடன் சுத்திகரிப்பு செலவு, போக்குவரத்து செலவையும் இணைத்தால் இப்பொழுது எண்ணெய் நிறுவனங்கள் வாங்குவதை விட குறைவாக வாங்குவதில்லை...
ஆதாரம்:
http://www.eia.doe.gov/neic/infosheets/crudeproduction.htm
http://knopok.net/prices-chart/oil
3. அரசு: டீஸல் கு அரசு தரும் மானியம் ஒரு லிட்டருக்கு 6.13 ரூபாய்...ஆணிவேர்: ஒரு லிட்டருக்கு நீங்க வசூலிக்கும் வரி எவ்வளவு நைனா?
நீ அரிசி எடுத்துகிட்டு வா, நான் உமி எடுத்துகிட்டு வரேன், ரெண்டு பெரும் ஊதி ஊதி தின்போம்...
4. அரசு: மற்ற அண்டை நாடுகளை விடவும் நம் நாட்டில் விலை கம்மி...
ஆணிவேர்: நான் பத்தாவது வகுப்பில் வாங்கிய மதிப்பெண், என் அண்டை வீட்டு ஒன்னாம் வகுப்பு படிக்கும் மாணவன் வாங்கிய மதிப்பெண்ணை விட அதிகம்... அக்காம்பா...
5. அரசு: டீஸல் விலையை மூன்று ரூபாய் ஏற்றிய பிறகும் 66,000 கோடி ருபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு..
ஆணிவேர்: இந்த ஆண்டு 2.5 லட்சம் கோடி வசூலிக்கப் படாத வரிகளை வசூலிச்சிட்டீங்களா?
ஆமாங்க, நீங்க குடுத்திருக்கிற விளம்பரத்துக்கு ஆன செலவு என்ன?